kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருத்துவத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
திருத்துவத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை


///திரித்துவம் மனித கண்டுபிடிப்பு அல்ல. 3 நபர்கள் ஒரே தேவன். நாம் இச்சத்தியத்தை மானுடமொழிகளில் விளக்குவதற்கு திரித்துவம் என்ற பதத்தை பாவிக்கிறோம். வேதாகமத்தில் திரித்துவம் என்ற பதம் இல்லை என்பது உண்மையாயினும் திரித்துவ சத்தியத்தை மறைக்க முடியாது. இயேசுவைப் பற்றி படிக்கும்போது அவர் ஒரு சாதாரண நபராகவோ அன்றேல் ஒரு தேவதூதராவோ இருக்க வாய்பில்லை என்பது விளங்கும்.///
திரு.கொல்வின் அவர்களால் எழுதப்பட்ட வசனத்துக்கான விளக்கம்.   **
இயேசுவைப் பற்றி படிக்கும்போது அவர் ஒரு சாதாரண நபராகவோ அன்றேல் ஒரு தேவதூதராவோ இருக்க வாய்பில்லை என்பது விளங்கும்**
திரு.கொல்வின் அவர்களே, திருத்துவத்தை குறித்து ஏன் உங்களுக்கு இவ்வளவு குழப்பம் என்று புரியவில்லை. எங்கள் தளத்தில் நிர்வாகிகளால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட விளக்கம் தாராளமாக போதுமானது என்று நினைக்கிறேன். இருந்தாலும் உங்கள் குழப்பம் தீருவதாய் தெரியவில்லை. அடுத்து எது எவ்வாறு இருந்தாலும், இந்த ''தேநீர் பூக்கள்'' சார்பாகவும் தங்களுக்கு ''திருத்துவம்'' என்றால் என்னவென்று சொல்ல முயற்சிக்கிறேன். தங்களுக்காகவே மினக்கட்டு ஜெர்மன் பைபிள் நூல் நிலையத்துக்குச் சென்று தரவுகளை எடுத்தேன். காரணம், எதையுமே நீங்கள் சட்டென்று நம்பும் ஒருவர் இல்லை என்பதினால். வேதவசனங்களைக் காட்டிலும் வரலாறுகள் சரியாக தெரிந்து இருந்தால் தான் திருத்துவம் எவ்வாறு கிறித்தவத்துக்குள் நுழைந்தது என்று அறியமுடியும். என்னால் முடிந்த அளவு தங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.



__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

திருத்துவத்தின் சொற்பொருள் விளக்கம்..
கிறிஸ்தவ மண்டல மதங்களின் மையக் கோட்பாடு. அதநேசியன் விசுவாசப்பிரமாணத்தின்படி, மூன்று தெய்வீக ஆட்கள் இருக்கின்றனர். (பிதா, குமாரன், பரிசுத்தஆவி), ஒவ்வொருவரும் நித்தியரென சொல்லப்படுகின்றனர், ஒவ்வொருவரும் சர்வவல்லவரென சொல்லப்படுகின்றனர், ஒருவரும் மற்றவரைப் பார்க்கிலும் பெரியவரோ தாழ்ந்தவரோ இல்லை. ஒவ்வொருவரும் கடவுளே எனவும், எனினும் ஒன்றாக ஒரே கடவுளே எனவும் சொல்லப்படுகின்றனர். இந்தக் கோட்பாட்டின் மற்றக் கூற்றுகள், இந்த மூன்று ''ஆட்கள்'' வெவ்வேறு தனித்தனி ஆட்கள் அல்லர், ஆனால் மூன்று செயல்வகைகள் அவற்றில் தெய்வீக உள்ளியல்பு அமைந்திருக்கிறது என்று திரு.கொல்வினைப் போன்றவர்கள் அழுத்திக் கூறுகின்றனர். இவ்வாறு சில திருத்துவக்கோட்பாளர்கள் (குழப்பவாதிகள்) இயேசு கிறிஸ்து கடவுள் என்ற, அல்லது  இயேசுவும் பரிசுத்த ஆவியும் யேகோவா என்ற தங்கள் நம்பிக்கையை அழுத்திக் கூறுகின்றனர். இது பைபிள் போதகம் அல்ல.
அடுத்தது திருத்துவக் கோட்பாட்டின் தொடக்கம் என்ன? பிதா, இயேசு, பரிசுத்த ஆவி போன்றன பற்றியதான பதிவுகளையும் எனது அடுத்த பதிவுகளில் கொடுக்கிறேன். வாசித்துவிட்டு வழமை போல திரு.சில்சாம் என்ற வேதப் புரட்டகருடன் சேர்ந்து விமர்சிக்கவும்.



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard