kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுகப்படுத்தல்


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
சுகப்படுத்தல்


சுகப்படுத்தல்
சொற்பொருள் விளக்கம்:- உடல், மனம், அல்லது ஆவிக்குரிய பிரகாரம் நோயுற்று இருக்கும் ஓர் ஆள் நல்ல சுகம் பெறச் செய்வது.

கிறிஸ்தவ காலத்துக்கு முந்திய எபிரேய தீர்க்கதரிசிகளில் சிலரும் இயேசு கிறிஸ்துவும் பூர்வ கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் சிலரும் கடவுளுடைய ஆவியால் மட்டும் அற்புத சுகப்படுதலைச் செய்ய முடிந்தது.



நம்முடைய நாளில் கடவுளுடைய ஆவியைக் கொண்டு அற்புதச் சுகப்படுத்தல் செய்யப்படுகிறதா?


(1 )அற்புதங்களை நடப்பிக்கும் திறமை உண்மையான கடவுளிடம் இருந்து இல்லாமல் வேறே தோற்று மூலத்தில் இருந்து வரமுடியுமா?

இஸ்ரவேல் ஜனம் யேகோவாவுகுப் பலிகளைச் செலுத்துவதற்கு வனாந்தரத்துக்குள் செல்ல அனுமதி கொடுக்கும்படி கேட்க மோசையும், ஆரோனும் எகிப்தின் பார்வோனுக்கு முன் தோன்றினார்கள். தெய்வீக ஆதரவின் அத்தாட்சியாக, ஆரோன் தன் கோலைக் கிழே போடும்படி மோசே கட்டளையிட்டான், அது ஒரு பெரிய சர்ப்பம் ஆகிவிட்டது. இந்த அற்புதம் கடவுளுடைய ஆவியால் நடப்பிக்கப்பட்டது. ஆனால் எகிப்தின் மந்திரவித்தை நடப்பிக்கும் புரோகிதர்கள் தங்கள் கோல்களைப் போட்டார்கள், இவையும் பெரிய சர்ப்பங்களாகின. (யாத்தி 7 :8 -12 ) இவர்கள் யாருடைய வல்லமையால் தங்கள் அற்புதங்களை நடப்பித்தார்கள்? - உபாகமம் 18 : 10 -12  இ ஒத்துப்பாருங்கள்.


இந்த 20  ஆம் நுற்றாண்டில் கிறிஸ்தவ மண்டல குருமார் நடத்தும் ஆராதனைகளில் ஏதோ விசுவாச சுகப்படுத்துதல் நடப்பிக்கப்படுகின்றன. கிறிஸ்தவமல்லாத மதங்களுக்குள் பில்லி சூனியம் செய்கிற புரோகிதர்கள், பில்லி சூனிய மருத்துவர்கள், மாய மந்திரவாதிகள், இன்னும் மற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களும் சுகப்படுதலைச் செய்கிறார்கள்; இவர்கள் பெரும்பாலும் மாயவித்தையும் மந்திரத்தையும் பயன்படுத்துகிறார்கள். ''இயல் இயக்க மீறிய ஆற்றலால் சுகப்படுத்துவோர்'' சிலர் தாங்கள் சுகப்படுத்துவதோடு எவ்வகைளும் சமந்தப்படவில்லை என்று கூறுகிறார்கள். இந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும், சுகப்படுத்தும் வல்லமை உண்மையான கடவுளிடம் இருந்து வருகிறதா ? ::: தொடரும் .....


-- Edited by anbu57 on Thursday 24th of February 2011 03:55:56 AM


__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

மத்தேயு 24 .24 '' கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்''
மத்தேயு 7 :15 -23 15கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

நம்முடைய நாளில் நடப்பிக்கும் பரபரப்பூட்டும் சுகப்படுதல்கள், இயேசுவும் அவருடைய முதல் சீஷசர்களும் அற்புதச் சுகப்படுதல்கள் நடப்பித்த அதே முறையில் நடப்பிக்கப்படுகின்றனவா?

சேவைக்குச் செலுத்தும் செலவுகள்: ''வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்''

( இன்றைய சுகப்படுத்துவோர் அவ்வாறு செய்கிறார்களா? -- இயேசு கட்டளையிட்டபடி, இலவசமாக கொடுக்கிறார்களா ?)

வெற்றியின் வீதம்: லூக்க 6 : 19 ''  அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்'' /  அப் 5 :15 -16 ''பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
16. சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்''

(நம்முடைய நாளில், சுகப்படுதலை நாடி மத சம்மந்த சுகப்படுத்துவோரிடமும் அல்லது மதக் கோவில்களுக்காகிலும் செல்வோர் எல்லாரும் சுகமாகிறார்களா? )

''சுகப்படுத்துவோர்'' பாகமாக அமைந்துள்ள அந்த அமைப்பின் உறுப்பினரின் வாழ்க்கை முறை, அவர்கள் கடவுளுடைய ஆவியைக் கொண்டு இருக்கிறது என்ற அத்தாட்சியேக் கொடுக்கிறதா?

ஒரு தொகுதியாக அவர்கள், அன்பு, நீடிய பொறுமை, சாந்தம், தன்னடக்கம் போன்ற ஆவியின் கனிகளை முதன்மையான முறையில் வெளிப்படுத்துகிறார்களா? கலா 5 :22 ,23

அவர்கள் இந்த உலகத்தின் விவகாரங்களில் ஈடுபடுவதை அறவே தவிர்த்து, தாங்கள் உண்மையில் ''உலகத்தின் பாகமல்ல'' என்ற நிலையில் இருகிறார்களா? போர்க் காலத்தின் போது இரத்தப் பழிக்கு விலகி சுத்தமாய் நிலைத்திருக்கிறார்களா? இந்த உலகத்தின் ஒழுக்கக் கேட்டை தவிர்ப்பதனால் சிறந்த நற்பெயர் அவர்களுக்கு இருக்கிறதா? யோவான் 17 :16    ஏசாயா 2 :4  /1  தெசலோ 4 : 3 -8



-- Edited by anbu57 on Thursday 24th of February 2011 03:52:26 AM


__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

அற்புதச் சுகப்படுதலைச் செய்யும் திறமையால் இன்று உண்மையான கிறிஸ்தவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்களா?
 
யோவான் 13 :35  '' நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்''.

( இதையே இயேசு சொன்னார், நாம் உண்மையில் நம்பினால், உண்மையான கிறிஸ்தவத்தின் அத்தாட்சியாக, அற்புதச் சுகப்படுதலைச்யல்ல அன்பு இருக்கிறதாவென நோக்குவோம் ) 

அப்போஸ்தலர் 1 :8  ''பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்''.

(தம்முடைய அப்போஸ்தலரைப் விட்டுப் பரலோகத்துக்குச் திரும்பிச் செல்வதற்கு முன்பு, இயேசு இதையே அவர்கள் செய்யவேண்டிய இன்றியமையாத வேலையென அவர்களுக்கு கூறினார். சுகப்படுத்தலை அல்ல மத்தேயு 24 :14 ; 28 :19 -20  ஐயும் பாருங்கள் )
 
1  கொரிந்தியர் 12 :28 -30  ''தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார் 29. எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? 30. எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா''? 

 ( ஆகையால், உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் சுகமாக்கும் வரத்தை கொண்டிரார் என பைபல் தெளிவாய் காட்டுகிறது )

எனது அடுத்த பதிவில்

நோயுற்றோரைக் சுகப்படுத்தும் திறமை விசுவாசிகளை அடையாளங் கண்டுகொள்வதட்கு ஓர் அடையாளமென மாற்கு 16 :17 ,18  காட்டுகிறது அல்லவா? தொடரும் ......



-- Edited by Theneer Pookal on Friday 25th of February 2011 03:31:33 PM

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard