சாகவே சாவாய் என்ற வசனத்தின் விளக்கம் என்ன ? This question was asked by our new entrant Guru in the Welcome Forum!! This question is originally by Guru. Viewers may treat this question from Guru and answer!!
நீ சாகவே சாவாய் என்று தேவன் ஆதாமிற்கு சொன்னதாகும்!! ஆதாமின் மூலம் மனித குலம் முழுவதற்கும் இந்த மரணம் வந்தது!!
நீ சாவாய் என்று ஒரே வார்த்தையில் கூட தேவன் இதை சொல்லியிருக்கலாமே!! அது ஏன் சாகவே சாவாய்!! ஒரு சாரார் இதை நீ நிச்சயமாகவே சாவாய் என்றும் புரிந்து இருக்கிறார்கள்!! தவறில்லை, நீ நிச்சயமாகவே சாவாய் என்று சொல்லுவதிலும் தவறு இல்லை, ஆனால் அதை விட மேலான ஒரு அர்த்தம் இருக்கிறதே!! நீ செத்துக்கொண்டிருந்து மரித்து போவாய் என்பது இன்னும் சரியாக பொருந்துமே!! பிறக்கும் ஒரு மனிதன் மரணத்திற்கான பாதையில் தான் நடந்துக்கொண்டு செல்கிறான்!! ஆங்கிளத்தில் Young's Literal Translation சொல்லுகிறது,
Dying thou shalt die!!
மரித்துக்கொண்டே நீ மரிப்பாய்!! ஆனால் பெந்தகோஸ்தேயினர் இதற்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு புதிய அர்த்தத்தை கண்டு பிடித்து சாகவே சாவாய் என்றால் நீ ஆவியில் சாவாய் என்கிற அர்த்தமாம், அதன் பின் கொஞ்சம் காலம் கழித்து நீ சரீரத்தில் சாவாய் என்று ஒரு புதிய விளக்கம் வைத்திருக்கிறார்கள், அவர்கள் சொல்லும் எந்த கூற்றும் வேதத்திற்கு புறம்பாக தான் இருக்கும், இதில் மட்டும் என்ன உண்மையா பேச போகிறார்கள்; வேதம் சொல்லுகிறது,
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
மனிதனுக்கு மரணம் என்பது ஒரே முறை தான், சாகவே சாவாய் என்றவுடன் இரு முறை இல்லை!! கள்ள போதகர்கள் சொல்லுவது போல் ஒரு முறை ஆவியில் மரிப்பதும், பின்பு இன்னோரு முறை சரீரத்தில் மரிப்பதும் போன்ற விளக்கங்கள் எல்லாம் தவறான போதனைகள்!! ஒரே மரணம் தான் அது எப்படி பட்டது என்று அனைவருமே அறிந்தது தான், பார்த்தது தான்!! ஆனால் அந்த ஒரே மரணத்தை அடையும் வரைக்கும் தினம் தினம் மரித்துக்கொண்டு இருப்பது தான் சாகவே சாவாய், Dying thou shalt die!!
ஏன் அனுதினமும் மரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றால், ஆதாமின் பாவத்தினால் வந்த சாபம் சகல சிருஷ்ட்டிகளின் மேலும் வந்தது, சிருஷ்ட்டியும் மனிதர்களுக்கு விரோதியானது!! முள்ளும் கருக்கும் உள்ள இடத்தை பன்படுத்தி அதில் நெற்றி வியர்வை சிந்தி உழைக்க வேண்டும் (தேவ மனிதர்களை தவிர!!) என்பது தான் ஆதாம் மேலும், ஆதாமினால் சகல மனிதர்கள் மேலும் வந்தது!! இப்படி நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது ஒரு மரணத்தை நோக்கியுள்ள பயனம் தான் என்பதை தெளிவாக நீ சாகவே சாவாய், என்று தேவன் சொல்லியிருக்கிறார்!! இதில் ஆவி சமாச்சாரமோ சரீர சமாச்சாரமோ இல்லை, சாகவே சாவாய் என்றால் நிச்சயமாகவே மரித்து போவாய், ஆனால் மரிக்கும் முன், உன் சரீரம் அந்த மரணத்திற்கு நேராக தான் நடக்க வேண்டும்!! ஏதோ ஆவியில் மரித்து பின்பு உயிர்த்து பின்பு மீண்டும் சரீரத்தில் (!!) மரிப்பது எல்லாம் அஞானிகளின் போதனையாகும்!!
சகோ குரு அவர்களே, ஒரே முறை மரிப்பது நிச்சயம், அந்த மரணத்திற்கு நேராக நடக்க வேண்டும் என்பதையே தேவன் இப்படி சொல்லியிருக்கிறார் என்பது என் கருத்து!! ஆனால் சாத்தான் சொன்னதோ, "நீங்கள் சாவதே சாவதில்லை" என்பது!! இன்றைய சபைகள் போதிப்பதும் இதையே!! அதை பிற்பாடு பார்ப்போம்...................