//யேகோவா சாட்சிக்காரர்கள் போதிப்பதை தானே அன்பும், கோவை பெரியன்சும் சொல்கிறார்கள். பின்னர் ஏன் தான் யேகோவா சாட்சிக்காரர் இல்லை என்று மறுக்கிறார்?யேகோவா சாட்சிக்காரர்களுக்கும் இவர்களுக்கும் (போதனையில்)அப்படி என்ன தான் வித்தியாசம்?//
இந்த தளத்தையும் என் விசுவாசத்தையும் விமர்சித்ததினால் நான் திரு எபி அவர்களுக்கு விளக்கம் தர கடமைப்பட்டிருக்கிறேன்!! திரு எபி அவர்களே, நீங்களும் திரித்துவம் பேசுபவர் தான், கத்தோலிக்கர்களும் திரித்துவம் பேசுவோர் தான், அப்படி என்றால் நீங்கள் இருவரும் (போதனையில்) ஒன்று தானே, அப்படி என்ன தான் வித்தியாசம்?
கத்தோலிக்கர்கள் விக்கிரக ஆராதனை செய்பவர்களாக இருக்கிறார்கள், வேரு மார்கத்தை சேர்ந்தவர்கள் விக்கிரக ஆராதனை செய்பவர்களாக இருக்கிறார்கள், அப்படி என்றால் இவர்கள் இருவரும் (ஆராதிக்கும் முறையில்) ஒன்று தானே, அப்படி என்ன தான் வித்தியாசம்?
இப்ப நீங்களும் கத்தோலிக்கர்களும் ஒன்று (போதனையில்), கத்தோலிக்கர்களும் வேற்று மார்க்கத்தை சேர்ந்தவர்களும் ஒன்று (ஆராதிக்கும் முறையில்), அப்படி என்றால் நீங்களும் வேற்று மார்க்கத்தாரும் ஒன்று தானே, உங்கள் கணிப்புப்படியே, அப்படி என்ன தான் வித்தியாசம்?
எபி அவர்களே, என் விசுவாசத்தை அறிந்துக்கொள்ள வேன்டுமென்றால் எங்கள் விசுவாசம் என்கிற பகுதியில் வாசிக்கலாம்!! யெகோவா சாட்சிக்காரர்களின் விசுவாசத்தை வாசிக்கலாம், பிறகு நீங்கள் எங்களை விமர்சிக்கலாம்!! இதற்காக இந்த தளத்தில் தாங்கள் உறுப்பினராகி தான் பார்க்க வேண்டும் என்கிற நிர்பந்தம் ஒன்றும் கிடையாது!! ஏதோ எல்லோரும் எழுதுவதால் நாமும் எழுதி தான் பார்ப்போமே, சீண்டி தான் பார்ப்போமே என்பது சரியான எண்ணம் கிடையாது!! நான் சொல்லுகிறேன், உங்களுக்கு யெகோவா சாட்சிக்காரர்களின் போதனை தெரியாது என்று, தெரிந்திருந்தால் இப்படி எல்லாம் எழுத முடியாது!! ஒன்று தெர்நிதுக்கொண்டு பேசுங்கள் அல்லது தெர்நிதுக்கொள்ளுங்கள்!! அவசரமே இல்லை!! குற்றம் சுமத்துவது ஒரு காரியமே இல்லை, ஆனால் அதை நிரூபிக்க முடியாமல் தினறி போக வேண்டாம் என்று, இது போன்ற வீன் குற்றசாட்டுகளுக்கு துனை போக வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்!!
மார்க்கம் தப்பி வந்த உங்கள் (கள்ள) போதகரிடம் கேட்டிருக்கலாமே, "கிறித்தவனாக" மாறிவிட்ட பிறகும் இன்னும் என்ன பாரம்பரியம் என்று!!
என்னுடைய இந்த பதிவு, "ஏன் என்னை அடித்தாய்" என்று கிறிஸ்து இயேசு கேட்ட கேள்வி மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்!! அன்று சாட்டையை செய்து எப்படி வியாபாரிகளையும், பணம் பார்ப்பவர்களையும் கிறிஸ்து இயேசு அடித்து துறத்தினாரோ, அப்படியே, இன்று சபைகளில் பிறர் காசில் பிழைப்பு நடத்துவோருக்கு எதிராக சாட்டையை தையார் கொடுத்திருக்கிறார், கிறிஸ்து இயேசு, அது தான் எங்களிடம் உள்ள வசனம், இது பிழைப்பிற்கு அல்ல, போஜனத்திற்கு!!