kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோவான் 1: 1 ''வார்த்தை''


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
யோவான் 1: 1 ''வார்த்தை''


//கீழே கொடுக்கப்பட்ட கருத்து  இறைவன் தளத்தின் அங்கத்தினவராகிய கொல்வினுக்காக கொடுக்கப்பட்டது. அவருக்கு எப்ப பார்த்தாலும் ''வார்த்தை'' மேல சந்தேகம் ...கீழே கொடுக்கப்பட்ட விளக்கம் தங்களுக்குப் போதும் என்று நினைக்கிறேன்.//

''அந்த வார்த்தை தேவனாயிருந்தது''
யோவான் 1:1-ஐ தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பில் பின்வருமாறு வாசிக்கிறோம். ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனை இருந்தது''. இயேசு கிறிஸ்துவாக பூமிக்கு வந்த ''அந்த வார்த்தை'' (கிரேக்கில், ஸோ லோகாஸ் ), சர்வ வல்லமை உள்ள தேவன் என்று பொருள்கொள்கிறது என திருத்துவக் கொள்கைக்காரர் வாதாடுகின்றனர்.

எனினும் , மறுபடியுமாக இங்கும் திருத்தமாய் விளங்கிக் கொள்வதற்கு சூழமைவு அடிப்படையே வைக்கிறது. ''அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது'' என்ற தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலும் சொல்லியிருக்கிறது. மற்றொரு ஆளி''டத்தில்'' (''உடன்,'' KJ ) இருக்கிற ஒருவர் அதே மற்ற ஆளாக இருக்க முடியாது. இதற்கு ஒத்திசைவாய், ஜெசுட் மதகுருஜோசப் பிட்ஸ் மையார் என்பவர் பதிப்பித்த  பைபிள் இலக்கிய பத்திரிகை என்ற ஆங்கில புத்தகத்தில், யோவான் 1 : 1 ன் பின்பகுதியை ''அந்த'' தேவன் என பொருள் கொள்ளும்படி விளக்கினால், இது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்ததென சொல்லும் அந்த ''வாக்கியத்தின் முந்தின உட்பிரிவுக்கு முரண்படும்,'' என குறிப்பிடுகிறது.


-- Edited by anbu57 on Tuesday 25th of January 2011 07:41:19 AM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

இந்த வசனத்தின் இந்த பாகத்தை மற்ற மொழிபெயர்ப்புக்கள் மொழிபெயர்க்கும் முறையையும் கவனயுங்கள்.

1808 ::: ''அந்த வார்த்தை ஒரு கடவுளாய் இருந்தது'' The New Testament in a Improved Version, Upon the Basis of Archbishop Newcomes New Translatuion: With a Correct Text.

1864... ''ஒரு கடவுளாக அந்த வார்த்தை இருந்தது'' The Emphatic Diaglott, interlinear reading, by Benjamin Wilson.

1935...''அந்த வார்த்தை தெய்வீகமாய் இருந்தது '' தி பைபல் -அன் அமரிக்கன் ட்ரான்ஸ்லேசன் J.M.P Smith and Goodspeed.

1946.... ''ஒரு தெய்வீக இயல்புகுரியதாய் அந்த வார்த்தை இருந்தது'' Das Neue Testament, by Ludwig Thimme.

1950.. ''அந்த வார்த்தை ஒரு கடவுளாய் இருந்தது.'' கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துகளில் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)
1958 ...''அந்த வார்த்தை ஒரு கடவுளாய் இருந்தது '' The  New testament by James L. Tomanek.
1975... ''ஒரு கடவுளாக (அல்லது, ஒரு தெய்வீக இயல்புகுரியதாக ) அந்த வார்த்தை இருந்தது.'' Das Evangalium nach johannes, by seigfried schulz.
1978...''கடவுளைப் போன்ற இயல்பில் அந்த லோகாஸ் இருந்தது '' Das Evangelium nach johannes, by johannes Schneider.

-- Edited by Theneer Pookal on Wednesday 19th of January 2011 02:35:17 PM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

யோவான் 1 : 1 -ல் தியாஸ் (கடவுள் ) என்ற கிரேக்கப் பெயர் இரு தடவைகள் வருகிறது. முதல் தடவை சர்வ வல்லமை உள்ள கடவுளைக் குறிக்கிறது. அவரோடு அந்த வார்த்தை இருந்தது (அந்த வார்த்தை (லோகாஸ் ) கடவுளோடு இருந்தது. (ஒரு வகையான தியாஸ் )'') இந்த முதல் தியாஸ் -க்கு முன்னால் டன் (அந்த ) என்ற சொல் வருகிறது, இது தெளிவாய் அதுவென வேறுபடுத்தித் தெரிவிக்கிற திட்டமான கிரக்கச் சுட்டிடைச் சொல் வகையாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் சர்வவல்லமை உள்ள கடவுளை சுட்டிக் காட்டுகிறது.( ''அந்த வார்த்தை (அந்தக் ) கடவுளோடிருந்தது'')

மறுபட்சத்தில், யோவான் 1 . 1 -ல் இரண்டாவது தியாஸ் -க்கு முன்னால் சுட்டிடைச் சொல் இல்லை. ஆகையால் சொல்லின் நேர் பொருள் மொழிபெயர்ப்பு, ''அந்த வார்த்தை கடவுளாய் இருந்தது;'' என்றிருக்கும். எனினும் பல மொழிபெயர்ப்புகள் இந்த இரண்டாவது தியாஸ் -ஐ (பயநிலைப் பெயர்ச் சொல் ) “தெய்வீக”, “கடவுளைப்போன்ற”, அல்லது “ஒரு கடவுள்” என மொழிபெயர்த்திருப்பதை நாம் கண்டோம்: எந்த அதிகாரத்தின் பேரில் அவ்வாறு செய்கிறார்கள் ?  (இன்னும் முடிவடையவில்லை)


-- Edited by Theneer Pookal on Wednesday 19th of January 2011 02:37:19 PM

-- Edited by anbu57 on Thursday 27th of January 2011 04:16:14 AM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நல்லது சகோதரரே, நல்ல ஒரு பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தளத்தில் ஒரு உறுப்பினரின் தரப்பிலிருந்து கிடைத்திருக்கிறது!!

யோவான் 1:1ஐ மிகவும் சரியாக விளக்கியிருக்கிறீர்கள்!!

இறைவன் தளத்தின் நிர்வாகிக்கு "வார்த்தை" என்றவுடன் பிதா பேசும் போது வெளிப்படும் வார்த்தை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்!! அந்த வார்த்தை இயேசுவாக மாம்சத்தில் வந்தவர் என்று நினைக்கிறார்!! ஆனால் வார்த்தை என்பதும் ஒரு தனி ஆள்தத்துவம் என்பதை ஏனோ ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்!! சரி போகட்டும்!! காதுள்ளவர்கள் நிச்சயமாக கேட்பார்கள்!!

தொடர்ந்து இப்படி பதிவுகளை தந்து பக்கங்களை நிறப்புங்கள்!! தேவனின் ஆவி தாமே உங்களை நடத்தட்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

//"அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?" (யோபு.38:2), இது பக்தன் யோபுவிடம் சர்வ வல்லவராகிய தேவாதி தேவன் முழங்கியது;அது எல்லாவகையிலும் பொருந்தத்தக்கதாக ஒரு புதிய எதிரி முளைத்திருக்கிறான்;அவனுக்கு தைரியமிருந்து இங்கே வந்து அவற்றைச் சொன்னால் தக்க பதிலடி கிடைக்கும்.//
திரு.சில்சாம் அவர்களே என்னை ''எதிரியாக'' அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிகள். இந்த எதிரி உங்களைப் போன்ற திரித்துவத்தையும், பைபிளில் இல்லாத சில பிழையான  உபதேசத்தையும் கொண்டிருப்பவர்களை தெளிவடைய வைக்கவே முளைத்த இடிமுழக்கம் தான்.
///தைரியமிருந்து இங்கே வந்து அவற்றைச் சொன்னால் தக்க பதிலடி கிடைக்கும்///
தைரியம் இருப்பதால் தான் நான் சரியான பைபிள் போதனைகளைக் கொண்ட தளத்தில் இருந்து தங்களின் பொய் போதனைகளுக்கு எதிராக கருத்து எழுதுகிறேன். அதாவது, இனி பைபிளில் எங்கெல்லாம் நீங்கள் திரித்துவத்தை ஆதாரம் காட்டி பேசுகிறீர்களோ அங்கெல்லாம் இந்த தேனீர் பூக்கள் தோன்றுவான். நன்றி.

திரு.கொல்வின் அவர்களின் வார்த்தைக்கான மேலுமான விளக்கம் கீழே:::::


கோய்னி கிரேக்க மொழி திட்டமான சுட்டிடைச்சொல்லைக் (''the '', (அந்த )) கொண்டிருகிறது. ஆனால் அது பொதுநிலைச் சுட்டிடைச் சொல்லை (''a '' அல்லது ''an '' (ஒரு) )கொண்டில்லை. ஆகையால் ஒரு பயனிலை பெயர்ச்சொல்லுக்கு முன்னால் திட்டமான சுட்டிடைச்சொல் வராவிடில், சூழமைவை பொருத்து, அது பொதுநிலையானதாக இருக்கலாம்.
''வினைச் சொல்லுக்கு முன்னால் வரும் சார்படையற்ற (சுட்டிடைச்சொல்லைக் கொண்டிராத) பயனிலையே (கொண்டுள்ள சொற்கள்) முதன்மைப் பொருளில் பண்பை எடுத்துக் காட்டுபவை'' என்று பைபிள் இலக்கிய பத்திரிகை என்ற ஆங்கில பிரசுரத்தில் சொல்லியிருக்கிறது: இந்தப் பத்திரிகை குறிப்பிடுகிற  பிரகாரம், லோகாஸ் ஒரு கடவுளுக்கு ஒப்பிடலாம் என இது காட்டுகிறது. யோவான் 1.1 -ஐப் பற்றி அது மேலும் சொல்வதாவது, இந்தப் பயனிலையின் பன்படிப்படை சக்தி அவ்வளவு மேம்பட்டு நிற்பதால் அந்தப் பெயர்ச் சொல்லை (௮தியாஸ்) என்பதைத் திட்டமானதெனக் கருதமுடியாது:'' ஆகையால் யோவான் 1.1 அந்த வார்த்தையின் பண்பையே, அவர் ''தெய்வீகமான'' வர்; ''கடவுளைப்போன்ற'' வர்; ''ஒரு கடவுள்'' ஆனால் சர்வவல்லமை உள்ள கடவுள் அல்ல என்பதை முனைப்பாய்த் தெரியச் செய்கிறது. இது பைபிளின் மீதி பாகத்தோடு ஒத்து இருக்கிறது, அது, கடவுளுடைய பிரதிநிதி பேச்சாளராக வகிக்கும் தம்முடைய பாகத்தில் இங்கே ''அந்த வார்த்தை'' என அழைக்கப்பட்ட இயேசு, தமக்கு மேலானவரான, சர்வவல்லமை உள்ள கடவுளால் அனுப்பப்பட்ட கீழ்ப்படிதலுள்ள கீழ்பணியாளர் எனக் காட்டுகிறது.

இதே வார்த்தை அமைப்புள்ள கிரேக்க வாக்கியத்தை வேறு மொழிகளில் மொழிபெயர்க்கையில், ஏறக்குறைய எல்லா மொழிபெயர்ப்பாளரும் நிலையாய் இந்தச் சுட்டிடைச்சொல் ''ஒரு'' (a ) என்பதை இடையில் சேர்த்திருக்கும் மற்ற வசனங்கள் பல உண்டு. உதாரணமாக, மாற்கு 6:49-ல், இயேசு தண்ணீரின் மேல் நடப்பதைச் சீசர்கள் கண்டபோது, ''அது ஒரு ஆவி உருவென அவர்கள் எண்ணினார்கள்;'' என்று ஆங்கில பைபிள் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு சொல்கிறது. கோய்னி கிரேக்கில்; ''ஆவி '' என்பதற்கு முன்னால் ''ஒரு'' (''a'') இல்லை; ஆனால் ஏறக்குறைய எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஆங்கிலத்தில் ''a''(ஒரு) என்பதைச் சேர்க்கின்றனர். ஏனெனில் ஆங்கிலத்தில் ''அது ஆவி'' என்ற சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பு சூழமைவுக்கு பொருந்தாது. இதே முறையில், யோவான் 1:1 அந்த வார்த்தை கடவுளுடன் இருந்தது (KJ ), என்று காட்டுவதனால் அவர் கடவுளாக இருக்க முடியாது; ஆனால் ''ஒரு கடவுள்'' அல்லது “தெய்வீக”மாக இருந்தார்.
ஆங்கில பைபிள் அமெரிக்கன் ஸ்டாண்டட் மொழிபெயர்ப்பை இயற்றுவதில் உழைத்த இறையியல் வல்லுனரும் அறிஞருமான ஜோசப் ஹென்றி தாயார், தெளிவாய் பின்வருமாறு கூறினார்:
''அந்த லூகாஸ் தெய்வீகமாய் இருந்தார், அந்தத் தேவன்தாமேயாக இல்லை” மேலும் ஜசுத்ட் மதகுரு ஜான் L.மெக்கனி தன்னுடைய (ஆங்கில ) பைபிள் அகராதியில் பின்வருமாறு எழுதினார்:
''அந்த வார்த்தை ஒரு தேவனாக இருந்தார்” என்று யோவான் 1:1-ஐ கண்டிப்பாய் மொழிபெயர்க்க வேண்டும். End


-- Edited by Theneer Pookal on Friday 21st of January 2011 06:43:48 AM

-- Edited by anbu57 on Thursday 27th of January 2011 04:33:32 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard