டாக்டர் பீட்டர் சாலமோன் என்கிற கிரிஸ்தவ பிரசங்கியார் (கிறிஸ்தவ பெரியார் என்று அழைக்கபடுபவர்) டீ வி நிகழிச்சியில் அருமையாக பிரசங்கித்து வருகிறார் என்று விளம்பரம்!! உண்மை தான், பெந்தகோஸ்தே விசுவாசமான, ஆவியில் குதிப்பது, சிரிப்பது, அழுவது, இன்னும் அற்புதங்கள், அடையாளங்கள், தேவன் பேசுவது போன்றவற்றை கடுமையாக எதிர்க்கிறார்!! கத்தோலிக்கர்களையும், மூன்றாம் பிரிவினர்களின் (பெந்தகோஸ்தேயினர்) தப்பிதங்களை இவர் அருமையாக சொல்லி வருகிறார்!! இவர் சுட்டி காட்டும் வசனம் மிகவும் சரியே,
I பேதுரு 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்;
I கொரிந்தியர் 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும்,
வசனம் எல்லாம் சரி தான், ஆனால் வேதத்தை மிஞ்சும் "திரித்துவம்" மாத்திரம் என்னவாம்!! ஏனென்றால் இவரும் ஒரு திரித்துவ போதகரே!!