அது, 'நீதிஉள்ளோரின் பிரிந்து சென்ற ஆத்துமாக்களுக்கு' ஒரு தற்காலிக இருப்பிடமா?
இந்தக் கருத்தின் மூலத் தொடக்கமேன்ன? தி நியூ இன்டர்நாசினால் டிக்சனரி ஒப் நியூ டேச்டமென்ட் தியோலோகி கூறுவதாவது :- ''ஆத்துமா அழியாமை உடையதென்ற கிரேக்கக் கோட்பாடு படிப்படியாய் நுழைந்ததோடு பரதிஸ் நீதிமான்களின் இடைப்பட்ட நிலையின்போது தங்குமிடம் ஆகிறது''. ( கிரான்ட் ராப்பிடஸ், மிச் 1976 , காலின் பிரெளன் பதிப்பித்தது, புத்தகம். 2 , பக்கம். 761 ) இயேசு பூமியில் இருந்தபோது இந்த வேதப்பூர்வமற்றக் கருத்து யூதருக்குள் பொதுவாய் இருந்ததா? இது சந்தேகதுக்குரியதென ஹேஸ்டிங்லின் பைபல் அகராதி குறித்துக் காட்டுகிறது. - எடின்பர்க், 1905 ) புத். III , பக்கம். 669 , 670 .
முதல் நூற்றாண்டில் இந்தக் கருத்து யூதருக்குள் பொதுவாய் இருந்ததென்று எடுத்துக்கொண்டாலும், மனந்திரும்பின அந்தக் தீயோனுக்கு தாம் கொடுத்த வாக்கால் இயேசு அதை ஏற்று ஆதரித்து இருப்பாரா? கடவுளுடைய வார்த்தைக்கு முரண்பட்ட பாரம்பரியங்களை போதித்தற்காக அந்த யூத பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு மிகக் கண்டிப்புடன் கண்டனம் பண்ணினார். - மத்தேயு 15 : 3 -9 .
அப்போஸ்தலர் 2 :30 , 31 -யில் காட்டி இருக்கிறபடி இயேசு தாம் மரித்த போது ஹீர்டியிஸ்க்குச் சென்றார். ( அப்போஸ்தலன் பேதுரு அங்கே சங்கீதம் 16 :10 ய் குறிப்பிடுகிற போது ஹீர்டியிஸ் சியோளுக்குச் சமமாக குறிப்பிடுகிறான்) ஆனால் சீயோல்/ ஹீர்டிஸ் அல்லது அதன் எந்தப் பாகமாவது ஒருவனுக்கு இன்பத்தைக் கொண்டுவருகிற பரதிஸ் என பைபளில் எங்கும் கூறவில்லை. அதற்கு மாறாக, அங்கிருப்போர் ''ஒன்றும் அறியார்கள்'' என்று பிரசங்கி 9 :5 , 10 ௦ யில் சொல்லி இருக்கிறது. தொடரும் ..
-- Edited by Theneer Pookal on Monday 28th of February 2011 03:39:27 AM
இயேசு அவனிடம் பேசின அதே நாளில் இயேசுவும் அந்தத் தீயோனும் பரலோகத்துக்குச் சென்றார்கள் என்ற கருத்தை பைபல் ஒப்புக்கொள்கிறது இல்லை. இயேசு தாம் கொல்லப்பட்ட பின்பு, மூன்றாம் நாள்வரை உயிர்த்து எழுப்பப் படுவதில்லை என்று முன்னறிவித்தார். (லூக்கா 9 :22 ) அந்த மூன்று நாள் காலப்பகுதியின் போது அவர் பரலோகத்தில் இல்லை, என்னென்றால் தாம் உயிர்த்து எழுப்பப்பட்ட பின் அவர் மரியாளிடம்:- ''நான் இன்னும் என் பிதாவினிடத்துக்கு ஏறிப்போகவில்லை'', என்று சொன்னார். (யோவான் 20 :17 இயேசு உயிர்த்து எழுப்பப்பட்டு 40 நாட்களுக்குப் பின்பே அவருடைய சீஷசர்கள் அவர் பூமியிலில் இருந்து மேலே உயர எடுத்துக்கொள்ளப்பட்டு பரலோகத்துக்கு மேலேறிச் செல்லத் தொடங்குகையில் அவர்கள் பார்வைக்கு மறைந்ததைக் கண்டார்கள். -- அப்போ 1 :3 , 6 -11
அந்தத் தீயோன் பிந்தின எந்தச் சமயத்திலும் கூட பரலோகத்துக்கு செல்வதற்க்கான தகுதிகளைப் பெறவில்லை. அவன் - நீரிலும் முழுக்காட்டப்பட வில்லை கடவுளுடைய ஆவியால் பிறப்பிக்கப்படவுமில்லைஆனால் - ''மறுபடியும் பிறக்க'' வில்லை. அந்தச் தீயோனின் மரணத்துக்கு 50௦ - க்கும் மேற்பட்ட நாட்களுக்குப் பின் வரையில் பரிசுத்த ஆவி இயேசுவின் சீஷர்கள் மீது ஊற்றப் படவில்லை. ( யோவான் 3 :3 ,5 :/ அப்போ 2 : 1 -4 ) தம்முடைய மரண நாளில், இயேசு 'சோதனைகளில் தம்மோடு கூட நிலைத்து இருந்தவர்களுடன்' பரலோக ராஜ்யத்துக்கான ஓர் உடன்படிக்கை செய்து இருந்தார். அந்தத் தீயோன் உண்மை உள்ளவனாய் இருந்த அத்தகைய எந்தப் பதிவையும் கொண்டிருந்ததில்லை அதில் அவன் சேர்க்கப்படவும் இல்லை. - லூக்கா 22 . 28 - 30 தொடரும் .....
இந்தப் பரதிஸ் பூமிக்குரியதென எது குறிப்பிட்டுக் காட்டுகிறது?
எபிரேய வேத எழுத்துக்கள், பரலோக வாழ்கையின் பரிசை எதிர்பார்க்கும்படி உண்மை உள்ள யூதர்களை ஒரு போதும் வழிநடத்தவில்லை.. இங்கே பூமியில் பரதிஸ் திரும்ப நிலைநாட்டப்படுவதையே அந்த வேத எழுத்துக்கள் குறிப்பிட்டுக் காட்டின. மேசியாவுக்கு ''ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும் கொடுக்கப்'' படுகையில், ''சகல ஜனங்களும் ஜாதியாரும் பாசைக்காரரும் அவரையே சேவிக்க'' வேண்டும்மென தானியேல் 7 :13 ,14 - யில் முன்னறிவித்து இருந்தது. அந்த ராஜ்யத்தின் அந்தக் குடிமக்கள் இங்கே பூமியில் இருப்பார்கள். இந்தத் கள்ளன் இயேசுவிடம் சொன்னதில்; அந்தச் சமயம் வருகையில் இயேசு அவனை நினைவு கூறுவார் என்ற நம்பிக்கையே வெளிப்படுத்தினார்ரெனக் தெளிவாய் தெரிகிறது.
அப்படியானால், இயேசு, அந்தத் கள்ளனுடன் எவ்வாறு இருப்பார்? அவனை மாரித்தோரில் இருந்து எழுப்பி, அவனுடைய மாம்சப்பிரகாரமானத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்து, நித்திய ஜீவனைடைவதட்கு யெகோவாவின் கட்டளைகளைப் கற்று அவற்றிற்கு கில்படிவதட்க்கான வாய்ப்பை அவனுக்குத் தருவதன் மூலம் அவ்வாறு இருப்பார். ( யோவான் 5 :28 ,29 ) அந்தத் கல்லனின் மனந்திரும்பின மரியாதை உள்ள மனப்பான்மையில், இயேசு, அவனை பூமிக்குரிய வாழ்க்கைக்கும் பரதிஸ்யில் என்றென்றும் வாழ்வதற்குத் தங்கள் தகுதியே நிரூபிப்பதற்கான வாய்ப்புக்கும் உயிர்தேளுப்பப்பட போகிற கோடிக்கனகாநோருக்குள் சேர்ந்து கொள்வதற்குரிய ஆதாரத்தைக் கண்டார்.