kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்றைய ஊழியம் தேவ அழைப்பா/ சுயசித்தமா!!??


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
இன்றைய ஊழியம் தேவ அழைப்பா/ சுயசித்தமா!!??


இன்று ஊழியம் செய்கிறோம், அல்லது ஊழியம் செய்ய என்னை அழைத்தார், நான் சத்தம் கேட்டு, ஊழியத்திற்கு வந்தேன், தரிசனம் பார்த்து ஊழியத்திற்கு வந்தேன், என்று சொல்லி அநேகர் ஊழியத்திற்கு வருவதை பார்க்க முடிகிறது!!

உண்மையிலேயே இது தேவனின் அழைப்பா, அல்லது எனக்கு பிரியமாக இருந்தது, நான் ஊழியத்திற்கு வந்தேன் என்று சொல்லுவதினால் கூட்டம் கூட்ட முடியாது என்று நினைத்து அப்படி தேவன் அழைத்தார் என்று சொல்லி விடுகிறார்களோ!! தேவன் இன்று இப்படி வித்தியாசமான சபைகள் உருவாகும்படி ஊழியர்களை அழைப்பாரோ!!

ஒரே தேவன் வித்தியாசமான விசுவாசங்களும் கோட்பாடுகளையும் தந்து அழைப்பாரோ!! ஏன் சிலர் தங்களை ஊழியக்காரர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார்களோ!!

தங்களின் சபை போதகரிடம் போய், எனக்கு தேவன் தரிசனம் தந்து ஊழியத்திற்கு அழைத்தார் என்று மாத்திரம் சொல்லிப்பாருங்கள், அவரின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா!!

1. ப்ரதர், எல்லா தரிசனங்களையும் நம்பக்கூடாது
2. பிசாசும் தரிசனம் தருவான் (இவருக்கு மாத்திரம் தேவனே தந்தது போல் நினைப்பு)
3. நான் ஜெபித்து விட்டு சொல்லுகிறேன் (அடி மனதில் ஒரு கலக்கம், எனக்கு போட்டியாக வந்துவிடுவானோ)
4. இன்னும் நீங்கள் விசுவாசத்தில் வளர வேண்டியதாக இருக்கிறதே, அதற்குள் ஏன் ஊழியம்......!!
5. இன்னும் கொஞ்சம் பொருங்க, பிரதர், மறுபடியும் உங்களுக்கோ, வேறு யாருக்காவது உங்களின் அழைப்பை உறுதிப்படுத்தும் படியான வெளிப்பாடு வரட்டுமே!! (யப்பா......)

தங்களின் சுய இச்சையினாலும், சுய சித்தத்தினாலும் ஊழியத்திற்கு வந்துவிட்டு அபான்டமாக தேவனின் நாமத்தை பலவிதமான விசுவாசங்கலை வைத்துக்கொண்டு தூஷித்து வருபவர்கள் உண்மையிலே ஊழியர்கள் தானா!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

திரு,  பெரியன்ஸ் அவர்களே!!! உங்கள் பதிவுகளை வாசித்தேன். மிகவும் அருமையாகவும் சிந்திக்க தூண்டும் விஷயமாகவும் இருக்கு. உண்மையிலே தேவனுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற சித்தம் உள்ளவன், போலி கிறிஸ்தவன் போல சுய நலத்துக்காகவும், எதோ செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செய்ய கூடாது. அப்படி ஊழியத்தில் கலந்துகொள்ள பல தகுதிகள் அவசியப்படுகின்றது. அதில் ஒன்று
  1. கடவுளுடைய சக்தியும், அவரது வார்த்தையே பற்றிய அறிவும் தேவை. ............. 2 திமோத்தேயு 2 :15 , ஏசாயா 61 : 1 -3 
  2. பிரசங்கிப்பதில் கிறிஸ்து காண்பித்த மாதிரியே பின்பற்ற வேண்டும் ......1 பேதுரு 2 :21::::   2  திமோத்தேயு 4 : 2 ,5 
  3. கடவுள் தமது சக்தி, அமைப்பு முலம் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு இருத்தல் அவசியம். ..... யோவான் 14 :26  .. 2 கொரிந்தியர் 3 : 1 - 3   போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்::::::


-- Edited by Theneer Pookal on Wednesday 26th of January 2011 10:41:05 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard