kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


யெளவன ஜனம் தளத்தில் கொல்வின் அவர்கள் எழுதியது:

//மனிதனால் புரிந்திட முடியாதவை

ஆதிச்சபையின் இறையிலாளர்களில் முக்கியமானவரும், கிறிஸ்தவ சபைச் சரித்திரத்தில் இன்றுவரை நிலைத்து நிற்பவருமான ஒகஸ்டீன் (கி.பி.354-430) என்பார் ஒருநாள் கிறிஸ்தவ இறையியலில் முழுமையானதும் தெளிவானதுமான விளக்கத்தை எவராலும் கொடுக்க முடியாத திரித்துவ உபதேசத்தைப் பற்றி மனக்குழப்பத்துடன் கடற்கரையில் வந்து கொண்டிருந்தார்.

திரித்துவ உபதேசத்தைப் பற்றிச் சிந்தித்த வண்ணமாக்கச் சென்று கொண்டிருந்த ஒகஸ்டீன், கடற்கரை மணலில் ஒரு சிறு குழியைத் தோண்டி, அதைக் கடல் நீரால் நிரப்பிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார். அவனது செயல் ஒகஸ்டீனுக்கு வேடிக்கையானதாய் தென்பட்டமையால் சிறுவனே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?“ என்று கேட்டார்.

ஒகஸ்டீனின் கேள்விக்குப் பதிலளித்த அச்சிறுவன் “ஓ அதுவா! நான் கடலை இக்குழிக்குள் போட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்“ என்றான்.  சிறுவனின் பதில் ஒகஸ்டீனுக்கு பாரிய உண்மையை வெளிப்படுத்தியது. “திரித்துவ உபதேசம் மானிட அறிவால் கிரகித்து புரிந்து கொள்ள முற்படுவது, கடலை சிறு குழிக்குள் போட முற்படுவதற்குச் சமனானது. கடலைப் போல விசாலமான தெய்வீக விடயங்களை சிறிய மூளைக்குள் கொண்டுவர முயல்கின்றேனே” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

தேவனைப் பற்றிய மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விடயங்களுக்கு முழுமையான விளக்கங்களை நம்மால் கொடுக்க முடியாது. திரித்துவம், இயேசுவின் இருதன்மைகள், தேவனுடைய தெரிந்து கொள்ளுதல், பிசாசின் வீழ்ச்சி போன்ற சில முக்கிய விடயங்களுக்கு முழுமயான விளக்கங்கள் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. இதற்குக் காரணம், நமது குறுகிய மூளையினால் அவற்றை புரிந்து கொள்ளமுடியாதிருப்பதேயாகும். இதனால், நாம் அறிந்து கொள்வதற்கு அவசியமான விடயங்களை மட்டுமே தேவன் வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தேவன் வெளிப்படுத்தி உள்ளவற்றுக்கு மேலதிகமாக அறிந்து கொள்ள முற்படுவது அர்த்தமற்றது. ஏனென்றால், அது வெறும் ஊகங்களுக்கும் உபதேசக் குழப்பங்களுக்குமே வழிவகுக்கும். இவ்விடயத்தில் தேவன் நமக்குப் பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்.

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். (உபா 29:29)//


திரித்துவத்தை வேதத்திலிருந்து திரித்து சொல்லுபவர்களுக்கு வசனம் கிடைக்காததால் போட்டார் ஒரு போடு,

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். (உபா 29:29)

ஐய்யா, வ‌ச‌ன‌ம் எல்லாம் ச‌ரி தான், திரித்துவ‌ம் வெளிப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌தா என்ப‌து தான் கேள்வியே!! வெளிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து என்றால் பிற‌கு ஏன் வ‌ச‌ன‌ம் இல்லை, ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌து என்றால், திரித்துவ‌ம் இருக்கிற‌து என்று எப்ப‌டி க‌ண்டுபிடித்தீர்க‌ள்!!

திரித்துவ‌த்தை, மின்சார‌த்தில், ஐஸ் க‌ட்டியில், நீராவியில், தேங்காயில், இன்னும் எத்துனையோ வித‌மாக‌ சொல்லியும், வ‌ச‌ன‌த்தால் சொல்ல‌ முடிய‌வில்லையே!! எழுதிய‌த‌ற்கு அதிக‌மாக‌ என்னாதிருங்க‌ள் என்ப‌து திரித்துவ‌ம் பேசுப‌வ‌ர்க‌ளுக்காக‌ தான் எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து!!

ம‌னித‌னை தேவ‌ன் த‌ன் சாய‌லிலும், த‌ன் ரூப‌த்திலும் ப‌டைத்திருக்கிறார், அவ‌ர் வேத‌த்தின் மூல‌மாக‌ த‌ன்னையும் ச‌ரி,த‌ன் குமார‌னையும் ச‌ரி முழுமையாக‌ வெளிப்ப‌டுத்தியிருக்கிறார்!! அப்ப‌டி இருக்கும் போது த‌ன்னை மூன்றாக‌ அல்ல‌து மூன்றில் ஒன்றாக‌ இருப்ப‌தாக‌ சொல்லியிருப்பார், மாறாக‌ ஒன்றான‌ மெய் தேவ‌ன் என்று தான் த‌ன்னை வெளிப்ப‌டுத்தினார்!! வெளிப்ப‌டுத்திய‌தை விட்டு விட்டு ஒக‌ஸ்டின் (க‌த்தோலிக்க புனித‌ரான‌ அக‌ஸ்டினுக்கு கூட‌ புதிய‌ பெய‌ரை வைத்து விட்டார்க‌ள், திரித்துவ‌த்தை எப்ப‌டியாவ‌து நிறுபித்து விட‌லாம் என்கிற‌ ந‌ப்பாசை தான்) வெளிப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ திரித்துவ‌த்தை நினைத்து ம‌ன‌குழ‌ப்ப‌ம் அடைவ‌தில் என்ன‌ ஆச்ச‌ரிய‌ம்!! அது தானே இருப்ப‌திலெயே ஒரு பெரிய‌ இர‌க‌சிய‌ம் (ப‌வுலுக்கும் தேவ‌ன் சொல்ல‌வில்லை) குழ‌ப்ப‌த்தில் ச‌பைக‌ளை ந‌ட‌த்தும் ஒரு அடிப்ப‌டை குழ‌ப்ப‌ கோட்பாடு இந்த‌ திரித்துவ‌ம்!!

//தேவனைப் பற்றிய மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விடயங்களுக்கு முழுமையான விளக்கங்களை நம்மால் கொடுக்க முடியாது. திரித்துவம், இயேசுவின் இருதன்மைகள், தேவனுடைய தெரிந்து கொள்ளுதல், பிசாசின் வீழ்ச்சி போன்ற சில முக்கிய விடயங்களுக்கு முழுமயான விளக்கங்கள் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. இதற்குக் காரணம், நமது குறுகிய மூளையினால் அவற்றை புரிந்து கொள்ளமுடியாதிருப்பதேயாகும். இதனால், நாம் அறிந்து கொள்வதற்கு அவசியமான விடயங்களை மட்டுமே தேவன் வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார். //

வேத‌த்தை கொடுத்த‌ தேவ‌னை வேத‌த்தில் மூல‌மாக‌ முழுமையாக‌ புரிந்துக்கொள்ள‌ முடியும், பார்க்க தான் முடியாது, பேச‌ தான் முடியாது (ஆனால் சில‌ பெந்த‌கோஸ்தே ஊழிய‌ர்க‌ள் என‌ப்ப‌டும் ம‌க்க‌ள், இப்பொழுத்து பெந்த‌கோஸ்தே மாத்திர‌ம் அல்ல‌, க‌த்தோலிக்க‌ ச‌பையிலும் ப‌ல‌ர் தேவ‌னை பார்க்கிறார்க‌ள் பேசுகிறார்க‌ள்)!! அப்ப‌டி என்றால் தேவனால் வேதத்தில் வெளிப்ப‌டுத்தாத‌ இந்த‌ "திரித்துவ‌ம்" யார் கொண்டு வ‌ந்த‌து என்று இப்ப‌வாவ‌து புரியுதா? அதான் எதிராளியான‌ சாத்தான் யாரை விழுங்க‌ளாம் என்று க‌ர்ஜித்துக்கொண்டிருக்கும் போது, காண்ஸ்ட‌ன்டைன் மாட்டினான், "திரித்துவ‌ம்" பிற‌ந்த‌து!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:
RE: யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


//திரித்துவ உபதேசம் மானிட அறிவால் கிரகித்து புரிந்து கொள்ள முற்படுவது, கடலை சிறு குழிக்குள் போட முற்படுவதற்குச் சமனானது.//

மானிட அறிவால் கிரகிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத திரித்துவ உபதேசத்தை எந்த மானிடன் உருவாக்கி, அதற்கு “திரித்துவ உபதேசம்” எனப் பெயர் வைத்தான்?

கிரகிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத ஓர் உபதேசத்தால் யாருக்கு என்ன பயன்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரித்துவம் பேசுபவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது, அதை புரிய வைக்க முடியாது, அது ஒரு இரகசியம், ஆனால் வேதத்தில் இல்லாத இரகசியமாக போய் விட்டது!! வேதத்தில் நேரடியாக கொடுக்கப்படாததை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும், கொடுத்ததை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒருவர் ஒரு காலத்தில் தன் தளத்தில் பதிவு செய்ததாக நினைவு இருக்கிறது!!

திரித்துவம் என்பது வெளி மார்கங்களிலிருந்து கிறிஸ்தவத்திற்குள் "கூட்டம்" சேர்க்கவே அறிமுகமான ஒரு தத்துவமாகும், மற்றபடி வேதத்திற்கும் இந்த கோட்பாட்டிற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது!!

இதை வசனம் கொண்டு விளக்க முடியாதவர்கள் தான் தண்ணீர், ஐஸ் கட்டி, நீராவி, மின்சாரம், வையர் (), இன்னும் இப்படி பட்டதை வைத்து தான் விளக்க முன்று அநேகரை வஞ்சகத்திற்குள் நடத்திக்கொண்டு செல்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!!

சிலருக்கு இதன் பேரில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அநேகர் இதை விசுவாசிக்கிறார்களே, இத்துனை பெரிய தேவ மனிதர்கள், ஊழியர்கள், வெளிநாட்டிலிருக்கும் பல எழுப்புதல் வீரர்கள் (!!) இதை போதிக்கிறார்களே என்கிற மாயையில் விழுந்து விடுகிறார்கள் என்பது மற்றோரு மறுக்க முடியாத உண்மை!!

தொடார்ந்து நாம் வேதத்தில் இருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்துவோம், உணர்வு பூர்வமான விசுவாசம் உள்ளவர்கள் அவர்கள் வழிகளில் நடக்கட்டுமே!! சத்தியம் ஒரு நாள் வெலி வரும், அனைவரும் புரிந்துக்கொள்வார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


///தேவனைப் பற்றிய மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விடயங்களுக்கு முழுமையான விளக்கங்களை நம்மால் கொடுக்க முடியாது. திரித்துவம், இயேசுவின் இருதன்மைகள், தேவனுடைய தெரிந்து கொள்ளுதல், பிசாசின் வீழ்ச்சி போன்ற சில முக்கிய விடயங்களுக்கு முழுமயான விளக்கங்கள் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை.///
அவரின் கருத்துக்கள் நன்றாக இருந்தாலும், சில விஷயத்தில் குழம்பிப்போன உபதேசத்தையே கொண்டுள்ளார்.
வேதத்தில் திரித்துவத்துக்கான அனேக விளக்கம் இருந்தாலும் அதை புரிந்து கொள்ளமுடியாது என்று எழுதிய சிந்தனையை என்னவென்று சொல்வது? திரு.கொல்வின் அவர்களே, தங்களின் குழப்பநிலை தீர இறைவன் தான் உதவ வேண்டும்.


__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரித்துவம் என்கிற வார்த்தை இயேசு கிறிஸ்து பரமேறிய சில நூற்றாண்டுகளுக்கு பின்னரே சபையில் வந்தது!! வேதத்தில் திரித்துவம் என்கிற ஒரு வார்த்தை இல்லாததினால் மாத்திரம் அல்ல, அந்த கருத்திற்கான ஒத்து போகிற வேறு வசனமும் இல்லை!! திரித்துவம் என்பது கிறிஸ்தவத்திற்கு சம்பந்தமே இல்லாம வந்த ஒரு மனித கோட்பாடு!! சரி திரித்துவம் என்கிற வார்த்தையோ அதை சேர்ந்த வசனமோ வேதத்தில் இருக்கிறதா என்று பார்த்தோமென்றால் இல்லை, அது மாத்திரம் அல்ல, திரித்துவத்தை அர்த்தம் கொள்ளும் வசனம் கூட வேதத்தில் இல்லையே!! ஆனால், வசனத்தை திரித்து திரித்துவத்தை நிரூபிக்க நினைப்பவர்கள் அநேகர் உண்டு!!

இத்துனை ஜனங்கள் திரித்துவம் என்கிற மாயையில் வஞ்சிக்கப்பட்டிருக்க முடியும் என்று கூட சிலர் கேட்கலாம்!! ஒரு தப்பான கோட்பாட்டை இத்துனை பேர் நம்ப கூடுமா என்கிற தப்பான என்னம் கூட அநேகருக்கு வரலாம்!! ஏன் கூடாது என்று நான் கேட்பேன், இதற்கு முன் இப்படி நடந்ததில்லையா!!  மார்ட்டீன் லூத்தரின் சீர்த்திருத்தம் (Reformation) வரும் முன் முழு கிறிஸ்தவமே ஒரு தப்பான கோட்பாட்டில் தானே சிக்கி இருந்தது!! பாவ மண்ணிப்பு என்கிற சீட்டால் மண்ணிப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தானே இருந்தது!! கோடா கோடி ஜனங்கள் அதே போல் இன்னும் திரித்துவம் என்கிற தப்பிதத்தில் தான் நடந்து வருகிறார்கள்!! கத்தோலிக்கர்கள் முதல் பெந்தகோஸ்தே சபையினர் வரையில் இன்று சகோதர பாசத்தில் இருப்பது வஞ்சிப்பினால் வந்த இந்த திரித்துவ எனும் கோட்பாட்டினால் என்று சொன்னால் மிகையாகாது!!

விஞானிகள் கொண்டு வந்த பரிணாம வளார்ச்சி கோட்பாடு (Evolution Theory) எப்படி நாத்தீகர்களை கட்டி வைத்திருக்கிறதோ, அப்படியே தான் கத்தோலிக்க சபை கொண்டு வந்த திரித்துவம் என்கிற கோட்பாடு கிறிஸ்தவர்களை கட்டி வைத்திருக்கிறது!! "அநேகர்" என்கிற கூட்டம் தான் சுலபமாக வஞ்சிக்கப் படும்!!

கத்தோலிக்க சபை திரித்துவம் மாத்திரம் அல்ல, மாதா, புனிதர்கள் வணக்கம் என்றும் தான் கொண்டு வந்தார்கள்!! அதை எல்லாம் கேள்வி கேட்டு ஒதுக்கியவர்கள், திரித்துவத்தை கேள்வி கேட்காதத்தினால் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்!! சத்தியம் தெரிய வேண்டுமென்றால் கேள்வியும், தேடலும், ஆறாய்சிகளும் மிகவும் அவசியமே!!

லூக் 11:9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்டும்.

யாக்கோபு 1:5. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:


திரு.சில்சாம் அவர்களே, உங்களின் கருத்துகள் அனைத்தும் மிகவும் சரியே. இந்த ஏஞ்சல் டிவியில் வரும் இந்த போலியான திர்க்கதரிசி எந்தவித தேவபயமும் இல்லாமல் பொய்யாக திர்கதரிசனம் சொல்வதை நினைத்து மிகவும் கவலை கொள்கிறேன். மக்களை இப்படியான போலியான உபதேசங்களில் இருந்து எப்படியாவது காக்கவேண்டியது எமது கடமை. உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்களுடன் ....
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40713603


-- Edited by Theneer Pookal on Tuesday 25th of January 2011 01:55:36 AM

-- Edited by anbu57 on Tuesday 25th of January 2011 06:37:36 AM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


சாது மாத்திரம் இல்லை, இது போன்ற இன்னும் பலர் இருக்கிறார்கள்!! இவர்கள் இப்படி பேசக்காரணம் என்ன தெரியுமா? எனங்களுடன் தேவன் பேசுவார் என்று இவர்கள் அநேகரை வஞ்சித்து வைத்திருப்பது தான்!! எனக்கும் சாதுவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை (மனிதர்கள் என்கிற முறையில் தான்!!), சொல்ல போனா அவர் ஆடமபரத்தில் என்னை விட அநேக மடங்குகள் அதிகமாக தான் இருக்கிறார்!! தலை சாய்க்க இடம் இல்லை என்று சொன்னவரின் ஊழியர்கள் இன்று பெரும்வாரியாக ஆடம்பரத்தின் உச்சியில் தான் இருக்கிறார்கள், அது மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஊழியர்களாக இருந்தாலும் சரி அல்லது நம் தேசத்தில் உள்ள தினகரன் தொடங்கி உள்ளூர் ஊழியர்கள் ஆனாலும் சரி!!

இப்படிப்பட்டவர்களிடம் பேசும் தேவன் ஏன் நம்மை போன்ற சாதாரன மக்களிடம் பேசுவதில்லை என்பது ஆச்சரியமான ஒரு விஷயம் தான்!! ஏனென்றால், இவர்களுக்குள் இருந்து பேசும் அந்த ஆவி தேவன் தந்திருக்கும் பரிசுத்த ஆவி அல்ல, மாறாக இயேசுவிற்கு சகல இராஜியங்களையும், செல்வங்களையும் காண்பித்த சாத்தானின் ஆவியே என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!!

இப்படி தேவன் இவர்களிடத்தில் பேசுகிறார் என்று நம்பும் நம் ஜனங்களுக்கு இது புரியவே புரியாது, ஏனென்றால் ஜனங்களை இது போன்ற ஊழியர்கள் (!!) ஏதோ ஒரு மாயையில் கட்டி வைத்திருக்கிறார்கள், வசியப்படுத்தி வைத்திருக்கிறார்கள்!! இவர்கள் பேசும் விதம், இவர்கள் கைகளை ஆட்டும் விதம், இவர்கள் கண்ணீர் வடிக்கும் விதம், இவர்கள் சாந்தமாக தோன்றும் முகம், ஒரு சிலரின் எளிமையாய் தோன்றும் வேஷம், கண்டு நம் ஜனங்கள் மயங்கி போய் மாட்டிக்கொண்டு தங்களுக்கு இல்லை என்றாலும் இது போன்ற ஓநாய்களுக்கு கொடுத்து பழகிவிட்டார்கள்!! இப்படி பணத்திற்கும் செல்வாக்கிற்கும் ஆசைப்படும் இவர்கள் நிச்சயமாக பரலோக தேவனுக்கு ஊழியர்களாக இருக்கவே முடியாது!!

ஏஞ்சல் டீவீ யில் வரும் இரண்டு  கள்ள தீர்க்கதரிசிகள் (சாது மற்றும் செல்வகுமார்) மற்றும் அவர்கள் பேசும் போது தலையாட்டி எதிர்கேள்வியே கேட்க தெரியாத ஒரு தொகுப்பாளர்!! இந்த இருவரின் கூட்டனி எங்களிடத்தில் தேவன் பேசுகிறார் என்று மிகவும் சரளமாக சொல்லுவதை கேட்க முடியும்!! இது போன்ற வஞ்சகர்கள் வெடக்ப்படும் நாள் மிகவும் சமீபத்தில் இருக்கிறது, தேவன் நியமித்த நியாயத்தீர்ப்பு நாட்கள் நெருங்கி வருகிறது என்பது மாத்திரம் இது போன்ற கள்ள தீர்க்கதரிசிகள் மற்றும் கள்ள கிறிஸ்துக்கள் தோன்றுவதால் அறிந்துக்கொள்ள முடிகிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


ஒரு மனிதனை ஆறாய எடுத்துக்கொண்ட நேரத்தில் ஒரு வசனத்தை ஆறாயந்திருந்தால் திரித்துவம் என்கிற பூத கோட்பாட்டிலிருந்து வெளியே வந்திருக்க முடியும்!!

//Facebook பக்கம் போனால் தெரியும் இவரைப் பற்றி. கத்தோலிக்க மதத்திலிருந்து 4 மாதங்களுக்கு முன்பாகவே ஜெகோவா சாட்சிகள் சபைக்கு சென்றுவிட்டவர்.//

ஆனாலும் கத்தோலிக்கம் என்பதை ஒரு மதம் என்று ஒப்புக்கொண்டு பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள்!! அந்த மதத்திலிருந்து (ஏனென்றால் அது கிறிஸ்தவ மதம் கிடையாதே) தோன்றிய திரித்துவம், திரியேகத்துவம், இன்னும் பல மனித கோட்பாடுகளை முக்கியத்துவம் படுத்திய கத்தோலிக்க மதம், பிற பிரிவினர்களுக்கும் அதையே தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்! வெளி.  புத்தகத்தின் ஒரு வசனம் இதன் மூலம் நிறைவேறுகிறது என்பதில் எந்த குழப்பமும் கிடையாது!!

வெளி 18:3 அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.

தாம் இருப்பது மகா வேசியான பாபிலோனிய சபை என்று கூட தெரியாமல் பிறரை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்கிற கூச்சம் கொஞ்சம் கூட கிடையாமல் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது!! அந்த தப்பிதமான மனித கோட்பாடுகளை (உக்கிரமான மதுவை) முதலில் எல்லா ஜாதிகளும் குடித்தார்களாம் (யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் சாரி கத்தோலிக்கர்கள் ஆனாலும் அவர்களே ஏற்கனவே பின்பற்றிய சடங்காச்சரியங்களுடன் கத்தோலிக்கர்களின் அருவருப்பான கோட்பாடுகளை பின்பற்றினார்கள்)!! இப்படி கத்தோலிக்கம் என்கிற ஒரு மதத்தில் இருந்துக்கொண்டு திரு கொல்வின் அவர்களும் இன்னும் யெகோவா சாட்சிகள் மற்றும் வேதமானவர்களுகு வித்தியாசம் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!!

தேநீர் பூக்கள் அவர்களின் விசுவாச அறிக்கையை வாசித்தோமென்றால் அவர் எந்த விதத்திலும் யெகோவா சாட்சி கிடையாது என்பது நிச்சயம்!! இந்த விசுவாச அறிக்கை வேத மாணவர்களின் விசுவாச அறிக்கை என்பதை அறிவேன்!! கத்தோலிக்க மதத்தைக்காட்டிலும், பெந்தகோஸ்தே மார்கத்தை காட்டிலும், இவர்கள் தந்திருக்கும் வசன விளக்கம் சரியாக இருக்கிறது!! விசுவாச அறிக்கையே வசனத்தின் படி தான் இருக்கிறது
http://kovaibereans.activeboard.com/index.spark?aBID=128972&p=3&topicID=40690119

//வேதத்தை ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் ஆயினும் என்ன பயன் சரியான சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லையே.//

கத்தோலிக்க மதத்தில் இருந்துக்கொண்டு அந்த மதத்தில் தோன்றிய மனித கோட்பாடுகள் சரியான சத்தியம் என்று இருப்பவர்களுக்கும், அந்த மனித கோட்பாடுகளை அப்படியே தழுவி மார்க்கம் தப்பியவர்களுக்கும், வேதத்தை ஆறாய்ந்துப்பார்ப்பவர்கள் சொல்லும் சத்தியம் இப்படி தான் இருக்கும்!! புரியாது!! புரியவே புரியாது!!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39729174



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


http://en.wikipedia.org/wiki/Roman_Catholic

திரு கொல்வின் அவர்கள் தந்த இந்த பக்கத்தில் பார்த்தால் துவக்கத்தில் கிடைத்தை பார்ப்போம்:

The Catholic Church, also known as the Roman Catholic Church, is the world's largest Christian church, claiming over a billion members world wide.[1] Its spiritual head is the Pope.

அதாவது கதோலிக்க சபை அல்லது ரோமன் கத்தோலிக்க சபை என்பது உலகத்தில் பெரிய (என்னிக்கையில்) கிறிஸ்தவ சபை, பல கோடி மக்களை என்னிக்கையில் கொண்டதும், போப் என்பவரை அதன் ஆவிக்குரிய அல்லது ஆன்மீக தலைவராக ஏற்று கொண்ட ஒரு சபை!!

என்னை தருபதேசம் தருவாதக சொல்லிக்கொண்டு போப்பின் தலைமையுள்ள ஒரு சபையில் இருப்பது உங்கள் விருப்பம்!! ஆனால் வேதத்தின்படி நான் என் ஆவிக்குரிய தலைவரும், என் சபைக்கு தலையுமான கிறிஸ்துவை தான் ஏற்றுக்கொண்டு இருக்கிறேன்!! இரண்டு எஜ்மானனுக்கு ஊழியம் செய்ய முடியாது!! அது கத்தோலிக்க மதத்தில் உள்ளவர்களுக்கு எப்படியோ, தெரியவில்லை, ஆனால் போப்பின் போதனைகளும், வேதத்தின் போதனைகளும் தலைகீழ் என்பது மாத்திரம் நான் அறிவேன்!! சீக்கரமே பல போப்புகளின் கிறுக்குத்தனமான தேவ தூஷனங்களை வெளியிடுகிறேன், இதற்கு எல்லாம் வரலாறு சாட்சியாக இருக்கிறது!! நீங்கள் கேட்டுக்கொண்ட படியே ஆதாரத்துடன் வெளியிடுகிறேன்!!

கொல்வின் அவர்கள் கொடுத்த இந்த தொடுப்பில் எங்கேயும், கத்தோலிக்கம் அல்லது ரோமன் கத்தோலிக்கம் என்பது ஒரு மதம் என்று தரப்படவில்லை, வழக்கம் போல் குழப்பத்தில் அவரே இதை சொல்லியிருக்கிறார்!! மதம் என்றால் என்ன கொல்வின் அவர்களே, சபை என்றால் என்ன கொல்வில் அவர்களே என்பதை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள்!! தாங்கள் ரோமன் கத்தோலிக்க சபை என்பதை ஒரு தனி மதம் என்று எழுதியிருந்ததை தான் நான் அப்படி எழுதியிருந்தேன்!! தாங்கள் சொல்லுவதுற்காக மாத்திரம் அல்ல, நானும் ஒரு முன்னாள் கத்தோலிக்கன் தான்!! இன்று அங்கு தரப்படும் ஒரு சில சான்றுகளில், மதம் என்று கேட்கப்பட்டால் அதற்கு ரோமன் கத்தோலிக் என்று தான் எழுதப்படுகிறது!! கிறிஸ்து கொண்டு வந்த மார்கம் அல்லது உலக வழக்கத்தின்படி மதம் என்று எடுத்துக்கொண்டால் அது கிறித்துவம், நீங்கள் சொல்லியது போல் அல்லது ரோமன் கத்தோலிக்கர் சொல்லுவது போல் ரோமன் கத்தோலிக்கம் அல்ல‌!!

அப்படி ரோமன் கத்தோலிக்கம் ஒரு மதம் என்றால் அதற்கும் கிறித்துவத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, ஏனென்றால் பல மனித கோட்பாடுகளை கொண்டு வந்து உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிய மதம் தான் கத்தோலிக்க மதம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது!! அப்படி குழப்பம் நிறைந்த இடம் என்பதால் தான் வெளிப்படுத்தின புத்தகத்தில் அதை பாபிலோனிய சபை என்று சொல்லப்பட்டிருக்கிறது!! வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ளப்படி,

வெளி 18:4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

என்கிற கட்டளைக்கு கீழ்ப்படிந்து நான் வெளியேறிவிட்டேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கொல்வின் எழுதுகிறார் (சில்சாமின் தளத்தில்)

//திரித்துவம் என்பது கத்தோலிக்க சபையின் கண்டுபிடிப்பல்ல.//

இதற்கு ஆதாரமாக அவர் சில திரித்துவ போதகர்களின் தளைத்தை தான் தொடுப்பாக கொடுத்திருக்கிறார்!! கொல்வின் அவர்களே, பொதுவான எந்த ஒரு மதத்தையும் சாராத ஒரு தொடுப்பை தேடிப்பாருங்கள், திரித்துவம் யார் துவக்கி வைத்தார்கள் என்பது விளங்கும்!! நான் ஏற்கனவே விக்கியின் தொடுப்பை தந்திருக்கிறேன், ஆனாலும் அதை நீங்கள் பார்த்தீர்களோ, என்னமோ,

//Tertullian, a Latin theologian who wrote in the early 3rd century, is credited with using the words "Trinity",[14] "person" and "substance"[15] to explain that the Father, Son and Holy Spirit are "one in essence—not one in Person".[16]

About a century later, in 325, the First Council of Nicaea established the doctrine of the Trinity as orthodoxy and adopted the Nicene Creed, which described Christ as "God of God, Light of Light, very God of very God, begotten, not made, being of one substance (homoousios) with the Father".//

இதை முழுவ‌துமாக‌ வாசிக்க‌, http://en.wikipedia.org/wiki/Trinity செல்லுங்க‌ள்

//திரித்துவம் என்று நாம் விளங்கிக் கொள்ள பாவிக்கும் சொல். இது வேதத்தில் இல்லை. 3 ஆட்கள் ஒரே தேவன். இதை குறிப்பிடவே இந்த சொல். //

ஆக‌ வேத‌த்தில் இல்லாத‌ ஒரு சொல்லை வைத்து ஒரு மார்க்க‌த்தின் அஸ்திபார‌த்தையே மாற்றியிருக்கிற‌து க‌த்தோலிக்க‌ ச‌பையும் அதை தொட‌ர்ந்து வ‌ந்த‌ பிரிவினை ச‌பைக‌ளும்!! இந்த‌ சொல் வேத‌த்தில் இல்லாத‌ ஒரு விசுவாச‌த்தை வ‌ள‌ர்த்து என்ப‌தை ஒப்புக்கொண்டே ஆக‌ வேண்டும்!! ப‌வுல் ச‌ரியாக‌ தான் எழுதியிருக்கிறார்,

அப். 20:26. தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், ............

அப்ப‌டி என்றால் தேவ‌ன் தாம் மூன்றாக‌ இருப்ப‌தையோ, த‌ம்மில் மூன்று பேர் இருப்ப‌தாக‌வோ, ப‌வுலிட‌ம் சொல்ல‌வில்லை, அப்ப‌டி சொல்லியிருந்தால் நிச்ச‌ய‌மாக‌ ப‌வுல் எழுதியிருப்பார்!! ஆனால் அடுத்து ப‌வுல் எழுதிய‌தை வாசியுங்க‌ள்,

அப். 20:29. நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30. உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

ப‌வுல் போன‌பின்பு (ம‌ரித்த‌ பின்பு) மாறுபாடான‌வைக‌ளை போதிப்ப‌வ‌ர்க‌ள் வ‌ந்து விட்டார்க‌ள் சீஷ‌ர்க‌ளை (கிறிஸ்துவ‌ர்க‌ளை) வ‌ஞ்சிக்கும்ப‌டியாக‌!! ஆக‌ தேவ‌ன் தாம் மூன்றாக‌ இருந்த‌தை ப‌வுலிட‌ம் சொல்ல‌வில்லை, சொல்லியிருந்தால் நிச்ச‌ய‌மாக‌ ப‌வுல் அதை எழுதியிருப்பார், ஆனால் தேவ‌ன் மூன்றாக‌ இருக்கிறார் என்கிற‌ மாறுபாடான‌ போத‌னையை ப‌வுல் சென்ற‌ பின்பே வ‌ந்த‌து என்ப‌தை வ‌ச‌ன‌மே நிறுபிக்கிற‌து திரு கொல்வின் அவ‌ர்க‌ளே!! நீங்க‌ள் க‌த்தோலிக்க‌ ச‌பையில் இருப்ப‌தில் பெருமையைடைவ‌தில் எந்த‌ ஆச்ச‌ரிய‌மும் இல்லையே!!

//கத்தோலிக்கனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஆயினும் நான் கத்தோலிக்க பாரம்பரியங்களை அல்ல. மாறாக வேதத்தின் படியே ஒழுகிறேன்//

என்ன‌ மாதா வ‌ழிப்பாடு, புனித‌ர்க‌ள் வ‌ண‌க்க‌ம் விட்டு விட்டால் க‌த்தோலிக்க‌ பார‌ம்ப‌ரிய‌ங்க‌ளில் இல்லை என்று சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ளா!! ஒரு ச‌பையில் இருக்கிறோமென்றும் சொல்லி, ஆனால் அந்த‌ ச‌பை பின்ப‌ற்றாத‌ ஒரு வ‌ராக‌ இருக்கிறீர்க‌ள் என்ப‌து முற‌னான‌ க‌ருத்து!! இதை எதிர்ப்பார்த்த‌து தான்!! யார் காமெடி செய்கிறார் என்று நிதானியுங்க‌ள்!!

// வேத மாணவர்கள் யெகோவா சாட்சிகளில் இருந்து பிரிந்து வந்தவர்களே!. சில கோட்பாடுகள்தான் வித்தியாசம் இருக்கின்றன. விரைவில் இதுபற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை தருகிறேன். யொகோவா சாட்சிகள் உருவாகிய நாளிலிருந்தே சில கருத்துக்களை மாற்றியும் வந்திருக்கிறார்கள் என்பதை அறிய மாட்டீர்களா?//

இதை தான் சொன்னேன் உங்க‌ளுக்கு வித்தியாச‌ம் தெரியாது என்று!! வேத‌ மாண‌வ‌ர்க‌ள் யெகோவா சாட்சிக‌ளிலிருந்து பிரிந்து வ‌ந்தார்க‌ள் என்பது த‌ங்க‌ளுக்கு வ‌ச‌ன‌ம் மாத்திர‌ம் அல்ல‌, வ‌ர‌லாறும் தெரிய‌வில்லை என்றே சொல்லுவேன்!! பொது அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ளுங்க‌ள்!! க‌ட்டுரை எழுதுவ‌து பெரிய‌ விஷ‌ய‌ம் இல்லை, அதில் விஷ‌ய‌ம் இருக்க‌ வேண்டும் என்ப‌து தான் விஷ‌ய‌ம்!! விஷ‌ய‌ம் இல்லாம‌லும் ப‌ல‌ர் க‌ட்டுரைக‌ள் எழுதுகிறார்க‌ள், ஆனால் யார் யாரிலிருந்து பிரிந்து வ‌ந்தார்க‌ள் என்று கூட‌ தெரியாம‌ல் என்ன‌ க‌ட்டுரை எழுத‌வ‌ருகிறீர்க‌ள்!! நீங்க‌ள் தெரிந்துக்கொள்வ‌த‌ற்காக‌ எழுதுகிறேன், யெகோவா சாட்சிக‌ள் வேத‌ மாண‌வ‌ர்க‌ளிலிருந்து பிரிந்து 1917ல் தோன்றிய‌வ‌ர்க‌ள்!! இதை ஒரு பெந்த‌கோஸ்தே ஊழிய‌ரிட‌ம் கேட்க‌ வேண்டாம், ஏனென்றால் அவ‌ருக்கும் உங்க‌ள் நினைப்பு தான்!! நீங்க‌ள் ஒரு யெகோவா சாட்சியிட‌மே அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றை கேட்டுக்கொள்ளுங்க‌ள், அவ‌ர்க‌ளை விட‌ யார் உங்க‌ளுக்கு விள‌க்குவார்க‌ள், அத‌ன் பின் அதை குறித்த ஆய்வுக் க‌ட்டுரைய‌ நிச்ச‌ய‌மாக‌ தாருங்க‌ளே!! ஆனாலும் நீங்கள் இப்பவே வாசிக்கலாம்,

//The group, founded by Joseph Franklin Rutherford,[10][11][12] emerged from the Bible Student movement established in the late 1870s through the work of Charles Taze Russell and the formation of Zion's Watch Tower Tract Society. The name Jehovah's witnesses, based on Isaiah 43:10–12, was adopted in 1931 to clearly distinguish themselves from other groups of Bible Students.//

http://en.wikipedia.org/wiki/Jehovah's_Witnesses

தெரிந்துக்கொள்ளுங்க‌ள் பொது த‌ள‌ங்க‌ளிலிருந்து!! 1931ல் தங்களை யெகோவா சாட்சிகள் என்று பெயர் சொல்லி அழைத்துக்கொண்டார்கள்!! வேத மாணவர்களோ சார்ல்ஸ் தேஸ் ரஸ்ஸல் என்பவரால், 1870ல் துவக்கப்பட்ட ஒரு குழு, உலக வேத மாணவர் ஐக்கியம் என்று!! இவர் மரித்த பின் 1917ல் ரூதர்ஃபோர்ட் என்பவர் இந்த நிறுவனத்தில் தலைமை ஏற்றுக்கொண்டு ரஸ்ஸல் கொண்டு வந்த பல விஷயங்களை மாற்றி அமைத்தவுடன், உண்மையான வேத மாணவர்கள் இவர்களை விட்டு பிரிந்து சென்றார்கள்!! உங்கள் பொது அறிவை தயவு செய்து திருத்துக்கொள்ளுங்கள் திரு கொல்வின் அவர்களே!! வசனத்தை பலர் வந்து பல விதமாக குழப்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஆனால் வரலாற்றை கூட நீங்கள் குழப்ப முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்!!


தேநீர் பூக்க‌ள் எந்த‌ இட‌த்தில் எந்த‌ பெய‌ரில் எழுதுகிறார் என்ப‌து என‌க்கு தேவையில்லாத‌ வேலை!! இந்த‌ த‌ள‌த்தில் இது வ‌ரை அவ‌ர் வெளிப்ப‌டுத்திய‌ ப‌திவுக‌ள் அவ‌ரை ஒரு வேத‌ மாணவ‌னாக தான் காண்பிக்கிற‌து, யெகோவா சாட்சிக‌ள் ச‌பைக்கார‌ராக‌ அல்ல‌!! உங்க‌ளுக்கு ஒரு கொசுறு செய்தி, யெகோவா சாட்சிக‌ள் செல்வ‌து ச‌பைக்கு அல்ல‌, கிங்ட‌ம் ஹால் (Kingdom Hall) என்கிற‌ இட‌த்திற்கு என்ப‌து தெரியுமா!! இது என‌க்கு தெரிந்து எழுதும் கார‌ண‌த்தினால் என்னை யெகோவா சாட்சிக‌ள் என்று நினைக்க‌ அவ‌சிய‌ம் இல்லை, உங்க‌ள் த‌ள‌ நிர்வாகியின் குற்ற‌சாட்டு போல்!! என்னை யெகோவா சாட்சி என்று சொல்ல‌ப்ப‌டுவ‌து நிச்ச‌ய‌மாக‌ என் தன்மான‌த்தை பாதிக்கும் விஷ‌ய‌மாக‌ இருக்கிற‌து, அவ‌ர் இதை மீண்டும் மீண்டும் மீறுவ‌து அவ‌ரின் இழிவான‌ புத்தியை தான் காண்பிக்கிற‌து!!

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். (உபா 29:29)

வ‌ச‌ன‌ம் எல்லாம் ச‌ரி தான்!! அப்ப‌டி என்றால் திரித்துவ‌ம் ம‌றைவான‌ ஒரு விஷ‌ய‌ம் என்று சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ள், ஆனால் வ‌ச‌ன‌ம் உங்க‌ளின் க‌ருத்திற்கு முற‌னாக‌ ஈருக்கிற‌தே!! அது எப்ப‌டி ம‌றைவான‌வைக‌ள் திரித்துவ‌வாதிக‌ளுக்கு சொந்த‌மான‌து!!

உங்களுக்கு இன்னும் ஒரு செய்தி, நான் யெகோவா சாட்சியோ, வேத மாணவனோ கிடையாது என்று பல முறை சொல்லியாகிவிட்டது!! யெகோவா சாட்சிக்காரர் தன்னை அப்படி சொல்லிக்கொள்வதில் பெறுமையடைவார்!! நான் ஏற்கனவே, பரலோகம், நரகம், ஆவி, மரணம், ஆத்துமா, இன்னும் நீங்கள் கேட்ட தலைப்புகளில் நிறைய எழுதியிருக்கிறேன், கேள்வியும் கேட்டிருக்கிறேன், உங்களை போன்றவர்களிடமிருந்து தான் அதற்கான பதில் இல்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


///சகோ. தேநீர் பூக்க்ள் பற்றி சில வார்த்தைகள்
Facebook பக்கம் போனால் தெரியும் இவரைப் பற்றி. கத்தோலிக்க மதத்திலிருந்து 4 மாதங்களுக்கு முன்பாகவே ஜெகோவா சாட்சிகள் சபைக்கு சென்றுவிட்டவர். இலங்கையரான இவர் தற்போது ஜேர்மன் தேசத்தில் வசித்து வருகிறார். கோவை பெரியன்ஸ் தளத்தில் இன்னும் தன்னை கத்தோலிக்கனாகவே காட்டிக்கொள்ளும் இவர் இறைவன் தளத்தில் ஆபிரகாம் என்ற பெயரில் யெகோவா சாட்சிகள் என அறிக்கை இட்டுள்ளார். ஆனால் இஸ்லாமியர்களிடமோ தன்னை யூதபிரிவுகளில் ஒன்றை சேர்ந்தவர் என எழுதுவார்.

இயேசு தேவன் இல்லை என்பதுதான் இவரின் கோட்பாடு. இயேசுவை கழுமரத்தில் (ஒரு நேரான கட்டையில்- சிலுவையில் அல்ல) அறைந்து கொண்டார்கள் என வாதிடும் இவர். இரத்தம் ஏற்றிக் கொள்வதை யெகோவா தேவன் வெறுக்கிறார் என மொழிவார். இவரைப் பொறுத்தைவரை இயேசு மிக்காவேல் என்ற பிரதான தூதர். பரிசுத்த ஆவி என்பது தேவனின்  வல்லமைகளில் ஒன்று.

இஸ்லாமியிர்களிடம் கிறிஸ்தவர்கள் வேதத்தை 38 தடவை மாற்றி எழுதினார்கள் என போதிக்கும் இவர் இஸ்லாமைப் பற்றி விமர்சிக்கும் கட்டுரைகளையும் சகோ. உமர் தளத்திலிருந்து எடுத்துக் கையாளவதற்கு தவறுவதில்லை. அங்கு இயேசு இறைவன் என்று இருக்கும் இடங்களையும் சுயமாக மாற்றி எழுதுவதில் வல்லவர். இஸ்லாமில் காணப்படும் கல்லெறிதல தண்டனையும் இவருக்கு பிடித்தமானதில் ஒன்று.

இவரிடம் எனக்கு பிடித்த குணம் இவரின் சாந்தம், மற்றும் பொறுமை. இலகுவில் கோபப்பட மாட்டார். வேதத்தை ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆயினும் என்ன பயன்? சரியான சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லையே. ///

திரு.கொல்வின் அவர்களே, உங்களின் சில குற்றசாட்டுகளுக்கும் , எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேதத்தில் இருக்கும் சில விஷயங்களையே சரியாக புரிந்துகொள்ள முடியாத உங்களுக்கு, நீங்கள் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் சரியாக இருக்குமா என்பதே சந்தேகம் தான்!!!!. முதலில் உண்மையை சரியாக அறிந்த பின்பு உங்களுக்கு என்மீது இருக்கும் கோபத்தைக் காட்டுங்கள். நீங்கள் நல்லவர் என்ற தோரணையை உருவாக்க முயலுகிறீர்கள் என்பதும், என்னைக் கெட்டவன் என்ற பெயரை உருவாக்க முயலுகிறீர்கள் என்பதும் எனக்கு புரிகிறது. அடுத்து, முகபுத்தகத்தில் ''தேநீர் பூக்கள்'' என்ற பெயரில் 7 முகபுத்தகம் இருக்கின்றன. இதில் ஒன்று தான் என் சொந்த முகபுத்தகம். மிகுதி அனைத்தும் கொல்வினைப் போன்ற துர்உபதேசங்களைக் கொண்ட என் எதிரிகளால் உருவாக்கப்பட்ட போலியான முகபுத்தகங்கள். அடுத்து, என் நண்பர்கள் வட்டாரத்தில் கொல்வினைப்போன்று என்னிடம் வாதடியவர்களின் உச்சகட்ட கோபத்தின் விழைவே  என் மீது சாற்றப்பட்ட கட்டுக் கதைகளாகும். திரு.கொல்வின் அவர்களே,   என் முகபுத்தகத்தில் பல நயவஞ்சகர்கள் எனக்கு எதிராக சதிசெய்வது எனக்கு தெரியும். அதில் ஒருவர் நீர் என்பதும் எனக்கு தெரியும். அடுத்து நான் ''ஜெகோவாவின் சாட்சி'' யாக இருக்குமோ என்ற சந்தேகம். இப்படி சந்தேகப்பட்டே தங்களின்  வாழ்க்கையைக் கழிக்க போறீங்கள் போல. உமக்கு சொந்தபுத்தியும் இல்லை, நிலையான விசுவாசமும் இல்லை. நான் எழுதும் கருத்துக்களை வாசித்த பின்பும் கூட  ''யெகோவாவின் சாட்சியாக'' தான் நான் இருப்பேனா என்ற அறிவு கூட இல்லாத நீர் எல்லாம் வேதத்தைப் பற்றி வாதாட வந்துவிட்டீர். யெகோவாவின் சாட்சிக்காரர்கள் இப்படி முகபுத்தகதிலோ அல்லது ஏதாவது ஒரு தளத்திலோ உங்களைப் போன்று வாதாட வரமாட்டார்கள். ஆகவே உங்களின் கனவு காணும் வேலையை நிறுத்தி விட்டு எமது தளத்தில்  திறமை வாய்ந்த, சரியான கடவுளின் ஆவியுடன்  வழிநடத்தும் தள நிர்வாகிகள் மற்றும் அங்கத்தவர்கள் கொடுக்கும் நல்ல கருத்துகளை வாசித்து பயன்பெறுங்கள்.  முதலில் நீங்கள் இருக்கும் தளம், துர் உபதேசங்கள் அடங்கிய, சாத்தானால் வழிந்தும் போதனைகளைக் கொண்ட ஒரு தளம். அதை விட்டு எம்மிடம் வாருங்கள். எங்கள் தளத்தில் உங்கள் கேள்விகளைக் கொடுங்கள். பதில் சரியாக கொடுக்கப்படும். நண்பா, பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தல் புத்தகத்தில் இருக்கும் சில விஷயங்களை உங்களைப் போன்ற பொய் உபதேசங்களை கொண்ட தளத்துக்கு எதிராக எழுத இருக்கிறேன். நீர் சரியான, வேதத்தை சரியாக அறிந்து இருப்பது உண்மை என்றால் எனக்குப் பதில் கொடும் பாப்போம். இன்னும் ஒரு கிழமையில் வெளிப்படுத்தலுக்கான பதிவுகள் கொடுக்கிறேன். நன்றி கொல்வின் மாமா ....அவர்களே :::TAKE IT EASY


-- Edited by Theneer Pookal on Friday 28th of January 2011 11:34:43 PM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரு கொல்வின் அவர்கள் சில்சாமின் தளத்தில் பதிந்தது:
//நான் ஒன்றும், இயேசு தொழத்தக்க தெய்வமல்ல என்று கூறுபவன் அல்லன்.//

க‌த்தோலிக்க‌ம் என்கிற‌ ம‌த‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளும் அதிலிருந்து மார்க்க‌ம் த‌ப்பி வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கும் இது போன்ற‌ எழுத்துக்க‌ளுக்கு குறைவே இல்லை!! நீங்க‌ள் சொன்ன‌ இந்த‌ வ‌ரிக‌ள் வேத‌த்தில் எந்த‌ ப‌குதியில் இருக்கிற‌து என்று காண்பியுங்க‌ளேன்!! என்னை தொழ‌த்த‌க்க‌ தெய்வ‌ம் என்று சொல்லுப‌வ‌ன் கிறிஸ்த‌வ‌ன் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் துருப‌தேச‌க்கார‌ர்க‌ள் என்று இயேசு கிறிஸ்துவோ, அல்ல‌து அப்போஸ்த‌ல‌ர்க‌ளோ சொல்லியதோ அல்லது எழுதிய‌தோ உண்டா!!?? என்ன‌ உண‌ர்வுபூர்வ‌மாக‌ எழுதி த‌ங்க‌ளை கிறிஸ்த‌வ‌ர் என்று அட‌ம்பிடித்து சாதிக்க‌ விரும்புகிறீர்க‌ளா!! நீங்க‌ள் ம‌ன‌தில் கொண்டிருக்கும் தொழ‌க்க‌த்த‌க‌ தெய்வ‌ம் என்கிற‌ விஷ‌ய‌ம் மிக‌வும் அப‌த்த‌மான‌தாக‌ இருக்கிற‌து!! இயேசு கிறிஸ்துவை நீங்க‌ள் பிதா என்கிற தேவன் என்று பாவித்து தொழு சொல்லுகிறீர்க‌ள், இது வேத‌த்திற்கு முற‌னான‌ விஷ‌ய‌ம் (உங்க‌ளை போன்ற‌ துருப‌தேச‌க்கார‌ர்க‌ளுக்கு வேத‌த்திற்கு முற‌னான‌ விஷ‌ய‌ம் ஒன்றும் புதுசு இல்லையே)!!

திரித்துவ‌ம் க‌த்தோலிக்க‌ர்க‌ள் கொண்டு வ‌ந்த‌தில்லை என்று முழு பூச‌ணிக்காயைய் இத்துனை வ‌ர‌லாறு ஆதார‌ங்க‌ள் இருந்தும் ம‌றைக்க‌வும் ம‌றுக்க‌வும் துனிந்திருக்கிறீர்க‌ளே. இது எல்லாம் தாங்க‌ள் சேர்ந்திருக்கும் அந்த‌ ம‌த‌த்தின் ம‌கிமையே!! வேத‌த்தின் மேல் விசுவாச‌ம் என்கிற‌து போய், க‌த்தோலிக்க‌ விசுவாச‌ம் என்கிற‌ ஒரு புதிய‌ விசுவாச‌த்தை கொண்டு வ‌ந்த‌தே க‌த்தோலிக்க‌ ச‌பை (சாரி!! ம‌த‌ம்) தான் என்ப‌தையும் தாங்க‌ள் தாராள‌மாக‌ ம‌றுக்க‌லாம்!!

http://www.answering-islam.org/Trinity/

நீங்க‌ள் திரித்துவ‌த்தை ஆத‌ரிக்கும் ஒரு த‌ள‌த்தை கொடுத்து வாசியுங்க‌ள் என்று சொன்னீர்க‌ள்!! அட‌ க‌ட‌வுளே, அவ‌ர்க‌ளுக்கும் அதை வ‌ச‌ன‌த்தோடு தெளிவுப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை!! வேத‌த்தில் இல்லாத‌ ஒரு விஷ‌ய‌த்தை இஸ்லாமிய‌ர்க‌ள், ஹிந்துக்க‌ளிட‌ம் ஏன் வ‌லுக்க‌ட்ட‌ய‌மாக‌ தினிக்க‌ நினைக்கிறீர்க‌ள்!! கேவ‌ல‌ம், சாத்தானுக்கு தெரிந்து ஒரு விஷ‌ய‌ம், அதாவ‌து கிறிஸ்து, உன்ன‌த‌மான‌ தேவ‌னின் குமார‌ன் என்ப‌தை கூட‌ உங்க‌ளை போன்ற‌ துருப‌தேச‌க்கார‌ர்க‌ள் அறிய‌வில்லை என்ப‌து வேத‌னையே!! கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்று சொல்லிக்கொண்டு வேத‌த்திற்கு புற‌ம்பான‌ சில‌ கோட்பாடுக‌ளை கொண்டு வ‌ந்து அதின் மூல‌மாக‌ ஒரு பெரிய‌ ம‌த‌த்தை தோன்ற‌ செய்து அதில் உட்கார்ந்துக்கொண்டு, அதில் சொல்ல‌ப்ப‌டும் விஷ‌ய‌ங்க‌ளை வைத்துக்கொண்டு அதை விசுவாச‌ம் என்று போதிப்ப‌தில் என்ன‌ நியாய‌ம்!! நான் சொல்லுவ‌து என்ன‌வென்றால், பொதுவான‌ த‌ள‌ங்க‌ள், அதாவ‌து என் விசுவாச‌ம் கொண்ட‌ த‌ள‌மோ, அல்ல‌து உங்க‌ள் விசுவாச‌ம் கொண்ட‌ த‌ள‌த்தையோ பார்க்காம‌ல், பொதுவான‌ த‌ள‌த்திற்கு சென்று பாருங்க‌ள், அப்போ தான் உண்மை விள‌ங்கும்!!

கரி கிடங்குக்குள் இருந்துக்கொண்டு எல்லாம் இருட்டாக இருக்கிறது என்றால் எல்லாம் இருட்டாக தான் இருக்கும்!! அப்படி தான் தாங்கள் செய்துக்கொண்டு இருப்பதும்!! கத்தோலிக்கத்திற்குள் இருந்துக்கொண்டு, அதிலிருந்து தப்பி பிறந்த இன்னும் ஒரு மார்க்கமான பெந்தகோஸ்தே விசுவாசத்தை கொண்டு அவர்கள் கொடுக்கும் தளத்திலே திரித்துவம் இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!!

வேதத்தை வாசிக்கும் போது, நான் கத்தோலிக்கன் நான் பெந்தகோஸ்தே என்று வாசிக்காமல், வேதத்தின் எழுத்துக்கள் உண்மையிலேயே மூன்று தேவனையும் ஒன்றில் மூன்று அல்லது மூன்றில் ஒன்று (திரித்துவமே ஒரு குழப்பம், அதற்குள் இத்துனை குழப்பங்கள்!!) என்று எங்காவது இருக்கிறதா என்று மனசாட்சியுடன் வாசியுங்கள்!!

ஏற்கனவே நிறம்பியிருக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற முடியாது, பழையதை கீழே ஊற்றினால் தான் சுத்தமான தண்ணீரை ஊற்ற முடியும்!!

உங்களுக்கு வேண்டுமென்றால் கத்தோலிக்கராக இருந்துக்கொண்டு பெந்தகோஸ்தே விசுவாசம் சரியானதாக தெரியலாம், ஆனால் தயவு செய்து இன்னும் ஒரு தடவை என்னை யெகோவா சாட்சிகள் என்று சொல்ல துனிய வேண்டாம் என்று மரியதையுடன் கேட்டுக்கொள்கிறேன்!!

கத்தோலிக்கத்தில் திரித்துவம் இருக்கிறது, பெந்தகோஸ்தே சபையிலும் திரித்துவம் இருக்கிறது, அதற்காக இரு சபைக்காரர்களும் ஒன்று என்று சொல்ல முடியுமா!! அப்படி தான் இருக்கிறது, என்னை யெகோவா சாட்சி என்று நீங்களும், உங்கள் தள நிர்வாகியும் சொல்லுவது!! மாற்றிக்கொள்ளுங்கள்!!

கொல்வின் அவர்களே, முதலில் கிறிஸ்தவத்தையே வேதத்தின்படி புரிந்துக்கொள்ளுங்கள், பிறகு இஸ்லாமியர்களுக்கும், பிறருக்கும் சொல்லலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


திரு கொல்வின் அவர்களே,

பிதாவாகிய தேவன் யார், இயேசு கிறிஸ்து யார் மற்றும் பரிசுத்த ஆவி என்னவென்பதை இந்த தளத்தில் எத்துனை பக்கங்கள் நிறப்பியிருந்தாலும் அது தங்கள் பார்வைக்கு படவில்லை என்றே நினைக்கிறேன்!!

இஸ்லாமிற்கு பதில் கொடுக்கும் பக்கங்கள் இருக்கட்டும், வேதம் என்ன சொல்லுகிறது என்று வசனத்தை தான் காண்பித்திருக்கிறேன், ஒன்று தாங்கள் அவைகளை படிப்பதில்லை அல்லது திரித்துவத்தை மனதில் சுமந்துக்கொண்டு படிக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்!!

வசனங்கள் உங்களுக்கு ஆதாரமாக தெரியாதது என் தவறே கிடையாது!! கட்டுரை எதற்கு என்று கேட்கிறேன்!! கட்டுரை எழுதினால் மாத்திரம் இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் ஆகி விடுவாரா, இப்படி கட்டுரை எழுதி எழுதி தானே எத்துனை பேரின் கண்களை கட்டி வைத்திருக்கிறீர்கள்!!

வேதம் சொல்லுகிறது,

பிதாவாகிய தேவன் சர்வவல்லவர், சிருஷ்ட்டி அனைத்திற்கும் காரணமானவர்!! அவர் ஒருவரே அநாதி தேவன், சாகாமை உள்ளவர்!! ஒருவரும் காணக்கூடாதவராக இருப்பவர், மகா பரிசுத்தரும் அனைவரும் பயப்படத்தக்கவருமாக இருக்கிறார் (Reverend) !!

கிறிஸ்து இயேசு பிதாவாகிய தேவனின் ஒரே பேறான குமாரன், உலகத்திற்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர், சபைக்கு பரிந்துரையாளர்!! அவர் ஆதியில் சிருஷ்ட்டிக்கப்பட்டு, அதன் பின் மற்ற எல்லாவற்றையும் உண்டாக்கினவர், மாம்சத்தில் இயேசு என்று பூமிக்கி வந்தவர்!! மரித்தார், பின்பு பிதாவாகிய தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டு, அவரது வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்!! அவரே தேவனால் நியாந்தீர்ப்பு நடத்த நியமிக்கப்பட்டவர்!! இந்த பூமியை ஆளுகை செய்ய இதோ சீக்கிரம் வர இருக்கிறவர்!! இவர் அனைவருக்கும் நித்திய ஜீவனை கொடுக்கபோவதால் நித்திய பிதா என்று ஏசாயா இவரை குறித்து எழுதுகிறார்!!

பரிசுத்த ஆவி என்பது, பரிசுத்தமான தேவனின் வல்லமையும், நம்மை தேவனுக்கு நேராக நடக்க வைக்க நமக்கு அருளப்படும் சிந்தை!! பரிசுத்த ஆவி என்பது ஒரு ஆள்த்தத்துவமாக இருந்தால் அவரை அளவில்லாமல் இயேசுவின் மேலும், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அளவிலும் ஊற்ற முடியாது!! இதை புரிந்துக்கொள்ளவே, பெரும் காற்றை போல் அன்று அப்போஸ்தலர்கள் உனர்ந்துக்கொள்ளும் படியும், அவர்கள் புரிந்துக்கொள்ளும்படியும் அக்கினி மயமான நாவுகளாக வெளிப்படுத்தி காண்பித்தார்!!

இங்கே நான் சொல்லியது ஒன்றும் வேதத்திற்கு புறம்பானது அல்ல, இதில் சொல்லப்பட்ட ஒரு வார்த்தையாவது வேதத்தில் இல்லாமல் என் சொந்த கருத்து என்று சொல்வீர்கள் என்றால், மண்ணிக்கனும், தாங்கள் வேதத்தை அல்ல பிற ஊழியர்களின் எழுத்துக்களை மாத்திரம் வைத்துக்கொண்டு விசுவாசத்தை வளர்த்தவராக இருப்பீர்கள்!! இதோ நீங்கள் வாசிக்க தவறிய சில பக்கங்கள் என்று நினைக்கிறேன், சில்சாமின் கருத்துக்களை அவரே நீக்கி விட்டாலும், அவர் பதிவு செய்தவற்றில் சிலது இன்னும் இருக்கிறது.

http://kovaibereans.activeboard.com/index.spark?aBID=128972&p=3&topicID=25894432
http://kovaibereans.activeboard.com/index.spark?aBID=128972&p=3&topicID=26309424

//எனவே தயவு செய்து கூறுங்கள் இயேசு யார்? பரிசுத்தஆவி யார்? சமாளிப்பு வேண்டாமே?//

மேலே சொல்லியிருக்கிறேன், நிச்சயமாக இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் கிடையாது. நிச்சயமாக வேதத்தின்படி பரிசுத்த ஆவி என்கிற தேவன் கிடையாது!! ஆயிரம் தளங்கள் எழுதலாம், பரிசுத்த ஆவி தேவன் என்று, ஆனால் என் வேதம் ஒரு முறை கூடா இப்படி பட்ட அபத்தமான வார்த்தையை பயன்ப்படுத்தவில்லை!! எனக்கு சமாளிக்க வேண்டிய அவசியமும் இல்லை!! நேர்மையாக வேதத்தை வைத்து எவ்வுளவு முறை வேண்டுமென்றாலும் வாதாடலாம்!! நீங்கள் என் தனிப்பட்ட எதிரி கிடையாது, உங்களின் கோட்பாடுகளை மாத்திரம் எதிர்க்கிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வசனங்களை புரியவைத்துவிட்டார் என்று அடுத்து கொல்வின் அவர்கள் எனக்கு ஆங்கிலமும் தமிழும் கற்று தர பிரியப்படுகிறார்!! பரவாயில்லை, அவர் ஆசைப்படுவதை நான் ஏன் தடை செய்ய வேண்டும், நமக்கு எது முடியுமோ, அதை தானே செய்ய வேண்டும்!!

எல்லா மொழிகளிலும் வல்லவரான கொல்வின் அவர்களே, மதப்பிரிவிற்கும் மதத்திற்கும் வித்தியாசம் தெரியாதவராக இருப்பது உங்களுக்கு தான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எத்துனை புலமை இருக்கிறது என்பதை விந்தையாக தான் பார்க்க வேண்டியிருக்கிறது!! உங்களுக்கு எல்லாம் அடுத்தவர்களை மட்டம் தட்டியே பழக்கம் ஆகிவிட்டத்தால் தான் எனக்கு ஆங்கிலம் புரியவில்லை என்று தமிழில் மதம் என்கிற வார்த்தையை காண்பிக்க தமிழ் விக்கிப்பீடியாவை வைத்து ஏமாற்ற பார்க்கிறீர்களோ!! நீங்கள் தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கொடுப்பவராக இருக்கிறீர்களே, ஏன் அந்த ஆங்கில விக்கியிலிருந்து மதம் என்று சொல்லப்படும் பகுதியையாவது காபி பேஸ்ட் செய்து காண்பித்திருக்கலாமே!! உங்கள் கூட்டணி வேண்டுமென்றால் உங்களுக்கு ஆமாம் சாமி போடுவார்கள் ஆனால் இப்பொழுது நான் கற்று தருவதை கேளுங்கள்!! அதுவும் நீங்க‌ள் தொடுப்பாக‌ கொடுத்த‌திலிருந்து தான்!!

கத்தோலிக்கம் அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும்.  2004 ஆம் ஆண்டு கணக்கின் படி1,098,366,000 விசுவாசிகளை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயபிரிவாகும். மற்றைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார்கள்.

மதப்பிரிவு அல்லது சமயப்பிரிவென்றால் தனியான ஒரு மதம் கிடையாது மாறாக ஆங்கிலத்தில் சொல்லுவதென்றால் 'DENOMINATION' ஆகும்!! சமயம் என்கிற ஒரு வார்த்தையை மாத்திரம் பிரித்து இங்கேயும் திரித்து பேசுவதில் நியாயமா!! வேதத்தை தான் கத்தோலிக்கர்கள் திரித்திருக்கிறார்கள் என்றால், விக்கியை கூட திரித்து எழுதுவதில் என்ன தவறு என்று நினைத்து விட்டீர்களோ!! முதலில் நீங்கள் மதத்திற்கும், மதபிரிவிற்கும், சமயப்பிரிவிற்கும் வித்தியாசத்தை உங்கள் செவிக்கு இனிப்பாக பேசும் போதகர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு பிறகு எனக்கு என்ன தெரியும் என்ன தெரியவில்லை என்று விமர்சிக்கலாம்!! முதலில் நீங்கள் தந்திருக்கும் தொடுப்பை நீங்களே சரியாக படித்து பிறகு பாடம் கற்பிக்க நினைக்கலாம் திரு கொல்வின் அவர்களே!! நீங்க‌ள் கொடுக்கும் ஒவ்வொரு தொடுப்பும் உங்க‌ள் வாத‌த்தை தான் த‌ப்பாக‌ காண்பிக்கிற‌து, ஆக‌வே தொடுப்பு கொடுக்கும் முன் ச‌ற்று நேர‌ம் அதை வாசித்து விட்டு பிற‌கு கொடுக்க‌லாம்!!

மிகாவேலை குறித்து நானும் ப‌திவு செய்திருக்கிறேன், அவ‌ச‌ர‌ப்ப‌டாம‌ல் நிதானித்து வாசியுங்கள், உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌டுவ‌து விசுவாச‌த்திற்கு அழ‌கில்லை!! ஆறாய்ந்து அறொவ‌தே சிறந்த‌து!! தேநீர்ப்பூக்க‌ளிட‌ம் கேட்க‌ வேண்டிய‌ கேள்வியை அவ‌ரிட‌மே கேட்க‌லாமே அவ‌ரும் ச‌ரியாக‌ தான் ப‌தில் தருகிறார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
யெளவன ஜனம் தளத்தில் திரு கொல்வினின் திரித்துவ விளக்கம்!!


//முதற்பேரானவர், சிருஷ்டிகளுக்கு முந்தினபேறானவர் போன்ற விளக்கங்களுக்கு தமிழில் விளக்கம் பெற இலங்கை வேதாகமக் கல்லூரி வெளியிட்ட சகோ். வசந்தகுமாரின் யெகோவாவின் சாட்சிகளுக்கு சிறிஸ்தவனின் பதில்கள் என்ற நூலை படித்துப் பாருங்கள்.  விள்க்கங்கள் மிக எளிமையாக அற்புதமாக உள்ளது.//

வ‌ழ‌க்க‌ம் போல், வேத‌த்தை காட்டிலும் முத‌ற்பேரான‌வ‌ர், சிருஷ்டிக‌ளுக்கு முந்தின‌பேறான‌வ‌ரை வேத‌த்தில் தேடாம‌ல் அவ‌ரின் அபிமான‌ வ‌ச‌ந்த‌குமாரின் ப‌தில்க‌ளை வாசிக்க‌ சொல்லியிருக்கிறார்!! ச‌ரி தான், உங்க‌ளுக்கு ஆதார‌த்தை காட்டினாலும் ந‌ம்ப‌ மாட்டீர்க‌ள், காண்பித்த‌ பிற‌கு அதை குறித்து முச்சே விட‌வில்லை!! ஆனால் திரு கொல்வின் மாத்திர‌ம் திரித்துவ‌ கோட்பாட்டில் உள்ள‌ வ‌ச‌ந்த‌குமாரின் ப‌தில்க‌ளை ந‌ம்பி அதை ஆதார‌மாக‌ காண்பிக்கிறார்!! திரு கொல்வின் அவ‌ர்க‌ளே, வேத‌ம் தெளிவாக‌ இருக்கிற‌து, முத‌ற்பேரான‌வ‌ர் என்ப‌திலும், சிருஷ்டிக‌ளுக்கு முந்தின‌பேறான‌வ‌ர் என்ப‌திலும்!! வ‌ச‌ன‌த்தை பார்க்காம‌ல் வ‌ச‌ந்த‌குமார், டீ.ஜீ.எஸ், மொக‌ன் சீ லாச‌ர‌ஸ், பால் யாங்கி, வாட்ச்மென் நீ, இன்னும் உல‌க‌ புக‌ழ் "தேவ‌ ம‌னுஷ‌ர்க‌ள்" சொல்லுவ‌தையும், போதிப்ப‌தையும், புத்த‌க‌மாக‌ எழுதி அதை விற்று காசு பார்த்த‌வ‌ர்க‌ளின் வார்த்தையை தானே பார்த்து, அதை ஆதார‌மாக‌ சொல்லுகிறீர்க‌ள்!!

வேத‌த்தை காட்டிலும், வ‌ச‌ந்த‌குமார், அல்ல‌து வேறு புத்த‌க‌ங்க‌ள் பெரிதாகி விட்ட‌தா!! நான் காண்பித்த‌ பொதுவான‌ தொடுப்புக‌ள், எந்த‌ ஒரு ம‌த‌ப்பிரிவையும் சாராத‌வைக‌ள், அது போன்ற‌வ‌ற்றிலிருந்து ஏதாவ‌து இருந்தால் சொல்லுங்க‌ள் திரு கொல்வின் அவ‌ர்க‌ளே!! ஆனாலும் நான் காண்பித்த‌ தொடுப்புக‌ளுக்கு த‌ங்க‌ளிட‌ம் த‌ங்க‌ளுக்கு பிரிய‌மான‌ த‌ள‌த்தில் கூட‌ ப‌திவை த‌ராம‌ல் இருக்கிறீர்க‌ளே!! வ‌ச‌ந்த்குமாருக்கு யெகோவா சாட்சிக‌ளுக்கு ப‌தில் கொடுக்க‌ தெரிய‌லாம், ஆனால் இந்த‌ வ‌ச‌ன‌ம் என்ன‌ சொல்லுகிற‌து என்று பாருங்க‌ள்!!

ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

பிதா எப்படி சகோதரராகி போகிறார் என்று திரித்துவம் பேசுவோர் யோசிப்பார்களா!?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard