யோவான் 15:20. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். 21. அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். 22. நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
யோவான் 16:. 2.அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். 3. அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.
யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
இயேசு கிறிஸ்துவின் பிதா யார் என்று தெரியாத திரித்துவ கூட்டனி என்ன தான் பரிகாசமாக நம்மை பேசினாலும், வசனம் நமக்கு சாதகமாக இருக்கிறது!! இயேசு கிறிஸ்துவை துன்பப்படுத்திய அறியாமை கூட்டம் இன்றும் நம்மை துன்பப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது!! நாமோ வசனத்தை கைக்கொள்கிறோம், இவர்களோ பாரம்பரியத்தை கைக்கொள்கிறார்கள்!! பிதா தான் இயேசுவாக வந்தார் என்று இவர்களின் வாதம் கிறிஸ்து இயேசு சொல்லுகிறபடி தவிடுபொடுயாகிவிடுகிறது, ஏனென்றால் கிறிஸ்து சொல்லுகிறார் அவர்கள் (திரித்துவவாதிகள்) கிறிஸ்துவை அனுப்பினவரை அறியாது இருக்கிறார்கள்!! ஆனாலும் இவைகளையெல்லாம் இவர்கள் வாசிக்கும்படி அப்போஸ்தலர்கள் மூலமாக நமக்கு தெரியப்படுத்தியும், இவர்கள் செய்யும் பாவத்தை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள், ஆனாலும் வேதத்தை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் இதை பேசுவதால், இவர்களுக்கு போக்குச்சொல்ல இடமில்லை!! இதை கிறிஸ்து இயேசுவே இவர்களுக்காக சொல்லுவதாக அமைந்திருக்கிறது!!
நம்மை கொலைசெய்யும் வெறியுடன் இருக்கும் சில்சாமிற்கு யோவான் 16:2 மிகவும் பொருத்தமாக இருக்கிறது!! இவர் இப்படி நம்மை கொலை வெறியோடு எழுதுவதை தான் பலர் இந்த சில்சாம் தேவனுக்கு தொண்டுசெய்கிறவர்னென்று நினைக்க வைக்கிறது!! வசனம் எத்துனை உண்மையுள்ளது என்பதை வசனம் தெரிந்தவர்கள் அறியட்டும்!! இவர்களுக்கு பிதா யார் என்றும், கிறிஸ்து யார் என்று அறியாததினால் தான் இந்த சூழல்!!
நாமோ யோவான் 7:28ல் உள்ளபடி, கிறிஸ்து இயேசு யார் என்று அறிவோம், அவர் சுயமாக வராமல், பிதாவாகிய தேவனே அவரை அனுப்பி வைத்தார் என்று நாம் அறிவோம், ஆனால் இந்த திரித்துவ கூட்டம் அவரை அறியாதிருப்பதினால், அவர் தான் இவர் என்று போதித்து வருவது வசனம் எத்துனை சத்தியமுள்ளது என்பதை நிரூபிக்கிறது!!
யோவான் 17:25 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
நம்மை குறித்தே கிறிஸ்து இயேசு தன(நம்) பிதாவிடத்தில் இப்படியாக சொல்லியிருக்கிறார்!! கிறிஸ்து இயேசு பிதா இல்லை என்றும், மாறாக பிதா தான் கிறிஸ்து இயேசுவை அனுப்பினார் என்று நமக்கு வசனத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்!!
போகட்டும், இவர்கள் இவர்களின் இயேசு சாமி, இயேசு நாதர், அருள் நாதர் போன்ற குலத்தெய்வங்களிடத்தில் திருப்த்தியடயட்டும், நாமோ கிறிஸ்து இயேசுவின் பாத சுவடுகளை பற்றி கொண்டு நடப்போம்!! ஏனென்றால் இவர்களின் பகை நம்மோடு நின்று விடவில்லை, மாறாக, கிறிஸ்து இயேசு சொல்லுவது போல்,
யோவான் 15:18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
பாரம்பரிய விசுவாசத்தில் உள்ளவர்கள் தான் உலகத்தார் என்பதை திரித்துவ பாரம்பரியத்தை பின்பற்றுவோர் தெரிந்துக்கொள்ளட்டும்!!
இவர்கள் சொல்லுவது போல் இல்லாமல், கிறிஸ்து இயேசு சொல்லுகிறபடி,
யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
அனைவரும் பிதாவை தொழுதுக்கொள்ளுங்காலம் வருகிறாது என்று கிறிஸ்து இயேசுவே சொன்ன பிறகு இந்த திரித்துவ வாதிகள் என்ன சொல்லியும் என்ன பிரயோஜனம்!!