கேள்வி: சிலுவையில் தொங்கிய போது தேவன் ஏன் கிறிஸ்து இயேசுவை கைவிட்டார்?
மத். 27:46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
கிறிஸ்து இயேசுவின் ஊழியத்தில் அவரது சிலுவை மரணமே இறுதியானது!! கிறிஸ்து இயேசு இந்த உலகத்தில் வந்து ஊழியம் புரிந்த நாட்களில், மக்களுக்கு நல்லது செய்வதையும் அல்லது தேவனின் வார்த்தையின் படி துன்பப்படுவதற்கு மாத்திரம் வரவில்லை!! மாறாக பூர்ண மனிதன் ஆதாமின் பாவத்திற்கு ஈடு பலியாக பூர்ண மனிதனான கிறிஸ்து இயேசு தன்னை பலியாக கொடுக்கவே வந்தார்!! தேவ நீதியின் படி சரி நிகர் பலி (Corresponding price) செலுத்தவேண்டியதாக இருந்தது!! அப்படி இருந்தால் தான், ஒரு மனிதனின் பாவத்தினால் எல்லாரும் மரிக்கிறவர்களாக ஆனார்கள், ஆனால் மற்றுமோரு மனிதினனின் கீழ்படிதலினால் எல்லோருக்கும் உயிர்த்தெழும் வாய்ப்பு உண்டானது!!
ரோம் 5:18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.19. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
தேவனின் ஐக்கியம் துண்டிக்கப்பட்ட ஒரு பாவியாக தான் ஆதாம் மரித்தான் (ஏதேனை விட்டு துரத்திவிட்ட பிறகு தேவனுக்கும் அவனுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது)!! ஆனால் கிறிஸ்து இயேசுவோ பாவமறியாதவராக இருந்தும், ஆதாமிற்கு ஈடான மரணத்தை ஏற்றுக்கொள்ளவேண்டியதாக இருந்ததினால், எப்படி ஆதாம் தேவனின் ஐக்கியம் துண்டிக்கப்பட்ட (தேவனால் கைவிடப்பட்ட நிலை) நிலையில் மரித்தானோ, கிறிஸ்துவிற்கும் அதே நிலை ஏற்க வேண்டியதாகியது!! கிறிஸ்துவின் கேள்வியான "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்பதில் தேவனால் "கைவிடப்பட்ட" நிலையில் தான் கிறிஸ்து இயேசு மரணத்தை ஏற்க வேண்டும் என்கிற தேவ நீதியே காரணமாகியிருந்தது!! கிறிஸ்து இயேசு அந்த நீதியை அறிந்தவராக அதன் பின் சொன்னது,
லூக்கா 23:46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
இந்த மரணத்தை தொடர்ந்து மூன்றாம் நாளில் அவரின் உயிர்த்தெழுதல், தேவனால் கிறிஸ்துவின் பலி ஏற்கப்பட்டது என்றானது,
எபி. 10:12. இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, (எபிரேயர் 10ம் அதிகாரம் முழுவதும் வாசிக்கலாம்)
இதை பார்க்கும் போதும், தேவன் வேறு அவரின் குமாரன் கிறிஸ்து இயேசு வேறு என்பதும் இதில் தெளிவாக புரிகிறது!!