//ஆனால் உண்மை என்னவெனில் தேவனுடைய குமாரனை ஏற்று கொள்ளாதவர்கள் நல்லவர்களாய் இருந்தாலும் சரி தன ஆஸ்தியை விற்று மற்றவர்களுக்கு கொடுத்தவனாய் இருந்தாலும் தான தர்மத்தில் கர்ணனை போல இருந்தாலும் சரி அவன் போவது நரகமே (நியாயத்தீர்ப்புக்கு பின்பு எப்படி என்று எனக்கு தெரியாது )//
மாற் 10:21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
நீங்கள் கொடுத்திருக்கும் பதிவு இந்த வசனத்திற்கு மாறுபாடாக இருக்கிறதே!! மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை காண்பாரோ என்கிற தேவ வசனத்தை தேவ சித்தத்தை நிறைவேற விடாமல் தடுக்க முயற்சிப்பதில் அப்படி என்ன ஒரு சந்தோஷம்!! தேவ வார்த்தைகள் நிச்சயமாக நிறைவேறும் என்கிற நம்பிக்கை திரு எட்வின் சுதாகர் அவர்களுக்கு இருந்தால் இப்படி ஜனங்களை மிரட்டி நரகத்தின் பயத்தை உண்டாக்கி கிறிஸ்தவர்களாக மாற்ற முயற்சிக்காதீர்கள்!! கிறிஸ்தவர்கள் என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கிறது!! நரகத்திலிருந்து தப்பித்து கொள்ள ஒருவன் கிறிஸ்தவன் ஆகிறான் என்றாலே அது எப்படி பட்ட விசுவாசம் என்பதை புரிந்துக்கொள்ளலாம்!!
மத். 25:34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
எப்படி ஒரு காரியம் நடக்கும் என்று தெரியாது என்று சொல்லிவிட்டு, ஏன் ஜனங்களை மிரட்டுகிறீர்கள்!! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது காரியம் இல்லை, கிறிஸ்து காட்டிய வழியில் நடப்பது அவரின் சீஷனாக இருப்பதே அவசியம்!! கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் மாத்திரம் பரலோகம் போய் விடுவோமென்றால் அவரின் போதனைகள் எதற்கு அல்லது யாருக்கு!! இன்று கிறிஸ்தவத்தில் இருக்கும் சுமார் 2000 சபைகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களாக தான் இருக்கிறார்கள், அப்படி என்றால் உங்களின் வார்த்தையின்படி அவர்கள் அனைவரும் பரலோகம் போக தகுதியுடையவர்களா!!
//தேவன் எல்லோரையும் நிச்சயம் மீட்டு விடுவார் அதில் சந்தேகமே இல்லை (அவர் சித்தம் நிறைவேறும் பொழுது )
இது கடைசிகால எச்சரிக்கை செய்திகள்...................//
தேவன் அனைவரையும் மீட்டு விடுவார் என்பதில் எச்சரிக்கையின் செய்தி இல்லை சந்தோஷத்தின் செய்தி தான் இருக்கிறது!! இது தான் நற்செய்தியே!!