புதுசு புதுசா கிளம்பிட்டாங்க!! இல்லாத ஒரு திரித்துவத்தை நிரூபிக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்களோ!! ஒன்றான மெய் தேவனை (யோவான் 17:3) திரியேக தேவன் (கத்தோலிக்கர்கள் கொண்டு வந்த ஒரு துருபதேசம்) என்று தேவ தூஷனம் செய்வதில் தான் எத்துனை மகிழ்ச்சி இவர்களுக்கு!! இந்த தளத்தில் சந்தோஷ் அவர்களின் திரித்துவத்தின் புதிய வடிவத்தை காணலாம்!!
//கிருபையின் கால மக்கள் இயேசுவை வணங்குவதன் மூலமாகவே பிதாவை தொழுது கொள்ள முடியும். இயேசுவின் மூலமாக பிதாவை வணங்கினாலும் சரி அல்லது இயேசுவை மட்டும் வணங்கினாலும் சரி, அல்லது இயேசு பிதா என்று அவரை வணங்கினாலும் சரி அனைத்தும் தேவனால் அங்கீகரிக்கபடும்.//
என்ன ஒரு தெளிவான போதனை!! எப்படி செய்தாலும் அது தேவனால அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதாம்!! இப்படி தானே வேதத்தை மாற்றி எழுதுகிறார்கள்!! எல்லாம் சரி என்று முடிவு செய்து அதை கிறிஸ்துவ உபதேசம் என்று தயவு செய்து எழுதாதீர்கள்!! நீங்கள் எல்லாம் வேதபுத்தகத்தை, வீட்டில் என்ன அலங்கரிப்பு பொருளாக வைத்திருக்கிறீர்களோ!! இயேசுவை பிதா என்று வனங்கினால் எந்த தேவனால அங்கீகரிக்கப்படும்!! அப்படி ஒரு தேவனால் அங்கீகரிக்கப்படுகிறது என்றால் அது இப்பிரபஞ்சத்தின் தேவனை தவிர வேறு ஒருவனாக இருக்க முடியாது!! இது துருபதேசத்தின் உச்சம்!!
அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே. - (மத்தேயு 4:10), என்று கிறிஸ்து இயேசு சொன்னதெல்லாம் யாருக்கு என்று தான் புரியவில்லை!!
சந்தோஷ் அவர்களின் தளத்தில் திரித்துவத்தின் இன்னும் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது,
//பரமபரை கிருத்துவர்கள் சிலருக்கு இது போல ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் வேத வசனத்தை வைத்து கொண்டு இயேசு தொழத்தக்கவர் அல்ல என்று போதிக்கின்றனர்.//
அய்யா பாரம்பரிய கிறிஸ்தவர்கள் இப்படி வேதத்திலிருந்து ஒப்பீட்டு பார்ப்பது கிடையாது!! ஆனால் வேத வசனங்களை வைத்து கொண்டு இயேசு தொழத்தக்கவர் அல்ல என்று போதிப்பவர்கள் பாரம்பரியர்கள் அல்ல என்பதும் உண்மையே!! வேத வசனம் இப்படி எல்லாம் சொல்லுகிறது என்று ஒப்பு கொள்ளுகிறீர்கள் அல்லவா!! அது வரைக்கும் சரியே!!
//கிருஸ்துவ வாழ்க்கை என்பது வேதத்தை சார்ந்தது என்பது இரண்டாம் பட்சம். அனுபவ்மே முதன்மையானது. வேத வசனம் உண்மை என சொல்லப்படுவது ஏனெனில் அவை அனுபவம் ஆவதினாலேயே. //
மிகவும் அற்புதமான ஒரு கருத்து!! கிறிஸ்துவ வாழ்க்கைக்கு வேதமும் வேத வசனமும் தேவையில்லை!! வாட்சிமான் நீ போன்ற 4 போதகர்கள் எழுதிய புத்தகங்கள் இருந்தால் போதும்!! அவர்களே உண்மையான கிறிஸ்தவர்கள்!!
இப்படி எல்லாம் கள்ள உபதேசங்கள் தோன்றும் என்பதே வேதத்திலிருந்து தான் அய்யா தெரிந்துக்கொள்ள முடியும்!! ஆனால் உங்களுக்கு வேதமோ இரண்டாம பட்சம் தானே!! கவலை படாமல் அள்ளி வீசுங்கள், பிடித்துக்கொள்ள "அநேகர்" இருக்கிறார்கள்!!
இயேசு தொழத்தக்கவர் என்கிற வேத வசனத்தை முதலில் காண்பியுங்கள்!! வேதமே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக இருக்கிறது!! கிறிஸ்து தேவனின் குமாரன் என்பதால் அவருக்கு உண்டான மகிமை கனம் நிச்சயமாக செலுத்துகிறோம், ஆனால் அது ஒரு போதும் பிதாவிற்கு செலுத்தும் மகிமை அல்லது கணத்திற்கு ஈடாகாது!! இயேசு கிறிஸ்து சொல்லுவதை கேளுங்கள்:
யோவான் 4:21............................... எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
இப்படி எங்கும் எல்லோராலும் பிதாவாகிய தேவனை அறிந்து தொழுதுக்கொள்லும் காலம் வருகிறது என்று கிறிஸ்து சொல்லிய சத்தியத்தை நான் நம்புகிறேன்!! இயேசு தான் பிதா என்று நீங்கள் சொல்லுகிறீர்களே!! என்ன நியாயம்!!
//இயேசு தொழத்தக்கவர் அல்ல என்று சொல்பவர்களுக்கு கேள்விகள் :
1. சர்வ வல்லமை உள்ள தேவனை ஆராதிக்க ஒரு பொருளான உடன்படிக்கை பெட்டியின் முன் இஸ்ரவேலர்கள் மண்டியிட்டு தொழுதது சரியா?//
பதில்: அவர்கள் ஒன்றும் சுயமாய ஒரு உடன்படிக்கை பெட்டி செய்து தன் சுய இச்சைய்னால் மண்டியிட்டு தொழவில்லையே, அது அவர்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளை!! அவர்கள் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்தார்கள், நானும் அப்படியே!!
//2. உடன்படிக்கை பெட்டியை விட எந்த விதத்தில் இயேசு குறைந்து போனார்?//
பதில்: உடன்படிக்கை பெட்டியை இயேசு கிறிஸ்துவுடன் ஏன் உணர்வு பூர்வமாக ஒப்பீட பார்க்கிறீர்கள்!! எழுதியதற்கு அதிகமாக என்ன வேண்டாம் என்று அப்போஸ்தலன் சொல்லிய படி செய்ய வேண்டியது தானே!! வேதத்தை பின் பற்றாமல் அநேக நூற்றாண்டுகளுக்கு பிறகு சில உணர்வுபூர்வமான விசுவாச கோட்பாடுகளை நியமித்துக்கொண்டு, வேதத்தை ஒதுக்கி வைத்து, வேதத்தில் சொல்லவில்லை தான், ஆனால் இவருக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்பதில் சற்றும் நியாயம் இல்லை!! தேவன் நீதியுள்ள தேவன்!!
//3. இயேசுவை தொழுபவர்கள் தேவ ஆவியால் நிரப்பபடுவதை உணர்கிறார்களே. இயேசுவை தொழுவது தவறென்றால் ஏன் அவர்கள் தேவ ஆவியின் அனுபவத்தை, சில நேரங்களில் அற்புதங்களை பெறுகின்றனர்?//
பதில்: ஒரு டிச்கோத்தேவிற்கு (Discothe) போனாலும் அங்கே எழும்பும் இசை கருவிகளின் சத்தத்திற்கும் ஜனங்கள் ஆட தான் செய்கிறார்கள்!! தேவ ஆவியால் நிரப்படுவதை என்னவென்று சொல்ல வருகிறீர்கள்!! நீங்கள் சொல்லும் இதே ஆவியை தான் மாரியாத்த கோவில் முதல் இன்னும் பல இடங்களில் இருக்கிறது!! அதே ஆட்டம், அதே பாட்டம், அதே குதித்தல், ஆடுதல், எல்லாம் தானே இருக்கிறது!! அற்புதங்களை யார் பெறுவது இல்லை!! நான் நிர்மூலமாகாமல் இருப்பதைவிட ஒரு பெரிய அற்புதம் உண்டா!! என்ன ஒரு காய்ச்சல் வந்து, அல்லது ஒரு வயிற்று வலி வந்து சரியாக போவதை தான் அற்புதங்கள் என்று சொல்லுகிறீர்களா!! தேவ ஆவி வந்து அற்புதங்கள் செய்வதற்கு கொடுக்கப்படுகிறது என்று எந்த வசனத்தின் அடிப்படையில் சொல்லுகிறீர்கள்!!
//இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று வேத வசன ஆதாரங்களை வைத்து truth seekers தள நிர்வாகியும், நித்திய ஜீவன் தள நிர்வாகியும் சொல்கின்றனர். பிதா ஒருவரையே ஆராதிக்க வேண்டும் என இயேசு சொன்ன வசனங்களை ஆதாரமாக காட்டுகின்றனர்.//
வசனங்களை ஆதாரமாக காண்பிப்பது தான் ஏனோ கிறிஸ்தவர்களுக்கு பிடிக்கவில்லையே, அதை ஒரு குற்றச்சாட்டாக சொல்லும் அளவிற்கு கிறிஸ்தவர்கள் துனிந்து இருப்பதில் ஆச்சரியன்ம் ஒன்றும் இல்லை!! ஏனென்றால்,
II தீமோத்தேயு 4:3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
இப்படி ஆளாலுக்கு ஒரு போதகரை வைத்துக்கொண்டால் வேத வசனம் கசக்க தான் செய்யும், ஆனால் போதகர்களின் வார்த்தைகளோ, உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்!!
//இவ்வாறு வேத வசன ஆதாரத்தை காட்டி இயேசு தொழத்தக்கவர் அல்ல என அனேக கட்டுரைகளை எழுதும் இவர்கள் ஆராதிக்க வேண்டிய பிதாவாகிய தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என ஒரு கட்டுரை கூட எழுதாதது ஏனோ?//
அதான் பக்கம் பக்கமாக வேதப்புத்தகம் இருக்கிறதே, அதைவிடவா நாங்கள் கட்டுரை எழுத போகிறோம்!!
//என்னை படைத்ததற்க்காக நான் பிதாவாகிய தேவனின் மேல் அன்பு கொண்டு அவரை தொழ விரும்புகிறேன் என கொள்வோம். இப்போது என் கேள்வி:
4. பிதாவாகிய தேவனை ஆராதிப்பது எப்படி?//
பதில்: ரொம்ப சுலபம். ஆனால் இதற்கும் வேதவசனம் தான் பதில்.
மத்தேயு 22:37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
மாற்கு 12:30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
மாற்கு 12:33 முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
லூக்கா 10:27 அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
யோவான் 4:24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
ஆவியில் என்றவுடன், ஏதோ பெரிய பெரிய இசை வாத்தியங்களின் சத்தம் எழுப்பி அதற்கு மயங்கி ஆடுவது என்பது தேவனின் ஆவி அல்ல!! ஆவி என்றால் அவரின் சிந்தைக்கொண்டு, அவரின் சித்தம் அறிந்து, அதை யே உண்மை என்றும் சத்தியம் என்றும் நம்பி தொழுதுக்கொள்ளுங்கள்!! எல்லாமே வேதபுத்தகத்தில் இருக்கிறது, ஆனால் நமக்கு பாரம்பரியங்கள் வந்து கண்களை மூடி விடுவதால் ஒன்றும் தெரிவதில்லை!! ஆகவே தான் பவுல் இப்படியாக சொல்லுகிறார்,
எபேசியர் 1:19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
இங்கே தாம் என்று எழுதியிருப்பது பிதாவை தான் என்பதை முதலில் புறிந்துக்கொண்டால் தான் இந்த வச்னமும் புரியும்!! ஆனால் இயேசுவும் பிதாவும் ஒருவரே என்று விசுவசிக்கும் உங்களுக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்கு தெரியவில்லை!!
அப்போஸ்தலர் 8:37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன் இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;
வேதத்தில் அனைவருமே கிறிஸ்துவை தேவனின் குமாரன் என்று தான் விசுவசித்தார்களே தவிர, இன்றைய கிறிட்தவர்கள் விசுவாசிப்பது போல் பிதா என்று அல்ல!!