kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யெகோவாவும் கிறிஸ்துவும் ஒருவ‌ரே : ம‌ற்றுமொரு துருப‌தேச‌ம்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
யெகோவாவும் கிறிஸ்துவும் ஒருவ‌ரே : ம‌ற்றுமொரு துருப‌தேச‌ம்


தமிழ் கிறிஸ்தவ தளத்தில் திரு வஷ்னி அவர்களின் ஒரு பதிவை கண்டு அதிர்ந்து போனேன், இதோ,

//‘யேகோவா’ என்ற பெயர் பழைய ஏற்பாட்டில், 7000ம் தடவைகள் வருகின்றன. இதன் அர்த்தம் 'மீட்பராகிய இயேசு” என்பதாகும். பழைய ஏற்பாட்டில் 'யேகோவா” என்று அழைக்கப்பட்டுள்ள பெயரே புதிய ஏற்பாட்டில் 'இயேசுகிறிஸ்து” என்பதாகும். எனவே இந்த வசனம், 'மீட்பராகிய இயேசு என் மேய்ப்பராயிருக்கிறார். எனவே நான் தாழ்ச்சியடையேன்” என்றும் வாசிக்கப்படலாம்.//

வ‌ழ‌க்க‌ம் போல் புதுமையான‌ அல்ல‌து பார‌ம்ப‌ரிய‌மான‌ போத‌னைக‌ளில் மூழ்கியிருக்கும் திரு சில்சாமின் ப‌திவு,

//இந்த தகவல் புதியதாக இருக்கிறதே...சற்று விளக்குவீர்களா..? //

திரு வஷ்னி அவ‌ர்க‌ளும் உணர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்ட‌ ஒரு விசுவாச‌த்தோடு இதை ப‌திந்திருக்கிறாரா அல்ல‌து அர்த்த‌ம் தெரிந்து ப‌திவு செய்திருக்கிறாரா என்ப‌து தெரிய‌வில்லை!!

யெகோவா அல்ல‌து யாவேஹ்

H3068  Yhovah  yeh-ho-vaw'
from H1961;
(the) self-Existent or Eternal; Jehovah, Jewish national name of God.
அதாவ‌து தானாகவே இருக்கிறவர், அநாதியான‌வ‌ர், யூத‌ர்க‌ளின் தேவ‌ன் என்பது யெகோவாவின் அர்த்த‌ம் !!

இனி இயேசு கிறிஸ்துவை குறித்து பார்ப்போம்,

முத‌லாவ‌து இயேசு,

G2424  Iesous  ee-ay-sooce'
of Hebrew origin (H3091);
Jesus (i.e. Jehoshua), the name of our Lord and two (three) other Israelites.

இயேசு என்கிற‌ நாம‌த்திற்கு எபிரேய‌ அர்த்த‌ம் யெஷுவா அல்ல‌து ஜோஷுவா!! இந்த‌ பெய‌ருக்கும் யெகோவாவிற்கும் ரொம்ப‌ தூர‌ம் இருக்கிற‌து!!

அடுத்து கிறிஸ்து,

G5547  Christos  khris-tos'
from G5548;
anointed, i.e. the Messiah, an epithet of Jesus.

கிறிஸ்து என்றால் அபிஷேக‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்று அர்த்த‌ம்!! அப்ப‌டி என்றால் யாரால் அபிஷேக‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்று கொஞ்மாவ‌வ‌து கேட்டு, அல்ல‌து வேத‌த்திலிருந்து வாசித்து தெரிந்துக்கொள்ள‌லாம் என்கிற ஆர்வ‌ம் இருந்திருந்தால், ப‌ழைய‌ ஏற்பாட்டின் யெகோவா தேவ‌ன் தான் புதிய‌ ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து என்கிற‌ ஒரு துருப‌தேச‌ம் வ‌ந்திருக்க‌ வாய்ப்பில்லை!!

கிறிஸ்துவை அபிஷேக‌ம் செய்த‌வ‌ரே யெகோவா தேவ‌ன் தான் என்ப‌து திரு வாஷ்னி அவ‌ர்க‌ள் தெரிந்துக்கொள்ள‌ட்டும்!! தேவ‌தூஷ‌ன‌த்திற்கு அள‌வே இல்லாம‌ல் போய் கொண்டு இருக்கிற‌து என்ப‌தை இது போன்ற‌ ப‌திவுக‌ளால் தெரிந்துக்கொள்ள‌லாம்!!

க‌ர்த்த‌ர் (யெகோவா) என் மேய்ப்ப‌ராக‌ இருக்கிறார் என்று தான் வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து, க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்து என் மேய்ப்ப‌ர் என்று மாற்றுவ‌து அப‌த்த‌மான‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சி!!


தொட‌ரும்...................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: யெகோவாவும் கிறிஸ்துவும் ஒருவ‌ரே : ம‌ற்றுமொரு துருப‌தேச‌ம்


சங் 23ஐ எப்படி வேண்டுமென்றாலும் புரிந்துக்கொள்ளலாம் என்பதை தான் வஷ்னி அவர்கள் விளக்கமாக தந்திருக்கிறார்!! அதில் ஒரு துருபதேசம் தான் யெகோவாவும் கிறிஸ்துவும் ஒருவரே!! திரித்துவத்தில் இருப்பவர்கள் பிதாவும் குமாரனும் ஒருவரே என்கிற போதனையை பெயர் சொல்லி யெகோவாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்று எழுதுகிறார் திரு வஷ்னி!!

இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை, பழைய ஏற்பாட்டில் யெகோவா தேவனை கர்த்தர் என்று ஆழமான (Bold) வார்த்தையிலும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை கர்த்தர் என்று ஆழமான (Bold) வார்த்தையிலும் நம் தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்கள் போட்டு விட்டார்கள்!! ஏனென்றால் திரித்துவத்தை மனதில் நிறுத்தி வைத்து எதையும் மொழிப்பெயர்த்தால் இப்படி தான் இருக்கும்!! ஆங்கிளத்தில் கூட யெகோவா தேவனுக்கு ''என்றும் கிறிஸ்துவை குறித்து சொல்லும் போது "" என்றும் போட்டிருக்கிறார்கள்!! ஆனால் தமிழில் பாரபட்சம் இன்றி கர்த்தர் என்கிற ஒரே வார்த்தையால் இருவரையும் மொழிப்பெயர்த்திருப்பது கொண்டு வந்திருக்கிறது குழப்பத்தை!!

ஒரு விஷயத்தை உணர்வு பூர்வமாக அர்த்தம் கொள்வதை காட்டிலும் அறிவு பூர்வமாக அதுவும் தேவனை அறிகிற அறிவில் சிந்தித்து பார்த்தோமென்றால் இது போன்ற பெரிய அபத்தங்களில் இருந்து தப்பிக்கலாம்!! இவர் எழுதியிருக்கும் படி வாசித்தோமென்றால், சங், 110:1ஐ எப்படி புரிந்துக்கொள்வதாம்!!

சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

யெகோவா தேவன் என் ஆண்டவரை அதாவது கிறிஸ்துவை நோக்கி சொல்லும் ஒரு வரி!! ஆனால் வஷ்னி அவர்களின் புரிந்துக்கொள்ளுதலின் படி பார்த்தால் யெகோவா (இயேசு கிறிஸ்து) என் ஆண்டவரை (!?) நோக்கி சொல்லுகிறார் என்று எடுத்துக்கொண்டு கடைசி வரையில் யார் இந்த என் ஆண்டவர் என்று குழப்பத்தில் இருக்க வேண்டியது தான்!!

தயவு செய்து யெகோவாவை யெகோவா என்றும் கிறிஸ்து இயேசுவை அவரின் குமாரன் என்று வேதம் சொல்லுவது போல் விட்டு விடுங்களே!! உங்களுக்கு யெகோவா சாட்சிகளை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அதற்காக இயேசு கிறிஸ்து தான் யெகோவா என்று பதிவு செய்திருப்பது மற்றும் ஒரு மாபெரும் தேவதூஷனமாக இருக்கிறதே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard