kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவ வாழ்வு என்பது முள் மேல் படுக்கையா?


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:
கிறிஸ்தவ வாழ்வு என்பது முள் மேல் படுக்கையா?


கிறிஸ்தவ வாழ்வு என்பது முள் மேல் படுக்கையா? அல்லது முல்லை பூ படுக்கையா ?

முள் மேல் படுக்கை என்றால் அது விசுவாசிகளுக்கு மட்டும் தானா?

கலாசார சீரழிவு  என்பது மற்றவர்களுக்கு மட்டும் தானோ நமது மார்கதர்களுக்கு கிடையாதா?

மற்ற மதத்தில் உள்ளவர்களை குறை சொல்லி கொண்டிருக்கும் நாம் , அவர்களை பரலோகம் போகலாம் என்று அழைக்கும் நாம் , நம்முள் இருக்கும், குறைகளை மறுப்பது ஏன்?


__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: கிறிஸ்தவ வாழ்வு என்பது முள் மேல் படுக்கையா?


//கிறிஸ்தவ வாழ்வு என்பது முள் மேல் படுக்கையா? அல்லது முல்லை பூ படுக்கையா ?//

முல்லை பூ படுக்கை என்று நினைத்துக்கொண்டு தான் இன்றைய கிறிஸ்தவ மண்டலம் பிரயானித்துக்கொண்டு இருக்கிறது!! பல ஊழியர்களுக்கு ஊழிய அழைப்பு அதற்காக தான் என்று நினைத்து. தாங்கள் பார்த்துக்கொண்டு இருந்த அரசு உத்தியோகம், பொது நிறுவன உத்தியோகம், சிறு தொழில் இவற்றை விட்டு விட்டு, திடீரென்று ஒரு நாள் வந்து, தேவன் என்னிடத்தில் ஊழியம் செய்ய அழைத்திருக்கிறார், அதிலும் இத்துனை பேரிய கோபுரம் காட்டவேண்டும், திறப்பின் வாசல் கட்ட வேண்டும், டீவி நடத்தி ஊழியம் செய்ய வேண்டும், அதற்கு உங்களை போன்ற விசுவாசிகள் (ஏமாளிகள்) இடத்திலிருந்து தான் தேவைகள் (பணம் என்று பிச்சை கேட்பதின் நாசுக்கான சொல்) சந்திக்க சொன்னார்!! பிறகு ஊழியத்திற்கு வந்து அதை வாரிசு தொழிலாக மாற்றி, பென்ஸ் முதல் ஹோண்டா அக்கார்ட் வரையில் உள்ள வாகனங்களில் (மக்களிடம் வாங்கிய பணத்தில் வாங்கிய வாகனத்தில்) வளம் வந்து, தேவன் அவர்களின் ஊழியத்திற்கு பரிசாக தந்தார் என்று பல பிரமாண்டமான சாட்சிகள் (பொய் தான்) கொடுப்பார்கள்!! இவர்களுக்கு கிறிஸ்தவ வாழ்வு என்பது முல்லை பூ படுக்கை தானே!!

ஆனாலும் வேதம் ஒரு கிற்ஸ்தவனை குறித்து சொல்லுவதை கேளுங்கள்!! கிறிஸ்தவன் என்றால் சீஷன் என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்!! ஏனென்றால் சீஷர்களை தான் வேதம் கிறிஸ்தவர்கள் என்று அழைத்திருக்கிறது (அப்போஸ்தலர் 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.)

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

மாற்கு 8:34 பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

உண்மையில் இப்படிபட்ட சீஷத்துவத்தை பின்பற்றுவது மிகவும் கடினமான ஒன்று தான்!! ஆனாலும் பிரயாசப்படலாமே!! ஒரு பணக்காரனிடத்தில் உன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்து என் பின்னால் வா என்பதற்கு முகம் வாடி சென்றானே ஒரு இளைஞன், அப்படி ஒரு நிலையில் தான் இருக்கிறார்கள் நம் ஊழியர்களும், தேவ மனிதர்களும் (!!)!! இந்த முல்லை பூ படுக்கையை விரும்பி தான் பல ஊழியத்திற்கு வருகிறார்கள் என்பது ம(றை)றுக்க முடியாத உண்மை!! ஏனென்றால் பாடுகளின் மத்தியில் இவர்கள் ஊழியம் செய்தால் அதினால் இவர்களுக்கு லாபம் என்ன!! ஒரு சிறிய பைக் அல்லது ஒரு ஸ்கூட்டர் அவ்வலவே!!  கிறிஸ்துவின் ஊழிய நாட்களை பாருங்கள்,

மத்தேயு 20:28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும்,
மாற்கு 10:45 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும்,

கிறிஸ்தவ ஜீவியம் என்பது முல்லின் மேல் உள்ள படுக்கையென்பது வசனங்கள் காண்பிகிறது, ஆனால் அது சீஷனாக இருக்க விரும்புகிறவனுக்கே அன்றி இன்றைய நவீன தேவ மனிதர்கள் அல்லது மேடை போட்டு தன்னை தேவன் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கு அல்ல:

ரோமர் 8:18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

இப்பொழுது நாம் படும் பாடுகள் இனி வெளிப்படும் மகிமைக்கு ஒப்பீடவே முடியாது என்கிறார் பவுல்!! ஆனால் ஊழியத்திற்கு வருவதே ஆசீர்வாதம் (வேறு என்ன உலகத்திற்குறியது தான்) பெறவே என்று நிரூபிக்கிறார்கள் நம்மவர்கள்!!

II கொரிந்தியர் 1:5 எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.

இதை தவறாக புரிந்துக்கொண்டு, ஐய்யோ எனக்கு பாடுகள் அதிகம், ஆகவே தான் எனக்கு ஹோண்டா அக்கார்ட் வாகனம் என்று நினைத்துவிடாதீர்கள்!! கிறிஸ்துவின் ஆறுதல் இருக்கும் பாடுகளை சகித்துக்கொள்ளுவது தான்!!

பிலிப்பியர் 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

கொலோசெயர் 1:24 இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.

தன் பாடுகளை கிறிஸ்து பட்ட பாடுகளில் மிச்சமிருப்பதை தன் சரீரத்தின் படுவதாக பவுல் சொல்லுகிறார்!!

II தீமோத்தேயு 2:12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

I பேதுரு 4:13 கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

I பேதுரு 5:1 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:

எந்த மூப்பனோ, போதகரோ ஊழியனோ தேவ மனிதனோ, பேதுருவின் இந்த வார்த்தையை தனக்கு சொந்தமாக்க முடியுமா!?

பிலி. 1:29. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

இனி கிறிஸ்தவம் (சீஷத்துவம் என்று அர்த்தம் மட்டுமே, ஊழியன் என்றோ தேவ மனிதர்கள் என்றோ கிடையாது) முல்லின் மேல் உள்ள படுக்கையா, முல்லைப்பூ படுக்கையா என்பதை வசனங்கள் கொண்டு நிதானித்து பாருங்கள்!!

இந்த தேவமனிதர்கள் செய்யும் இன்னோரு காரியம் என்னவென்றால், தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று தனக்கும் தன் குடும்பத்திற்கும் வைத்துக்கொண்டு, ராயனுக்கும் செலுத்தாதபடி தங்களுக்கு வரும் காணிக்கைகளுக்கு வரிவிளக்கு வாங்கி தேசத்தை வேறு ஏமாற்றுவது தான்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:
கிறிஸ்தவ வாழ்வு என்பது முள் மேல் படுக்கையா?


நாங்கள் கிறிஸ்தவர்கள் திரியில் பெரியன்ஸ்:

//மத்தேயு 28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;
அப்போஸ்தலர் 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

இப்படி அப்போஸ்தலர்கள் வாயிலாக மாத்திரமே வந்த கிறிஸ்துவின் போதனைகள் மூலமாக கொண்டிருக்கும் விசுவாசத்தையும், அவரை பின்பற்றுவதில் உள்ள வாஞ்சையினால் நாங்கள் "கிறிஸ்தவர்கள்"!!//

இத்திரியில் பெரியன்ஸ்:

//வேதம் ஒரு கிறிஸ்தவனைக் குறித்து சொல்லுவதைக் கேளுங்கள்!! கிறிஸ்தவன் என்றால் சீஷன் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்!! ஏனென்றால் சீஷர்களைத் தான் வேதம் கிறிஸ்தவர்கள் என்று அழைத்திருக்கிறது (அப்போஸ்தலர் 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.)

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

மாற்கு 8:34 பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

உண்மையில் இப்படிபட்ட சீஷத்துவத்தை பின்பற்றுவது மிகவும் கடினமான ஒன்றுதான்!! ஆனாலும் பிரயாசப்படலாமே!!
//

//கிறிஸ்தவ ஜீவியம் என்பது முள்ளின் மேல் உள்ள படுக்கையென்பது வசனங்கள் காண்பிகிறது, ஆனால் அது சீஷனாக இருக்க விரும்புகிறவனுக்கே அன்றி இன்றைய நவீன தேவ மனிதர்கள் அல்லது மேடை போட்டு தன்னை தேவன் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கு அல்ல://

//ரோமர் 8:18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

II கொரிந்தியர் 1:5 எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.

பிலிப்பியர் 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

கொலோசெயர் 1:24 இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.

II தீமோத்தேயு 2:12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

I பேதுரு 4:13 கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

I பேதுரு 5:1 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:

பிலி. 1:29. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

இனி கிறிஸ்தவம் (சீஷத்துவம் என்று அர்த்தம் மட்டுமே, ஊழியன் என்றோ தேவ மனிதர்கள் என்றோ கிடையாது) முள்ளின் மேல் உள்ள படுக்கையா, முல்லைப்பூ படுக்கையா என்பதை வசனங்கள் கொண்டு நிதானித்து பாருங்கள்!!//

உங்கள் போதனை, கருத்து, கொள்கை, விசுவாசம் போன்றவற்றை இன்னும் தெளிவாக அறிவதற்காக உங்களது பழைய பதிவுகளைத் அலசிப்பார்த்தேன். அவற்றில் இவ்விரு பதிவுகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.

இப்பதிவுகளிலிருந்து நீங்கள் ஒரு கிறிஸ்தவராகவும் இயேசுவின் மெய்யான சீஷராகவும் வாழ பிரயாசப்படுகிறீர்கள் என அறிகிறேன். அதாவது இயேசுவின் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கும் அவற்றினிமித்தம் பாடுகளை அனுபவிப்பதற்கும் பிரயாசப்படுகிறீர்கள் என அறிகிறேன். மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையை முள்ளின்மேல் உள்ள படுக்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என அறிகிறேன்.

ஆகிலும் கிறிஸ்துவின் போதனைப்படி மற்றவர்கள் ஜீவிப்பதற்கு உங்களது பல கருத்துக்கள் இடறலாக இருப்பதாகவும் நான் அறிகிறேன். நீங்கள் நினைப்பதுபோல், “யார் எப்படி ஜீவித்தாலும் அவர்கள் எல்லோருக்கும் நித்திய ஜீவன் உண்டு” எனும் கருத்து உண்மையாக இருந்தால்கூட, அதை அப்படியே சொல்லித்தான் ஆகவேண்டுமா?

பவுலோ பேதுருவோ யோவானோ, “யார் எப்படி ஜீவித்தாலும் அவர்கள் எல்லோருக்கும் நித்திய ஜீவன் உண்டு” என நேரடியாக ஒருபோதும் சொன்னதாகத் தெரியவில்லையே!

அவர்களெல்லோரும் இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதைத்தானே போதித்துள்ளனர்? பின்னர் ஏன் நீங்கள் தனித்துவமான ஒரு கருத்தை பெரிதுபடுத்திச் சொல்லவேண்டும்?

கிறிஸ்துவின் மெய்யான சீஷராக வாழப் பிரயாசப்படும் நீங்கள் பின்வரும் வசனத்தை நினைவில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

மத்தேயு 18:6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

இன்றைய ஊழியர்களின் தவறானப் போக்கை சாடுவதாகக் கருதிக்கொண்டு, இத்தள வாசகர்களுக்கு “இடுக்கமான வாசலைக் காட்டுவதற்குப் பதில் விரிவான வாசலைக் காட்டுவதாக” நான் உணர்கிறேன்.

உங்கள் மீதுள்ள தனிப்பட்ட கரிசனத்தால்தான் இதைக் கூறுகிறேன். இதற்குமேல் உங்கள் இஷ்டம்.

மத்தேயு 18:23-35 வசனங்களிலுள்ள உவமானத்திற்கு உங்களது விளக்கத்தை தரும்படி கேட்டிருந்தேன். இன்னமும் அதை நீங்கள் தரவில்லை. மீண்டுமாக அதை நினைவுபடுத்துகிறேன்.

இனிமேல் உங்கள் தளத்தில் வந்து இவ்விதமாக தொந்தரவு செய்யமாட்டேன். இதுவரை எனது பதிவுகளை பொறுமையோடு படித்து பதிலளித்த உங்களுக்கும் சோல்சொல்யூஷனுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.



-- Edited by anbu57 on Sunday 31st of July 2011 08:48:27 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஆகிலும் கிறிஸ்துவின் போதனைப்படி மற்றவர்கள் ஜீவிப்பதற்கு உங்களது பல கருத்துக்கள் இடறலாக இருப்பதாகவும் நான் அறிகிறேன். நீங்கள் நினைப்பதுபோல், “யார் எப்படி ஜீவித்தாலும் அவர்கள் எல்லோருக்கும் நித்திய ஜீவன் உண்டு” எனும் கருத்து உண்மையாக இருந்தால்கூட, அதை அப்படியே சொல்லித்தான் ஆகவேண்டுமா?

பவுலோ பேதுருவோ யோவானோ, “யார் எப்படி ஜீவித்தாலும் அவர்கள் எல்லோருக்கும் நித்திய ஜீவன் உண்டு” என நேரடியாக ஒருபோதும் சொன்னதாகத் தெரியவில்லையே!

அவர்களெல்லோரும் இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதைத்தானே போதித்துள்ளனர்? பின்னர் ஏன் நீங்கள் தனித்துவமான ஒரு கருத்தை பெரிதுபடுத்திச் சொல்லவேண்டும்?//

 கிறிஸ்துவின் போதனைப்படி "மற்றவர்கள்" ஜீவிப்பதற்கு....

யார் இந்த "மற்றவர்கள்"? 

பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான் என்ற ஒரே வசனத்தில் நம் எல்லா கருத்துக்களும், போதனைகளும் அடிபட்டுப்போகிறது. யாரும் யாருக்கும் இடறல் உண்டாக்க முடியாது. அப்படி இடறல் உண்டாக்கி பிதா இழுத்துக்கொள்பவனை, அவரால் இழுத்துக்கொள்ள முடியாதபடி செய்ய முடியாது.  நாங்கள் தங்களை கிறிஸ்தவர்களாக எண்ணிக்கொண்டு வேதவசனங்களை அறிய முற்படும் சிலருக்கு பிரயோஜனமாக இருக்கட்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே நாங்கள் அறிந்த வேத சத்தியங்களை இத்தளத்தில் பதிக்கிறோம்.

  எல்லாருக்கும் நித்தியஜீவன் கிடைக்கும் என்பதில் எங்களுக்கு வானளாவிய சந்தோஷம் ஏற்பட்டதேயொழிய கெட்டவர்களுக்கும் அதே நித்தியஜீவனா? என்ற அங்கலாய்ப்பு துளியும் ஏற்படவில்லை. 

எத்தகைய கொடூர பாவத்தையும் தேவன் மன்னிக்கிறார் என்றறியும்போது அவரது அன்பின் ஆழத்தை உணர்ந்து சிலிர்த்துப்போகிறோமேயன்றி, அட அப்ப நாமும் அதிக பாவம் செய்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றவில்லை.

 அப்படி யாருக்கேனும் தோன்றுமேயானால் அது அவர்களது "பாவம் செய்ய" விரும்புகிற தன்மையை வெளிப்படுத்தும். 

உலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் 100% தேவனுடைய செய்கையாயிருக்கிறது. எந்த நிகழ்வையும் யாராலும் மாற்ற முடியாது. நாம் நம்முடைய பாத்திரத்தைச் செய்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறோம், நாம் மட்டுமல்ல அனைவருமே! தேவநீதி, தேவ அன்பு, தேவ வல்லையை நாம் அணுஅளவும் உணரவில்லை. ஏதோ நமது செய்கையால் அவரது திட்டத்துக்கு உதவியோ அல்லது கேடோ செய்கிறோமென்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். வேடிக்கை.

 //அவர்களெல்லோரும் இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதைத்தானே போதித்துள்ளனர்? பின்னர் ஏன் நீங்கள் தனித்துவமான ஒரு கருத்தை பெரிதுபடுத்திச் சொல்லவேண்டும்?//

இயேசுவின் கற்பனைப்படி நடக்கவேண்டும் என்று அவர்கள் உலகத்துக்குப் போதிக்கவில்லை. வேற்றுமையான உபதேசங்கள் 'சபை'க்குள் நுழையும் என்று எச்சரித்துதான் போதித்தார்கள். "நீங்கள்", "உங்களை" என்று புதிய ஏற்பாடு முழுவதும் வரும் பதங்கள் உலகத்துக்கு அல்ல‌... ஆகவேதான் உலகத்தார் இவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவ்வப்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்தேயு 7:13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

இது ஒரு தீர்க்கதரிசனம். சிலருக்கு மட்டுமே இந்தத் தெரிந்துகொள்ளுதல். தேவனால் முன்குறிக்கப்பட்ட சிலரைத்தவிர சபைக்குள் வேறு யாரும் தன் சுயசித்தப்படி நுழைந்துவிட முடியாது.

இந்த மற்றவர்கள் கிறிஸ்துவின் போதனைப்படி ஜீவிக்கமாட்டார்கள், யார் எத்தனை கூட்டம்போட்டு கத்தினாலும் அநேகர், சிலராக முடியாது.

 எல்லாரையும் இப்போதே திருத்தி அவர்களை நித்தியஜீவனுக்குத் தகுதியாக்கும் முயற்சியில் தேவன் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் பெருவாரி ஜனங்கள் தகுதியாக மாட்டார்கள். உயிர்த்தெழுந்த பின்னரே அவர்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். 

யோவான் 3:27 யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.

யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; 

சத்தியம் உலகத்துக்கு அல்ல. பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ள மாட்டான். கன்ட்ரோல் சென்டர் பரலோகத்தில் உள்ளது. மனிதன் கையில் ஒன்றுமில்லை. இதை தேவன் நாடகமாடுகிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அவரது பூரண சித்தம் மட்டுமே நடக்கிறது என்று நாங்கள் களிகூறுகிறோம்.




-- Edited by soulsolution on Sunday 31st of July 2011 12:18:49 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: கிறிஸ்தவ வாழ்வு என்பது முள் மேல் படுக்கையா?


//இப்பதிவுகளிலிருந்து நீங்கள் ஒரு கிறிஸ்தவராகவும் இயேசுவின் மெய்யான சீஷராகவும் வாழ பிரயாசப்படுகிறீர்கள் என அறிகிறேன். அதாவது இயேசுவின் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கும் அவற்றினிமித்தம் பாடுகளை அனுபவிப்பதற்கும் பிரயாசப்படுகிறீர்கள் என அறிகிறேன். மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையை முள்ளின்மேல் உள்ள படுக்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என அறிகிறேன்.//

பவுல் சவுலாக இருந்த போதும், அவன் பவுலாக மாற்றப்பட்ட பிறகும் உள்ள சம்பவங்கள் வேதத்தில் இன்னும் இருக்கிறது!! கிறிஸ்துவர்களை கொலை செய்த சவுலின் பகுதியை நீங்கள் உங்கள் வேதத்திலிருந்து நீக்கி விட்டீர்களோ!! தேவன் என்னை நடத்துகிறார் என்பது இன்னும் அதிகமாக நான் நம்புகிறேன்!! அப்போ அப்படி நடத்திய தேவன் தான் இப்ப எல்லாமே அவரின் கிருபை அவரின் சித்தம் என்று புரிய வைத்திருக்கிறார்!! மேலும் பவுல் சொன்னபடியே, நான் பிரயாசப்படுகிறேன் என்பதில் நான் அல்ல, எனக்கு இருக்கும் தேவ கிருபையே அப்படி செய்தது!! அதை இன்று வசனங்களை கொண்டு இன்னும் அதிகமாக தெளிவுப்படுத்துகிறான் எனக்கு கிருபை தரும் தேவன்!!

I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

நீங்கள் இப்பொழுது இருக்கும் பதிவுகளுக்கு பதில் கொடுக்காமல் பழசை எடுத்து பதிவு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் விவாதிக்க அல்ல, என்னை எப்படி மடக்கலாம், எப்படி மட்டம் தட்டலாம் என்கிற "கிரியை"யில் இறங்கியிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை!!

மத்தேயு 18:6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

எங்களின் எந்த பதிவில் நாங்கள் இடறல் உண்டாகும்படி, எப்படி வேண்டுமென்றாலும் வாழுங்கள், எவ்வுளவு பாவம் வேண்டுமென்றாலும் செய்யுங்கள், தீமையை தொடர்ந்து செய்யுங்கள், நீங்கள் கிரியை செய்யக்கூடாது என்று எழுதியிருக்கிறோம்!! கிரியை நித்திய ஜீவனை தரும் என்று தேவன் மேல் வைத்திருக்கும் விசுவாசமும் அவரின் கிருபையை விசுவசிக்க விடாமல் நீங்கள் தான் இடறல் உண்டாக்குகிறீர் என்று நான் உங்களை சொல்லுகிறேன்!! நாங்கள் சொல்லாத ஒன்றை நீங்கள் வசனம் சொல்லி உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் எந்த நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாமா!!??

மேலே சொன்னதை நாங்கள் போதித்திருந்தால் சொல்லுங்கள், சும்மா எங்களை தூஷிக்க வேண்டாம்!!

//இன்றைய ஊழியர்களின் தவறானப் போக்கை சாடுவதாகக் கருதிக்கொண்டு, இத்தள வாசகர்களுக்கு “இடுக்கமான வாசலைக் காட்டுவதற்குப் பதில் விரிவான வாசலைக் காட்டுவதாக” நான் உணர்கிறேன்.//

நீங்கள் கிரியையை போதிப்பதினால் உங்களுக்கு தேவ கிருபையின் போதனை விரிவான வாசலாக தான் தெரியும்!! உங்களுக்கு மாத்திரம் அல்ல தங்களின் கிரியை நம்பியிருப்பவர்களும், இன்று இருக்கும் கிறிஸ்தவ மண்டலத்தின் பார்வையில் நாங்கள் அப்படி தான் தெரியும்!! என்ன செய்வது!!

தேவனின் சித்தம் தான் என்பதற்கு எத்தனையோ வசனம் பதித்திருக்கிறோம், ஆனால் அதை குறித்து உங்களிடம் இருந்து ஒரு மறுப்பும் இல்லையே!! ஏன்!!?? ஆனால் நீங்களோ உங்கள் தளத்தில் இதற்கு ஒரு வசனமும் இல்லை என்று பொய்யாக எழுதுகிறீர்கள்!! ஏன்!!??

யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,

குமாரன் அனைவரையும் விடுதலையாக்கவே (வேறு என்ன, மரணத்திலிருந்து தான்) வந்து தன்னை ஈடுபலியாக செலுத்தினார்!!! நீங்கள் நம்புவதும், நம்பாததும், தேவ சித்தமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard