ஆதி 22:16. நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; 17. நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
இதுவே இந்த உலக ஜனங்களுக்கு தேவனிடத்திலிருந்து உண்டான ஒரு மாபெரும் ஆசீர்வாதமான வாக்குத்தத்தம்!! முற்பிதாக்களான நோவா, ஆபிரகாம், ஈஸாக், யாக்கோபுடன் தேவன் நேரடியாக தொடர்பு கொண்டார்!! அதில் அபிரகாமிடத்தில் இந்த வாக்குத்தத்தை கொடுத்தார்!!
வானத்தின் நட்சத்திரங்களை போலவும், கடற்கரை மணலைப்போலவும் என்றவுடன் அநேகர் நினைப்பது என்னவென்றால், எண்ணிமுடியா அலவிற்கு ஆபிரகாமின் சந்ததிகளை வர்த்திக்க பண்ணுவார் தேவன் என்று!! ஆனால் ஆபிரகாமின் இரு பிரிவான சந்ததிகளை குறித்தே இங்கே பேசப்பட்டிருக்கிறது.
1. வானத்தின் நட்சத்திரங்களை போல் என்றால் பரலோக மகிமையை அடையப்போகும் ஒரு கூட்டமும், 2. கடற்கரை மணலைப்போலவும் என்றால், பூமிக்குறிய ஆசீர்வாதங்களை பெறும் ஒரு கூட்டமும்!!
மேலும்,
18. நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
இந்த வசனம், பூமியில் உள்ள சகல ஜாதிகளுக்கும் வர இருக்கும் ஆவீர்வாதத்தை குறித்து பேசப்பட்டிருக்கிறது!! நற்செய்தி ஆபிரகாமிற்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது!! அந்த சந்ததி (வானத்தின் நட்சத்திரங்கள், கடற்கரை மணல்) மூலமாக பூமியில் உள்ள சகல் (எல்லா) ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமிற்கு ஒரு நற்செய்தி வாக்குத்தத்தமாக கொடுக்கப்படுகிறது!! இந்த சந்ததி யார் என்று பவுல் தெளிவாக எழுதுகிறார்,
கலா. 3:16. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.
நீங்கள் கிறிஸ்தவர்கள் என்றால் அல்ல மாறாக நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் ஆனால், ஆபிரகாமின் சந்தத்தியாக இருப்பீர்கள்!! அந்த சந்ததி கிறிஸ்து!!
கிறிஸ்து யார் என்கிற ஒரு மாபெரும் இரகசியத்தை பவுல் வெளிப்படுத்துகிறார்!! அது நாள் மட்டும் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த இரகசியம் அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் வெளிப்படுத்தப்பட்டது, ஆனாலும் பழைய ஏற்பாட்டு பிள்ளைகளுக்கு அல்ல!!
எபேசியர். 3:5. அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; 6. இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.
எரேமியா 32:27 இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்;
என்று தேவன் சொல்லியிருக்கிறார், ஆனாலும்,
ஆமோஸ் 3:2. பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்;
அவர் யாவருக்கும் தேவனாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை (யூதர்களை) தன் ஜனமாக தெரிந்துக்கொண்டார்!!! ஏன்? தேவன் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குத்தத்தை கவணித்து பாருங்கள்,
ஆதி 22:16. நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; 17. நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
கடற்கரை மணலைப்போல் உள்ளவர்களை தேர்வு செய்யும் காலமாக இருந்தது!! அந்த தேர்வு யூதர்களிலிருந்து தான் இருக்க வேண்டும் என்பது தேவனின் திட்டம்!! இதற்காகவே, அவர் யூதர்களை தம் ஜனமாக அறிந்துக்கொண்டார்!! இந்த யூதர்களில் ஒருவருக்கு கூட பரலோகம் வாக்குப்பண்ணபடவில்லையே!! அதற்கு ஆதாரமான ஒரு வசனமும் இல்லையே!! நம்மவர்கள் ஒரு சிலர் பரலோகத்தில் போய் இவர்களை பார்த்தோமென்று ரீல் விடுவதை நம்ப வேண்டாம்!! இவர்களுக்கே எல்லா பிரமானங்களும், வாக்குத்தத்தங்களும் கொடுக்கப்பட்டதே,
ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குத்தத்தின்படி முதலாவது தேவன் தேர்வு செய்தது, பூமிக்குறிய ஆசிர்வாதம் பெறும் ஜனங்களை!! அப்படிபட்ட சிலரை தான் "நீதிமாண்கள்" என்று வேதத்தின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது!! புதிய ஏற்பாட்டிலும் அப்படி பட்டோரின் ஒரு லிஸ்ட் எபி 11ம் அதிகாரத்தில் இருக்கிறது!! அந்த அதிகாரத்தின் கடைசி வசனம்,
எபி 11:40. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
bereans wrote: //வானத்தின் நட்சத்திரங்களை போலவும், கடற்கரை மணலைப்போலவும் என்றவுடன் அநேகர் நினைப்பது என்னவென்றால், எண்ணிமுடியா அளவிற்கு ஆபிரகாமின் சந்ததிகளை வர்த்திக்க பண்ணுவார் தேவன் என்று!! ஆனால் ஆபிரகாமின் இரு பிரிவான சந்ததிகளை குறித்தே இங்கே பேசப்பட்டிருக்கிறது.//
சகோ.பெரியன்ஸ் அவர்களே! பின்வரும் வசனங்களுக்கு தங்கள் விளக்கம் என்ன?
ஆதியாகமம் 13:16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
ஆதியாகமம் 15:5 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
உபாகமம் 10:22 உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.
இவ்வசனங்கள் யாவும் எண்ணிக்கையைத்தானே குறிப்பிடுகின்றன? எனவே ஆதி. 22:16-ம் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதாக ஏன் இருக்கக்கூடாது?
bereans wrote: //1. வானத்தின் நட்சத்திரங்களை போல் என்றால் பரலோக மகிமையை அடையப்போகும் ஒரு கூட்டமும், 2. கடற்கரை மணலைப்போலவும் என்றால், பூமிக்குறிய ஆசீர்வாதங்களை பெறும் ஒரு கூட்டமும்!!//
நல்லது சகோதரரே! ஆனால் வானத்தின் நட்சத்திரங்கள் எவர்கள் என பின்வரும் வசனம் கூறுவதை சற்று கவனியுங்கள்.
உபாகமம் 10:22 உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.
அன்றைய இஸ்ரவேலரையே “வானத்தின் நட்சத்திரங்கள்” என மோசே கூறுகிறார்.
நீங்களோ, பரலோக மகிமையை அடையப்போகும் கூட்டம்தான் “வானத்தின் நட்சத்திரங்கள்” என்கிறீர்கள். அவ்வாறெனில், அன்றைய இஸ்ரவேலர்தான் பரலோக மகிமையை அடையும் கூட்டம் என்கிறீர்களா?
ஆதியாகமம் 13:16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
பூமியின் தூளை எண்ணக்குடுமா!? எண்னக்கூடுமானால் உன் சந்ததியும் எண்ணப்படும் என்கிறார் தேவன்!! அதாவது பூமியின் தூளோ அல்லது கடற்கரை மணலோ எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டது!! ஆக எண்ணிக்கை (Quantity) அல்ல தரத்தை (Quality) குறித்தே தேவன் சொல்லுகிறார் என்பது என் நம்பிக்கை!!
ஆதியாகமம் 15:5 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
இங்கேயும் அதையே தான் சொல்லுகிறார், நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்று!? இதுவும் தரத்தை குறித்தான ஒரு ஒப்பீடு தானே அன்றி எண்ணிக்கையை குறித்து அல்ல என்பது என் நம்பிக்கை!!
பூமிக்குரிய ஆசீர்வாதங்களை கிடைக்க தேர்ந்து எடுத்தக்கொள்ளப்பட்டது இஸ்ராயேல் அல்லது யூதர்கள்!! இவர்கள் தான் இந்த பூமியை ஆளுகை செய்வார்கள் என்பது வேதத்தில் தெளிவாக இருக்கிறது!!
லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
//உபாகமம் 10:22 உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார். அன்றைய இஸ்ரவேலரையே “வானத்தின் நட்சத்திரங்கள்” என மோசே கூறுகிறார். நீங்களோ, பரலோக மகிமையை அடையப்போகும் கூட்டம்தான் “வானத்தின் நட்சத்திரங்கள்” என்கிறீர்கள். அவ்வாறெனில், அன்றைய இஸ்ரவேலர்தான் பரலோக மகிமையை அடையும் கூட்டம் என்கிறீர்களா?//
வானத்தின் நட்சத்திரங்கள் என்றும் கடற்கரை மணல் என்றும் ஆபிராகம், பின்பு ஈஸாக் அதன் பின் யாக்கோபிற்கு கொடுக்கப்பட்ட ஒரு வாக்குத்தத்த ஆசீர்வாதாம்!! இந்த இரு சந்ததியர்களால் உலகத்தின் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்கிற வாக்குத்தத்தம் அவர்களுக்கு கிடைத்தது!! ஆனால் உபா 10:22 மாம்சமான இஸ்ரவேலர்களின் எண்ணிக்கையை அவர் நட்சத்திரங்களுக்கு ஒப்பீட்டு சொல்லுகிறார்!! நட்சத்திரங்களை போல் ஆக்கினார் என்பதில் ஆசீர்வாத வாக்குத்தத்தம் இல்லை, மாறாக அவர்களின் எண்ணிக்கையை அளிவட நட்சத்திரங்களை ஒரு ஒப்பீட்டாக எடுத்து சொல்லுகிறார்!!
ஆனால்,
ஆதி 22:16. நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; 17. நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,18. நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
அன்றைய இஸ்ரவேலர்கள் பரலோக மகிமையை அடையும் கூட்டம் கிடையாது என்பதை எபி 11ம் அதிகாரத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்!! கிறிஸ்துவுடையவர்களுக்கே அந்த மகிமை வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு வேதம் போதுமான ஆதாரம் தந்திருந்தும் தங்களிடமிருந்து இது போன்ற ஒரு கேள்வியை எதிர்ப்பார்க்கவில்லை!!
யூதர்களுக்கு நியாயப்பிரமான கட்டளைகள் என்று அநேகமாக கொடுத்து அதையே அவர்களில் நீதிமான்கள் தேர்ந்தெடுக்க தேவன் வைத்த அளவுக்கோலாக இருந்தது!! அப்படியே கிறிஸ்துவுடையவர்களாகும் பொருட்டு நெருக்கமான பாதை விசாலமான பாதை என்கிறது அளவு கோல்!!
நீங்கள் அர்த்தம் கொள்வது போல் நட்சத்திரங்களையோ, மணலையோ எண்ணிக்கை என்று எடுத்துக்கொண்டால், உபா 10:22ல் வரும் நட்சத்திரங்களினால் உலகம் ஆசீர்வதிக்கப்பட்டு விட்டதா!! இல்லையே!! இனி வரும் ஒரு ஆசீர்வாதத்தையே தேவன் அங்கு ஆபிரகாமிடத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்!! மேலும் எபி 11ம் அதிகாரம் வாசித்தால் பழைய ஏற்பாட்டு பரிசுத்டவான்களின் எண்ணிக்கை எவ்வுளவு இருக்கிறது என்பது தெர்நிதுக்கொள்ளலாம்!! அப்படியே தான் கிறிஸ்துவுடயவர்களின் கூட்டம்!! அந்த கூட்டமும் இடுக்கமான வசல் வழியாக செல்லும் ஒரு சிறிய கூட்டம் என்றே வசனம் சொல்லுகிறது!! இப்படி இருக்க, நட்சத்திரங்கள் மற்றும் மணலை தரம் என்றே அர்த்தம் கொள்ள வைக்கிறது, எண்ணிக்கை அல்ல!!
இரு விதமான சந்ததிகளை சொல்லுவதற்கே தேவன் இவைகளை பயன்படுத்தினார் என்பது என் புரிந்துக்கொள்ளுதல்!! இந்த இரு வித சந்ததிகளை கொண்டு இந்த உலகம் ஆசீர்வதிக்கப்படும் என்பது தான் வாக்குத்தத்தம்!!
சங் 45 தேவன், கிறிஸ்து, சபை, மற்றும் வரயிருக்கும் ராஜியத்தை குறித்தான ஒரு தீர்க்கதரிசின சங்கீதம்!! 16 வசனத்தில், தேவன் கிறிஸ்துவிடம் சொல்லுகிறார், உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களை பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர் என்று,
அதாவது, கிறிஸ்து மாம்சத்தில் வந்த போது, தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார், ஆனால் அவர் நித்திய பிதாவாக (எசா 9:6) வரபோகும் ஒரு காலம் இருக்கிறது!! ஏன் நித்திய பிதா?
யோவான் 5:21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். யோவான் 5:28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; 29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
அனைவரையும் உயிர்ப்பிக்கிறபடியால், கிறிஸ்து பிதாவாகிறார் (Not by Status, but by Relation)!! இப்பொழுது இயேசு கிறிஸ்து தேவனின் வலது பக்கத்தில் வீற்றிருந்து, அவரின் சத்துருக்களின் முடிவிற்காக காத்திருக்கிறார், எல்லாம் முடிந்த பிறகு, உயிர்த்தெழுதல் நடைபெற்று, கிறிஸ்து மாம்சத்தில் வந்த போது, யூத கோத்திர பிதாக்களின் வரிசையில் குமாரனாக இருந்தாரோ, அவரே, இன்று அந்த பிதாக்க்ளுக்கு முன் உயிர்த்தெழுந்து, பரலோகத்தில் இருக்கிறார்!! இனி அவரின் சத்தம் கேட்டு, முதலாவது இந்த பூமியில் பழைய ஏற்பாடு நீதிமான்கள் உயிர்த்தெழச்செய்து அவர்களை பூமியெங்கும் பிரபுக்களாக (ஆளுகை புரியும்படி) வைப்பார்!! அதாவது முதலில் வரிசையில் கிறிஸ்துவிற்கு பிதாவாக இருந்தவர்கள், இனி கிறிஸ்துவினால் உயிர்ப்பிக்கப்படுவதால், அவரின் குமாரர்களாக இருப்பார்கள்!! இவர்களுக்கு முன்பு சபை கிறிஸ்துவோடு இருக்கும், வசனம் சொல்லும் படி,
எபிரேயர் 11:40. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
இந்த அவர்கள் யாரென்றால், பழைய ஏற்பாடு நீதிமான்கள், மற்றும் நம்மை என்றால் சபை!! இப்படி அனைவருக்கும் முன்பே சபை எழும்பி கிறிஸ்துவுடன் கூட இருந்து, பூமியின் நீதிமான்கள் உயிர்த்தெழுந்து பூமி எங்கும் ராஜக்களாக ஆளுகை செயவதும், தேவன் தீர்மானித்தாகும்!! பரலோகத்தில் கிறிஸ்துவுடன் கிறிஸ்துவுடயவர்களும், பூமியில் நியாயப்பிரமானத்தின் படி பரிசுத்தவான்கள் அல்லது நீதிமான்களாக இருந்தவர்கள் பூமி எங்கும் ராஜக்களாக ஆளுகை செய்து, பூமி அனைத்தும் சத்தியத்தை அறியும்படி செய்வதே, தேவனின் மகா பெரிதான திட்டம் என்பதை வேதம் தெளிவுப்படுத்துகிறது!!
முற்பிதாக்களான நோவா, ஆபிரகாம், ஈஸாக் அதன் பின் யாக்கோபு, இவர்களிடம் தேவன் நேரடியாக உறவாடிக்கொண்டும், அவர்கள் மூலமாக தேவன் பேசிக்கொண்டும் இருந்தார்!! இதை முற்பிதாக்களின் யுகம் எனலாம்!! இந்த யுகத்தில் தான் ஆபிரகாமின் சந்ததியின் மூலம் உலகத்தின் எல்லா ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஒரு மகா பெரிய வாக்குத்தத்தை கொடுத்தார்!! (ஆதி 22:16)!! யாக்கோபின் மரணத்துடன் முற்பிதாக்கலின் யுகம் அல்லது காலம் நிறைவேறியது!! அடுத்து துவங்கியது தான் யூத யுகம்!!
இந்த யுகத்தில் தான் தேவன் யூதர்களை மாத்திரம் தன் சொந்த ஜனங்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதுலையாக்கி, அவர்களுக்கு என்று ஒரு இடத்தை ஏற்பாடு செய்துக்கொடுத்தார்!! இந்த யுகத்தில் தான் தேவன் அவர்கள் மாத்திரம் பின்பற்றக்கூடிய நியாயப்பிரமானங்கள், வழிப்பாடு முறைகள், பலியிடும் முறைகள், இன்னும் அவர்களுக்கே உரித்தான ஆசீர்வாதங்கள் (நியாயப்பிரமானத்தை பின்பற்றினால்), சாபங்களை (நியாயப்பிரமானத்தை பின்பற்றாமல் போனால்), வாக்குத்தத்தங்கள், கொடுத்து, அவர்களை நடத்தும்படியாக, ராஜாக்களை, தீர்க்கதரிசிகளை, நியாயாதிபதிகளை ஏற்படுத்தினார்!! அவருக்கு சொந்தமான இந்த ஜனத்திலிருந்து தான் தேவன் பூமியில் வர இருக்கும் அவரின் ராஜியத்தில் ஆளுகை செய்ய சில பரிசுத்தவான்களை, அவரின் பார்வைக்கு நீதிமான்களாக தோன்றியவர்களை ஆபேல் துவங்கி யோவான ஸ்நானகன் வரையில் (எபி 11 மற்றும், மத் 11:11) தேர்ந்தெடுத்திருக்கிறார்!!
இந்த விசுவாசப்பட்டியலில் உள்ளவர்கள் அவர்களுக்கு வாக்குத்தத்தம்ப்பண்ணப்பட்டதை அடையாமற் மரித்து போனார்கள்!! ஏன்? ஏனென்றால், தேவனின் திட்டத்தில் அவரின் குமாரனின் சாயலில் வரயிருக்கும் ஒரு கூட்ட ஜனத்திற்கு (ஆபிரகாமிற்கு ஆதி 22:16ல் வாக்கு கொடுக்கப்பட்ட வானத்து நட்சத்திர சந்ததி) கிடைக்கவேண்டிய ஆசீர்வாதத்திற்கு பிறகே இவர்களுக்கு வாக்கு பண்ணப்பட்டதை இவர்கள் அடைவார்கள்!! வரிசையாக வசனங்களை கவனியுங்கள்,
எபி 11:39. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். 40. அவர்கள் (பழைய ஏற்பாட்டு விசுவாச கூட்டத்தார்) நம்மையல்லாமல் (கிறிஸ்துவின் சபை) பூரணராகாதபடிக்கு (உயிர்த்தெழுதல்) விசேஷித்த நன்மையானதொன்றை (சபைக்கான பரலோக ஆசீர்வாதம்) தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார் (உலக தோற்ற முதல்).
1 கொரி 15:23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் (கிறிஸ்துவுடயவர்கள், கிறிஸ்தவர்கள் அல்ல; கலா 3:28,29) உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
இந்த வசனத்தின் மூலம் யோவான் ஸ்நானன் பரலோக ஆசீர்வாதத்திற்குரியவன் அல்ல என்பதை கிறிஸ்து இயேசுவே நிச்சயமாக சொல்லியிருக்கிறார், ஆனால் அவன் ஆபிரகாமின் கடற்கரை மணல் சந்ததியில் பங்கு பெறுகிறான்!!
இந்த யூத யுகமும் ஒரு முடிவிற்கு வந்தது!!
மத் 23:38. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
தேவனின் சொந்த ஜனங்களான யூதர்கள், கிறிஸ்து இயேசுவை தேவனின் குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாமல் அவரை சிலுவை மரணத்திற்கு கையளித்தார்கள், தேவ கோபம் அவர்கள் மேல் வந்தது, யூதர்களின் அழிவிற்கு அவர்களே காரணமாகி போனார்கள். வரலாறு தெரிந்தவர்கள் கிபி 70ல் ரோமர்களால் யூதர்கள் எப்படி எல்லாம் வதைக்கப்பட்டு, முழங்கால் அளவிற்கு இரத்த வெள்ளம் ஓடியது என்பதை தெரிந்திருப்பார்கள்!! இத்துடன் யூத யுகம் முடிவிற்கு வந்தது!!
அவர்களின் அழிவை அவர்களே தேடிக்கொண்டதற்கான வசனம்,
மத்தேயு 27:25 அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
ஆனால் யூத யுகம் முடிவதற்குள் இன்னோரு யுகம் ஆரம்பமாகி விட்டது
bereans wrote: //ஆதியாகமம் 13:16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
பூமியின் தூளை எண்ணக்குடுமா!? எண்னக்கூடுமானால் உன் சந்ததியும் எண்ணப்படும் என்கிறார் தேவன்!! அதாவது பூமியின் தூளோ அல்லது கடற்கரை மணலோ எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டது!! ஆக எண்ணிக்கை (Quantity) அல்ல தரத்தை (Quality) குறித்தே தேவன் சொல்லுகிறார் என்பது என் நம்பிக்கை!!
ஆதியாகமம் 15:5 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
இங்கேயும் அதையே தான் சொல்லுகிறார், நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்று!? இதுவும் தரத்தை குறித்தான ஒரு ஒப்பீடு தானே அன்றி எண்ணிக்கையை குறித்து அல்ல என்பது என் நம்பிக்கை!!//
நல்லது சகோதரரே! உங்கள் நம்பிக்கையை நான் மட்டுப்படுத்தவில்லை.
bereans wrote: //அன்றைய இஸ்ரவேலர்கள் பரலோக மகிமையை அடையும் கூட்டம் கிடையாது என்பதை எபி 11ம் அதிகாரத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்!! கிறிஸ்துவுடையவர்களுக்கே அந்த மகிமை வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு வேதம் போதுமான ஆதாரம் தந்திருந்தும் தங்களிடமிருந்து இது போன்ற ஒரு கேள்வியை எதிர்ப்பார்க்கவில்லை!!//
இஸ்ரவேலர்கள் பரலோக மகிமையை அடையும் கூட்டம் கிடையாது என்பது நான் அறிந்ததுதான். ஆனால் “வானத்து நட்சத்திரங்கள்” என ஆபிரகாமிடம் தேவன் சொன்னது “எண்ணிக்கையை அல்ல, பரலோக மகிமையை அடையும் கூட்டத்தையே” என நீங்கள் சொன்னதால், எண்ணிக்கையின் அடிப்படையில் இஸ்ரவேலரை “வானத்து நட்சத்திரங்களைப் போல” என மோசே சொன்னதை எடுத்துக்காட்டி, தேவனும் அதேபோல் எண்ணிக்கையைத்தான் ஆபிரகாமிடம் கூறினார் எனச் சொல்வதற்குத்தான் அக்கேள்வியைக் கேட்டேன்.
ஆனால் வானத்த்தின் நட்சத்திரங்களைப்போல என “தேவன் சொன்னது ஒரு அர்த்தத்தில்”, “மோசே சொன்னது ஒரு அர்த்தத்தில்” என நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியல்ல என என்னால் திட்டமாகக் கூற இயலவில்லை. எனவே இவ்விஷயத்தில் உங்கள் நம்பிக்கை சரியாக இருக்கக்கூடும் என நான் ஒப்புக்கொள்கிறேன்.
மேலும், உங்களது நம்பிக்கை எனது சிந்தனையைத் தூண்டும்விதமாகவும் உள்ளது.
bereans wrote: //நீங்கள் அர்த்தம் கொள்வது போல் நட்சத்திரங்களையோ, மணலையோ எண்ணிக்கை என்று எடுத்துக்கொண்டால், உபா 10:22ல் வரும் நட்சத்திரங்களினால் உலகம் ஆசீர்வதிக்கப்பட்டு விட்டதா!!//
இஸ்ரவேலரைப் பொறுத்தவரை உபாகமம் 28 சொன்னபடி பூமிக்குரிய ஆசீர்வாதங்களை ஒரு காலகட்டம் வரை அவர்கள் பெற்றது உண்மைதானே?
ஆதியாகமம் 22:16,17-ல் எண்ணிக்கை அடிப்படையிலான பெருக்கமும் உள்ளது என்றே நான் கருதுகிறேன். ஆனால் 18-ம் வசனத்தில் சொல்லப்பட்ட சந்ததியைத்தான் கிறிஸ்து என கலாத்தியர் 3:16-ல் பவுல் கூறுகிறார்.
ஆபிரகாமின் சந்ததியான கிறிஸ்துவுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் (அதாவது மறுமையின் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்) என 18-ம் வசனம் கூறுவதாக நான் கருதுகிறேன்.
-- Edited by anbu57 on Thursday 17th of February 2011 07:06:02 AM
பூமிக்குரிய ஆசீர்வாதங்களை இஸ்ராயேலர்கள் பெற்றார்களே தவிர, வசனம் சொல்லுவது போல், அந்த கூட்டத்தாரால் உலகத்தின் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படவில்லையே!! கீபி 70ல் அவர்களே முற்றிலுமாக சிதறடிக்கப்பட்டுவிட்டார்களே!!
தேவன் ஆபிரகாமிற்கு சொன்ன வாக்குத்தத்தம் என்னவென்றால், பரலோகத்தில் கிறிஸ்துவின் சபையாக ஒரு குட்டம் (வானத்து நட்சத்திரங்கள்) என்றும், பூமியில் ஆளுகை செய்யும் பிரபுக்களாக இஸ்ராயேலரில் இருந்து ஒரு கூட்டமும் (கடற்கரைமணல்) சேர்ந்து இந்த உலகத்திலுள்ள மற்ற அனைவருக்கும் (கிறிஸ்தவர்கள் எனப்படுபவர்கள் உட்பட) ஆவீர்வாதத்தை கொண்டு வருவார்கள்!!
எத்துனை அருமையான ஒரு வாக்குத்தத்தம்!!
என் ஜெப கோபுரத்திற்கு வா (காணிக்கையுடன் தான்) இயேசு உன் கண்ணீரை துடைப்பார், என் சபைக்கு வா உணக்கு செல்வ செழிப்பு உண்டாகும், என் ஜெப கூட்டத்திற்கு வா, உன்னை பரலோகத்திற்கு கூட்டு போகிறேன் போன்ற வார்த்தைகள் எல்லாம், தேவன் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குத்தத்ததிற்கு முன்பாக ஒன்றுமே கிடையாது!!
நான் இன்னும் ஒரு கூட்டத்தாரை குறித்தே எழுதியிருக்கிறேன்!! சுவிசேஷ யுகத்தையும் எழுதுகிறேன்!! தேவ திட்டம் நிச்சயமாக வசனங்களை கொண்டு வெளிப்படும்!!