kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனின் இயல்பான பண்புகள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தேவனின் இயல்பான பண்புகள்!!


வேதத்தின்படி தேவனின் இயல்பான பண்புகளை பார்க்லாம்!!

அவரின் அளவற்ற கிருபையும், அவரின் மகா பரிசுத்ததிற்க்கு மத்தியில் அவரின் விசேஷ 4 பண்புகளை குறித்து பார்ப்போம்!!

1.  ஞானம்.  தேவனின் ஞானம் அனைத்தையும் அறிந்தவர் என்பதோடு இல்லாமல், அது நன்மைக்கு ஏதுவாக செய்வதாகவும் இருக்கிறது. யோபு சொல்லுகிறபடி,

யோபு 12:13. அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.

இப்படியாக அவரின் ஞானம் என்பது ஒரு விசேஷ பண்பாக இருக்கிறது, தன் சாயலில் படைக்கப்பட்ட மனிதனான ஆதாமிற்கு இந்த சாயலையும் கொடுத்திருந்தார், ஆகவே தான், புதிதாக தோன்றிய அனைத்திற்கு ஆதாம் பெயர் வைத்து மகிழ்ந்திருந்தான், அந்த பெயர்கள் இன்று வரை நிலைத்திருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது!! மனிதர்களுக்கு இருக்கும் ஞானம் தேவ சாயலின் ஒரு பகுதி!!

2.  வல்லமை.  தேவனின் பண்புகளில் ஒன்றான வல்லமையை, அவர் சித்தத்தை செயல்படுத்தும் தன்மை எனலாம்!! அவரின் வல்லமை அவரின் திட்டம் நிறைவேறுதலிலும் அவர் சித்தத்திலும் வெளிப்படுகிறது.

ஏசா 45:22. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. 23. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்;

தொடரும்.......



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

3. நீதி.   தேவனின் நீதியான சித்தத்தை விழுந்து போன ஆதாமின் சந்ததியால் நிறைவேற்ற முடியாது, ஆகவே தான் தன் நீதியை நிறைவேற்ற மீட்கும் பொருளாக கிறிஸ்துவை அனுப்பினார்.

ரோம 3:23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, 24. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 25. தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், 26. கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

4. அன்பு.  இது தேவனின் மிகவும் உயர்வான பண்பாகும், ஏனென்றால் தேவன் அன்பாக இருக்கிறார் என்கிறது வேதம் (1 யோவான் 4:16). தேவன் தம் படைப்பான மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்பின் பொருட்டே, தன் குமாரனை இந்த பூமிக்கு தந்தருளினார்!!

யோவான் 3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

அவரின் தெய்வீக திட்டம் இந்த 4 பண்புகளையும் நமக்கு புரிய வைக்கிறது,

ஞானம், தேவனின் மீட்பின் திட்டத்தின் ஆதாரம்
வல்லமை, அந்த திட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம்
நீதி, மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற பாரபட்சம் இல்லாத செயல்பாடு
அன்பு, இந்த திட்டத்தின் துவக்கமும் தொடர்ச்சியும்!!

தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதனுக்கு இந்த 4 பண்புகளிலும் கொஞ்சம் இன்று அளவில் கூட இருப்பதே இதற்கு சாட்சி!! தேவனை ஒரு போதும் ஒருவனும் கண்டதில்லை!!

இதை தவிர, தேவனின் ரூபம் என்றால், தேவனின் ஆளுகை பண்பாகும்!! தேவனின் சாயலில் மனிதன் மேற்சொன்ன பண்புகளை பெற்றான், தேவனின் ரூபம் பெற்ற மனிதன் இந்த பூமியில் ஆளுகை பெற்றான்!!

ஆதி 1:26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard