kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 1 யோவான் 1 - Lets understand!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
1 யோவான் 1 - Lets understand!!


1 யோவான் 1:

1. ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

ஆதிமுதலாய் இருந்ததும் என்பதில் ஆதி என்பது ஒரு காலத்தின் துவக்கத்தை சொல்லுகிறது!! பிதாவாகிய தேவன் அநாதியாக இருக்கிறார் என்கிறது வேதம்

சங். 90:2.............. நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.

அநாதி என்கிற வார்த்தைக்கும் ஆதி என்பதற்கு வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம்!! `owlam   என்கிற எபிரேய வார்த்தைக்கு அர்த்தம், (properly, concealed, i.e. the vanishing point; generally, time out of mind (past or future), i.e. (practically) eternity;)

அதாவது இப்பொழுது இருந்து தான் இருக்கிறார் என்கிறபடி இல்லாமல் நித்தியத்திற்கும் "இருக்கிறவராகவே இருக்கிறார்" என்கிற தேவனை குறித்து தான் பிதாவாகிய தேவன் அநாதியாக இருக்கிறார் என்று வேதத்தில் இருக்கிறாது!! ஆனால் கிறிஸ்து இயேசுவோ தேவனின் குமாரனாக ஒரு குறிப்பிட்ட துவக்கத்தில் இருந்து இருக்கிறார் என்பதை வேதத்தின் பல வசனங்கள் நமக்கு வெளிப்படுத்துகிறது!! (வெளி. 3:14, கொலோ 1:15; யோவான் 1:1; நீதி 8:22 26 இன்னும் பல வசனங்கள் இருக்கிறது)!! இப்படி ஆதிமுதல் வார்த்தையாகியிருந்தவர், பூமியில் மாம்சத்தில் இயேசு என்று வந்த போது, அப்போஸ்தலர்கள் அவரிடம் கேட்ட வார்த்தைகள், அவர் செய்தவற்றை கண்டதாகவும், அவர்கள் உற்று பார்த்து கற்றுகொண்டதையும், அந்த கிறிஸ்துவை தொட்டு பார்த்து பேசும் அளவிற்கு பாக்கியவான்களாக இந்த அப்போஸ்தர்களில் ஒருவரான யோவான் அந்த ஜீவவார்த்தை (மாம்சத்தில் வந்த கிறிஸ்து இயேசு) குறித்து நமக்கு எழுதுகிறார்!!

நிச்சயமாகவே ஆதிக்கும் அநாதிக்கும் வித்தியாசம் இருக்கிறது!! பிதாவாகிய தேவன் அநாதியாக (From Eternity to Eternity or everlasting to everlasting; no time boundation; God is not bound in time; and Hence God the Father is Eternal as the Holy Scriptures teach us) இருக்கிறார் என்பதும் உண்மை, அவரின் குமாரனான கிறிஸ்து இயேசு ஒரு ஆதியிலிருந்து (From a Beginning, From a Start of Period before becoming flesh) இருக்கிறார் என்பதும் உண்மை!!

இத்துனை உண்மைகளை நமக்கு அப்போஸ்தலர்கள் வெளிப்படுத்தியதற்காக நாம் தேவனை துதிப்போம், தொடக்கத்தில் பிதா தம் தீர்க்கத்ரிசிகளின் வாயிலாக பேசினார், தம் குமாரனின் சபையில் உள்ளவர்களிடம் அவரின் குமாரனின் வார்த்தைகள் மூலமாக பேசினார்; அந்த வார்த்தைகள் நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் இந்த காலத்திலும் நம் கைகளில் இருப்பதற்காக தேவனுக்கே நன்றி செலுத்துவோம்!!

2. அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

இந்த உலகத்தில் அந்த வார்த்தை ஒரு மாம்சமாக இயேசு என்கிற நாமத்தில் வெளிபட்டார்!! உலகத்தில் உள்ள அனைவருக்கும் இழந்து போன ஜீவனை தரும்படியாகவே அவர் (வார்த்தையும், குமாரனுமான கிறிஸ்து இயேசு) வெளிப்பட்டார்!! வந்தவர் பிதா அல்ல மாறாக பிதாவினிடத்திலிருந்து தான் வந்தார் என்கிறதை அப்போஸ்தலன் மிகவும் தெளிவாக எழுதுகிறார்!! தேவனை (பிதா) ஒரு போதும் ஒருவரும் கண்டது இல்லை!! கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து பிதாவின் அன்பு, பிதாவின் ஞானம், பிதாவின் சிந்தை, பிதாவின் வல்லமை, பிதாவின் செயல்பாடுகள், பிதாவின் கிரியைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி காண்பித்து, இவைகள் எல்லாம் நான் என் சுயமாக செய்யாமல், என்னை அனுப்பியவரின் சித்தத்தின்படியே செய்கிறேன் என்று மிகவும் தெளிவாக வேதத்தில் சொல்லியிருப்பதை நாம் அறிவோம்!! நான் என் சுயமாக போதிக்காமல், பிதா எனக்கு சொல்லிய அனைத்தும் போதிக்கிறேன் என்றும், தன்னை நல்லவர் என்று சொல்ல வேண்டாம், நல்லவர் பிதா ஒருவரே என்று தனக்கும் பிதாவிற்கு உள்ள உறவை வெளிப்படுத்தினார்!! ஒருவரும் கண்டிராத பிதாவையும் அவரின் தன்மைகளையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாக இந்த உலகத்திற்கு வெளிப்பட்டதற்கு சாட்சியாக அப்போஸ்தலர்களும் அவர்கள் எழுதிய வார்த்தைகளும் தானே அன்றி, வேறு ஒன்றும் இல்லை!!

அப்போஸ்தலர்களுக்கு பின்னும் அநேகர் தங்களை அப்போஸ்தலர்கள் என்றும் கிறிஸ்துக்கள் என்று சொல்லி வந்தார்கள் ஆனால் அவர்களிடமிருந்து கிடைத்த வார்த்தைகள் நமக்கு தேவை இல்லதவைகளே!! இன்னும் அநேகர் கிறிஸ்து இயேசுவை குறித்து எழுதியிருக்கலாம், ஆனாலும் அவை எல்லாவற்றையும் நாம் பார்ப்பதில்லை, அல்லது நம் கைகளில் இல்லாததற்கும், அவைகளை நான் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளாதற்கு ஒரே காரணம், நமக்கு எது அறியபட வேண்டும் என்று தேவன் சித்தம் கொண்டிருந்தாரோ, அதையே அறிய செய்திருக்கிறார்!! ஆனாலும் சத்திய வசனத்தை மாத்திரம் நம்பாமல் போய்யை விசுவாசிக்க தொடங்கியதும், தேவனின் நிலையை தாழ்த்த நினைத்த மனிதர்களுக்குள்ளும், கிறிஸ்துவை (அபிஷேகம் பண்ணப்பட்டவர், The Anointed) என்று என்னாமல் அபிஷேகம் செய்பவர் என்று துனிந்து போதிக்க தொடங்கியவர்களுக்குள் தேவன் தாமே வஞ்சகத்தின் ஆவியை அனுமதித்தார்!! அந்த வஞ்சகம் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருப்பதை ஒன்றான மெய் தேவனை திரியேக தேவன் என்று நம்பும், எழுதும் கூட்டத்தார்க்கு மத்தியில் நாம் வாழ்ந்தும் நமக்கு வேதம் காட்டும் வெளிச்சத்தில் நடக்க வஞ்சிக்கும் ஆவியை அல்லாமல், அவரின் குமாரனின் ஆவியை நமக்கு தந்து, தேவனை பிதா என்றும், அவரின் குமாரனை கிறிஸ்து என்றும் சொல்லும் கிருபையை நமக்கு தந்திருப்பதால் தேவனை துதிப்போம்.

தொடரும்...............


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

3. நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

சபையார் இதை கவனிக்கும்படியாக (ஏனென்றால் அவர் இருக்கும் போதே அநேக கள்ள தீர்க்கதரிசிகளும், அந்தி கிறிஸ்துவின் செயல்பாடுகளும் தொடங்கியிருந்தது), அப்போஸ்தலர்களின் விசுவாசத்தில் ஐக்கியப்படும் படியாக இதை வாசிப்போர் அந்த சத்தியத்தில் ஐக்கியம் கொள்ளவும் அழைக்கபடுகிறார்!! அப்போஸ்தர்களின் ஐக்கியம் எப்படி இருந்ததோ, அதே ஐக்கியத்தில் இருப்பது தானே உண்மையாக இருக்க முடியும்!!

அப்போஸ்தலர்களின் ஐக்கியம் பிதாவாகிய குமாரனோடும் அல்லது குமரனாகிய பிதாவோடு இருந்தது என்றா சொல்லப்பட்டிருக்கிறது!! பிரியமானவர்களே, அப்போஸ்தலர்களின் ஐக்கியம், பிதாவோடு (ஒருவர்), மற்றும் அவரின் நேச குமாரனோடு (மற்றொருவர்) தானே இருந்தது!! சபையாரும் அப்படியே அழைக்கப்படுகிறார்கள்!! ஏனென்றால் அவர்கள் கண்டும் கேட்டும் இருப்பதை நாம் தாராளமாக நம்புவோம்!! அவர்களின் ஐக்கியம் எப்படி பிதாவோடும், அவரின் குமாரனோடும் இருந்ததோ, அப்படியே நாமும் இருப்போம்!!

இப்படி இவர்கள் இருவரும் இரு வேறு நபர்கள் என்று வேதம் மிகவும் தெளிவாக சொல்லியும், வஞ்சிக்கும் ஆவியின் பாதிப்பில் உள்ள அநேகர் (பிதா வேறு குமாரன் வேறு என்கிற அறிவு அநேகருக்கு இல்லை என்பது 1 கொரி 8:7ல் உள்ளது) பிதா தான் குமாரன் என்றும், குமாரன் தான் பிதா என்றும், எங்கே குமாரன் தேவைப்படுகிறாரோ, அங்கே பிதாவை குமாரன் என்றும், எங்கே பிதா தேவையாக இருக்கிறதோ, அங்கே குமாரனை பிதாவாகவும் போதிக்கிறார்கள்!! வஞ்சிக்கும் ஆவியைக்கொண்டு இவர்களை அறியாமல் (பலர் அறிந்தும்) இவ்வித கோட்ப்பாட்டை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!! பிதா தான் குமாரன் என்றும், குமாரன் தான் பிதா என்பதை விளக்க வசனங்களை அல்ல, மாறாக காற்றை, தண்ணீரை, மின்சாரத்தை, இப்பொழுது கம்ப்யூட்டர் வரைக்கும் அனைத்தையும் சாட்சிக்கு அழைக்கிறார்கள் ஆனால் வேத வசனங்களை மாத்திரம் ஏனோ இவர்கள் பார்க்க தவறுகிறார்கள்!!

வேதம் சொல்லுகிறபடி அநேகர் தான் இன்று வஞ்சகத்தில் இருக்க முடியும்!! ஏனென்றால் தன் குமாரனின் சாயலில் உருவாக தேவனுக்கு வெகு சிலரே தேவை!! திரித்துவ உபதேசம் சரி என்றால், கிறிஸ்தவத்தில் அநேகர் அதை பின்பற்றுவதினால் அது சரி இல்லை என்றே ஆகிவிடுகிறது!! இதையும் நாம் வசனத்தின்வாயிலாகவே பார்ப்போம்,

மத் 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

இப்படி நம் எஜமானன் கிறிஸ்து இயேசுவே சொல்லிய பிறகு இந்த 2000 வருடங்களாக அநேகரின் போதனைகளையும், அப்போஸ்தர்களின் போதனையும் வைத்து பார்க்கும் போது அநேகர் எந்த பாதையில் நடப்பவர்களாக இருக்கிறார்கள் என்றும், சிலர் எந்த பாதையில் நடப்பவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறதே!! இதை திரித்துவம் பேசும் நண்பர்களும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள், இன்று உலகம் முழுவதும் உள்ள கோடா கோடி கிறிஸ்தவர்கள் இதை தானே விசுவாசிக்கிறார்கள் என்று!! ஆக அநேகர் விசுவாசிக்கும் ஒன்றை சரி என்று இவர்கள் சொல்லுவது வசனத்திற்கு விரோதமாக இருக்கிறது என்று ஏனோ இவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை!!

ஆனாலும் பிரியமானவர்களே, அவன் அவன் தான் அழைக்கப்பட்டபடியே விசுவாசம் கொள்ளட்டும்!! ஏனென்றால் ஒருவரும் கெட்டுபோகாமல் அனைவருக்கும் சத்தியத்தையும், தேவனையும் அறியச்செய்யவே, கிறிஸ்து இயேசு தன்னை மீட்கும் பொருளாக கொடுத்தார்!!

1 தீமோ 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

ஆக அப்போஸ்தர்கள் இதை குறித்து கொடுத்த சாட்சி நமக்கு இன்று விளங்கியிருக்கிறது, என்னவென்றால் பிதாவாகிய தேவனுக்கு நன்மையும் பிரியமுமாயிருப்பது அவரின் குமாரனின் மீட்கும் பொருளினால் எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடைவார்கள் என்பதை தன் சித்தமாக கொண்டு இருப்பது தான்!! என்ன ஒரு உன்னதமான சாட்சி!! என்ன ஒரு தெளிவான ஞானம் உள்ள தேவனாக இருக்கிறார் நம் தேவன்!!

இன்று இரட்சிப்பு என்றாலே, இயேசு கிறிஸ்துவை (சத்தியத்தை) ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் எடுப்பதும் பாவத்தை விட்டு விட்டேன் என்று சொல்லுவதும், ஆனாலும் இறுதியில் பாவத்தின் சம்பளமான மரனத்திற்கு செல்லுவதை அறியாமல் இருப்பதாக இருக்கிறது!! ஆனால் நமக்கோ வேதத்தின்படி இரட்சிப்பு என்றால், பாவத்தின் சம்பளமாகிய மரணத்திலிருந்து மீட்கப்படுவதே!! சத்தியத்தை ஏற்று இரட்சிக்கப்பட்டேன் என்பது இன்றைய கிறிஸ்தவர்களின் வார்த்தைகள், ஆனால் இரட்சிக்கப்பட்ட பின்பு தான் சத்தியத்தை அறிகிற அறிவை தரப்போவதாக நம் தேவன் சித்தம் கொண்டு இருக்கிறாரே!!

தொடரும்..............


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

1 யோவான் 1:8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன், நீங்கள்!! என்று கேட்கும் கூட்டத்தாருக்கு புரியாத ஒரு வசனம் இது!! நமக்கு என்று யோவான் சொல்லுவது கிறிஸ்துவின் சபைக்கே!! அப்படி என்றால் நமக்குப் (சபையோருக்கு) பாவமில்லை என்று சொல்லுவோருக்குள் சத்தியம் இருக்கவே இருக்காது!! என்ன ஒரு உண்மை!! சொல்லுவது ஒன்றும் செய்வதும் ஒன்றான இன்றைய ஊழியர்களை வைத்து நாம் இதை நிதானிக்கலாம்!! மேடை போட்டு என்னமோ தன்னை பெரிய பரிசுத்தவான்கள் (சத்திய இராதவர்கள்) என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை பாவிகள் என்று சொல்லுவதை நாம் கேட்டிருப்போம்!! இப்படி பட்டவர்கள் தங்களை தலைவர்கள் என்று கூறிக்கொண்டு, நாங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் (பொய்) நீங்கள் பாவிகளாக இருக்கிறீர்களே என்பார்கள்!!

நாங்கள் இரட்சிக்கப்பட்டோம் என்பதே ஒரு பெரிய பொய், ஏனென்றால் இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்து தான்!! அப்படி என்றால் நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்றால், நான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டேன் என்று தானே சொல்லுகிறார்கள்!!

பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் அந்த சம்பளத்தை மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் பெற்றே ஆக வேண்டும் என்பது தேவ நியதி!! ஆனாலும் அந்த மரணத்திலிருந்து அனைவரும் உயிர்த்தெழுந்து வரும்படியே, தேவன் தன் ஒரே பேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பினார்!! அவரும் தேவனின் சித்தத்தை நிறைவேற்ற தன்னை இந்த மனுகுலத்திற்கு மீட்கும் பொருளாக தன்னை கொடுத்தார்!! அதன் பலனாக அனைவரும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து வருவார்கள், இதை தான் இரட்சிப்பு என்கிறோம்!! உயிருடன் இருக்கும் போதே இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்பது இருப்பதிலேயே ஒரு பெரிய பொய்!! இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்றாலே, நமக்குள் பாவம் இல்லை என்பது தானே, ஆனால் நமக்குள் பாவமில்லை என்று சொல்லுவோரு தம்மை தாமே வஞ்சித்துக்கொண்டு இருக்கிறவர்களாக சத்தியம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்!! இன்றைய பிரபல போதகர்கள், ஊழியர்கள், சுவிசேஷகர்கள் என்று சொல்லுவோர் இப்படி பட்ட கூட்டத்தாருக்கு உதாரனமாக இருப்பவர்கள்!! இந்த இரட்சிக்கப்பட்டேன் என்று சொல்லுவோர் நிலை எப்படி பட்டது தெரியுமா,

லூக்கா 18:11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

இன்று அடுத்தவர்களை பாவிகள் என்று சொல்லும் நம்மவர்கள் நிலையும் இதே தான்!! ஆகவே தான் நான் பாவியில்லை அல்லது நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்பவர்கள் தம்மையே வஞ்சகத்தில் வைத்துக்கொண்டு, சத்தியத்தில் இல்லாதவர்களாக இருப்பார்கள்!!

1 யோவான் 1:10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

முதலில் என்னிடத்தில் பாவம் இல்லை என்று சொல்லுவோரு பொய்யர் என்று சொல்லுகிறார் யோவான், அடுத்து, நான் பாவம் செய்வதே இல்லை என்போர், அவரை (கிறிஸ்துவை) பொய்யராக்குக்கிறார்களாம்!! அவரின் வார்த்தை (வசனம்) அவர்களுக்குள் இருக்காதாம், சத்தியம் இருக்காதாம்!! ஏனென்றால் தேவனின் வார்த்தைகளே சத்தியம்!! பெரும் ஊழியர்கள் வசனத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்கள் சுய அனுபவங்களினாலும், பரலோக நரக விஸிட்டுகளாலும் ஜனங்களை கவர்வதை நோக்கமாக கொண்டிருக்கும் இவர்கள் பரிசுத்தவான்களின் வேஷமிடுபவர்களாக் இருந்து, நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன், இனி எனக்குள் பாவம் இல்லை, நான் பாவம் செய்வதில்லை என்று சொல்லிக்கொண்டு சத்தியம் அற்றவர்களாகவும், கிறிஸ்துவின் வார்த்தைகள் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்!!

பேதுருவை போல், பவுலை போல் நான் பாவி தான் என்கிற Conviction இல்லாமல் நான் தான் இரட்சிக்கப்பட்டு விட்டேனே என்பதைவிட ஒரு பெரிய புரட்டல் ஒன்றும் இல்லை!! இது போன்று சத்தியமற்றவர்களிடமும் கிறிஸ்துவின் வசனம் இல்லாதவர்களிடம் எச்சரிப்பாக இருக்கவே யோவான் மூலமாக தேவன் நமக்கு  கொடுத்திருக்கும் மற்றும்மொரு சத்தியம்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

1 யோவான் 2:1. என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

பாவம் என்னிடத்தில் இல்லை என்று சொல்லுபவன் பொய்யனும் அவனிடத்தில் சத்தியம் இல்லை என்று தானே 1 யோவான் 1:8,10 வசனங்கள் சொல்லியது!! இதை யோவான் ஏன் எழுதுகிறார் என்றால், நாம் பாவம் செய்ய கூடாதாம்!! ஏனென்றால் நாம் உருவாகும் போதே பாவத்தில் தான் உருவாகிறோம்

சங்கீதம் 51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

ரோமர் 3:23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,...

ஏற்கனவே நாம் உருவானதே பாவத்தில் தான் என்று தாவீது சொல்லுகிறார், அந்த பாவத்தில் இருக்கும் அனைவருமே தேவ மகிமையற்றவர்களாகி இருக்கிறார்கள், இதி இன்னிடத்தில் பாவம் இல்லை என்று சொல்லுபவன், நான் பரிசுத்தவான் என்று சொல்லுபவன் பொய்யனாகவும் சத்தியமற்றவனாகவும் இருக்கிறானாம்!! இதை குறித்து நாம் முந்தய பதிவுகளில் பார்த்தோம்!! ஏற்கனவே நாம் பாவத்தில் இருந்து, அந்த பாவத்தில் சம்பளமாகிய மரணத்திற்கு பிரவேசிப்பது நிச்சயமான ஒரு நிலை!! நம்மால் நம் செய்கையால், நம் கிரியைகளால், நம் வார்த்தைகளால், நம் பக்தி முயற்சிகளால், நம் எழுத்துக்களால், இன்னொருவரின் பரிந்துரை ஜெபத்தினால் பாவத்தை போக்கி கொள்ள முடியாது!! முன்பு கத்தோலிக்கர்கள் ஆரம்பித்து வைத்த பாவமண்ணிப்பு சடங்காச்சாரம் இன்று பெந்த கோஸ்தே சபைகளில், பாஸ்டர் முன் பாவ அறிக்கை செய்வதும் எல்லாம் ஒன்றும் தான்!! அங்கே அங்கி போட்ட சாமியார் ஒருவரின் பாவ மண்ணிப்பிற்காக ஜெபிப்பார் (ஏனென்றால் அவர் பரிசுத்தவான் என்று தன்னை உயர்த்திக்கொண்டிருப்பவர்) இங்கேயோ, மேடையில் அல்லது வீட்டிற்கு சென்றோ, பிரதர், உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள், இதோ நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் (இங்கே அந்த பாஸ்டரும் தன்னை பரிசுத்தவான் என்று நினைப்பின் இருப்பதால் இப்படு சொல்லுகிறார்)!! மண்ணிக்கனும், இவர்கள் இருவரிலும், யாரின் செய்கையும், அல்லது இவர்களுக்கு முன்பாகவோ இவர்களிடமோ பாவ அறிக்கை செய்து பாவ மண்ணிப்பு பெற்றுக்கொள்ள முடியாது!!

மாறாக பாவம் செய்யும் ஒருவன், நமக்காக பரிந்து பேசும் கிறிஸ்து இயேசுவிடத்தில் தன் பாவங்களை அறிக்கை செய்தால், அவர் நமக்காக பிதாவிடத்தில் பரிந்து பேசுகிறார் என்கிறது வேதம்!! பாவ மண்ணிப்பை கொடுப்பவர் பிதா தான் ஆனால் அதற்காக கிறிஸ்து இயேசு பரிந்து பேசுபவராக இருக்கிறார்!! அவருக்கு மாத்திரமே அந்த அதிகாரம் பிதாவான தேவன் கொடுத்திருக்கிறார்!! ஏனென்றால் கிறிஸ்து இயேசு ஒருவரே இந்த பூமியில் வந்து தேவனின் சித்தைத்தை நிறைவேற்றிய தேவ குமாரனாக இருக்கிறார்!! இப்பொழுது உயர்த்தப்பட்டு பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து நமக்காக பரிந்து பேசுபவராகவும், உலகத்திற்கும் தேவனுக்கும் மத்தியஸ்தராகவும் இருகிறார்!! கிறிஸ்துவின் தன்னை பிதாவின் சித்தத்தின்படி பலியாக கொடுத்ததினால் இன்று நம் பாவங்களுக்கு பரிந்து பேசுபவராக இருக்கிறார்!! நாம் ஒரு சாமியாரிடமோ ஒரு பாஸ்டரிடமோ ஒரு ஊழியக்காரனிடமோ எந்த ஒரு பரிசுத்தத்தையும் பாவம் இல்லா தன்மையில்லாதவர்களிடத்தில் செல்லாமல், நமக்காக பரிந்து பேசும் அதிகாரம் கொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவிடம் மாத்திரமே நம் பாவங்களை அறிக்கை செய்வோம்!!

சிலர் சொல்லுவார்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம் (!!) எங்களிடத்தில் பாவம் இல்லை என்று!! இன்றைய உலகம் வஞ்சகத்தினாலும் ஒவ்வொரு விஷயத்திலும் பாவத்தினாலும் நிறைந்திருக்கிறது!! இப்படி பட்ட இந்த உலகத்தில் ஒருவன் பாவம் தன்னிடம் பாவம் இல்லை, நான் மிகவும் பெரிய பரிசுத்தவான் என்ரு சொல்லுகிறான் அல்லது இன்னோருவரை சொல்ல வைக்கிறான் என்றால் அவனை விட ஒரு பெரிய பாவி இருக்க முடியாது!! பாவத்தில் இருக்கும் மனிதர்களில் ஒருவரும் பாவ மண்ணிப்பிற்கான பலியை செலுத்த முடியாது என்று தானே கிறிஸ்து இயேசு பரலோகத்திலிருந்து மாம்சமாக பிறந்தார்!! ஒரு முழு மனிதனாக, மனிதற்களுக்குண்டான எல்லா குணங்கலோடு, வாழ்ந்து தம் பிதாவின் சித்தத்தை நிறவேற்றும் படி பலியானார்!! ஆக நம் பாவங்களுக்கு பரிந்து பேச அவர் ஒருவருக்கே அதிகாரம் இருக்கிறது, தகுதி இருக்கிறது!!

இது மாத்திரம் இல்லை, இன்று மேடை போட்டு நீ கிறிஸ்துவிடம் வா அப்பொழுது தான் உன் பாவங்கள் மண்ணிக்கப்படும் என்று பலர் தங்களின் கிறிஸ்துவின் தூதர்களாக நினைத்து பிரசங்கிக்கிறார்களே, அது சரியா என்றால், இல்லை, அது சரி இல்லை!! ஏனென்றால் அவர் நம் (அதாவது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நமக்கும்) பாவங்களை சுமந்து தீர்த்த பலியானவர், நிற்க, நன் பாவங்களுக்கு மாத்திரம் அல்ல என்று அப்போஸ்தலர் தொடருகிறார், அவர் நம் பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வ லோகத்தின் (எல்லா மனிதர்களின்) பாவங்களையும் நிவர்த்தி செய்கிறவராக இருக்கிறார்!! கிறிஸ்துவை குறித்து என்ன ஒரு அருமையான சாட்சி, தேவன் கிறிஸ்து மூலமாக நிறவேற்றிய இரட்சிப்பின் திட்டத்தில் எப்படி பட்ட ஒரு சந்தோஷமான செய்தி அடங்கியிருக்கிறது, ஆகவே தான் கிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷம் கிடைக்கும் செய்தியாக இருந்தது!! கிறிஸ்து கிருபாதார பலியானதின் காரணத்தினால், அவரை ஏற்றுக்கொண்ட நமக்கும், அவரை ஏற்றுக்கொள்ளாத உலகத்தாருக்கும், அவரே பாவ நிவர்த்திசெய்கிறவராக இருக்கிறார்!! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது, ஏதோ இனி நான் பாவமே செய்ய முடியாது என்கிற தன்மைக்கு வருவதற்காக அல்ல, மாறாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதே அவரின் சீஷனாக இருந்து அவரின் பாடுகளில் பங்கு கொண்டு, அவரின் சரீரமான சபையில் ஐக்கியம் கொள்வதற்கே அன்றி, என்னை பரிசுத்தவானாக காட்டிக்கொள்வதற்கு அல்ல!! அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களும் பாவ நிவர்த்தி பெருகிறார்கள், ஆனால் கிறிஸ்துவின் சரீரத்தில் சபையாக ஐக்கியம் பெற இயலாதவர்களாக இருக்கிறார்கள்!!

நம் ஊழியர்களோ, தங்களை மிகுந்த பரிசுத்த வான்கள் என்று எண்ணி, மற்றவர்களின் பாவங்களுக்கு அழுவதை நிறுத்தி விட்டு, முதலில் தானும் ஒரு பாவி தான் என்பதை மனதில் கொண்டு நம் பாவங்களுக்கு மாத்திரம் அல்ல், உலகத்திலிருக்கும் ஒவ்வொரு மனிதனின் பாவத்திற்காகவும் கிறிஸ்து மரித்தார் என்றும், அதன் சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது என்பதை நினைவில் வைக்கட்டும்!! என்னால் பாவம் செய்யவே முடியாது என்று எந்த ஒரு மனிதனும் நினைக்காமல் இருக்கட்டும்!! இனியும் கூட்டம் போட்டு, நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டல் பாவத்தில் மரிப்பாய் என்கிற வீன் போதனைகள் செய்யாதிருங்கள்!! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவன் சபையில் தன் பங்கை இழக்கிறான், ஆனால் கிறிஸ்துவின் கிருபாதாரபலியினால் மற்ற அனைவரும் கூட உயிர்த்தெழுகிறார்கள்!!

இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்து மீட்கப்படுவதே அன்றி இப்பொழுது நான் பரிசுத்தவானாக இருப்பது என்று இல்லை!! உன்னிடத்தில் ஒரு பாவமும் இல்லை என்று சொல்லுபவன் முதல் கல்லை எறியட்டும் என்று கிறிஸ்து இயேசு சொன்னது நினைவிருக்கட்டும்!! மரணத்திலிருந்து அனைவரும் மீட்கப்படுவார்கள், அதுவே இரட்சிப்பு, சிலர் இன்று கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு சீஷனாக இருப்பவர்கள் அவரின் சாயலை தரித்துக்கொள்வார்கள், மற்ற அனைவரும் இந்த பூமியில் வருவார்கள், கிறிஸ்து இயேசுவின் கிருபதார பலியின் பயனால்!! கிறிஸ்துவின் சாயலை தரித்துக்கொள்ள சீஷனாக வாழ வேண்டுமென்றால் ஒருவனை கிறிஸ்துவிடத்திற்கு கூப்பிட முயற்சிக்கக்லாமே தவிர, நீ கிறிஸ்துவிடத்தில் வந்தால் தான் உனக்கு பாவ மண்ணிப்பு என்பது அபத்தமான ஒரு அழைப்பு!! மேலும் கிறிஸ்துவிடத்தில் ஒருவன் வருவதற்கு ஒரு ஊழியனின் எந்த ஒரு முயற்சியும் கிடையாது, மாறாக பிதா ஒருவனை கிறிஸ்துவிடத்திற்குள் இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் வரான்!!

நாம் நம்மை பரிசுத்தவான்கள் என்று என்னுவதை காட்டிலும் நம்மை முழு சீஷத்துவத்திற்குள் நடத்தவே தேவனிடத்தில் மன்றாடுவோம்!! நம்மை வழி நடத்துபவர் அவரே!! நானும் பாவி தான் என்று அறிந்தவர்களாக கிறிஸ்து ஒருவரே நமக்கு பரிந்துரை செய்கிறார் என்கிற நிச்சயத்தில் நாம் நடப்போம்!!

தொடரும்................................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//அப்போஸ்தலர்களின் விசுவாசத்தில் ஐக்கியப்படும் படியாக இதை வாசிப்போர் அந்த சத்தியத்தில் ஐக்கியம் கொள்ளவும் அழைக்கபடுகிறார்!! அப்போஸ்தர்களின் ஐக்கியம் எப்படி இருந்ததோ, அதே ஐக்கியத்தில் இருப்பது தானே உண்மையாக இருக்கமுடியும்!!//

ஆம், நிச்சயமாக.

//அவர்களின் ஐக்கியம் எப்படி பிதாவோடும், அவரின் குமாரனோடும் இருந்ததோ, அப்படியே நாமும் இருப்போம்!!//

அதாவது அப்போஸ்தலரின் அதே ஐக்கியத்தில் இருப்பதுதான் தேவசித்தம் என்கிறீர்கள். ஆனால் நம் மத்தியில் பலர் அப்படியில்லையே! அவ்வாறெனில் தேவசித்தப்படி அவர்கள் நடக்காமல், தங்கள் சுயசித்தப்படி நடக்கிறார்கள் என்கிறீர்கள்.

பெரியன்ஸ்:

//இனியும் கூட்டம் போட்டு, நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டல் பாவத்தில் மரிப்பாய் என்கிற வீன் போதனைகள் செய்யாதிருங்கள்!!//

அதாவது, “நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டல் பாவத்தில் மரிப்பாய்” எனப் போதிப்பது தேவசித்தத்திற்கு எதிரானது என்கிறீர்கள். ஆனால் அப்போதனையைத்தானே பலர் செய்கின்றனர்! அவ்வாறெனில், தேவசித்தமல்ல, மனிதசித்தம் தானே தற்போது நடக்கிறது?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அதாவது, “நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டல் பாவத்தில் மரிப்பாய்” எனப் போதிப்பது தேவசித்தத்திற்கு எதிரானது என்கிறீர்கள். ஆனால் அப்போதனையைத்தானே பலர் செய்கின்றனர்! அவ்வாறெனில், தேவசித்தமல்ல, மனிதசித்தம் தானே தற்போது நடக்கிறது?//

இப்பொழுது சுவிசேஷம் என்கிற பெயரில் கூடுகிற கூட்டம் நிச்சயமாக தேவ சித்தம் அல்ல, மாறாக மனிதனின் சிந்தனையை தேவன் அனுமதிக்கிறார்!! கிறிஸ்துவின் வருகையின் போது விசுவாசத்தை காண்பாரோ என்று வசனம் சொல்ல, அது தேவ சித்தம்!! இந்தியவை "கிறிஸ்தியா"வாக மாற்றுவோம் என்பது மனிதனின் சிந்தனை (சித்தம் அல்ல‌)!! இதில் எது நிறைவேறும், தேவனின் சித்தமா அல்லது மனிதனின் சிந்தனையா!!

அன்று அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கட்டளையின்படி சுவிசேஷம் சொன்னார்கள், அனுதினமும் சபைகளில் விசுவாசிகள் சேர்ந்தார்கள், இது நிச்சயமாகவே தேவனின் சித்தமே!! ஆனால் நாட்கள் கடைசியாகும் போது விசுவாசம் இருக்காது என்று வேதம் தெளிவாக சொல்லும் போது, இல்லை இல்லை, நாங்கள் சுவிசேஷம் சொல்லி தேசங்களை கிறிஸ்துவிற்காக மாற்றுவோம் என்று வேத வசனங்களுக்கு விரோதமாக செல்வதை மனித சித்தம் என்று அல்ல, மனித சிந்தனையின் கிரியை என்றே சொல்லுவேன்!! தேவன் இதை நிச்சயமாகவே அனுமதிக்கிறார்!! தேவன் அனுமதிக்காமல் போனால் இதில் ஒரு கூட்டமும் நடக்க முடியாது!! தேவன் இதை அனுமதித்தாலும் தேவனின் சித்தமே நிறைவேறும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை!!

தேவன் சாத்தானின் செயலை அனுமதிக்கிறார் என்பதால் சாத்தானின் சிந்தனைகள் (சித்தம் அல்ல) நிறைவேறும் என்பதற்காக அல்ல, மாறாக தேவனின் சித்தம் நிறைவேறவே!! அப்படியே தேவன் எல்லாவற்றையும் அனுமதிக்கிறார்!!

எரேமியா 14:14 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.

இது தான் உண்மை!! இன்று சுவிசேஷம் சொல்லுகிறோம் என்று தேவனின் சித்தத்தை அல்ல, மாறாக தங்கள் இருதயத்தின் கபடத்தையே "தீர்க்கதரிசனமாய்ச்" சொல்லுகிறார்கள்!! இவர்கள் சொல்லுகிறார்கள், ஆனால் கிறிஸ்தவர்கள் அதே சதவிகிதத்தில் தான் இருக்கிறார்கள்!! அது ஏனோ!!

அப்போஸ்தலர்கள் எல்லாவற்றையும் (எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும் தான்) விட்டு விட்டு சுவிசேஷம் சொன்னார்கள்!! இந்த முக்கியமான விஷயத்தை விட்டு விட்டு, அவர்கள் சொன்னார்களே, அதையே தான் இவர்களும் சொல்லுகிறார்கள் என்பது கிடையவே கிடையாது!! அவர்களை போல் இவர்கள் எதை தான் விட்டு விட்டார்கள்!!? எப்படிங்க, இரண்டும் ஒன்று போல் யோசிக்க தோன்றுகிறது!! அப்போஸ்தலர்கள் தேவ சித்தத்தின்படி சுவிசேஷம் சொன்னார்கள், இவர்கள் தங்களின் இச்சைகளையும், தங்களின் சிந்தனைகளும் சுவிசேஷம் (!!) என்று சொல்லுகிறார்கள்!! இது தேவனின் சித்தம் அல்ல, ஆனால் தேவன் அனுமதிக்கிறார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//இப்பொழுது சுவிசேஷம் என்கிற பெயரில் கூடுகிற கூட்டம் நிச்சயமாக தேவ சித்தம் அல்ல, மாறாக மனிதனின் சிந்தனையை தேவன் அனுமதிக்கிறார்!!//

தேவன் அனுமதிக்காமல் இவ்வுலகில் ஒரு விஷயமும் நடக்காது என்பது தேவநம்பிக்கையுடைய அத்தனை பேருக்கும் தெரிந்த விஷயம்தான் சகோதரரே!

மனிதனின் சிந்தனையை தேவன் அனுமதிக்கிறார் என்றால், அங்கு தேவ சித்தமல்ல, மனித சித்தமே நடக்கிறது என்றுதானே அர்த்தம்? இந்தச் சிறிய விஷயத்தைக்கூடப் புரிந்துகொள்ளாமல், நடப்பதெல்லாம் தேவசித்தமே எனக் கூறுகிறீர்கள்.

மனிதனின் சித்தத்தைத் தேவன் அனுமதிப்பதென்பது அவரது இயலாமையைக் காட்டவில்லை. மனிதன் அவனது சித்தத்தின்படியே சென்று மனந்திருந்தவேண்டும் என்பதே தேவனின் விருப்பம். ஒருவேளை மனிதனின் சித்தம், தேவசித்தத்தோடு இசைந்திருந்தால் தேவன் நிச்சயமாகவே மகிழ்ந்திருப்பார். ஆனால் மனிதன் அப்படியில்லாமல், தேவசித்தத்திற்கு எதிராக நடந்ததால்தான், அவனை உண்டாக்கியதற்காக தேவன் மனஸ்தாபப்பட்டார்.

ஆகிலும், ஏராளமான மனிதர்கள் தேவசித்தத்திற்கு எதிராக நடந்தாலும், ஒருசில மனிதர்கள் தேவசித்தத்திற்கு இசைவாக நடந்ததுமுண்டு, நடப்பதுமுண்டு. அவர்களின் நிமித்தமாகத்தான் இவ்வுலகம் இன்னமும் முழுமையாக அழியாமல் தப்பித்துவருகிறது.

நோவா காலத்தில் ஏராளமான மனிதர்கள் தேவசித்தத்திற்கு எதிராக நடந்தாலும் நோவா எனும் ஒரு மனிதன் தேவசித்தப்படி நடந்ததால்தான் மனுக்குலம் முழுமையாக அழிக்கப்படாமல் தப்பியது. தேவசித்தப்படி நடந்த ஒரே மனிதன் மோசேயினிமித்தம் முழுஇஸ்ரவேலரும் தப்பினார்கள். ஒரு பட்டணத்தில் 10 நீதிமான்கள் (அதாவது தேவசித்தப்படி நடப்பவர்கள்) இருந்தால்கூட அதினிமித்தம் அப்பட்டணத்தை நான் அழிக்கமாட்டேன் என தேவன் சொன்னதை நாம் அறிவோமல்லவா?

எனவே இவ்வுலகில் தேவசித்தப்படி நடக்கிற மனிதர்களும் உண்டு, தேவசித்தத்திற்கு எதிராக நடக்கிற ஏராளமான மனிதர்களும் உண்டு. தேவசித்தம் நேற்றும் இன்றும் என்றும் மாறுவதில்லை. மனிதனின் சித்தம் தேவசித்தத்திற்கு இசைவாக இருக்கவேண்டும், தேவகட்டளைகளின்படி மனிதன் நடக்கவேண்டும் என்பதுதான் ஆதிமுதல் தேவனின் விருப்பம்.

ஆதாமுங்கூட தமது சித்தப்படி விலக்கப்பட்ட கனியைப் புசிக்காதிருக்கவேண்டும் என்றே தேவன் விரும்பினார். அதேவேளையில், ஆதாம் தமது சித்தத்திற்கு எதிராக நடக்கக்கூடும் என்பதையும் தேவன் நன்றாகவே அறிந்திருந்தார். சாத்தானின் வஞ்சகத்தால் ஆதாம் தேவனின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யாமல், சாத்தானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தான்.

தேவசித்தமும் ஆதாமின் சித்தமும் இசைவாக இருப்பதற்குப் பதில், சாத்தானின் சித்தமும் ஆதாமின் சித்தமும் இசைவாகிப்போனது. தேவனின் விருப்பம் நிறைவேறாமல் போனதும், தேவன் கன்னத்தில் கையைவைத்துக்கொண்டு இருக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடர்ந்தார். தமது பரீட்சையில் மனிதன் தோற்றுப்போனால் என்ன செய்யவேண்டும் என்பதை ஏற்கனவே தேவன் திட்டம் செய்திருந்தார். மனிதன் தோற்றுப்போனதும் அத்திட்டத்தை தேவன் செயல்படுத்தத் தொடங்கினார். அதாவது தமது குமாரனாகிய இயேசுவின் மூலம் மனிதன் இரட்சிக்கப்படவேண்டும் எனும் தமது திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினார்.

ஸ்திரீயின் வித்துக்கும் உன் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் என ஆதியிலேயே தேவன் சர்ப்பத்திடம் சொல்லவில்லையே! ஆதாமை சர்ப்பம் வஞ்சித்த பின்னர்தான் அக்கூற்றை தேவன் சொன்னார். ஆம், ஆதாம் விழுந்துபோனபின்னர்தான் “இயேசுவின் மூலம் இரட்சிப்பு” எனும் திட்டம் செயல்படத் தொடங்கியது.

ஆதாம் விழுந்துபோனதால், அவனது சந்ததியில் எல்லோருமே அநீதிமான்களாக தேவசித்தத்திற்கு எதிராகத்தான் நடக்கவேண்டும் என தேவன் நினைக்கவில்லை. பாவசுபாவத்தில் பிறந்தால்கூட, மனிதர்கள் தமது சித்தப்படி நடக்கவேண்டும் என்றே தேவன் விரும்பினார். எத்தனைபெரிய பாவசோதனையின்போதும் சோதனையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட யோசேப்பினிமித்தம் தேவன் நிச்சயமாக மகிழ்ந்திருப்பார். எனவேதான் அவரை எகிப்தின் அதிபதியாக தேவன் உயர்த்தினார்.

ஏராளமான மனிதர்கள் தேவசித்தத்திற்கு எதிராக நடந்தாலும், ஒரு தனி மனிதன் அல்லது ஒருசில மனிதர்கள் தேவசித்தத்திற்கு இசைவாக நடக்கையில், அந்த சில மனிதர்களினிமித்தம் ஏராளமான மனிதர்களுக்கு தேவன் இரக்கம் பாராட்டி வருகிறார்.

தேவன் மிகுந்த எதிர்பார்ப்போடுதான் சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக்கினார். அவர் தேவசித்தப்படி நடந்திருந்தால், அவரது ராஜ்யத்தை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்தவேண்டும் என்பதுதான் தேவனின் விருப்பம் (1 சாமு. 13:13). ஆனால் அந்தோ, சவுல் தேவசித்தப்படி நடக்கவில்லை. இதனால் தேவன் கன்னத்தில் கைவைத்துக்கொண்டிருக்கவில்லை. சவுலின் விழுதலால் கன்னத்தில் கைவைத்துக்கொண்டிருந்த சாமுவேலிடம் தேவன் இப்படிச் சொன்னார்.

1 சாமுவேல 16:1  1 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.

ஒருவன் தமது சித்தப்படி நடவாவிட்டால் அடுத்தவனைத் தேவன் தெரிந்துகொள்கிறார். இப்படித்தான் தேவதிட்டம் ஒவ்வொன்றும் செயல்பட்டு வந்தது/வருகிறது. இதில் தேவனுக்கு எவ்விதத்திலும் இழுக்கு கிடையாது.

சாத்தனைப் பொறுத்தவரை அவன் மனிதரை பொய்சொல்லி வஞ்சித்து தனது திட்டத்தை செயல்படுத்திவருகிறான். ஆனால் தேவனோ மனிதனிடம் உள்ளதைச் சொல்லி அவனாகத் தமது சித்தத்திற்கு இசையும்படி காத்திருக்கிறார். (Gentle man மாதிரி Our God is Gentle God)

ஆம், மனிதனின் இதயக்கதவருகே வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறார்; அவர் நினைத்தால் கதவை உடைத்துக்கொண்டு செல்லமுடியும்தான். ஆனால் அது அவரது விருப்பமல்ல. மனிதன் தானாக முன்வந்து கதவைத் திறக்கவேண்டும் என்பதே தேவனின் விருப்பம். அப்படித் திறக்கிற மனிதனின் இருதயத்தினுள்தான் அவர் பிரவேசிப்பார். திறக்காத மனிதனை விட்டுவிடுவார். இது தேவனுக்கு எவ்விதத்திலும் இழுக்கல்ல. கதவைத் திறக்காத மனிதனின் கதவை உடைத்து உள்ளே செல்வதுதான் தேவனுக்கு இழுக்கு.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//இது தேவனின் சித்தம் அல்ல, ஆனால் தேவன் அனுமதிக்கிறார்!!//

தேவசித்தம் அல்லாததை தேவன் அனுமதிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அங்கு தேவசித்தம் நடக்கவில்லை, தேவசித்தத்திற்கு எதிரான மனிதசித்தம் அல்லது சாத்தானின் சித்தம்தானே நடக்கிறது என அர்த்தம்?

பின்னர் எப்படி எல்லாமே தேவசித்தம் என நீங்கள் கூறமுடியும்?

தன் மகன் கல்லூரிப்படிப்பு படிக்கவேண்டுமென்பது தகப்பனின் சித்தம்/விருப்பம். ஆனால் மகனின் சித்தமோ தகப்பனின் வியாபாரத்தைக் கவனிக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. அப்போது தகப்பன் என்ன செய்வான்?

இவனைக் கட்டாயப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பினால் இவன் எங்கே படிக்கப் போகிறான் என நினைத்து, மகனின் சித்தப்படியே அவனை வியாபாரத்தைக் கவனிக்க அனுமதிப்பார்.

இங்கு நடந்தது தகப்பனின் சித்தமா, மகனின் சித்தமா எனக் கேட்டால், மகனின் சித்தமே என சிறுகுழந்தைகூட சொல்லும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

//ஒருவன் தமது சித்தப்படி நடவாவிட்டால் அடுத்தவனைத் தேவன் தெரிந்துகொள்கிறார். இப்படித்தான் தேவதிட்டம் ஒவ்வொன்றும் செயல்பட்டு வந்தது/வருகிறது. இதில் தேவனுக்கு எவ்விதத்திலும் இழுக்கு கிடையாது.

சாத்தனைப் பொறுத்தவரை அவன் மனிதரை பொய்சொல்லி வஞ்சித்து தனது திட்டத்தை செயல்படுத்திவருகிறான். ஆனால் தேவனோ மனிதனிடம் உள்ளதைச் சொல்லி அவனாகத் தமது சித்தத்திற்கு இசையும்படி காத்திருக்கிறார். (Gentle man மாதிரி Our God is Gentle God)

ஆம், மனிதனின் இதயக்கதவருகே வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறார்; அவர் நினைத்தால் கதவை உடைத்துக்கொண்டு செல்லமுடியும்தான். ஆனால் அது அவரது விருப்பமல்ல. மனிதன் தானாக முன்வந்து கதவைத் திறக்கவேண்டும் என்பதே தேவனின் விருப்பம். அப்படித் திறக்கிற மனிதனின் இருதயத்தினுள்தான் அவர் பிரவேசிப்பார். திறக்காத மனிதனை விட்டுவிடுவார். இது தேவனுக்கு எவ்விதத்திலும் இழுக்கல்ல. கதவைத் திறக்காத மனிதனின் கதவை உடைத்து உள்ளே செல்வதுதான் தேவனுக்கு இழுக்கு.//

 

மத்தேயு 11:12 யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.

லூக்கா 16:16 நியாயப்பிரமாணமும் தீர்க்தரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.

இதுதான் ஜென்டிலாக 'பலவந்தம்' செய்வதா?

யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

கதவைத் திறக்கவோ, திறக்காமலிருக்கவோ உரிமையே இல்லையே?

நீங்கள் கதவைத்திறந்ததால்தான் நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் 

என்றா சொல்கிறார்? நான் உங்களை ஏற்படுத்தினேன் என்கிறாரே?

திறக்காத மனிதனை விட்டுவிடுவாராம்....

இந்தக் கூற்றுகளுக்கு வேத ஆதாரம் இல்லை. 

அப்போஸ்தலர் 13:20. பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.

நியாயாதிபதிகளை ஏற்படுத்தியது தேவன்!

21. அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜாவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.

நாற்பதுவருஷகாலமாய் சவுலைக் கொடுத்தார்!!

22. பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.

பின்பு அவர் அவனைத் தள்ளி... அவராகத்தான் தள்ளினார், அவனுக்குப்பின்பு தாவீதை ராஜாவாக ஏற்படுத்த வேண்டுமே....

ஒருவன் தன் சித்தப்படி நடவாவிட்டால் அடுத்தவைத் தெரிந்துகொள்கிறராம்.... இப்படி ஒருவனும் அவர் சித்தப்படி நடவாவிட்டால்? சாத்தியக்கூரு உண்டுதானே?

வசன ஆதாரம் இல்லை. 

அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

யார் யார் எந்தக்காலத்தில் பிறக்கவேண்டும், எந்த பகுதியில் குடியிருக்கவேண்டும் என்பதை தேவன் முன்குறித்திருக்கிறார். தேவ சித்தம் இம்மியளவும் பிசகுவதில்லை. மாறாக மனித சித்தத்தைச் சார்ந்து அவர் தனது காரியங்களை நடப்பிக்கிறார் என்பது மஹா அபத்தம். தேவதூஷணம்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard