முகபுத்தகத்தில் ஒருவர் எழுதிய கருத்தை இதில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். (1)///‘யேகோவா’ என்ற பெயர் பழைய ஏற்பாட்டில், 7000ம் தடவைகள் வருகின்றன. இதன் அர்த்தம் 'மீட்பராகிய இயேசு” என்பதாகும். பழைய ஏற்பாட்டில் 'யேகோவா” என்று அழைக்கப்பட்டுள்ள பெயரே புதிய ஏற்பாட்டில் 'இயேசுகிறிஸ்து” என்பதாகும். எனவே இந்த வசனம், 'மீட்ப...ராகிய இயேசு என் மேய்ப்பராயிருக்கிறார். எனவே நான் தாழ்ச்சியடையேன்” என்றும் வாசிக்கப்படலாம்.///
(2)//இந்த 23ம் சங்கீதத்தின் மகத்தான வாக்குத்தத்தமானது குறிப்பிட்ட ஒரு சிலருக்கோ அல்லது உலகிலுள்ள அனைவருக்குமோ அருளப்படவில்லை. உண்மையில் யார் தேவனின் ஆச்சரியமான இரட்சிப்பின் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே இது அருளப்பட்டுள்ளது.///
நண்பரே!!!! நீங்கள் எழுதிய பதிவை வாசித்துப் பார்த்தேன், வாசித்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். எங்கதான் இருந்து இது போன்ற விஷயங்களை தோண்டி எடுக்க முடியுமோ தெரியவில்லை. அத்துடன் பழைய ஏற்பாட்டில் ''யெகோவா'' என்னும் நாமத்தில் அறியப்பட்டவருக்கு புதிய ஏற்பாட்டில் ''மீட்பராகிய இயேசு” என்று வரைவிலக்கணம் கொடுத்தீர்கள். அதவிட ஒரு படி மேல போய் ஜெகோவா என்ற தேவன் புதியஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார் என்று சொன்னது.... பைபிளில் இருக்கும் 66 புத்தகத்தை அப்படியே தலைகீழா தூக்கி அடித்துவிட்டீர்கள்.. போங்க !!........வேதத்தில் உள்ள வசனங்களை ஆளுக்கு ஆள் தவறாக புரிந்துகொண்டு தானும் குழம்பி எல்லோரையும் குழப்புங்கள். தயவு செய்து கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு சரியான சத்தியத்தை போதியுங்கள்... மேலே கூறிய ''கடவுளுடைய பெயர் - அதன் பயன்பாடும் அர்த்தமும்'' என்ற தலையங்கத்துக்கான பதிவுகள் தொடரும்.
-- Edited by anbu57 on Sunday 6th of February 2011 09:25:56 PM
''பழைய ஏற்பாட்டில்'' உள்ள ஜெகோவா ''புதிய ஏற்பாட்டில்'' இயேசு கிறிஸ்துவா ?
மத். 4 :10 ''அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.'' (இயேசு: தாமே வணங்கப்படவேண்டும் என்று சொல்லவில்லை என்பது தெளிவாகிறது)
யோவான். 8 :54 ''இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்''. (எபிரேய வேத எழுத்துக்கள் யேகோவாவை யூதர் வணங்குவதாக உரிமை பாராட்டின கடவுள் என தெளிவாய் அடையாளங் காட்டுகின்றனர். இயேசு தாமே யேகோவா என்று சொல்லவில்லை; யேகோவா தம்முடைய பிதா என்றே சொன்னார். தாமும் தம்முடைய பிதாவும் தனித்தனி ஆட்கள் என இயேசு இங்கே தெளிவாக்குகிறார்.)சங்கீதம். 110 : 1 ''கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்''. (மத். 24 : 41 -45 இல் இயேசு இந்தச் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவீதின் ''ஆண்டவர்'' தாமே என விளக்கிக் காட்டினார். ஆகையால் இயேசு யேகோவா அல்லர், ஆனால் யெகோவாவின் வார்த்தைகள் இங்கே அவரை நோக்கிச் சொல்லப்பட்டன.) பிலிப்பியர். 2 :9 -11 ''9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்:'' (இயேசு கிறிஸ்து பிதாவாகிய கடவுளில் இருந்து வேறுபட்டவராக அவருக்கு கீழ் பட்டவராகவும் இங்கே காட்டி இருப்பதை கவனியுங்கள்:)
-- Edited by Theneer Pookal on Sunday 6th of February 2011 08:53:29 PM
-- Edited by anbu57 on Sunday 6th of February 2011 09:28:03 PM
உங்களுடைய பைபிளில் சங்கீதம் 83:17 (சில பைபிளில் வசனம் 18 ) எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு இவ்வசனத்தை பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளது: ''யேகோவா என்னும் நாமத்தை உடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர்ந்து கொள்வார்களாக'' ஏராளமான மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளும் இவ்வசனத்தை இதுபோன்றே மொழிபெயர்த்து இருகின்றன. ஆனால், அனேக மொழிபெயர்ப்புகள் யேகோவா என்ற பெயரை இவ்வசனத்தில்
பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, ''கர்த்தர்'' அல்லது ''ஆண்டவர்'' போன்ற பட்டப் பெயர்களைப் பயன்படுத்தி இருகின்றன. இந்த வசனத்தில் எதைப் பயன்படுத்தவேண்டும்: ஒரு பட்டப் பெயரையா அல்லது யேகோவா என்ற பெயரையா?
இந்த வசனம் ஒரு பெயரைப் பற்றிச் சொல்கிறது. மூல எபிரேய பைபிளில் (பைபிளில் பெரும் பகுதி எபிரேய மொழியில் தான் எழுதப்பட்டது) தனிச் சிறப்பு வாய்ந்த இப்பெயர் இவ்வசனத்தில் காணப்படுகிறது. எபிரேய எழுத்துக்களில் அது (YHWH) என்றுள்ளது. தமிழில், பொதுவாக அந்தப் பெயர் ''யேகோவா'' என மொழிபெயர்க்கப்படுகிறது. அந்தப் பெயர் பைபிளில் ஒரேயொரு தடவை மட்டும் தான் காணப்படுகிறதா? இல்லை. எபிரேய வேதாகமத்தின் மூலப் பிரதியில் ஏறக்குறைய 7000 தடவை அது காணப்படுகிறது!!!
கடவுளுடைய பெயர் எந்தளவு முக்கியமானது? இயேசு கிறிஸ்து சொல்லிக்கொடுத்த ஜெபத்தை எடுத்துக்கொள்ளுங்கள். '' பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக'' என்று அது ஆரம்பிக்கிறது. இயேசு வேறொரு சமயத்தின்போது கடவுளை நோக்கி, ''பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்'' என்று ஜெபித்தார். அப்போது ''மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்'' என்று வானத்திலிருந்து கடவுள் பதிலளித்தார். எனவே கடவுளுடைய பெயர் மிக மிக முக்கியமானது என்பது தெளிவாகிறது. அப்படியானால், சில மொழிபெயர்ப்பாளர்கள் இந்தப் பெயருக்குப் பதிலாக ஏன் பட்டப் பெயர்களை பயன்படுத்துகிறார்கள்?.... தொடரும்
-- Edited by Theneer Pookal on Monday 7th of February 2011 11:49:37 PM
-- Edited by anbu57 on Tuesday 8th of February 2011 03:52:44 AM
இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. முதலாவது இந்தப் பெயர் பூர்வ காலத்தில் எப்படிஉச்சரிக்கப் பட்டது என்பது தெரியாததால் அதை இன்று பயன்படுத்தக் கூடாது என அநேகர் வாதிடுகிறார்கள். பூர்வ எபிரேய மொழி, உயிரெழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்டது. ஆகையால், YHWH என்பதை பைபிள் காலங்களில் மக்கள் எப்படி உச்சரித்தார்கள் என்பதை இன்று யாராலும் திட்டவட்டமாக சொல்ல முடியாது. அதற்காக, கடவுளுடைய பெயரையே நாம் பயன்படுத்தக் கூடாதா? பைபிள் காலங்களில், இயேசு என்ற பெயர் ''YESUFAA '' என்று உச்சரிக்கப்பட்டு இருக்கலாம். அல்லது ''YESOOFAA '' என்று உச்சரிக்கப்பட்டிருக்கலாம். அதை யாராலும் நிச்சயமாய் சொல்ல முடியாது. என்ற போதிலும், இயேசு என்ற பெயரை உலகெங்குமுள்ள மக்கள் வித்தியாசமான விதங்களில், பொதுவாக தங்களுடைய மொழியின் உச்சரிப்புக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள். முதல் நுற்றாண்டில் அந்தப் பெயர் எப்படி உச்சரிக்கப்பட்டது என்று தெரியாததால் அதை அவர்கள் பயன்படுத்தாமலே இருந்துவிடவில்லை. அதுபோலவே, வெளிநாட்டுக்கு செல்வீர்கள் என்றால், அந்த நாட்டின் பாஷையில் உங்களுடைய பெயர் ரொம்பவே வித்தியாசமாக உச்சரிக்கப்படுவதை ஒருவேளை நீங்கள் கவனிக்கலாம். எனவே, கடவுளுடைய பெயர் பூர்வத்தில் எப்படி உச்சரிக்கப்பட்டதென்று தெரியாததைக் காரணங்காட்டி அதைப் பயன்படுத்தாமலே நாம் இருந்துவிட முடியாது.
கடவுளுடைய பெயரை பைபளில் இருந்து நீக்கிவிட்டதற்கானஇரண்டாவது காரணம் யூதருடைய நீண்டநாளைய பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. கடவுளுடைய பெயரை உச்சரிக்கவே கூடாது என்று அனேக யூதர்கள் நம்புகிறார்கள். பைபிளில் உள்ள ஒரு சட்டத்தைக் தவறாகப் புரிந்துகொண்டதன் காரணமாகவே இந்த நம்பிக்கை ஏற்பட்டதாக தெரிகிறது. அந்தச் சட்டம் இவ்வாறு சொல்கிறது::: ''உன் தேவனாகிய கர்த்தருடைய (யேகோவாவுடைய) நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர்(யெகோவா) தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்''.
கடவுளுடையபெயர் தவறாகப் பயன்படுத்துவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. ஆனால் அவருடைய பெயரை மரியாதைக்குரிய விதத்தில் பயன்படுத்துவதை அது தடைசெய்கிறதா? இல்லவே இல்லை. எபிரேய பைபிளை (''பழைய ஏற்பாடு'') எழுதிய எல்லாருமே பூர்வ இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த சட்டங்களின் படி வாழ்ந்த விசுவாசமிக்க ஆட்கள். என்றாலும், கடவுளுடைய பெயரை அவர்கள் அடிக்கடி பயன்படுத்தினார்கள். உதாரணத்துக்கு, கடவுளுடைய வணக்கத்தார் ஒன்று சேர்ந்து சப்தமாக பாடிய சங்கீதங்களில் அந்தப் பெயரைப் பயன்படுத்தினார்கள். தம்மை வணங்குவோர் தம்முடைய பெயரை உபயோகிக்கும்படி யேகோவா தேவனே கட்டளை கொடுத்தார். அந்தக் கட்டளைக்கு அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் கீழ்படிந்தார்கள். (யோவேல் 2:32 / அப்போஸ்தலர் 2 :21 ) ஆம், இயேசு செய்ததைப் போலவே, கிறிஸ்தவர்கள் இன்று கடவுளுடைய பெயரை மரியாதையோடு பயன்படுத்த கொஞ்சங்கூட தயங்குவதில்லை. -- யோவான் 17 :26
-- Edited by anbu57 on Tuesday 8th of February 2011 03:57:35 AM
மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயருக்கு பதிலாக பட்டப்பெயர்களை பயன்படுத்துவது மாபெரும் தவறாகும். அவர்கள் அப்படிச் செய்வதன் மூலம் கடவுள் ஆள்தன்மையற்ற ஒரு சக்தி, அவரை யாரும் அணுக முடியாது என்ற எண்ணத்தை ஜனங்களுடைய மனதில் ஏற்படுத்துகிறார்கள்.ஆனால் பைபிளோ ''யேகோவாவுடன் நெருக்கமான பந்தத்தை'' ஏற்படுத்திக்கொள்ளும் படி மனிதர்களை உக்குவிக்கிறது. (சங்கீதம் 25:14) மிக நெருங்கிய நண்பர் ஒருவரைச் சற்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நண்பருடைய பெயரை நீங்கள் தெரிந்துகொள்ளவே இல்லையென்றால், அவருடன் நீங்கள் நெருக்கமாக இருக்க முடியுமா? அதேபோல, கடவுளுடைய பெயர் யேகோவா என்பதை ஜனங்களிடம் இருந்து மறைத்து வைத்தால், அவர்கள் எப்படி உண்மைலேயே அவரோடு நெருக்கமான பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியும்?
அதுமட்டும் அல்ல, கடவுளுடைய பெயரை ஜனங்கள் பயன்படுத்தாதபோது, அதன் அருமையான அர்த்தமும் அவர்களுக்கு விளங்காமல் போய்விடுகிறது. கடவுளுடைய அந்தப் பெயர் எதை அர்த்தப்படுத்துகிறது? விசுவாசமிக்க ஊழியரான மோசேயிடம், கடவுளே தம்முடைய பெயரின் அர்த்தத்தை சொல்லிருந்தார். கடவுளுடைய பெயரைக் குறித்து மோசே கேட்ட போது, ''இருக்கிறவராக இருக்கிறேன்'' என்று யேகோவா பதிலளித்தார். Rotharhaim மொழிபெயர்ப்பு இந்த வார்த்தைகளை இவ்வாறு மொழிபெயர்க்கிறது:: ''எப்படிஎல்லாம் ஆக வேண்டும் என விரும்புகிறேனோ அப்படிஎல்லாம் நான் ஆவேன்'' எனவே, தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற எப்படிஎல்லாம் ஆக வேண்டி இருக்குமோ அப்படி எல்லாம் ஆவதற்கு யேகோவாவால் முடியும்.
-- Edited by anbu57 on Tuesday 8th of February 2011 05:34:29 AM
எப்படியெல்லாம் ஆக வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படியெல்லாம் ஆவதற்கு உங்களால் முடியுமென்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது என்ன செய்வீர்கள்? உங்கள் நண்பர்களுக்கு எப்படி உதவுவீர்கள்? அவர்களில் ஒருவருக்கு ரொம்பவே உடம்பு சுகமில்லாமல் போய்விட்டால், நீங்கள் திறம்பட்ட ஒரு டாக்டராக ஆகி, அவரை குணப்படுத்துவீர்கள். மற்றொரு நண்பருக்கு பண நஷ்டம் ஏற்படதென்றால், நீங்கள் ஒரு பெரிய பணக்காரராக ஆகி, பிரச்சனையிலிருந்து அவரை விடுவிப்பீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் நினைத்தபடி எல்லாம் உங்களால் ஆக முடியாது. நம் எல்லாராலும் தான். என்றாலும், யேகோவா தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படி எல்லாம் ஆகிறார் என்பதை பைபிளை படிக்கப் படிக்க நீங்கள் புரிந்துகொள்ளும் போது நாம் இன்னும் அதிகமானதை கற்றுக்கொள்ள தேவன் உதவிகளை நிச்சயமாக செய்வார். தேவனை நேசிக்கிறவர்களின் சார்பாக, தம்முடைய வல்லமையைப் பயன்படுத்தும் போது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். (2 நாளாகமம் 16 :9 ) யேகோவாவுடைய பெயர் தெரியாதவர்களுக்கு அவருடைய குணாதிசயத்தின் இத்தகைய அழகிய அம்சங்கள் எல்லாம் தெரியாமலே போய்விடுகின்றன. எனவே யேகோவா என்ற பெயர் பைபளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. அதன் அர்த்தத்தை தெரிந்துகொள்வதும், நம்முடைய வணக்கத்தில் அதை தாராளமாக பயன்படுத்துவதும் நம் பரலோக தகப்பனான யேகோவாவிடம் நெருங்கி வருவதற்கு வலிமைமிக்க விதத்தில் உதவுகின்றன.::: END
-- Edited by anbu57 on Wednesday 9th of February 2011 09:14:16 AM