தமிழ் கிறிஸ்தவ தளத்தில் மைகோவை என்பவரின அறிவுறை சில்சாம் என்கிற போதகருக்கு:
//உதாரணம் திரித்துவம் போன்றவை.திரித்துவம் பொருத்தவரை தெளிவாக அறியாவிட்டாலும் நண்பர்கள் அந்த விசுவாசத்தில் உறுதியாகவே உள்ளனர்.மேலும் பல விளக்கங்கள் தாங்களும் மற்றவர்களும் அளித்துள்ளார்கள்.ஆனால் அவர்களுடைய மற்ற கருத்துக்கள் அதாவது நரகம்,ஆத்துமாவின் நித்திய தன்மை,ஆயிர வருட அரசாட்சி,தேவனோடு வாழும் வாழ்க்கை,புதிய வானம் புதிய பூமி போன்ற அவர்களின் பல கொள்கைகளுக்கு தகுந்த ஆதாரங்களோடு கட்டுரை எழுதினால் பின்னாட்களின் அநேகருக்கு அது உதவியாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்து. //
போதகர் என்றவுடன் உச்சி குளிர்ந்து போய் விட்டது போல்!! எப்படி இருந்தாலும் வேதத்தில் செய்ய வேண்டாம், சொல்ல வேண்டாம் என்பதை எல்லாம் நாங்கள் மீற தான் செய்வோம் என்பதில் மைகோவையின் கரிசனத்தை பாருங்கள்:
ரபி என்றால் போதகர் என்று அர்த்தம் என்று அனைவரும் அறிந்ததே!! மைகோவை அவர்களுக்கு இந்த வசனத்தை பின் பற்றவேண்டும் என்றெல்லாம் சொல்லி தரவில்லை போல, என்னை போதகர் என்று அழைக்காதீர்கள், கிறிஸ்து ஒருவரே போதகர் என்று சொல்லும் துனிச்சல் சில்சாமிற்கும் இல்லை!! தமிழ் கிறிஸ்தவ தளத்தில் இனியும் எதிர்த்து எழுதினால் துரத்தி விடுவார்கள்!!
//கடந்த 20 வருடங்களாக பல வேத குழப்ப உபதேசக்காரர்களுடம் நேரடியாகவே பேசி அவர்களை வெட்கமடையச்செய்துள்ளேன்.நீங்கள் சொல்லும் கோவை பெராயன்ஸ் கூட அழைக்கப்பட்டு ஆண்டவரின் வார்த்தைக்கு முகம் கொடுக்க முடியாமல் கடந்து சென்றவர்களே//
மைகோவை சந்தித்து சத்தியத்தை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று தான் சென்றோம், ஆனால் அவர்களின் வீட்டில் ஒரு அணி திரண்டு, என்னையும் என்னுடன் வந்தோரையும் எப்படி எல்லாம் தனிப்பட்ட முறையில் தாக்கினார்கள் என்றும் கண்டிப்பாக வெட்கத்துடன் தான் எழுதுகிறேன்!! இவர்களின் பண்பு இது தான் என்று நிச்சயமாக வெட்கப்படுகிறேன்!! வசனம் இவர்களுக்கு தெரியாது, பாரம்பரியத்தை வைத்தே பேசினார்கள்!! சுய விளம்பிரத்திற்காக வீடியோ எடுக்கலாம் என்று எல்லாம் சொன்னார்கள், தேவயானதை எடிட் செய்து அவர்களுக்கு சாதகமாக தையாரிக்கலாம் என்கிற தந்திரம் எல்லாம் எங்களுக்கு தெரிந்தே அதை வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி விட்டோம்!! அநாகரிகமாக கொச்சை படுத்துவோருடன் நாங்கள் விவாதத்திற்கு சென்றோம் என்று நிச்சயமாக வெட்கப்படுகிறோம், மற்றபடி சட்க்ஹ்திய வசம் இவர்களிடத்தில் இல்லாமலேயே இவர்கள் இத்துனை துனிச்சலாக தங்கலை கிறிஸ்தவர்கள் என்ரு அறிக்கை செய்கிறார்கலே என்பதிலும் வெடக்கப்படுகிறேன்!! இவர்கள் கடந்த 20 வருடங்கலாக இப்படி தான் வருவோரை வெட்கப்படுத்தவார்கள் என்பதை மாத்திரம் புரிந்து கொண்டேன்!!
இவகளே ஒப்புக்கொள்கிறது என்னவென்றால் திரித்துவத்தில் இவர்கள் தெளிவில்லாதவர்களாக இருந்தாலும், பாரம்பரியம் சொல்லுவதினால் கட்டாயத்தின் பெயரில் இவர்கள் அந்த திரித்துவம் என்கிற துருபதேசத்தில் நிலைத்து நிற்க வேண்டியதாக இருக்கிறது, இதில் இவர்களுக்கு பெருமை வேறு!! காணாதவரை விசுவசிப்பது வேறு, இல்லாததை விசுவசிப்பது மூடத்தனம் என்பதை மைகோவை அவர்கள் அறிந்தால் நன்றாக இருக்கும்!!
முதலில் திரித்துவத்தையே சரியாக வசனத்துடன் சொல்லுங்கள், பிறகு இன்னும் ஆழமானதை பேசலாம்!! நேர்மையான விவாதம் நடத்துவது என்றால் என்னவென்றே உங்களுக்கு எல்லாம் தெரியாது!! ஏனென்றால் உங்கள் விசுவாசத்திற்கு பாரம்பரியம் தான் சாட்சியாக இருக்கிறதே தவிர, வசனங்கள் இல்லை!!
30% சத்தியத்தை தந்தே தாங்க முடியாத தமிழ் கிறிஸ்தவ தளம், சில்சாம் தளம் பொங்க ஆரம்பித்து விட்டதே!! சத்தியத்தை ஒருவரு சொல்லும் போது அநேகர் அதை எதிர்பது வேதத்திலேயே இருக்கிறதே!! இயேசு சத்தியத்தை போஷித்த போது, இது கடினமான போதனையாக இருக்கிறது என்று அவரிடம் விளகி போனவர்கள் அநேகர் என்கிறது வேதம்!! அப்படியே தான் அன்பு ஒரு சத்தியம் சொன்னவுடன், தமிழ் கிறிஸ்தவ தளமே கல்லை எடுத்துக்கொண்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!!
இன்னும் சத்தியம் வெளிப்பட வெளிப்பட இவர்களுக்கு தாங்காது!! அநேகருக்கு எப்பவும் சத்தியம் பிடிக்காது என்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாதே!! நீதியின் சூரியன் உதிக்கும் போது அவர் செட்டையின் நிழலினால் உண்டாகும் ஆரோக்கியம் இவர்களை போன்றோரின் கண்கள் திறக்கப்படவே!! இன்னும் பாரம்பரியத்தை கட்டிக்கொண்டு "உணர்வு பூர்வமான" விசுவாசத்தில் இருக்கிறார்கள்!!
வசனம் இல்லாதவர்களின் எதிர்ப்பு எல்லாம் தண்ணீர் இல்லாத மேகம் போல்!! பயமுறுத்துவது போல் இருக்கும் ஆனால் உள்ளே ஒன்றுமே இல்லாததினால் பயப்படும் அவசியமே இல்லை!!
இல்லாத திரித்துவத்தை நம்புவோர், இல்லாத நரகத்தை நம்புவோர், இந்த கூட்டத்திற்கு வேதத்தில் இருக்கும் மரணம் என்றாலே என்னவென்று தெரியாது!! வேற்று மார்கத்தார் சொல்லும் அதே கருத்து தான் இவர்கள் கொண்டிருக்கும் மரணத்தின் விளக்கம்!! எந்த தலைப்பை எடுத்தாலும் நீங்கள் வசனம் கொடுத்தால் நாங்கள் பதில் எழுதுவோம், ஆனால் "உணர்வு பூர்வமான" விசுவாசத்தை கொண்டிருபோரை நாங்கள் எங்கள் எதிரிகளாக கருதுவதில்லை, மாறாக அறியாமையில் இருப்பவர்கள், ஒரு நாள் தெரிந்துக்கொள்வார்கள் என்று தான் வேதத்தின்படி நம்புகிறோம்!!
இவர்களின் விவாதங்களில் ஒரே ராகத்தில் பாடுவோர் தான் இருப்பார்கள், ஆனால் அதை தான் விவாத மேடை என்பார்கள்!! வசனம் எழுதமாட்டார்கள் ஆனால் கிறிஸ்தவ தளம் என்பார்கள்!! பிறகு என்ன கூட்டம் சேராமலா இருக்கும்!!
நேர்மையாக வசனம் கொண்டு விவாதம் நடத்துவோம் என்றால் அது என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்க்க கூட இவர்களின் பாரம்பரிய விசுவாச கண்கள் மறுக்கிறது!! இன்னும் ஒன்று, இந்த தளத்தில் பதிவிடும் ஒருவருக்கு கூட யெகோவா சாட்சிகளோ வேத மாணவர்களோ, இவர்களுக்கு வித்தியாசம் தெரியாதவர்கள்!! பாரம்பரியமாக இவர்களின் போதகர்கள் மூலமாக, யெகோவா சாட்சியினர் துருபதேசக்காஅரர்கள் என்பதை மாத்திரமே சொல்லி கொடுத்திருக்கிறார்கள்!! அவ்வளவே!! வேத மாணவர்கள் யார் என்பது இவர்களுக்கு தெரியாது என்றே நினைக்கிறேன், ஆதினால் தான் எதிரிகளான வேதமாணவர்களையும் யெகோவா சாட்சியினரையும் ஒரே குழு என்று இவர்கள் சொல்லி வருகிறார்கள்!! வேத வசன அறிவு இல்லை, சபை வரலாறு அறிவும் இல்லையே!!
திரு.bereans அவர்களே, நான் நீங்கள் எழுதிய கருத்துக்கு அமைய ஏசாயா 44 ஆம் அதிகாரத்துக்கு வருகிறேன். இன்றைக்கு இந்த பகுதியைத்தான் வாசித்தேன். வாசித்தவுடன் உலக பொய் மதத்தில் தங்களை ஒரு இறை போதகராக உரிமை பாராட்டுபவர்களைக் (போதகர் ) குறித்து நான் அறிந்த விஷயத்தை எழுதுவது என் கடமை என்று நினைக்கிறன். அதாவது இந்த அதிகாரத்தை வாசிக்கும் போது ''பாபிலோன் தேசத்தாரின் தெய்வங்களிடம் கர்த்தர் எவ்வாறு சவால் விடுகிறார் ? என்று பார்க்கிறோம். மோசேயின் நியாப்பிரமாண சட்டத்தின்படி, அடிமைப்பட்டிருக்கும் ஒருவர் மீட்கப்படலாம். அவரை மீட்பவர் பொதுவாக அவருக்கு நெருங்கிய குடும்ப உறவினராக இருப்பார். கர்த்தர் இப்போது தம்மையே இஸ்ரவேலரின் மீட்பராக அடையாளம் காட்டுகிறார். அதாவது, பாபிலோனும் அதன் எல்லா பொய் கடவுள்களும் வெட்கப்படும் வண்ணம் அவர் அத்தேசத்தாரை மீட்பார். பொய்க் கடவுள்களுக்கும் அவற்றை வழிபடுபவர்களுக்கும் எதிராக அவர் இவ்வாறு சவால் விடுகிறார். ஏசாயா 44 அதிகாரம் 6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
7. பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.
8. நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.
அந்த தெய்வங்கள் தங்கள் தெய்வத்துவத்தை நிரூபிக்கும்படி கர்த்தர் சவால் விடுகிறார். வருங்கால சம்பவங்களை ஏற்கனவே நடப்பது போல அவ்வளவு திருத்தமாக முன்னறிவிக்க அவற்றால் முடியுமா ? எல்லா பொய் தெய்வங்களும் உருவாவதற்கு முன்னும் அழிந்து மறைந்து விட்ட பின்னும் இருப்பவராகிய '' முந்தினவரும் பிந்தினவருமானவரால்'' மட்டுமே இப்படிப்பட்ட காரியங்களை செய்யமுடியும். கன்மலை போன்று உறுதியாகவும் நிலையாகவும் இருப்பவராகிய கர்த்தரின் ஆதரவு இஸ்ரவேலருக்கு இருப்பதால் அவர்கள் இந்த சத்தியத்தைக் குறித்து சாட்சி சொல்ல பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .....நன்றி....
-- Edited by anbu57 on Tuesday 25th of January 2011 07:31:11 AM
தங்களின் இந்த பதிவின் நோக்கம் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை!! தயவு செய்து இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் நான் புறிந்துக்கொள்ள வசதியாக இருக்கும்!! என்னை சாடியிருக்கிறீர்களா, அல்லது இந்த சத்தியத்தை தொடர்ந்து எழுதுங்கள் என்றீர்களா என்பது விளங்கவில்லை!! தயவு செய்து தெளிவுப்படுத்துங்கள்!!
இதில் நான் தங்களைக் குறித்து ஒன்றும் எழுதேவில்லையே. பொதுவாக கிறிஸ்தவ மண்டலத்தின் பொய் உபதேசத்தை ஏசாயாவின் அதிகாரத்தில் இருந்து எடுத்துச் சொன்னேன். நீங்கள் உங்கள் சுவரில் எழுதிய அனைத்து பகுதிகளும் வாசித்து அது எனக்கு உண்டபாடானது என்று தெரிந்த பின்பே உங்கள் தளத்தில் அங்கத்தினர் ஆனேன். அடுத்த தடவை ஏதாவது எழுதும் போது பிழையாக இல்லாது, சரியாக விளங்கிக் கொள்ள முடியும்வண்ணம் எழுதுகிறேன். நன்றி (பின்குறிப்பு ..நான் ஜெர்மன் மொழியில் படித்ததால் என் தமிழ் எழுத்து நடை சிறிது வித்தியாசமாகவே இருக்கும். மன்னிக்கவும்)
-- Edited by anbu57 on Tuesday 25th of January 2011 07:33:42 AM
தெளிவுப்படுத்தியதற்கு நன்றி சகோதரனே!! உங்கள் தமிழ் வாசிப்பதற்கு வித்தியாசமாக இருந்தன் காரணத்தையும் சொல்லிவிட்டீர்கள்!! நானும் ஹிந்தியில் மாத்திரம் படித்ததினால் எனக்கும் தமிழ் எழுத சில சிரமங்கள் இருக்கிறது, ஆகிலும் தேவனின் கிருபையே நடத்துகிறது!! தொடர்ந்து பதிவுகளை தந்து சத்திய வசனங்களை குறித்த தெளிவை தந்து சத்திய விரும்பிகளை உற்சாகப்படுத்துங்கள்!!
மைக்கோவை என்பவர் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் போப் பதவியை வகிப்பராவார் என்பது அங்கே பதியும் அனைவருக்கும் தெரியும் என்பதில் மாற்று கருத்தில்லை!! கிறிஸ்துவத்தில் விஷவிதை தூவிய கத்தோலிக்கர்களின் திரித்துவ உபதேசத்தை விடாமல் பிடித்தவர்களாக மூன்று கடவுள் ஆனால் மூன்று என்று வேதம் சொல்லாததால் அதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்து, மூன்று தான், ஆனால் ஒன்று தான் என்கிற ஒரு புதிய வெளிப்பாட்டை கண்டு பிடித்து, அதை எப்படி எல்லாம் வேதத்திற்கு தொடர்பில்லாமல் விளக்கலாமோ அப்படி எல்லாம் முயற்சித்து வருகிறார்கள்!! சில்சாம் (இவரின் அறிமுகம் தேவையில்லை, இவர் கிறிஸ்தவத்தின் மண்ணிக்கனும் "கிறித்துவத்தின்" அவதாரம் என்று தன்னை நினைக்கிறவர் என்பது அனைரும் அறிந்ததே, நாகரீகத்தின் உச்சக்கட்டனமான இலக்கனம் இவரிடம் கற்றுக்கொள்ளலாம்) அதை தொடர்ந்து வசந்தகுமாரின் சீஷன் ஆனால் கத்தோலிக்க சபையில் இருந்துக்கொண்டு பெந்தகோஸ்தே சபைக்கு பரிந்து பேசும் (இரண்டு எஜ்மானர்களுக்கு ஊழியம்) கொல்வின் அவர்கள், கொஞ்சக்காலம் வந்து எழுதிய நண்பர் ஜான் அவர்கள், இப்பொழுது வந்திருக்கும் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் போப் திரு மைகோவை அவர்கள்!!
இவர்களில் ஒருவரும் ஒரே பெயர் கொண்ட சபைக்கு போவது கிடையாது, இவர்களின் சபை ஒரு வேளை ஒரே ஊரிலிருந்தாலும் ஒரு சபையின் ஆடு (சாதாரன விசுவாசிகளை இந்த ஞானவான்கள் அழைக்கும் செல்ல சொல்) மற்ற சபைக்கு சென்று விடாமல் வேளிப்போட்டு காக்கும் மெய்ப்பர் என்கிற போதகர் ஒருவரை நியமித்து வைத்திருப்பார்கள்!! அவர் சத்தியத்தை போதிக்கிறாரோ இல்லையோ, தன் சபையின் ஆடு வேறு சபைக்கு (கன்வென்ஷன், மாநாடு, விழாக்கள், பெருவிழாக்கள் தவிர) சென்று விடக்கூடாத படி நடத்த சாமர்த்தியம் உள்ளவராக இருக்கிறார் (என் சபை மாத்திரமே உன்னை பரலோகத்திற்கு கூட்டி செல்லும், மற்ற சபைகளில் என்னமோ இயேசுகிறிஸ்துவை போதிப்பது இல்லை என்பது இவர்களின் என்னம்) என்பது உண்மை என்பது ஒரே தெருவில் இருக்கும் 20 சபைகள் வெளிப்படுத்தும் நிஜம்!! இப்படி பட்ட இவர்கள் ஒரே வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு வித்தியாசமான தரிசனம், வித்தியாசமான கனவு, வித்தியாசமான போதனை, பரலோக விஸிட், நரக விஸிட், இயேசுவை பார்த்து பேசிகிறது, பரிசுத்த ஆவியான "தேவனை" பார்த்து பேசுவது (இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்) போன்றவற்றை சூப்பராக கதைகளுடனும், காவியங்களோடும், பேச்சு திறனுடன் பேசி (சில சமயம் மிரட்டிக்கூட தான்) சபை மாறிவிடாமல் வைத்திருப்பார்கள்!!
ஒரே விசுவாசம், ஒரே வேதம், ஒரே ஞானஸ்நானம், ஒரே விசுவாசப்பிரமானம், ஒரே இயேசு கிறிஸ்து, எல்லாவற்றுக்கும் மேல் வேதத்தில் இல்லாத திரித்துவத்தில் ஒன்றுப்பட்டவர்களான இவர்கள், தங்கள் ஆடுகள் மேலே சொன்ன அனைத்தும் கொண்டிருக்கும் மற்றோரு சபைக்கு செல்ல தடை விதிப்பார்கள் இந்த பரலோகம் கூட்டி செல்லும் ஏஜண்டுகள்!!
சரி இனி விஷயத்திற்கு வருவோம்!! நான் ஜனவரி 16, 2011ல் எழுதிய ஒரு பதிவிற்கு நிதானமாக என்ன எல்லாம் எழுதலாம் என்று திரித்து எழுதுவதற்கு நேரம் எடுத்துக்கொண்டு சுமார் ஒன்னறை மாதம் சென்ற பிறகு சகுனம் பார்த்து பதிவை தந்திருக்கிறார் மைகோவை அவர்கள்!! இவர் எப்படி வேண்டுமென்றாலும் திரித்து எழுதும் சுக்தந்திரம் இவருக்கு இருக்கு என்றால் அதற்கு சரியான மறுப்பு தெரிவிக்கும் அதிகாரம் எனக்கும் இருக்கிறது!!
//நண்பர் ஈராஸ் அவர்கள் நம்முடைய தளத்தில் கடந்த வருடங்களில் உறுப்பினராக இருந்து விஷவிதைகளை(தவறான உபதேசங்கள்) தூவிக்கொண்டிருந்தார்.இதை அறிந்த நம்முடைய தள நண்பர்கள் அவருக்கு பல வழிகளில் வேத வசனங்களை எடுத்து சொல்லியும் அவர் தன்னுடைய நிலையில் மாறவேயில்லை.//
நான் ஈராஸ் என்று மாத்திரம் இல்லை, இன்னும் ஒருசில வேறு பெயர்களில் இவர்களின் "புனிதமான" தளத்தில் எழுத முயற்சித்தேன்!! இவர்களுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயமும் இவர்களுக்கு விஷம் தான் வேதவசனங்கள் உட்பட!! என் பதிவுகளை வைத்து விட்டு இவர் இப்படி எழுதியிருந்தால் நியாயம்!! கொஞ்சமும் பண்பில்லாதவர்களாக நான் கஷ்டப்பட்டு எழுதிய அனைத்தையும் இவர்கள் எங்கே போட்டார்கள் என்பது இவர்களுக்கு தான் தெரியும்!! ஆக என் பதிவு இல்லாமல் இவர் எதுவேண்டுமென்றாலும் எழுதலாம் என்பது இவர்களுக்கு கைவந்த கலையாச்சே!! தள நண்பர்கள் பல வழிகளில் வேத வசனங்களை எடுத்து சொன்னார்கள் என்பதை இவர் சொல்லும்படியே இருக்கட்டும் (என் பதிவு தான் இல்லையே), வசனம் யார் சொல்லுவதில்லை, கத்தோலிக்கர்கள் தொடங்கி மார்மோன், ஒன்லி ஜீசஸ், யெகோவா சாட்சிகள் போன்ற எத்துனையோ சபைகள் வசனம் எழுதத்தான் செய்கிறார்கள், ஆனால் அர்த்தம் தெரியாம எழுதுகிறார்கள்!! "நீ சாகவே சாவாய்" என்றால், ஆவிக்குறிய மரணம் என்கிற அர்த்தம் கொள்வோர்களிடம் வேறு என்ன அர்த்தத்தை எதிர்ப்பார்க்க முடியும்!! இப்படி வசனம் என்ன முழு வேதத்தையும் பதிவுகளாக தந்தாலும் அந்த வசனங்களின் அர்த்தம் தெரிந்தால் தானே!!
நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று இயேசு கிறிஸ்து சொன்னதை வைத்துக்கொண்டு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே என்று அர்த்தம் கொள்ளும் இந்த திரித்துவர்கள், அதே யோவான் எழுதிய மற்றோரு வசனமான,
யோவான் 17:11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
யோவான் 17:21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
அங்கே ஒன்றாக இருக்கிறோம் என்று இயேசுவும் பிதாவும் ஒருவரே என்று சாதிக்கும் இவர்கள் அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு என்பதையும் இவர்கள் அனைவரும் ஒருவரே என்று எடுத்துக்கொள்வார்களா!! இல்லையே, இது வேறு ஒன்றாயிருப்பதும், அது வேறு ஒன்றாயிருப்பது என்பதை தான் சொல்லுவார்கள்!! இது தான் இவர்கள் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் எனக்கு கொடுத்த வசனங்கள் ஆகும்!!
//அவருடைய தவறான விசுவாசத்தை குறித்து கேள்விகள் எழுப்பினோம்.//
மண்ணிக்கனும் மைகோவை அவர்களே, வேத வசனத்தின்படியான விசுவாச அறிக்கை கொடுத்திருக்கிறேன், சமயம் கிடைத்தால் வாசித்து எந்த விசுவாசம தவறானது என்று பிறகு முடிவு செய்யுங்கள்!! ஒரே திரித்துவத்தை போதிக்கும் கத்தோலிக்கர்கள் விக்கிரக ஆராதனை சபையார், அதே திரித்துவத்தை சொல்லும் மர்மோன்ஸ் கள்ள உபதேசக்காரர்கள், அதே திரித்துவத்தை சொல்லும் பெந்தகோஸ்தேக்காரர்கள் மாத்திரம் சரியான விசுவாசம் கொண்டவர்கள் என்பது சற்று வேடிக்கையாக தான் இருக்கிறது!!
//அதற்குள் நண்பர் ஈராஸ் அவர்களும் அவரோடுகூட வந்த நண்பரும் பதற ஆரம்பித்தார்கள்//
இதில் பதற என்ன இருக்கிறது!! பேசியதை எப்படி வேண்டுமென்றாலும் திரிக்கலாம் என்பதற்காக தான் நாங்கள் வேண்டாம் என்று சொன்னோமே தவிர இதில் பதற ஆரம்பித்தார்கள் என்பது உங்களின் வழக்கமான அதிகபடியான வார்த்தைகள்!! வசனம் போதிப்பவர்களை உங்களை போன்றோர் சத்துருக்களாக பார்ப்பதால் நாங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமே!!
//ஆரம்பம் முதலே ததுக்க பிதுக்க என்று ஆரம்பித்த அவர்கள் நாம் கேட்ட ஒரு கேள்விக்கும் சரியான வசன விளக்கங்களை தர இயலவில்லை.//
அடேங்கப்பா, தூக்கிப்போட்டார் ஒரு குண்டை!! பேச சென்ற நாங்கள் என்ன ஆயத்தமாகி போகாமலா இருப்போம்!! ததுக்க பிதுக்க என்பது எல்லாம் சின்னப்பிள்ளைத்தனம்!! நாங்கள் பதறினோம் என்று எல்லாம் பொய் சொல்லிவிட்டு, இவர்கள் கேட்ட அந்த கேள்வி என்ன என்பதை சொல்ல முடியவில்லையோ!! ஏனென்றால் அர்த்தமற்ற கேள்விகள் நிச்சயமாக ஞாபகம் இருக்க தான் முடியாது!! இவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் வேதத்தின்படி பதில் கொடுத்து தான் வந்தோம், ஆனால் பாரம்பரிய விசுவாசத்தில் இருக்கும் இவர்களுக்கு வசனம் நிச்சயமாக முறனாக தானே இருக்கும்!! வேறு என்ன, அந்த கேள்வி மரணத்தை குறித்து தான்!! வேதத்தில் இல்லாத "ஆவிக்குறிய மரணம்" அதன் பின் "சரீர மரணம்" என்றெல்லாம் பழகியிருக்கும் இவர்களுக்கு வசனம் சொன்னால் எப்படி இவர்களுக்கு விளக்கமாக இருக்கும்!! அதான் இவர்களுக்கு பாரம்பரியமானவர்கள் ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தால் ஒருவேளை இவர்கள் திருப்தியாகி இருப்பார்கள்!!
//.முடிவில் தேவன் மூன்று ஆள் தத்துவத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை வேத வெளிச்சத்தில் காட்டினோம்.அதற்கும் அவர்களிடம் பதிலில்லை.//
ஒன்றான மெய்தேவனை, ஒருவரே சாவாமை உள்ள தேவனை எப்படி தான் இவர்கள் மூன்றாக திரித்துவமாக காட்டி அப்படிப்பட்ட ஒரு தேவதூஷனத்தில் சந்தோஷமாக இருக்கிறார்களோ!! அதான் வசனம் இவர்களுக்கு புரியாது, ஒன்றான மெய்தேவன் என்றோ, ஒருவரே சாவாமை உள்ளவர் என்றால் ஒருவர் தான், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கிடையாது!! வேதமே இவர்களுக்கு இருட்டான ஒரு புத்தகம் தான், கருப்பு நிறத்தில் ஒரு அட்டை போட்டு அதை அப்படியே இருட்டாக தான் வைத்திருக்கிறார்கள்!! வேத வெளிச்சம் என்று சொல்லுகிறீர்களே மைகோவை அவர்களே, எந்த வெளிச்சத்தில் உங்களுக்கு தேவன் மூன்றாக இருக்கிறார் என்று சொல்லுகிறது என்பதை வசனத்துடன் அடுத்த பதிவில் காண்பிக்கும் தைரியம் இருக்கிறதா!! பாரம்பரிய கதைகள் எல்லாம் வேண்டாம், வசனம் மாத்திரமே வேண்டும்!! ஒன்றான மெய் தேவன் என்று வேதம் சொல்லுகிற மாதிரி, திரியேக தேவன் என்றோ திரித்துவ தேவன் என்றோ ஒரே ஒரு வசனம் காண்பியுங்கள், நீங்கள் வேத வெளிச்சதில் இருப்பவர்கள் தான் என்று நானும் சொல்லுகிறேன்!!
//என்று சொல்லப்படும் வசனம் பிதாவாகிய தேவன் சொல்லுகிறார் என்று சொன்ன அவர்கள் பிதா எப்பொழுது குத்தப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினர்.//
அட கடவுளே, இத்துனை பெரிய பித்தளாட்டமா!! பிதா ஒருவரே சாவாமையுள்ளவர் என்று நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம், குத்தப்பட்டவர் பிதா என்று நாங்கள் சொன்னோமாம்!! மைகோவை அவர்களே, திரித்து பேசுவதற்கு ஒரு எல்ல இருக்கிறது!! நீங்கள் தான் பிதாவும் குமாரனும் ஒன்று என்று சொல்லுபவர்கள், நாங்கள் அல்ல!! சகரியா 12ம் அதிமாரம் முழுவதையும் வாசித்து பாருங்கள், புரியும்!!
//பின்பு ஆத்துமா என்பது மரணத்திற்கு பிறகு இல்லை.அது மனிதன் மரித்தவுடன் காணாமல் போய்விடும் என்று விட்டலாச்சாரியாரின் கதை எல்லாம் சொன்னார்கள்//
கண்டிப்பாக வசனங்கள் உங்களுக்கு விட்டலாச்சாரிய கதைகள் தான் என்பதை நீங்களே எழுதி நிரூபித்து இருக்கிறீர்கள் திரு மைகோவை அவர்களே,
எசேக்கியேல் 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
எசேக்கியேல் 18:20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்;
ரோமர் 5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
இயேசு கிறிஸ்துவுக்கு தெரியாது என்று இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் போல்!! ஆத்துமா மரிக்காது என்றால், தன் ஆத்துமாவை தானே தேவனிடத்தில் ஒப்புவித்திருக்கனும்!!
ஏசாயா 53:12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி,
கிறிஸ்து தன் ஆத்துமாவை தான் மரணத்தில் ஊற்றினார்!! ஆத்துமா தான் சாகும், மரிக்கும்!! நீங்கள் போதிப்பது போல், ஆத்துமா சாவதில்லை என்பது தான் விட்டலாச்சாரியார் மாத்திரம் அல்ல, இன்னும் மற்ற எல்லா மார்க்கங்களும் போதிக்கிறது!! உங்களை போன்றோருக்கு தான் வேதத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு போதிக்கும் திறமை இருக்கிறதே!! வேதத்தின்படி பார்த்தோமென்றால் யார் விட்டலாச்சாரியர், யார் சாமியார் என்பது தெளிவாகிவிடும்!! தேவையில்லாத குற்றசாற்று!!
//மத்தேயு 10:28ல் ..............சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.)//
ஆமாங்க மைகோவை அவர்களே, ஆத்துமா அழிந்து போகும் என்பது தான் வேதம் சொல்லுகிறது, ஆனால் அது உங்களுக்கு விட்டலாச்சாரியர் கதையாக அல்லவா இருக்கிறது!! நாங்க கொடுக்க வேண்டிய வசனத்தை இப்படி நீங்களே கொடுத்தால் எப்படி!!
//என்று சொல்லுகிறாரே அப்படியானால் ஆத்துமா வேறு சரீரம் வேறு என்று இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகிறோம் இல்லையா என்று கேட்டபொழுது பதில் சொல்ல முடியாமல் எச்சில் விழுங்கினார்கள்.//
பரவாயில்லை, சில்சாம் உங்களிடமிருந்து எழுதக்கத்துக்கிடாரோக் அல்லது நீங்கள் அங்கே பயிற்சி எடுத்தீர்களா என்று தெரியவில்லை!! எச்சில் விழுங்கினதற்கு காரணம் ஒரு வேளை உங்களிடம் எங்களுக்கு தண்ணீர் கிடைத்திருக்காது!! மைகோவை அவர்களே, தூங்குவதும், உறங்குவதும் வெவ்வேறு என்றால், சரீரமும் ஆத்துமாவும் வேறு தான்!! நான் அப்ப சொன்னதை இப்பவும் சொல்ல முடியும்,
சரீரம் + ஆவி = ஆத்துமா ஆத்துமா - ஆவி = சரீரம்
இதற்கான வசனத்தை அன்று சொன்னது போலவே வார்த்தையும் வசனமும் மாற்றாமல் இன்றும் சொல்லுகிறேன்!!
ஆதி 2:7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்
பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கிய சரீரத்தில் உயிர் இல்லை, ஆகவே அங்கே ஆத்துமா என்று சொல்லப்படவில்லை, ஆனால் அந்த பூமியின் மண்ணினாலே உருவாக்கிய சரீரத்தில் ஜீவசுவாசத்தை ஊதினார் தேவன், அதன் பிறகே மனிதன் ஜீவன் உள்ள ஆத்துமாவானான் என்று வேதம் இத்துனை தெளிவாக சொல்லுகிறது, நீங்கள் என்னமோ வேத வெளிச்சத்தில் வாழுவதாக சொல்லி வருகிறீர்களே!! இருட்டில் இருந்துக்கொண்டு வெளிச்சத்தில் இருக்கிறோம் என்கிற மமதையில் இருக்க வேண்டாம், உங்களை போன்று வேதத்தை திரிப்பவர்களை குறித்து தான்,
என்று தெளிவாக தான் சொல்லியிருக்கிறார்!! ஆனால் நாள் வருகிறது, கிறிஸ்துவின் அரசாட்சியில் மூவோர் தேவன், திரித்துவ தேவன், திரியேக தேவன் எல்லாம் நாங்கள் நம்பிக்கொண்டு இருந்த விட்டலாச்சாரியர் கதைகள் தான் என்று அந்த ஒன்றான மெய்தேவனை தெரிந்த பிறகு உங்களுக்கு நிச்சயமாக புரியும்!! இப்பொழுது உங்களுக்கு இது எல்லாம் புரியாதப்படிக்கு வேதத்தில் இருக்கிறது!! அவ்வளவே!! நான் அன்று பேசிய ஒன்றையும் திரித்து பேசவில்லை, இதே வசனங்களை தான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்லுகிறேன்!!
//இப்படி எங்களுடைய கலந்துரையாடல் போய்கொண்டிருந்த பொழுது திடீர் என்று இவர்களுடன் வந்த அந்த அங்கிள் மிகவும் கோபத்துடன் ஈராஸ் அவர்களையும் அவருடன் கூட வந்த சகோதரனையும் பார்த்து கடிந்துகொண்டார்.நம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் இந்த சகோதரர்கள் வைக்கும் வசன ஆதாரங்களுக்கு நம்மால் பதில் அளிக்க முடியவில்லை.இதில் நாம் எதற்கு இப்படியெல்லாம் வரவேண்டும் என்று சாட ஆரம்பித்தவர் ஒரு நிலையில் எழுந்து எங்களிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.//
அடேங்கப்பா, என்ன ஒரு மேட்டிமைப்பா உங்களுக்கு எல்லாம்!! வேத பண்டிதர்கள் அல்லவா நீங்கள்!! இவர்கள் எங்களுடன் வயதில் சின்னவர்களாக இருப்பது உண்மையே, ஆனால் வசன ஆதாரங்கள் அல்ல, பாரம்பரியத்தை வைத்து வாதாடுவதில் கில்லாடியாக இருப்பவர்கள் அய்யா நீங்களும் உங்கள் கூட்டனியும்!! இப்பவும் நீங்கள் எழுதிய பதிவில், ஏதோ சகரிய 12:10ஐ தவிர வேறு எந்த வசனத்தை தான் எழுதியிருக்கிறீர்கள், அன்று பேசியதை தான் சொல்லுகிறேன்!! எங்க கூட வந்த வயதில் மூதவரான அங்கிள் அவர்கள் நிச்சயமாக எங்களை சத்தம் போட்டார், நீங்கள் வேத பண்டிதர்கள் என்பற்காக அல்ல, மாறாக வேத சூனியர்களான உங்களுடன் வாதாடுவது நேரத்தின் விரியமே என்பதால் தான்!! பாரம்பரியத்தை மாத்திரமே நம்பி வாதிட்டதை தயவு செய்து வசனத்துடன் வாதிட்டோம் என்று மனசாட்சிக்கு விரோதமாக எப்படி தான் எழுத தோன்றுகிறதோ!! கேட்க ஆள் இல்லை என்று தானே!! உங்கள் தளத்தில் நீங்கள் சர்வாதிகாரியாக இருக்கலாம், அதற்காக எல்லார் மேலும் உங்கள் சர்வாதிகாரம் செல்லாது!!
//அதன் பிறகு அருமை நண்பர்கள் இருவரும் மிகவும் கோபத்துடன் பேசினர்.நாங்களும் அவர்களுக்கு பதில் அளித்தோம்.ஆனால் முடிவில் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு வேறு மொழிபெயர்ப்பில் பார்த்து பதில் சொல்லுவதாக சொல்லி நடையை கட்டினர்//
வசனம் தெரியாமல், வாய்க்குவாய் பாரம்பரியம் பேசுவோரிடம் கோபம் கொள்வதில் தப்பொன்றும் இல்லை!! ஆலயத்தின் வியாபார கும்பளை விரட்டி அடிக்க இயேசு கிறிஸ்து ஆயுதம் ஏந்தினாரே, அதே கோபம் தான் இன்றைய ஆலய விபாரிகளான உங்களை போன்றோர் மேலும்!!
யார் குழப்பத்தில் இருக்கிறார்கள், யார் விட்டலாச்சாரியம் பேசுகிறார்கள், ஒன்றான மெய்தேவனை திரியேக தேவனாக திரித்து பேசுபவர்கள் நிச்சயம் மிகவும் சீக்கிரம் கிறிஸ்துவின் ராஜியத்தில் புரிந்துக்கொள்வார்கள், ஏனென்றால் எல்லாரும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவேண்டும் என்பதே தேவனின் சித்தமே அன்றி, உங்களின் விட்டலாச்சாரிய கதை போல், அனைவரையும் தூக்கி நரகம் என்கிற மற்றோரு மாயஜாலத்திலும், பிற மதங்களில் இருந்து கடன் வாங்கிய ஒரு இடத்தில் போடுவது அல்ல என்பதை கூடுதலாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்!!
//கிறிஸ்துவுக்குள் அன்பான கோல்வின் அவர்களுக்கு நீங்கள் சார்லஸ் ரசலை குறித்து எழுதும் விசயங்களில் மிகக்குறைவானதையே நான் படித்துள்ளேன். உங்களின் இந்த திரியில் எழுத்து எழுத்துக்கள் சாத்தானின் உபதேசங்களுக்கு ஒரு சவுக்காகவே இருக்கும்.இதிலிருந்து ரூதர்போர்ட் பிரித்த வேதாகம மாணாக்கர்கள் பற்றியும் எழுதுங்கள். அதுவும் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டியவைகளே.கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக..!//
இது வேதத்தை விட காஸ்ட்லியான ஒரு பதிவு, பட கூடாதவரின் பாதம் பதிந்து விட்ட ஒரு சந்தோஷம், மனிதர்களை ஆராதிக்கும் கூட்டத்தாரின் ஆர்பரிப்பு, யப்பா, இந்த பதிவில் என்ன தான் அப்படி முத்து என்பது வாசிப்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்!! வேத வசனத்தை ஒதுக்குவோருக்கு நிச்சயமாக மனிதனின் அறியாமை கூட முத்தாக தான் இருக்கும்!!
//வெட்கப்படுத்திய கோவை என்ற தலைப்பிலேயே வெட்கப்பட்டுப்போனது கோவை பெரியன்ஸ் என்பது தெளிவாகிறது. ஆனால் வெட்கபடுத்தியது சகோ. மைகோவை அல்ல.... அவர்மூலம் செயல்பட்ட திரியேக தேவன் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மனதில்லாமல், சகோ. மைகோவை மீது மனுஷீகமான குற்றச் சாட்டினை வைக்கிறார்கள். //
நான் முன்னமே எழுதியிருக்கிறேனே, நாங்கள் ஏன் வெட்கப்பட்டு போனோம் என்று, எங்களை வெட்க்கப்படுத்தியது அவர்களின் வேத அறிவீன்மைதான்!! எங்களை வெட்கப்படுத்தியது அவர்களின் பாரம்பரியங்கள் தான், எங்களை வெட்கப்படுத்தியது அவர்களின் கலாச்சாரங்கள் தான், எங்களை வெட்கப்படுத்தியது அவர்கள் வசனத்தை திரித்து பேசியது தான்!!
ஒன்றான மெய் தேவனை திரியேக தேவன் என்று சொல்லுபவரி வேத அறிவை பார்த்து வெட்கப்படாமல் என்ன செய்வது!! உங்களுக்கு எல்லாம் ஒரே ராகத்தின் வாத்தியம் வாசித்தால் தான் பிடிக்கும், ஆனால் நான் சத்தியத்தை சொல்லிக்கொண்டிருக்கும் இந்த தளம் உங்கள் சர்வாதிகார தளம் போன்று அல்ல!! இங்கே அனைவரும் எழுதலாம், விவாதிக்கலாம், அவர்களாகவே தான் விளக்கிக்கொண்டும், விளகிக்கொண்டும் போகிறார்களே தவிர, நான் ஒரு போதும் ஒருவரையும் நீக்கியது இல்லை!!
பாரம்பரிய கிறிஸ்துவத்தை என்னி இப்பவும் வெட்கப்படுகிறேன் என்பது உண்மையே!! மற்றபடி கொல்வின் எழுதுவது போலவோ, மைகோவை எழுதுவது போலவோ அவர்களின் வேத ஞானத்தினால் நான் வெடக்ப்பட்டு போகும் அளவிற்கு அவர்களிடம் பேச ஒன்றும் இல்லை, விஷயமும் இல்லை விளக்கமும் இல்லை!!
அவர்களிடம் பேசியது,
1. மரணம் என்றால் என்ன!! 2. ஆத்துமா சாகுமா சாகாதா!! 3. தேவன் ஒன்றா மூன்றா!!
இவ்வுளவே, இதற்கு நாங்கள் தந்த வசனத்தை அல்ல, மாறாக இத்துனை பேர் (அதான் அநேகர்) பின்பற்றுவது தவறாகிவிடுமோ என்கிற பாரம்பரியமான பதிலையே தான் திரு மைகோவை அவரின் சகோதரர் மற்றும் அவர்களின் நண்பர் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்!!
கத்தோலிக்கர்களும் சரி, ப்ரொடஸ்டண்ட் சபைகளும் சரி, அதன் பின் ஆவியின் பெயரை சொல்லிக்கொண்டு காளானை போன்று முழைத்த ஆயிரமாயிரம் குட்டி சபைகளும் சரி, இவர்களின் ஒரே ஒற்றுமை திரித்துவம், திரியேகத்துவம்!! ஆனால் வேதம் சொல்லுவது ஒன்றான மெய்தேவன், ஒருவராய் சாவாமை உள்ளவர் என்று!! கொஞ்சமாவது வேத வசன பழக்கம் இருந்தால் தானே, இது ஏன் ஒன்று என்று இருக்கிறது என்று பார்ப்பீர்கள்!! பாரம்பரியத்தில் இருக்கும் உங்களை போன்றோருக்கு கொவை பெரேயன்ஸ் வெட்கப்பட்டு போனது என்னமோ உண்மை தான், ஆனால் அது உங்களின் பாரம்பரியங்களை பார்த்து தான், அது உங்களின் வசன புரிந்துக்கொள்ளுதலை பார்த்து தான்!!
நீங்கள் டாக்டர் என்று எழுதுவதால் மருத்துவ டாக்டரா அல்லது லிட் டாக்டரா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் மருத்துவ டாக்டராக இருந்தீர்களென்றால் வேதமும் விஞானமும் மரனத்தை குறித்து ஒரே விஷயம் தான் சொல்லுகிறது என்பதை உங்களால் மறுக்கவோ மறைக்கவோ முடியாது!!
மரணத்தில் ஆத்துமா இடம் மாறுவதில்லை, மாறாக ஆத்துமா தான் மரிக்கிறது!! சரீரத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஆவி வெளியேறினவுடன் மரணம் சம்பவிப்பது அனைவரும் அறிந்ததே!!
வழக்கத்தின்படி பேசுவோமென்றால்,
தேவனே என் சபைக்கு ஆத்துமாக்களை அனுப்பும் என்று வாரா வாரம் ஜெபிக்கும் ஆவிக்குறிய சபை எந்த ஆத்துமாக்களை குறித்து பேசுகிறது, நீங்கள் (உங்களை போன்றோர்) என்னிக்கொண்டிருக்கும் கண்ணுக்கு தெரியாத "ஆத்துமா"வா அல்லது உயிருடன் நடமாடிக்கொண்டிருக்கும் மனிதர்களா??
Not a single SOUL was seen on the rainy day,
என்பது அந்த மழை நாளில் ஒரு ஆத்துமாவையும் வெளியில் காணோம் என்பது ஏதோ ஆவிக்குறிய ஜீவிகள் காணவில்லை என்று அல்ல, மாறாக, மனிதர்கள் முதல், மிருகங்கள் வரை எதையுமே காணோம் என்பது தான் அதன் அர்த்தம்!! வேதத்தை தேவனின் வார்த்தையாக வாசித்தோமென்றால் புரியும், கொல்வினின் வசந்தகுமாராகவும், இன்னொருவரின் தினகரனாகவோ, மற்றோருவரின் பென்னி ஹின்னாகவோ, இன்னும் சிலரின் வாட்ச்மேன் நீயாகவோ, இன்னும் பலரின் பால் யாங்கிசோ வாகவோ, ஆலன்பாலாகவோ, மோஹன் சி லாசரசாகவோ பார்த்தீர்ககளென்றால் புரியவே புரியாது!!
நீங்களோ அல்லது மைகோவையோ தருகிற இதே போதனையில் தான் நானும் வளர்ந்தவன், ஆனால் தப்பு என்று தெரிந்த பின்பு வெளியேறுவது தான் நியாயமே தவிர, அதில் உட்கார்ந்துக்கொண்டு அதான் இத்துனை கோடி ஜனங்கள் இதை பின் பற்றுகிறார்களே, இதி என்ன தவறு இருக்க முடியும் என்றால் அதைவிட முட்டாள்தனமானது ஒன்றுமே கிடையாது!!
வெளி 18:4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
அவள் என்கிற அந்த மகா வேசியான சபையும், அவளிடமிருந்து மதுவை வாங்கி பருகிய மற்ற ராஜக்களிடமும் சேராமல் இருப்பது நல்லதே, அதில் இருந்து வெளியேறுவதே தேவனின் கட்டளை!! நீங்கள் எல்லோரும் பாரம்பரியம் பாடினதை ஒரே ராகத்தின் பாடிக்கொண்டிருங்கள்!! வாழ்த்துக்கள்!!