kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மற்றுமொரு உணர்வுப்பூவ விசுவாசம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மற்றுமொரு உணர்வுப்பூவ விசுவாசம்!!


சமீபத்தில் ஒரு தளத்தில் கண்ட வித்தியாசமான ஒரு வரியை காண நேர்ந்தது!! ஆனால் அந்த வரிகளுக்கு தூபமிட்டு கொண்டிருப்பவர் சில்சாம் போன்றவர்கள் தான் என்றவுடன் ஏமாற்றமே!!

//என் நேசர் இயேசுவை ஆராதித்தால் நரகம் தான் என்றால் அந்த நரகத்துக்கே போக விரும்புகிறேன். போதுமா?//

உணர்வுப்பூர்வமான வரி!! தேவனின் கட்டளையை மீற அப்படி ஒரு விருப்பம்!!

அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே. (மத்தேயு 4:10)

இதே உணர்வில் இருக்கும் கத்தோலிக்கர்களின் மரியாள் வழிப்பாடு, புனிதர்கள் வணக்கம் என்று இருப்பவர்கள் மாத்திரம் எப்படு தப்பு செய்கிறவர்களாக இருக்கிறார்கள்!! ஏனென்றால் வேதத்தின்படி அது தவறு என்பது இவரின் வாதம், ஆனால் அதே வேதம் போதிக்கும் ஒரு வசனம் எடுத்து சொன்னால் இவரின் உணர்வுப்பூர்வமான விசுவாசம் அதை ஏறக மறுக்கிறதின் விளைவு அந்த உணர்வுப்பூர்வமான வரி!! இது ஒன்றும் தீர்வு இல்லையே, அவர் அவருக்கு அவர் அவர் விசுவாசமே சரி என்றால் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே, அவர் எழுதிய சாதனை பட்டியளும் கூட அப்படி தானே!! அவருக்கு சரி என்று படுவதால் அது சரி, மற்றவர்கள் வேதத்தின்படி சொன்னால் அவரின் உணர்வு பூர்வமான விசுவாசத்திற்கு விரோதமாக சொல்லப்படுவதாக இருக்கிறது!! இந்த கொளுந்து தீயில் தூபமிட்டு வளர்க்க சில்சாம், கொல்வின் போன்ற ஒரு கூட்டனி!!

//பிசாசுக்கு அவர்களைக் கவிழ்க்க ஒரு வழியும் தெரியவில்லை. துர் உபதேசங்களை உள்ளே கொண்டுவந்து கலப்படம் பண்ணலாமென்றால் வாசலில் ஜாமங்காத்து நிற்கும் பவுல், பேதுரு, யூதா, யாக்கோபு போன்ற அக்கினி மதில்களைத் தாண்டி உள்ளே வரமுடியாது.//

அபத்தமான ஒரு கருத்து!! அப்போஸ்தலர்களின் நித்திரை அடைந்ததை தொடர்ந்து, கள்ள உபதேசம் களையாக சபைக்குள் விதைக்கப்பட்டு விட்டது, விஜய் அவர்களின் சாதனை பட்டியல் அவரின் பார்வையில் பட்ட சில தப்பிதங்களே தவிர அது நிறைவானது அல்ல!! ஏனென்றால் வேதம் சொல்லுவதை கூட கேட்காமல் நான் நரகத்திற்கு போக விரும்புகிறவராக அவர் தெரிவிப்பது, அவர் மனதில் பதிந்திருக்கும் மனித உபதேசத்தில் ஆழத்தையே காண்பிக்கிறது!! இவர் மேலே சொன்ன இந்த வரிகளுக்கு இரண்டு வசனங்கள் மூலம் தவறு என்று சுட்டி காண்பிக்க விரும்புகிறேன், இல்லையென்றால் திரு கொல்வின் அவர்கள் நீங்கள் ஆதாரத்துடன் எதையுமே எழுதுவதில்லை என்று குற்றம் சாற்றுவாரே,

 மத். 13:25. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.26. பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது.

அப். 20:29. நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30. உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

கிறிஸ்தவம் என்பது உணர்வுப்பூர்வமான விசுவாசம் இல்லை, வேத வசனங்களை ஆறாய்ந்து நித்திய ஜீவனை பெறும் விசுவாசம் கொண்டது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//பிரதான தூதன் மிகாவேல்தான் இயேசு என்று சொல்லும் உங்களை விட்டு 1800 மைல்கள் தள்ளியிருப்பதற்க்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன்!//

நீங்கள் என்னை விட்டு 1800 மைல்கள் தள்ளியிருப்பது ஒரு ஆச்சரியமான விஷயம் இல்லை, ஆனால் வேதத்தை விட்டு பல கோடி மைல்கள் அல்லவ்வா தூரமாக இருக்கிறீர்கள்!! கர்த்தர் என்று யாரை சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை!! பழைய ஏற்பாட்டில் ஆழமாக எழுதப்பட்ட கர்த்தரா அல்லது புதிய ஏற்பாட்டில் ஆழமாக எழுதப்பட்ட கர்த்தரா!! இயேசுவை தேவனாக தொழுதுக்கொள்வோர் தான் கிறிஸ்தவர்கள் அல்லது இயேசுவை தேவனாக தொழுதுக்கொள்ளுவது தான் சரி என்று வேதத்தில் ஒரு வசனம் காண்பியுங்கள்!! அப்படி என்றால் மத்.4:10ல் இயேசு கிறிஸ்து சொன்னது எல்லாம் சாத்தானுக்கா!! தெளிவுப்படுத்துவீர்களா!!

பிரதான தூதன் மிகாவேல் "இயேசு" என்று சொல்லுவதை உங்கள் கூட்டணியினர் திரித்து எழுதுவது!! நான் சொல்லுகிறது என்னவென்றால், இயேசுவாக மாம்சத்தில் இந்த பூமிக்கு வரும் முன் கிறிஸ்துவாக அவர் இருந்த நிலையை!! பழைய ஏற்பாட்டில் என் தூதனானவர் என்றும், கர்த்தரின் தூததனானவரும் என்றெல்லாம் ஒருமையில் ஒருவரை குறித்து மாத்திரமே சொல்லப்பட்டிருப்பது இன்றைய கிறிஸ்தவ "குருடர்களுக்கு" தெரிவதில்லை!! இன்று குருடர்கள் தான் குருடர்களை வழிநடத்துகிறார்கள்!! ஏனென்றால் வேதத்திற்கு குருடாகி உணர்ச்சிக்கு கண்களை திறந்து விசுவாசம் கொள்கிறார்கள்!!

இதோ, தன்னை போதகர் என்று நியமித்த கொண்ட ஒரு வஞ்சகரின் கருத்து,

//இந்த உண்மையை வெளிக் கொணரவும் துருபதேசக்காரர்களை அடையாளங் காட்டி தனிமைப்படுத்தி நம்முடைய சகோதரர்களை விழிப்படையச் செய்யவுமே கடந்த இரண்டு வருடமாக இரவும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்..! இதற்கு மேல் இயேசுவை யாரென்று ஒரு ஆத்துமா பார்க்கிறதோ அதற்குரிய பலனை அது அடையும், அதன் இரத்தப்பழி நம்மீது இராது; அங்கேயிருந்து ஒரு சத்தம் கேட்கிறது,”அதான்,ஆத்துமா என்பதே இல்லை என்கிறோமே..” என்று..!//

இவ‌ர் கிறிஸ்த‌வ‌ போராளி, இவ‌ரை இல்லாம‌ல் இன்று கிறிஸ்த‌வ‌ம் வ‌ள‌ர‌ முடியாது என்று நினைத்துக்கொண்டு, பாவ‌ம் போராடிக்கொண்டு இருக்கிறார்!! தான் இருப்ப‌தே எத்துனை பெரிய‌ துருப‌தேச‌த்தில் என்ப‌தை இவ‌ருக்கு தெரிய‌வில்லை!! இவ‌ர் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு எல்லாம் இருட்டாகி விட்ட‌து என்று பித‌ற்றிக்கொண்டு இருக்கிறார்!! ஒரு இட‌த்தில் இவ‌ர் 20 ஆண்டுக‌ளாக‌ போராடிக்கொண்டும் இன்னோரு இட‌த்தில் இவ‌ர் 2 ஆண்டுக‌ளாக‌ போராடிக்கொண்டு இருப்ப‌தாக‌வும் எழுதுவ‌து தான் இவ‌ர் நிலையாக‌ எழுதிக்கொண்டு இருப்ப‌த‌ற்கான‌ அடையாள‌ம்!! இவர் என்னமோ தன்னை பெரிய தீர்க்கதரிசி என்று நினைத்துக்கொண்டு பெரிய வார்த்தைகளான இரத்தப்பழி என்றெல்லாம் பேசி வருகிறார், தான் இருக்கும் நிலையை உனராமல்!! இவரே ஒரு குருடர் இவர் குருடர்களுக்கு வழிக்காட்டிக்கொண்டு தன்னை அவர்களுக்கு திருப்ப்திப்படுத்தும் போதகனாக நியமித்துக்கொண்டும் இருக்கிறார். இவர் குருடர் மாத்திரம் இல்லை, அம்நீஷிய (Amnesia) நோயினால் பாதிக்கப்பட்டவரும் கூட, ஆத்துமா மரிக்கிறது என்று சொல்லியதை ஆத்துமா இல்லை என்று நான் சொல்லியதாக இவர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்!! இவரை எல்லாம் அப்பாலே போ சாத்தானே என்று தான் கடிந்துக்கொள்ள முடியும்!! ஏனென்றால், இவர்கள் இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ள வேண்டும் , அவருக்கே முதன்மையான ஆராதனை செலுத்த வேண்டும் என்று சொல்லுபவர்கள், ஆகவே இயேசு கிறிஸ்து சொல்லுவது போலவே, இவர்களுக்கு,

மத். 4:10 அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே

ஆனால் இந்த வசனம் கண்கள் இருப்பவர்களுக்கு தான் தெரிய வாய்ப்பு இருக்கிறது, இவரை போன்ற குருடர்களின் கூட்டத்திற்கு இல்லை, நிச்சயமக இல்லை. இவர்களுக்கு ராஜியத்தின் தான் கண்கள் திறக்கப்படும், ஆனால் ராஜிய‌ம் என்றால் என்ன‌வென்று இவ‌ர்க‌ள் ராஜிய‌த்தில் வ‌ந்து தான் க‌ற்றுக்கொள்வார்க‌ள், இப்பொழுது சொன்னாலும் இந்த‌ ம‌ந்த‌ புத்தி போத‌க‌னுக்கு ஒன்றூம் புரியாது,

ஏசா. 35:5. அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.

இப்பொழுது இவர்களின் க‌ண்க‌ளை இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌ன் குருடாக்கி வைத்திருக்கிறான், ஆனாலும் க‌வ‌லை பாடாதீர்கள், ஏசா 35:5 க‌ண்டிப்பாக‌ நிறைவேறும், உங்களுக்கு விசுவாச‌ம் இருக்கிற‌தோ இல்லையோ!! முத‌லில் உங்க‌ள் போத‌க‌த்தின் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌த்தில் ம‌ய‌க்கியோரின் இர‌த்த‌ப்ழிக்கு ப‌தில் தேடிக்கொண்டு இருங்க‌ள், உங்க‌ளை நாங்க‌ள் நிச்ச‌ய‌மாக‌ க‌ஷ்ட‌ப்ப‌டுத்த‌ மாட்டோம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

RE: யார் தேவன்? யார் இயேசு கிறிஸ்து? அன்பு சகோதரனே ,நானும் பிதாவும் ஓன்று என யோவான் 14 :8 -11 இல் வாசித்தறியவும் மண்ணிலிருந்து மனிதனைப்படைத்த தேவாதி தேவனால் தன்னிலிருந்து ஏசுவைப் படைக்க ஏதும் சிரமம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ஏன் குழப்பம் ?__________________navarajan


ஒன்றும் இல்லாமையிலிருந்து தான் தேவன் அனைத்தையும் படைத்தார் என்று வேதம் சொல்லும் போது, தன்னிலிருந்து இயேசுவை கிறிஸ்துவை படைத்தார் என்று நினைப்பதே வசனத்துடன் சேர்த்துக்கொண்டு சொல்லுவது தானே!!

மேலும் நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்!! இந்த ஒரு வசனத்தை வைத்தே எத்துனை காலம் தான் இன்னும் ஓட்டுவீர்கள் என்று தெரியவில்லை!!

யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

யோவான் 17:21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

இந்த வசனத்தை இவர்களின் புரிந்துக்கொள்ளுதலின்படி நாம் கிறிஸ்து பிதா எல்லோரும் ஒருவரே!! யப்பா என்ன ஒரு கண்டுபிடிப்பு!!

வேறு ஒன்றும் இல்லை, பாரம்பரியம் கண்களை கட்டி வைத்திருக்கிறது!! குருடர்கள் அனைவரும் பார்வை பெறும் காலம் வருகிறது, தேவனின் இராஜியம் வரும் போது அனைவருக்கு அனைத்தும் புரிந்துவிடும், ஏனென்றால் அப்பொழுது மறைவானது ஒன்றும் இருக்காது!!

அது வரையில் இவர் தான் அவர், ஆனால் அவர் அனுப்பி தான் இவர் வந்தார், இவர் அவரின் வலது பக்கத்தில் தான் வீற்றிருக்கிறார், ஆனாலும் இருவரும் ஒருவரே, இப்படி தான் குழப்பம் நீடித்துக்கொண்டு இருக்கும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard