kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டது


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டது


கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டது

பைபிளைப் பின்பற்றுவதாக உரிமை பாராட்டுபவர்களின் கெட்ட நடத்தையின் காரணமாக அனேக நாடுகளில் ஜனங்கள் பைபிளைத் தவிர்க்கவும் அதற்காக மரியாதை கொண்டிருப்பதில் குறைவுபடவும் செய்கின்றனர். சில நாடுகளில், பைபிள் யுத்தத்துக்கு வழிநடத்தும் ஒரு புத்தகம், அது வெள்ளையர்களின் புத்தகம், மற்றும் அது குடியேற்ற ஆதிக்கத்தை ஆதரிக்கும் புத்தகம் என்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை தவறான கருத்துகளாகும்.

மத்தியகிழக்கில் எழுதப்பட்ட பைபிள், நீண்ட காலமாக கிறிஸ்தவம் என்ற பெயரில் செய்யப்பட்டு வந்திருக்கும் குடிஏற்றதுக்கான யுகங்களையும் பேராசையின் சுரண்டல்களையும் ஆதரிப்பதில்லை. மாறாக, பைபிளைப் படிப்பதினாலும், இயேசு போதித்த மெய்க் கிறிஸ்தவத்தின் போதனைகளைக் கற்றுக்கொள்வதாலும், யுத்தம், ஒழுக்கக்கேடு மற்றும் மற்றவர்களை சுரண்டுதல் இவற்றை பைபிள் பலமாக கண்டனம் செய்வதை நீங்கள் காண்பீர்கள். குற்றம் பைபிளில் இல்லை, ஆனால் பேராசை கொண்ட மனிதர்களிடம் இருக்கிறது. எனவே பைபிளில் நல்ல ஆலோசனைக்கு முரணாக வாழ்கின்ற தன்னலமான ஜனங்களின் தவறான நடத்தை, பைபிள் பொக்கிஷங்களில் இருந்து நீங்கள் நன்மை பெறுவதை தடுக்க இடம் கொடாதீர்கள்.

பைபிளின்படி வாழாதவர்களில் கிறிஸ்தவ மண்டலத்தின் தேசங்களும், ஜனங்களும் உட்பட்டு இருக்கின்றன. கிறிஸ்தவம் அதிகமாக நிலவுகின்ற உலகத்தின் பாகம் ''கிறிஸ்தவமண்டலம்'' என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி சர்ச் அல்லது தங்களை பாஸ்டர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அமைப்பைக் கொண்ட ஒரு தவறான உபதேசங்களை கொண்ட உலகமாகும். இது சுமார் நான்காம் நுற்றாண்டில் இருந்து பிரபலமானது. கிறிஸ்தவ மண்டலம் நுற்றாண்டுகளாக பைபிளை வைத்து இருக்கிறது. அதன் குருமார்களும், போதகர்களும் அதை போதிப்பதாகவும், தாங்கள் கடவுளின் பிரதிநிதிகள் என்றும் உரிமை பாராட்டுகின்றனர். ஆனால், கிறித்தவ மண்டல குருமார் மற்றும் மிஷனரிகள் சத்தியத்தைப் போதிக்கின்றனரா? அவர்களுடைய செயல்கள் உண்மையிலேயே கடவுளையும், பைபிளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா? கிறிஸ்தவ மண்டலத்தில் உண்மையிலேயே கிறிஸ்தவம் நிலவுகிறதா? இல்லை. நான்காவது நூற்றாண்டில் அதன் மதம் முன்னணிக்கு வந்ததில் இருந்து, கிறிஸ்தவமண்டலம் கடவுள் மற்றும் பைபிளின் விரோதியாக தன்னை நிருபித்துள்ளது. ஆம், வரலாற்று உண்மைகள் கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டதைக் காட்டுகின்றன.


-- Edited by Theneer Pookal on Sunday 23rd of January 2011 03:09:49 PM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

பைபிளுக்கு மாறான கோட்பாடுகள்
பைபிளுக்கு மாறான என்ன கோட்பாடுகளை இன்றைய கிறிஸ்தவ சபைகள் போதிக்கின்றனர்?

கிறிஸ்தவ மண்டலத்தின் அடிப்படை கோட்பாடுகள் பைபிளைச் சார்ந்து இல்லை, ஆனால் பழங்கால கட்டுக்கதைகளில் சார்ந்துள்ளன-கிரீஸ், எகிப்து, பாபிலோன் மற்ற நாடுகளின் கட்டுக்கதைகளில் காணப்படுகிற, மனித ஆத்துமாவின் உள்ளியல்பான அழியாமை, நரக அக்கினியின் நித்திய வாதனை, உத்தரிக்கும் ஸ்தலம் மற்றும் திரித்துவம் (ஒரு கடவுளில் முன்று ஆட்கள்) போன்ற போதகங்கள் பைபிளில் காணப்படுவதில்லை.

உதாரணமாக கெட்ட ஜனங்கள் எரிகின்ற நரகத்தில் என்றைக்குமாக வாதிக்கப்படுவார்கள் போதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கருத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? அநேகர் இதை விரும்பத்தகாததாக காண்கின்றனர். கடவுள் மனிதர்களை அதிகமான வேதனைகளில் வைத்து என்றைக்குமாக வாதிப்பார் என்பதை அநேகர் நியாயமற்றதாக காண்கின்றனர். இத்தகைய கொடூரமான கருத்து, பைபிளின் கடவுளுக்கு முரண்பட்டதாக இருக்கிறது, ஏன் என்றால் ''தேவன் அன்பாகவே இருக்கின்றார்''. இத்தகைய கருத்து  சர்வவல்லமை உள்ள கடவுளின் ''மனதில் தோன்றவுமில்லை'' என்று பைபிள் தெளிவாக தெரிவிக்கிறது. அடுத்து

அழியாத -ஆத்துமா போதனையை பைபிள் எவ்விதமாக தவறென காண்பிக்கிறது?

கடவுளின் சட்டத்தை மீறிய ஆதாம், ஏவாளுக்கு கிடைத்த தண்டனை என்ன?

பைபிள் எவ்விதமாக கிறிஸ்தவ மண்டலத்தின் திருத்துவக் கோட்பாடுகளை தவறெனக் காண்பிக்கிறது?

பைபிள் போதனைகளைப் பற்றியும் கிறித்தவ மண்டல சர்ச்சுகளின் போதனைகளைப் பற்றியும் நாம் என்ன சொல்லலாம்?

போன்ற கேள்விகளுக்கான விடைகளை
எனது அடுத்த பதிவுகளில்  ஆராய இருக்கிறோம். (இந்த தளத்துக்கு உரிமையாளரே, என் கருத்துக்கள் தவறான திசைகளில் சென்றால் அதை தயவு செய்து எனக்கு அறியத்தரவும் நன்றி.


-- Edited by Theneer Pookal on Sunday 23rd of January 2011 04:07:48 PM


__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டது


அன்புள்ள நண்பரே,

நான் இது வரை எனக்கு விரோதமான பதிவுகளையே நீக்கினது அல்ல, மாறுபாடான போதனைகள் உள்ள பதிவுகளையும் நீக்கியது கிடையாது, அநாகரீகமான ஒரே பதிவை மாத்திரம் நீக்கியிருக்கிறேன்!! உங்கள் பதிவுகள் வேத வசனங்களுடன் இருக்கிறது, பாரம்பரியம் அதில் இல்லை, நிச்சயமாக தெளிவாகவே இருக்கிறது!! நான் கொண்டிருக்கும் விசுவாசமும் அதற்கு ஒத்து இருக்கிறது, தாராளமாக பதிவுகளை தாருங்கள்!!

ஒரே திருத்தம், நான் உரிமயாளர் இல்லை, நான் நிர்வாகி மாத்திரமே, உங்களை விட சற்று கூடுதலான சலுகைகள் இருக்கிறது அவ்வளவே!!

நன்றி, தொடருங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டது


இன்று கிறிஸ்தவ மண்டலத்தின் சர்ச்சுகள் உட்பட அனேக மதங்கள், மரணத்தில் பரலோகத்துக்கோ நரகத்துக்கோ செல்கின்ற ஓர் அழியாத ஆத்துமாவை மனிதர்கள் கொண்டுள்ளனர் என்று போதிக்கின்றன. இது ஒரு பைபிள் போதகம் அல்ல. மாறாக, பைபிள் தெளிவாகச் சொல்கிறது: ''உயிரோடு இருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் .... நீ போகிற பாதாளத்திலே(கல்லறை ) செய்கையும் வித்தையும், அறிவும், ஞானமும் இல்லையே''. (பிரசங்கி  9: 5,10 ). மனிதனின் மரணத்தில், ''அவன் மண்ணுக்கு திரும்ம்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்,'' என்று சங்கீதக்காரன் கூறுகிறான். சங்கீதம் 146:4
ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய சட்டத்தை மீறியபோது, தண்டனை அழியாமையல்ல வென்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அது ஒரு தண்டனையாக அல்ல, பரிசாகத்தான் இருந்திருக்கும்!!!  மாறாக, அவர்கள் பூமியில் இருந்து எடுக்கப்பட்டபடியால் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. கடவுள் ஆதாமிடம் அழுத்திக் கூறினார். ''நீ மண்ணாய் இருகிறாய். மண்ணுக்குத் திரும்புவாய்.'' (ஆதியாகமம் 3:19). எனவே, உள்ளியல்பான ஆத்துமா அழியாமை பற்றிய போதகம் பைபிளில் இல்லை. ஆனால் கிறிஸ்தவ மண்டலத்தால், தங்களுக்கு முன் வாழ்ந்த கிறிஸ்தவர் இல்லாதவர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டதாகும்.
மேலும், கிறிஸ்தவ மண்டலத்தின் கிறிஸ்துவ கோட்பாடு கடவுளை ஏதோவொரு புரிந்துகொள்ள முடியாத ஒன்றில் மூன்று கடவுளாக காட்டுகிறது. இந்தப் போதகமும் கூட பைபிளில்  காணப்படுவதில்லை. உதாரணமாக, ஏசாயா 40:25 ல் கடவுள் தெளிவாக சொல்கிறார்: '' என்னை யாருக்கு நிகராக்கும்படி என்னை யாருக்கு ஒப்பிடுவீர்? பதில் வெளிப்படையானதாகும். யாருமே சமமாக முடியாது. மேலும் சங்கீதம் 83:17 எளிமையாகச் சொல்கிறது: ''யேகோவா என்னும் நாமத்தை உடைய தேவரீர் ஒருவரே பூமி அனைத்தின் மேலும் உன்னதமானவர்.'' என்று அறிகிறோம்.
கடவுள் மற்றும் அவருடைய நோக்கங்களைப் பற்றிய போதனைகள் பைபிளில் தெளிவாகவும், புரிந்துகொள்ள சுலபமானதாகவும், நியாயமானவையாகவும் இருகின்றன. ஆனால் கிறிஸ்தவ மண்டல போதனைகளைக் கொண்ட அடிப்படையில் சற்றேனும் ஒரு உண்மையும் கிடையாது. அதைவிட மோசமாக, அவை பைபிளுடன் முரண்படுகின்றன.

-- Edited by Theneer Pookal on Monday 24th of January 2011 10:23:31 PM


__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

மேலே கூறிய பகுதியின் தொடர்ச்சி .....
முதலாவதாக சில முக்கிய கேள்விகளுக்கு பதில்களை ஆராய்வது அல்லது வேத ஆதாரத்துடன் விளக்குவது கட்டாயமாக இருக்கிறது. காரணம் ஒரு சில தளங்களில் சில மாறுபாடான போதனைகளை கொடுக்கும் பொய்யர்களை அடையாளம் காட்டுவது எமது கடமை.
கேள்வி....
  1. என்ன விதங்களில் பைபிளின் போதனைகள் கிறிஸ்தமண்டல சபைகள் செய்து கொண்டு இருப்பவற்றுக்கு எதிர்மாறானதை தேவைப்படுத்துகின்றன?
  2. மெய்க்  கிறிஸ்தவர்களை எது அடையாளப்படுத்தும் என்பதாக இயேசு சொன்னார்?
  3. கிறிஸ்தவர்களாக தங்களை சொல்லிகொள்பவர்கள் கடவுளைப் பிரதி நிதித்துவம் செய்யவில்லை என்பதை எது காட்டுகிறது?
  4. கிறிஸ்தவமண்டலம் என்ன தீங்குகளை இழைத்திருக்கிறது?
பொய்க்கோட்பாடுகளை போதிப்பதுடன் கூட, கிறிஸ்தவ மண்டலம் அவளுடைய செயல்களினால் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டிருகிறது. குருவர்க்கமும், சர்ச்சுகளும் கடந்த நுற்றாண்டுகளில் செய்தவை, நம்முடைய காலத்தில் இன்னமும் செய்கின்றவை, பைபிளின் கடவுள் தேவைப்படுத்துகிறவற்றுக்கு நேர் எதிரானதாக இருக்கின்றன. கிறிஸ்தவத்தை இஸ்தாபித்த இயேசு கிறிஸ்து போதித்த, செய்த காரியங்களுக்கு எதிரானதாக இருக்கின்றன.
உதாரணமாக, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் இந்த உலக அரசியல் விவகாரங்களில் தலையிடவோ அதன் போர்களில் ஈடுபடவோ வேண்டாம் என்று போதித்தார். அதோடு, அவர்கள் சமாதானத்தை நேசிப்பவர்களாக, சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களாக, எந்தத் தப்பெண்ணமுமின்றி சகமனிதர்களிடம் அன்புள்ளவர்களாக, மற்றவர்களின் உயிரை எடுப்பதற்கு மாறாக தங்களுடைய உயிரையே தியாகம் செய்யவும் சித்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று அவர் போதித்தார். யோவான் 15:13;   அப்போஸ்தலர் 10:34,35 ::1 யோவான் 4:20,21.
உண்மையில், போலிக் கிறிஸ்தவர்களிடம் இருந்து, பாசாங்கு செய்பவர்களிடம் இருந்து, மெய்க்கிறிஸ்தவர்களைப் பிரித்துக் காட்டும் அடையாளக் குறியே மற்ற மனிதர்களிடம் காட்டும் அன்பு என்று இயேசு போதித்தார். தம்மைப் பின்பற்றுபவர்களிடம் அவர் சொன்னார்: ''நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்''.
யோவான்  13:34,35::::15:12.
எனினும், நூற்றாண்டு நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவ மண்டலத்தின் குருவர்க்கம் அரசியலில் தலையிட்டு தங்களுடைய தேசங்களின் போர்களை ஆதரித்திருக்கின்றன. இந்த நூற்றாண்டின் இரண்டு உலக யுத்தங்களைப் போன்று, அவர்கள் கிறிஸ்தவ மண்டலத்தின் உள்ளே கூட யுத்தத்தில் எதிர்க்கும் இரண்டு பக்கங்களை ஆதரிக்கின்றன. இந்தச் சண்டைகளில் ஒவ்வொரு பக்கத்தில் இருந்த குருவர்க்கமும் வெற்றிக்காக ஜெபித்து, ஒரு நாட்டிலுள்ள ஒரு மதத்தை சேர்ந்த அங்கத்தினர்கள், அடுத்த நாட்டிலிருந்த அதே மதத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களை கொன்றனர். ஆனால் தேவனுடைய பிள்ளைகள் அல்ல, சாத்தானுடைய பிள்ளைகளே அவ்வ்விதம் செய்வார்கள் என்று பைபிள் சொல்கிறது.(யோவான் 3:10-12,15) எனவே குருவர்க்கமும், அவர்களைப் பின்பற்றுவோரும் கிறிஸ்தவர் என்று உரிமை பாராட்டினாலும், ''உன் பட்டயத்தைப் திரும்ப உரையில் போடு'' என்று தம்மைப் பின்பற்றுபவருக்கு சொன்ன இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு இவர்கள் முரண்படுகின்றனர்.- மத் 26:51 ,52
பல நுற்றாண்டுகளாக, கிறிஸ்தவமண்டல தேசங்கள் ஏகாதிப்பத்திய சகாப்தத்தின்போது, மற்ற ஜனங்களை வெற்றிகொண்டு, அடிமைப்படுத்தி, இழிவு படுத்திய போது, சர்ச்சுகள் அவற்றின் அரசியல் அதிகாரங்களோடு சேர்ந்து வேலை செய்கின்றன. பல நுற்றாண்டுகளாக அதுவே ஆபிரிக்காவில் நடந்தது. மேற்கத்திய நாடுகள் அபினி போர்களிலும் பாக்ஸர் கலகத்தின் போதும் செய்தது போல பலாத்காரத்தின் முலம் செல்வாக்கு ஆதிக்க எல்லைகளை உருவாக்கிய போது சீனாவும் கூட இதை அனுபவித்தது.
இருண்ட காலம் என்று  வரலாற்றில் அழைக்கப்பட்ட அந்த நூற்றாண்டுகளின் போது தங்களோடு கருது வேற்றுமை கொண்ட எவரையும் துன்புறுத்துவதிலும், சித்திரவதை செய்வதிலும், கொலை செய்வதிலும் கூட கிறிஸ்தவ மண்டல மதங்கள் முன்னணியில் இருந்தன. நுற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடித்த சமய விசாரணைகளின் போது, சித்திரவதை மற்றும் கொலை போன்ற கொடூரமான பழக்கங்கள் சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டு கண்ணியமான அப்பாவி மக்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டன. குற்றம்  செய்தவர்கள் அனைவரும், கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாரட்டிக்கொண்ட குருவர்க்கமும் அவர்களை பின்பற்றினவர்களுமே. பொது மக்கள் வாசிக்க முடியாதபடி பைபிளை அழித்துவிடவும் கூட அவர்கள் முயற்சித்தனர். தொடரும் ...


-- Edited by Theneer Pookal on Thursday 27th of January 2011 02:04:04 AM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் தேசங்களும், சர்சுக்களும் கிறிஸ்தவமாக இருக்கவில்லை. இப்போதும் அவ்வாறு இல்லை. அவர்கள் கடவுளுடைய ஊழியக்காரர் அல்ல. அவர்களைப் பற்றி அவருடைய ஏவப்பட்ட வார்த்தை சொல்கிறது.. ''Tit 1:16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்''.
பொய் மதத்தை அது உண்டுபண்ணுவதிலிருந்து, அதன் கனிகளிலிருந்து அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்பதாக இயேசு சொன்னார். அவர் சொன்னார் ...
மத்தேயு 7 அதிகாரம் 15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். 
இவ்விதமாக, கிறிஸ்தவமண்டல மதங்கள் தாங்கள் கற்பித்திருக்கும் மற்றும் தாங்கள் செய்து இருப்பவற்றின் மூலம், பைபிளை நம்புவதாகவும், கடவுள் பயமுள்ளவர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் தங்களுடைய உரிமை பாராட்டல் ஒரு பொய் என்பதைக் காண்பித்து இருக்கின்றன. அவர்கள் பைபிளுக்கும் கடவுளுக்கும் உண்மையற்றவர்களாக இருந்திருக்கின்றனர். அவ்விதமாகச் செய்கையில், அவர்கள் லட்சக்கணக்கான ஆட்களை வெறுப்புகொள்ளச் செய்து உன்னதமானவரில் நம்பிக்கை வைப்பதில் இருந்து அவர்களை விலகிச் செல்ல செய்திருக்கின்றனர்.
இருந்தபோதிலும், கிறிஸ்தவ மண்டல குருவர்க்கம் மற்றும் சர்ச்சுகளின் தோல்வியும், கிறிஸ்தவ மண்டலத்துக்கு வெளியே உள்ள மற்ற மதங்களின் தோல்வியும் பைபிளின் தோல்வியை அர்த்தப்படுத்துவதில்லை. அல்லது கடவுள் தோற்றுவிட்டார் என்பதையும் அது அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, பைபிள் நமக்கு நம்மையும் நம் எதிர்காலத்தையும் பற்றி நிச்சயமாகவே அக்கறை உள்ளவராக இருக்கும் ஒரு கடவுளைப் பற்றி சொல்கிறது. சரியானதைச் செய்ய விரும்பி, பூமி முழுவதிலும் நீதியும் சமாதானமும் நிலவுவதை காணவிரும்பும் நேர்மை இருதயமுள்ள ஆட்களுக்கு அவர் எவ்விதமாக பலனளிப்பார் என்பதை அது காண்பிக்கிறது. கடவுள் ஏன் அக்கிரமத்தையும் துன்பத்தையும் அனுமதிக்கிறார், எவ்விதமாக அவர் தங்கள் உடன்மானிடத்துக்குத் தீங்கிழைப்பவர்களையும் அவரைச் சேவிப்பதாக உரிமைபாராட்டி ஆனால் அவ்விதமாக செய்யாதவர்களையும் பூமியில் இருந்து நீக்கிப்போடுவார் என்பதையும் கூட அது காட்டுகிறது. END



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard