எபிரெயர் 5:12 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
அப்போஸ்தலர்கள் சொன்ன மூல உபதேசம் வேறு, ஆனால் இன்று சபைகளில் மூல உபதேசம் என்கிற துருபதேசம் தான் வந்திருக்கிறது!! இந்த வார்த்தைகளை சொல்லும் முன் கிறிஸ்துவை பிரதான ஆசாரியர் என்கிற ஒரு சத்தியத்தை சொல்லிவிட்டு, கிறிஸ்து மாம்சத்தில் வந்த நோக்கம், அவர் மாம்சத்தில் இருந்த போது பரலோகத்தில் இருக்கும் தன் தந்தையிடம் ஜெபித்ததை, கிறிஸ்துவின் கீழ்ப்படிதலை, அவர் பூரணமானதையும், அவர் மூலமாக வரும் இரட்சிப்பை தான் அவர் மூல உபதேசம் என்கிறார்!!
எபிரெயர் 6:1. ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், 2. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.
இன்னும் பல கள்ள போதகர்களை மூல உபதேசங்களை விட்டு விட்டு, பால் உபதேசங்களை தான் போதித்து வருகிறார்கள்!! கிறிஸ்து தேவனின் குமாரன் என்று அறியாதவர்கள் போதிக்கும் அனைத்துமே பால் உபதேசம் தான்!! இன்று மூல உபதேசம் என்று சொல்லப்படுவது முக்கியமாக திரித்துவத்தை குறித்து தான், அதாவது கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே, அவருடன் பரிசுத்த ஆவியான தேவனும் ஒன்றே என்கிறதான இந்த திரித்துவ உபதேசம் தான் இன்று மூல உபதேசமாக இருக்கிறது!! இன்று சபைகளில் இருக்கும் இந்த மூல உபதேசம் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கொண்டு வந்தது இல்லை, மாறாக கள்ள அப்போஸ்தலர்கள் கொண்டு வந்ததே!! இது நிசியாவின் விசுவாசப்பிரமானம் முதல் தொடங்கியது!! கிறிஸ்துவை பிதாவாக்கிய இந்த (துர்)விசுவாசப்பிரமானம் தான் இன்றைய கள்ள போதகர்களின் மூல உபதேசமாக இருக்கிறது!!
இந்த மூல உபதேசத்தை தான் சில்சாம் தன் தளத்தில் அடிக்கடி மூல உபதேசம் என்று எழுதுவது!! இது அப்போஸ்தலர்கள் சொன்ன மூல உபதேசமே கிடையாது!! இவர் கொண்டிருப்பது நிசியா விசுவாசப்பிரமானம் என்கிற மூல உபதேசம்!! கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்கிற மூல உபதேசம்!! இது மூல உபதேசம் கிடையாது கள்ள உபதேசம்!! அதை துனிச்சலாக போதித்து வருகிறவர் தான் சில்சாம் என்கிற கள்ள போதகன்!! தினகரன் மூலமாக ஒரு இயேசு நாதர், அருள் நாதர் கிறிஸ்தவ மண்டலத்தில் அறிமுகமானது போல், சில்சாம் என்கிற கள்ள போதகன் கிறித்து என்கிற ஒருவரை தொழுதுக்கொண்டிருப்பது அறியவேண்டியது!!
யார் இந்த கிறித்து? தெரியாது, எப்படி ஒரு அருள் நாதர், இயேசு நாதர் என்கிற வார்த்தையை தினகரன் அறிமுகப்படுத்தி அநேகரை அதில் மயக்கினாரோ, அப்படியே ஒரு புதிய போதகன் நிசியாவின் விசுவாசப்பிரமானத்தை வைத்துக்கொண்டு "கிறித்து" என்கிற ஒரு புதிய படைப்பை தந்துக்கொண்டு இருக்கிறார்!! கிறித்து என்பதற்கும் கிறிஸ்தவர்களுக்கும் சமபந்தமே கிடையாது!!
இதோ அவர் கிறித்துவை குறித்து எழுதியது,
//கிறித்தவ விசுவாசத்தில் நடுநிலை ?
என்னைப் பொறுத்தவரையிலும் எனது கிறித்தவ விசுவாசத்தில் நடுநிலை என்பதே கிடையாது;கிறித்துவை சிலுவையில் அறைந்தவன், அவரோடு அறையப்பட்டவன்;சிலுவையை மறுப்பவன், சிலுவையை சுமப்பவன்;கிறித்துவை மறப்பவன், கிறித்துவுக்காக உலகை மறப்பவன்; கிறித்துவை விட்டு ஓடுபவன், கிறித்துவுக்காக ஓடுபவன்; கிறித்து இல்லாமல் நஷ்டப்படுபவன், கிறித்துவுக்காக நஷ்டப்படுபவன்; கர்த்தருடைய நாளில் கைவிடப்படுபவன், சேர்த்துக்கொள்ளப்படுபவன்... இப்படி இரண்டு வகையினரை மட்டுமே..!//
வேதத்தை வாசிப்பவர்களுக்கு கிறிஸ்து தான் சிலுவையில் மரித்தார் என்பது தெரியும் ஆனால் கள்ள போதகன் சில்சாம் நம்புவதோ கிறித்துவையும் ஏதோ ஒரு கிறித்தவத்தை!! இதற்கும் மழுப்பலான ஒரு பதில் வரும் என்று தெரியும்!! வேதம் உபயோகப்படுத்தாத ஒரு "கிறித்து"வை கள்ள போதகன் சில்சாம் கிறிஸ்தவ மண்டலத்தில் உபயோகித்துக்கொண்டு இருப்பது கண்டனத்துக்குறியது!!