kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கேள்வி #2


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கேள்வி #2


கேள்வி #2
சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களை விமர்சிக்கும் விசுவாசிகளாகிய நாம் ஊழியக்காரர்களை விக்கிரகமாக்கி வைத்திருப்பது ஏன்? கடவுளுக்கும் நமக்கும் கன்னிமரியாள் மத்தியஸ்தரல்ல என்று சொல்லும் நாம் பாஸ்டர்களை இன்று மத்தியஸ்தர்களாக்கி விட்டதேன்? அவர்கள் மட்டுமே சீஷர்களென்றால் புதிய ஏற்பாட்டின்படி நாமெல்லாம் யார்?

பதில்:
முதலாவது பாஸ்டர் என்பவர் மத்தியஸ்தரே கிடையாது!! வேத வசனம் சொல்லுகிறதை பார்ப்போம்,

1 பேதுரு 5:2. உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், 3. சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். 4. அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.

வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌ப‌டி இல்லாத‌வ‌ர்க‌ள் பாஸ்ட‌ர்க‌ளே கிடையாது!! இன்று பாஸ்ட‌ர் எனப்ப‌டுப‌வ‌ர் மெய்ப்ப‌ர் என்று அர்த்த‌ம் கொள்ளாம‌ல் த‌ன்னை போத‌க‌ர் என்றே நினைக்கிறார்க‌ள்!! இன்று விசுவாச‌ ம‌ந்தைக்கு இவ‌ர்க‌ள் எந்த‌ வித‌த்திலும் மாதிரியான‌வ‌ர்க‌ளே கிடையாது!! வேளைக்கு போகாம‌ல் சோம்பேறித்த‌ன‌மாக‌ இருப்ப‌து தான் இவ‌ர்க‌ளின் முத‌ல் அடையாள‌ம்!! வ‌ருகிற‌ காணிக்கை, த‌ச‌ம‌பாக‌த்தில் இவ‌ர்க‌ளின் பிழைப்பு ஓடுகிற‌து, சில‌ர் அதைக்கொண்டே பெரிய‌ கோடீச்வ‌ர‌ர்க‌ளாக‌வும் இருக்கிறார்க‌ள்!! இவ‌ர்க‌ள் செய்யும் இத்தொழில் நிச்ச‌ய‌மாக "அவலட்சணமான ஆதாயத்திற்கு" தான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!! செய்யாதீர்க‌ள் என்று பேதுரு சொன்ன‌தை செய்யும் துனிச்ச‌ல் இவ‌ர்க‌ளிட‌ம் அபார‌மாக‌ இருக்கிற‌து!! சீஷ‌னாக‌ இருக்கும் ஒரு பாஸ்ட‌ரையாவ‌து பார்த்த‌து உண்டா!!

நான் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு ஒரு ச‌பைக்கு சென்ற‌ போது, அங்கு செழிப்பின் உப‌தேச‌த்தில் இருக்கும் ஒரு பாஸ்ட‌ர் வ‌ந்திருந்தார்!! அவ‌ர் விசுவாசிக‌ள் அட‌ங்கிய‌ கூட்ட‌த்தை பார்த்து சொல்லுகிறார், நான் செல்லும் வாக‌ன‌ம், நான் போடும் உடைக‌ள், நான் போடும் கால‌னிக‌ள், உள்ளாடைக‌ள், கைக்கெடிகார‌ம், அனைத்துமே அவ‌ர் ச‌பையின் விசுவாசிக‌ள் மூல‌மாக‌ "தேவ‌ன்" அவ‌ருக்கு த‌ந்தாராம், ஆக‌யால் நீங்க‌ளும் உங்க‌ள் ச‌பை பாஸ்ட‌ருக்கு இதை எல்லாம் செய்தீர்க‌ள் என்றால் உங்க‌ளுக்கு ஆசீர்வாத‌ம் வ‌ரும்!! நாசுக்காக‌ பிச்சையில் தான் பிழைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார், ஆனால் அக‌ந்தைக்கொண்ட‌ பிச்சைக்கார‌ர்!! தேவ‌ன் தான் த‌ருகிறார் என்றால், ஏன் பேதுருவிற்கு, ப‌வுலுக்கு கொடுக்க‌வில்லை என்று யாராவ‌து அவ‌ர் ச‌பையில் யோசிக்கிறார்க‌ளா!!

இன்று பாஸ்ட‌ர்க‌ள் விக்கிர‌க‌மாக‌ இருக்கிறார்க‌ள், உங்க‌ள் கேள்வியில் இருக்கிற‌ப‌டி ம‌த்திய‌ஸ்த‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள்!! ஆனால் வேத‌ம் சொல்லுகிற‌து என்ன‌வென்றால்,

1 தீமோ. 2:5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

ந‌ம‌க்கு இருக்கும் ஒரே ம‌த்திய‌ஸ்த‌ர் கிறிஸ்து இயேசு மாத்திர‌மே!!

பாஸ்ட‌ர்க‌ள் ஒரு போதும் த‌ங்க‌ளை சீஷ‌ர்க‌ள் என்று அழைத்துக்கொள்ளும் த‌குதியில் இல்லை!! மேலும் புதிய‌ ஏற்பாட்டின்ப‌டி நாம்,

1 பேது 5:9. நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

இந்த‌ வ‌ச‌ன‌த்தை க‌த்தோலிக்க‌ குருக்க‌ள் நாங்க‌ள் தான் இவ‌ர்க‌ள் என்றும், இப்பொழுது பெந்த‌கோஸ்தே பாஸ்ட‌ர்க‌ளும், நாங்க‌ள் தான் இந்த‌ கூட்ட‌ம் என்று பித‌ற்றுகிறார்க‌ள்!! ஆனால் வ‌ச‌ன‌த்தை விசுவ‌சிக்கும் அனைவ‌ருமே இந்த‌ கூட்டத்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான்!!

இன்று சினிமா நடிகர் நடிகைகளை ஊழியத்திற்கு தையார்ப்படுத்தும் சில ஊழியர்களும் இருக்கிறார்கள்!!

அடுத்த கேள்வி தொடரும்................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard