kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து : மீட்கும் பொருள்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிறிஸ்து : மீட்கும் பொருள்


இயேசு கிறிஸ்து மாம்சமாகி இந்த பூமிக்கு வந்த நோக்கம், கிறிஸ்தவர்களாக மாறியவர்களை மாத்திரமே இரட்சிக்கவா, அல்லது முழு மனுக்குலத்தையே இரட்சிக்கவா? அநேகர் இன்று போதிப்பது போல், நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீ ஞாஸ்நானம் எடுக்காவிட்டால், நீ சபைக்கு வராவிட்டால்......... உனக்கு இரட்சிப்பு இல்லை என்பது சரியா? வேதம் என்னத்தான் சொல்லுகிறது என்று பார்ப்போம்!!

யோவான் 12:32. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்

இந்த வசனம் சொல்லுவது என்ன? கிறிஸ்தவர்களாக மாறியவர்களை மாத்திரம் இழுத்துக்கொள்ளுவேன் என்பதா!! "எல்லாரையும்" என்றால் யார்? உலகத்தில் உள்ள மொத்த ஜனங்களையும் இது குறிக்காதா? உடனே இன்னோரு வாதம் வருகிறது, அப்படி என்றால் எல்லாரும் பரலோகத்திற்கு போய்விட முடியுமா? முடியாதே, அப்படி என்றால் இந்த வசனம் என்ன தான் சொல்லுகிறது?

அடுத்த வசனமே இப்படியாக சொல்லுகிறது,

யோவான் 12:33. தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.

தாம் எதற்காக இந்த பூமிக்கு வந்தார் என்றும், தமது மரணம் எப்படிபட்டதாக இருக்கும் என்றும், நமக்கு தெரிவிக்கிறார்!! சிலுவையில் மரிக்கும் போது, அவரால் எப்படி "எல்லாரையும்" தன்னிடத்தில் இழுத்துக்கொள்ள முடியும்? இது ஒரு இரகசியமாக தெரியவில்லையா? கொஞம் பின் நோக்கி சென்றோமென்றால், கிறிஸ்துவின் பிறப்பின் போது, தேவதூதர்கள் ஒரு செய்தியை அறிவித்தார்கள், அந்த நற்செய்தியானது,

லூக் 2:10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
 
இயேசு, தாம் பூமியிலிருந்து உயர்த்தப்படும் போது "எல்லாரையும்" சேர்த்துக்கொள்வேன் என்றார், தேவதூதர்களோ, கிறிஸ்துவின் பிறப்பை குறித்து சொல்லும் போது, "எல்லா ஜனத்துக்கும்" மிகவும் சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்தியை தந்தாகள்!! இங்கேயும் "எல்லா ஜனங்கள்" யாரை தான் குறிப்பிடுகிறது?

மத். 1:21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

"தமது ஜனங்கள்" என்றால் யார்? முறைப்படி யூதர்களாக தானே இருக்க வேண்டும்?

மாற். 10:45. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.

ஊழியம் செய்யவும், "அநேகரை" "மீட்கும்பொருளாக" என்றால் என்ன? இதை வாசித்தவுடன் இதற்கு முன்பு இருக்கும் வசனங்களில் சொல்லப்பட்ட "எல்லாரையும்" என்பதற்கு முறனாக தெரிகிறதே!! அப்படி என்றால் இயேசு "எல்லாருக்காகவும்" மரிக்காமல் "அநேகருக்காக" மாத்திரமே தம் ஜீவனை கொடுத்தாரா, என்பது மிகவும் அவசியமாக பதில் தெரிந்துக்கொள்ள வேன்டிய ஒரு கேள்வியாகிறது!!

ஒரு வேளை இதைக்கொண்டு தான் கிறிஸ்துவை விசுவசிப்போருக்காக மாத்திரமே அவர் மரித்தார் என்றும், அல்லது யாரெல்லாம் அவரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே இரட்சிப்பு என்று போதிக்கிறார்களோ!! அநேகர் என்றால் என்னவென்றும் பார்க்கலாமே!!

ரோம் 5:19. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

இந்த வசனத்தின்படி பார்த்தொமேயென்றால், ஒரு மனுஷனின் பாவம் "அநேகரை" தான் பாவிகளாக்கினது, "எல்லாரையும்" அல்ல என்று தானே அர்த்தம் வர வேண்டும்!! அப்படி என்றால்,

ரோம் 5:12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

இதன்படி பார்த்தோமென்றால், ஒரு மனுஷனின் பாவம் அனைவரையுமே, அல்லது "எல்லாரையுமே" மரணத்திற்கு உட்படுத்தியது!! அப்படி என்றால் "அநேகர்" என்கிற வார்த்தை "எல்லாரையும்" என்றே அர்த்தம் கொள்கிறது!! ஆக கிறிஸ்து இயேசு "அநேகர்"க்காக, அவரை விசுவசிப்போருக்காக, அவரை ஏற்றுக்கொள்வோருக்காக, மாத்திரம் மரிக்காமல், அவர் "எல்லாரையும் மீட்கும் பொருளாக" தம்மை கொடுத்தார்!!

தொடரும்..........................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இயேசு கிறிஸ்து அனைவருக்காகவும் தன்னை மீட்கும் பொருளாக கொடுத்தார் என்பதற்கு இன்னும் சில வசனங்கள் பார்க்கலாம்!!

1 தீமோ 2:6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

இந்த வசனம் மிகவும் தெளிவாக சொல்லுவது என்னவென்றால், இயேசு கிறிஸ்து தன்னையே "எல்லாருக்காகவும்" மீட்கும் பொருளாக ஒப்புக்கொடுத்தார் என்பது!! எல்லாரும் என்றால் எல்லாரும் தான்!! மனிதனின் பார்வையில் தான் மதங்கள், தேவனின் பார்வையில் அனைவரும் மனிதர்கள்!!  இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது என்பதை விட விளங்கும் என்பதே சரியான மொழிப்பெயர்ப்பாகும்!! ஆங்கிளத்தில் வாசித்தோமென்றால், To be testified in due time!!

1Ti 2:6 Who gave himself a ransom for all, to be testified in due time.

விள‌ங்கிவ‌ருகிற‌து என்ற‌வுட‌ன், அநேக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள், "இதோ நாங்க‌ள் இர‌ட்சிக்க‌ப்ப‌ட்டு விட்டோம், நீங்க‌ எப்போ?" என்று கேட்கும் அள‌விற்கு இந்த‌ மொழிப்பெய‌ர்ப்பு பாதித்திருக்கிற‌து!!

ச‌ரி இப்பொழுது மீட்கும் பொருளின் அர்த்த‌ம் பார்ப்போம்!! மீட்கும் பொருள் என்றால், பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு விஷ‌ய‌த்தை ச‌ரி செய்ய‌ அத‌ற்கு ச‌மான‌மான‌ ஒரு விலையை கொடுத்து ச‌ரி செய்வ‌து என்ப‌தே!! இத‌ன் கிரேக்க‌ ப‌த‌ம், antilutron  an-til'-oo-tron

அதாவ‌து "ச‌ரி நிக‌ர் ச‌மான‌ விலை"!! எடுத்துக்காட்டாக‌ ஒரு அட‌கு பொருளை மீட்க‌ அத‌ற்குண்டான‌ விலையை கொடுத்தால் மாத்திர‌மே மீட்க‌ முடியும், குறைவாக‌ கொடுத்தால் மிட்க‌ முடியாது, அதிக‌மாக‌ கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை!! அது தான் ச‌ரியான‌ விலை கொடுத்து ச‌ரி நிக‌ர் ச‌மான‌ விலை கொடுப்ப‌து என்ப‌தாகும்!!

அப்படியென்றால், இயேசு கிறிஸ்து என்கிற ஒரே மனிதனாக வந்தவர் எப்படி உலகத்திலிருக்கும் எல்லாருக்காகவும் தன்னை மீட்கும் பொருளாக கொடுப்பது சரி நிகர் சமான விலையாகும் என்பது அடுத்த கேள்வி!! சரி நிகர் சமான விலை என்பது இயேசு கிறிஸ்து என்கிற ஒரு மனிதர், மற்றும் ஒரு மனிதருக்கு ஈடாக தன்னை ஒப்பு கொடுப்பது தான் சரியாக இருந்திருக்க முடியும், பிறகு எப்படி ஒரே மனிதர் உலக இரட்சகராக இருக்க முடியும்!! அனைவருக்காகவும் தன்னை மீட்கும் பொருளாக ஒப்பு கொடுக்க முடியும்!! அவர் உலக இரட்சகர் என்பதில் ஒரு சந்தேகமும் கிடையாது,

1 யோவான் 4:14. பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.

வசனத்தின்படி பிதா அல்ல, மாறாக குமாரனை பிதா உலகரட்சகராக அனுப்பினார் என்பதற்கு அப்போஸ்தலர்கள் சாட்சிகளாகவும், நமக்கு இந்த வசனம் சாட்சியாகவும் இருக்கிறது!! ஆனால் எப்படி உலகரட்சகராக இருந்தார்!! ஒரே ஒரு மனிதனுக்கு மாத்திரம் சரி நிகர் சமான விலை செலுத்தினால் தான் சரியான மீட்கும் பொருளாக இருக்க முடியும், அப்படி என்றால் அந்த ஒரு மனிதன் யாராக இருக்க முடியும்!!

அப். 17:26. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

அந்த ஒரே மனிதன், நம் அனைவருக்கும் முற்பிதாவான ஆதாம் என்கிற ஒரே மனிதன்!! அந்த ஒரே மனிதனின் இரத்தத்தினாலே முதலில் ஏவாள் வந்து, அதன் பிறகு மனுஷ ஜாதிகள் வந்தது என்பது நாம் அறிந்ததே!! ஆதாம் என்கிற ஒரு மனிதர் நமக்கு மிகவும் முக்கியமானவராக இருக்கிறார்!! அவரே முழு மனுகுலத்தின் பிரதிநிதியாக இருக்கிறார்!! ஏனென்றால் உலகத்திலிருக்கும் ஒவ்வொருவரும், ஆதாமின் சந்ததியே அன்றி வேறு ஒன்றும் இல்லை!! ஏன் ஆதாம் அனைவருக்கும் தந்தை என்பது புரிகிறதா!! அவரில் இருந்தே அனைவரும் தோன்றினார்கள், ஏவாள் உட்பட‌!!

ஆதாமை தேவன் எப்படி படைத்தார் என்பது வேதம் நமக்கு அருமையாக சொல்லியிருக்கிறது,

ஆதி. 1:26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;.........

ஆக நம் அனைவருக்கும் தகப்பனான ஆதாம், தேவனின் சாயலாகவும், அவரின் ரூபத்தின் படியேயும் சிருஷ்டிக்கப்பட்டார்!! சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பூரண மனிதனாக சிருஷ்டிக்கப்பட்டார்!!

தொடரும்..................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அந்த பரிபூரனத்தில் நித்தியத்திற்கும் ஜீவனோட வாழ ஒரு நிபந்தனையை மாத்திரம் வைத்தார்!! என்ன அந்த நிபந்தனை,

ஆதி 2:16. தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

பெரிய நிபந்தனையாக இல்லாமல், கீழ்ப்படிதலுக்கான ஒரு நிபந்தனை, இதை கடைப்பிடித்து வந்தால் நித்தியத்திற்கு ஜீவனோடு பரிபூரணத்துடன் இருக்கலாம் என்கிற ஆசீர்வாதம் இருந்தது!! இதை புசிக்கும் நாளில் சாக‌வே சாவாய் என்றால், கீழ்ப்ப‌டியாம‌ல் இருந்தால் அது தேவ‌னுக்கு விரோத‌மாக‌ பாவ‌ம் என‌ப்ப‌ட்டும் பாவத்தின் ச‌ம்ப‌ள‌ம் ம‌ர‌ண‌ம் என்கிற‌ நீதி செய‌ல்ப்ப‌டும்!!

கீழ்ப்ப‌டியாமை பாவ‌ம் (1 யோவான் 3:4); பாவ‌த்தின் த‌ண்ட‌னை ம‌ர‌ண‌ம் (ரோம‌ 6:23)!!

இந்த‌ க‌ட்ட‌ளையை மிக‌வும் ச‌ரியாக‌ நேர்த்தியாக‌ ஆதாம் நிச்ச‌ய‌மாக‌ பின்ப‌ற்றியிருக்க‌ வேண்டும், ஏதேனின் ஏவாளுட‌ன் சுத‌ந்திர‌மாக‌ வியாதியில்லாம‌ல், க‌வ‌லையில்லாம‌ல், க‌ஷ்ட‌ங்க‌ள் இல்லாம‌ல், கனிகளை புசித்துக்கொண்டு இருந்திருப்ப‌து தான் அவ‌ர்க‌ளுக்குண்டான‌ வேலையாக‌ இருந்திருக்கும்!! இப்படி இருக்க சர்ப்பம் ஏவாளிடம்,

ஆதி. 3:1. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

ஏவாள் என்ன சொல்லியிருக்க வேண்டும், இல்லை இல்லை, எல்லாவற்றையும் இல்லை, அந்த ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க கூடாது என்று சொல்லியிருக்க வேண்டும், ஆனால் ஏவாள் சொன்னதோ,

ஆதி. 3:2. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; 3. ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.

ஏவாள், தேவன் சொன்னதிலும் சற்று சுயமாக சேர்த்துக்கொண்டு, "தொடவும் கூடாது" என்று சொல்லியிருக்கிறாள்!! சொந்தத்தில் சேர்த்துக்கொண்டு சொல்லுவது ஆரம்பித்து விட்டது!! அடுத்து சாத்தான் சொன்ன காரியம்,

ஆதி. 3:4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

அநேகமாக உலகத்தின் முதல் பொய், தேவனின் வார்த்தையை நேரடியாக மறுதலிக்கும் மிக பயங்கரமான பொய், இன்று சபைகளில் பின்பற்றப்படும் ஒரு ஆபத்தான பொய், நீங்கள் சாகவே சாவதில்லை!! தேவன் சொன்னது சாகவே சாவாய் என்று, ஆனால் சாத்தான் சொன்னது, சாகவே சாவதில்லை என்று!! ஆகவே தான் அவன் பொய்யின் பிதாவாகிறான்!! இந்த பொய் இன்று சபைகளில் ஊடுருவியிருப்பதை நம்மால் பார்க்க முடியும்!! மரித்தவரை பார்த்து, கிறிஸ்தவர்கள் சொல்லுவது, இவர் மரிக்கவில்லை, இவர் இப்பொழுது மகிமையில் பிரவேசித்திருக்கிறார் என்று!! அப்படி என்றால், மரிக்கவில்லை என்று சொல்லப்படுவது சாத்தானின் போதனை இல்லையா, இது சபைகளில் எவ்வுளவு தந்திரமாக நுழைந்திருப்பதை பார்க்கலாமே!!

அடுத்து தான் ஏவாளுக்கு தோன்றியிருக்கும், அவள் பார்த்திருப்பாள், எப்படி சர்ப்பம் அந்த கனியை சாப்பிட்டும், அது எப்படி சாகாமல் இருக்கிறது மேலும், அவன் சொன்ன இன்னோரு விஷயம் நீங்கள் தேவர்களை போல் ஆவீர்கள் என்று சொன்னவுடன் அந்த பெருமையையும் வந்திருக்கும், ஆகவே அவளும் சாப்பிட்டால், என்ன ஆச்சரியம், தேவன் சொன்னது போல் அவள் சாகவில்லை, உடனே அந்த கனியை ஆதாமிடம் கொடுத்து விஷயங்களை சொல்லி, அவனும் சாப்பிட்டான்!! சாத்தானின் முத‌ல் போய்யினால் அவ‌ன் பொய்யின் பிதாவானான், அவ‌னின் முத‌ல் கேள்வி குழ‌ப்ப‌த்தில் கொண்டு போன‌து, இன்று கூட‌ கேள்வி குறியை பார்த்தால் ச‌ர்ப்ப‌த்தின் வ‌டிவ‌மாக‌வே தெரியும் ?

ஆதாமும் புசித்தான் என்கிற‌து வ‌ச‌ன‌ம், ஆனால் ஆதாம் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்டு புசித்தானா? இல்லையே, வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து,

1 தீமோ 2:14. மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

ஆதாம் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட‌வில்லை என்றால் அவ‌ன் ஏன், எப்ப‌டி அந்த‌ க‌னியை புசித்திருக்க‌ வேண்டும்? ஆதாமின் பூர‌ண‌ அன்பே கார‌ண‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டும்!! இனியும் அவ‌னின் மாம்ச‌த்தின் மாம்ச‌முமான‌ ஏவாள் நிச்ச‌ய‌மாக‌ ம‌ரித்து போவாள், என்கிற‌ அன்பு அவ‌னையும் அந்த‌ க‌னியை புசிக்க‌ வைத்திருக்கும்!! ஆதாம் தேவ‌னிட‌த்திலிருந்து நேர‌டியாக‌ க‌னியை புசிக்க‌ கூடாது என்று சொன்ன‌தால், ஏவாள் மீறீய‌ போது கூட‌ இல்லை ஆனால் ஆதாம் மீறிய‌தினால் பாவ‌ம் உல‌க‌த்தில் பிர‌வேசித்த‌து, ஏனென்றால் ஏவாள் வ‌ஞ்சிப்புக்கு உள்ளாகி மீறினாள் ஆனால் ஆதாமோ, தெரிந்தும், விரும்பியே தேவ‌னின் க‌ட்ட‌ளையை மீறீனான்!! அப்போஸ்த‌ல‌ர் எழுதுகிறார்,

ரோம‌ர் 5:12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

தொட‌ரும்..............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ரோமர் 5:12 சொல்லுவது தான் என்ன? ஏன் ஆதாம் செய்த மீறுதலுக்காக அனைவருக்கும் மரணம் வந்தது!! ஆதாமை போல் அனைவரும் பூரணமாக படைக்கப்பட்டவர்கள் என்று வேதம் எங்காவது கூறுகிறதா? இல்லை!!  ஆதாம் மீறுதல் செய்தவுடன் அவன் மனைவியான ஏவாளுடன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்டான்,

ஆதி 3:23. அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். 24. அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

ஆதாமும் ஏவாளும் பரிபூரணமானவர்களாக அல்ல, மாறாக மீறுதலுக்கு உட்பட்டு மரணத்தை பரிசாக பெற்றவர்களாக தான் ஏதேனை விட்டு வெளியேறுகிறார்கள்!! அவர்கள் பரிபூரணத்தின் நிலையில் அல்ல, மாறாக பாவ சரீர நிலையில் தான் பிள்ளைகளை பெற்று எடுக்கிறார்கள்!! தோட்டத்தை விட்டு வெளியேறிய பிறகே ஆதாமிற்கு குழந்தைகள் பிறக்கிறது!!

ஆதி. 4:1. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். 2. பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான்,

இப்படியாக முதல் பிள்ளைகளான காயின் தொடங்கி, ஆபேல் பிறகு வந்த அனைவருமே ஆதாமின் பாவத்திற்கு பிறகு பிறந்தபடியினால், பாவத்துடனே பிறந்தார்கள், சங்கீதத்தில் தாவீது சொல்லுவது போல்,

சங். 51:5. இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்

பிறப்பிலேயே ஒரு மனிதன் பாவத்தில் தான் இருக்கிறான், பாவத்தின் சம்பளம் மரணம் என்பதையும் நாம் வசனத்தை கொண்டு பார்த்திருக்கிறோம்!! ஆனால் இந்த மரணம் ஒரு மனிதனின் தனிப்பட்ட பாவத்தினால் அல்ல, மாறாக ஆதாமின் மீறுதலின் நிமித்தம் கிடைத்த பாவ சரீரத்தின் விளைவாக உண்டாகிறது!! ஒருவன் தனிப்பட்ட வாழ்க்கையில் பாவம் செய்தாலும் சரி, செய்யாமல் போனாலும் சரி, மரித்தே ஆக வேண்டும் என்பதை தான் ரோம் 5:12ல் நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது!!

இதையே இயேசு கிறிஸ்து சொல்லும் போது,

லூக்கா 9:60. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

அது எப்படி மரித்தோர் மரித்தோரை அடக்கம் பண்ண முடியும்? ஒரு மரித்தவரை அடக்கம் செய்யவேண்டும் என்றால் குறைந்தது 4 பேராவது உயிருள்ளவர்களாக இருக்க வேண்டுமே!! அப்படி என்றால் இயேசு கிறிஸ்து என்ன பொய் பேசியிருக்கிறாரா!! இல்லையே!! மரித்தோர் அடக்கம் செய்யட்டும் என்றால், இந்த உயிருடன் இருப்பவர்களும் தங்கள் ஜீவனை இழந்த நிலையில் இருப்பவர்கள் என்கிற அர்த்தத்தில் சொல்லுகிறார்!! அதாவது அவர்களும் நித்தியத்திற்கும் வாழ முடியாமல், மரித்து போவார்கள்!! ஜீவனோடு இருக்கும் தகுதியை இழந்து போனதாலேயே அவர்களையும் மரித்தோர் என்று இயேசு சொல்லுகிறார்!!

ஒரு தூக்கு கைதிக்கு த‌ன் ம‌ர‌ண‌த்தின் நாள் தெரிந்து விடுகிற‌து, ஆனால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கோ தேதி தெரியாம‌ல் ம‌ர‌ண‌த்தை நோக்கி தான் ப‌ய‌னித்திக்கொண்டு இருக்கிறார்க‌ள்!! இப்பொழுது இந்த‌ ம‌ரித்து போன‌வ‌ர்க‌ளுக்கான‌ தேவ‌ திட்ட‌த்தை பார்க்க‌லாம்,

யாத். 21:............... ஜீவனுக்கு ஜீவன், 24. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், 25. சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.

ஒரு ஜீவ‌னுக்கு ப‌தில் இன்னோரு ஜீவ‌ன்!! இது தேவ‌னின் நீதியான‌ ச‌ட்ட‌மாக‌ இருக்கிற‌து!! ந‌ம் தேச‌த்தை காக்கும் ப‌டியாக‌ ஆயிர‌ம் ஆயிர‌ம் பேர் த‌ங்க‌ள் ஜீவ‌னை கொடுத்திருக்கிறார்க‌ள், கொடுக்க‌ ஆய‌த்த‌மாக‌வும் இருக்கிறார்க‌ள்!! ம‌னுக்குல‌த்தை மீட்கும்ப‌டியாக‌ யாராவ‌து முன்வ‌ருவீர்க‌ளா என்று கேட்டால் கூட ஆயிர‌ம் பேர் கையை தூக்குவார்க‌ள்!! ஆனாலும் ஒருவ‌ருக்கும் இந்த‌ ம‌னுக்குல‌த்தின் இர‌ட்சிப்பிற்கு த‌ங்க‌ள் ஜீவ‌னை ஈடுப‌லியாக‌ கொடுக்க‌ த‌குதி கிடையாது!! ஏன்? வ‌ச‌ன‌த்தை பார்ப்போம்,

ச‌ங். 49:7. ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, 8. எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.


தொட‌ரும்.................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சங் 49:7 சொல்லுவது என்ன? ஆதாம் பாவம் செய்யும் முன் இருந்த பரிபூரண நிலையில், ஆதாமின் சந்ததியில் (உலகத்தில்) ஒருவரும் இல்லையே!! அப்படி என்றால் பாவத்தில் இருக்கும் இந்த சந்ததியிலிருந்து ஒருவரும் மீட்கும் பொருள் கொடுக்க தகுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள்!! அப்படி என்றால் யார் தான் இதை செய்ய முடியும்!! மனிதனால் நிச்சயமாக தன் சகோதரர்களில் ஒருவரையாவதுகூட மீட்கும்படியாக தன்னை மீட்கும் பொருளாக கொடுக்க முடியாவிட்டால், தேவன் தான் ஏதாகிலும் செய்ய வேண்டும், அவரால் மாத்திரமே செய்ய முடியும்!! தேவன் என்ன செய்தார் தெரியுமா?

ஓசியா 13:14. அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.

மீட்பேன் என்றவுடன் அவர் செய்யாமல் போவாரோ!! செய்தார், இந்த முழு மனுகுலத்தையும் மரணத்திலிருந்து மீட்டெடுக்கும்படியாக ஒரு மீட்பரை பரலோகத்திலிருந்து அனுப்பினார்,

யோவான் 3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

ஆம், தேவ‌ன் சாவாமையுள்ள‌வ‌ராக‌ இருக்கிற‌ப‌டியால், அவ‌ரால் எந்த‌ நிலையிலும் ம‌ரிக்க‌ முடியாது என்ப‌தால், த‌ன் ஒரே பேறான‌, த‌ன் நேச‌ குமார‌னை, அவ‌ரின் வார்த்தையை இந்த‌ பூமிக்கு அனுப்பினார், மீட்கும் பொருளாக‌!! ஒரு ப‌ரிபூர‌ண‌ ம‌னித‌னுக்கு (ஆதாம்) ஈடாக‌ த‌ன்னை ப‌லியாக‌ செலுத்த‌ ப‌ர‌லோக‌த்திலிருந்து இற‌ங்கி வ‌ந்த‌ ம‌ற்றுமோர் ப‌ரிபூரண‌ ம‌னிதரான, இயேசு என்கிற‌ நாம‌த்தில்!! இவ‌ர் இர‌ண்டாம் ஆதாம் என்று அழைக்க‌ப்ப‌டுவ‌து இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் (1 கொரி 15:45)!!

அப்ப‌டி என்றால் ஒரு ப‌ரிபூர‌ண‌ ம‌னித‌னாம் ஆதாமிற்கு ச‌ரி நிக‌ர் ச‌மான‌ ப‌லியாக‌ ப‌ர‌லோக‌த்திலிருந்து வ‌ந்த‌ இயேசு கிறிஸ்து செலுத்தினார்!! ஆக‌வே தான் எப்ப‌டி உல‌க‌ம் ஆதாமின் பாவ‌த்தின் நிமித்த‌ம், ஆதாமை அறிந்த‌வ‌ர்க‌ளானாலும் ச‌ரி, அறியாத‌வ‌ர்க‌ளானாலும் ச‌ரி, ஆதாமின் முழு ச‌ந்த‌தி ம‌ரிக்கிற‌தோ, அப்ப‌டியே, கிறிஸ்துவினால் ஆதாமின் முழு ச‌ந்த‌தியும் உயிர்பெற்று வ‌ருவார்க‌ள்!!

1 கொரி. 15:21. மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. 22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,

இதுவே கிறிதுவின் சுவிசேஷ‌ம்!! அவ‌ர் பூமிக்கு வ‌ந்த ந‌ற்செய்தியாகும்!!

யோவான் 12:2. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.

எல்லாரையும் என்றால் நிச்ச‌ய‌மாக‌வே எல்லாரையுமே தான்!! எல்லா கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்று யாராவ‌து சொன்னால் அது ந‌ற்செய்தியாகாது!!

தொட‌ரும்...................



-- Edited by anbu57 on Thursday 3rd of February 2011 03:48:59 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard