kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து சிருஷ்டிப்பின் ஆதியானவர்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிறிஸ்து சிருஷ்டிப்பின் ஆதியானவர்!!


இயேசு கிறிஸ்து படைக்கப்பட்டவர் என்று வேதமே சொன்னாலும் திரித்துவவாதிகள் ஒத்துக்கொள்கிறதில்லை, ஏனென்றால் பாரம்பரியங்களும் நிசியா விசுவாச பிரமானமும் அதை போதிப்பதில்லையே!!

வெளி 3:14. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

அப்படி என்றால் தேவனின் சிருஷ்ட்டிகளில் ஆதியானவர் யார்? நானே என்கிறார்  இயேசு கிறிஸ்து!! நேரடியான வசனம் தானே!!

கிறிஸ்துவை குறித்த ஞானார்த்தமான வசனம் ஒன்று உண்டு:

நீதி.8:22 கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.

“The LORD [Jehovah] possessed [Hebrew: qanah-created] me in the beginning of his way, before his works of old. I was set up from everlasting, from the beginning, or ever the earth was…Then I was by him, as one brought up with him: and I was daily his delight, rejoicing always before him.” Proverbs 8:22-30

கொண்டிருந்தார் என்பதன் எபிரேய வார்த்தை,

H7069  qanah  kaw-naw'
to erect, i.e. create; by extension, to procure, especially by purchase (causatively, sell); by implication to own.

க‌ட்டுவ‌து, ப‌டைப்ப‌து, வாங்குவ‌து, ஏற்ப‌டுத்துவ‌து என்கிற‌ அர்த்த‌ம் கொள்ளும் இந்த‌ வார்த்தை இயேசு ம‌ற்ற‌ சிருஷ்டிப்பின் ஆதியாக‌ ப‌டைக்ப்ப‌ட்டார்!!

இது போதுமா திரித்துவ‌வாதிக‌ளே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

I agree with revaluation but i disagree with proverbs. Yes jesus was first born of creation. Jesus was first born of god is not right

__________________
T.balaji


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Jesus, the express image of God was the  firstborn of all creations, the bible says this In Col. 1:15,16. Please justify this if you don't believe this with suitable verses!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கிறிஸ்து யார்?

கிறிஸ்து மாம்சத்தில் இயேசு என்று வரும் முன் என்னவாக இருந்திருக்க கூடும் என்று வேதத்திலிருந்தே பார்க்கலாம்!! இந்த கருத்து உலக கிறிஸ்தவ மண்டலத்தில் இருப்போருக்கு, அதாவது கிறிஸ்தவம் என்கிற ஒரு பாரம்பரிய மார்கத்தை பற்றிக்கொண்டு இருப்பவர்கள் இதை எப்படி எற்பார்கள் என்பது தெரியாது, ஆனாலும் வேதம் பொய் சொல்லுவது கிடையாது, பாரம்பரியம் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்!!

தனது படைப்பின் ஆதியாக கிறிஸ்துவை படைத்தார் தேவன் என்கிறது,

வெளி 3:14 ...................தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

ஆக‌ தேவ‌ன் அனைத்தையும் கிறிஸ்துவை கொண்டு கிறிஸ்துவிற்கென்று சிருஷ்டிக்க‌ முத‌லாவ‌து கிறிஸ்துவை சிருஷ்ட்டித்தார், அவ‌ரே சிருஷ்டிப்பின் ஆர‌ம்பமான‌வர்!!

நீதி 8:22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.

Pr 8:22 . The LORD possessed me in the beginning of his way, before his works of old.

கொண்டிருந்தார் (possessed) என்று இருக்கும் த‌மிழ் வார்த்தையின் மூல பாஷை "பட்டைப்பு" (qanah Heb- kaw-naw') என்றே இருக்கிறது,.

H7069  qanah Heb- kaw-naw'
a primitive root;
to erect, i.e. create; by extension, to procure, especially by purchase (causatively, sell); by implication to own.

இந்த வசனங்கள் கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டார் என்பதை ஆதாரபூர்வமாக சொல்லுகிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Col 1:15 Who is the image of the invisible God, the firstborn of every creature:

கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

எல்லா சிருஷ்டிக‌ளிலும் கிறிஸ்து ஒருவ‌ரே அத‌ரிச‌ன‌மான‌ தேவ‌னுடைய‌ த‌ற்சுரூப‌மாக‌ இருப்ப‌வ‌ர், ஆக‌வே தான் அவ‌ர் மாம்ச‌த்தில் இயேசுவாக‌ வ‌ந்த‌ போது இப்ப‌டியாக‌ சொல்லுகிறார்,

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

யோவான் 14:9  என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;

தேவ‌னின் த‌ற்சுரூப‌மான‌வ‌ர் என்று இருப்ப‌தால் இருவ‌ரும் ஒருவ‌ரே என்று சொல்லவே முடியாது!!

2 கொரி 4:4. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்து..............................

எபி 1:3. இவர்(கிறிஸ்து) அவருடைய (தேவனின்) மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து,

இப்ப‌டி ஒரே சாய‌லாக‌ இருப்ப‌தால் கிறிஸ்து தேவ‌னின் ஜெனிப்பிக்க‌ப்ப‌ட்ட‌ குமார‌ன் என்ப‌தை புரிந்துக்கொள்கிறோம்!! அவ‌ரின் குமார‌னின் சாய‌லாக‌ மாற‌வே சீஷ‌ர்க‌ளான‌ கிறிஸ்துவ‌ர்க‌ள் அழைக்க‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள்!!

அவ‌ரின் த‌ற்சொருப‌ம் என்ப‌தால் எப்ப‌டி தேவ‌ன் ஆவியாக‌ இருக்கிறாரோ, அப்ப‌டியே கிறிஸ்துவும் ஆவியாக‌ இருப்ப‌வ‌ரே (தொட‌க்க‌ முத‌ல் அப்ப‌டியே இருந்த‌வ‌ர், இடையில் தேவ‌னின் திட்ட‌த்தை நிறைவேற்ற‌வே மாம்ச‌த்தில் வ‌ந்த‌வ‌ர்). கிறிஸ்துவை தேவ‌ன் என்று  வேத‌ம் சில‌ இட‌ங்க‌ளில் எழுதியிருந்தாலும் அவ‌ர் ச‌ர்வ‌வ‌ல்ல‌மை தேவ‌ன் அல்ல‌ என்ப‌தையும் வேத‌ம் சொல்லுகிற‌து!! அப்ப‌டி என்றால் கிறிஸ்து யார்?

ச‌கோ அன்பு இறைவ‌ன் த‌ள‌த்தில் எழுதிய‌து, கிறிஸ்து தேவ‌ தூத‌னாக‌ இருக்க‌ முடியாது என்ப‌து!! ஏன் இருக்க‌ கூடாது என்ப‌த‌ற்கு நானும் சில‌ வ‌ச‌ன‌ங்க‌ள் த‌ருகிறேன்:

எபி. 3:4. இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார். 5. எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?

நிச்ச‌ய‌மாக‌ வ‌ச‌ன‌ம் ஓர் இட‌த்திலும் இவ‌ர் தேவ‌தூத‌னாக‌ இருந்தார் அல்ல‌து இல்லை என்ப‌தை நேர‌டியாக‌ சொல்ல‌வில்லை, ஆனாலும் வ‌ச‌ன‌த்தின் மூல‌ம் நாம் புரிந்துக்கொள்வ‌து இயேசு கிறிஸ்து பிர‌தான‌ தூத‌ராக‌ தான் இருந்திரிக்க‌ வேண்டும் என்ப‌து!! மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌த்திலும் தேவ‌ன் அவ‌ரை தேவ‌தூத‌ர்க‌ளுட‌ன் தான் ஒப்பீட்டு பேசுகிறார், ஏன் தேவ‌ தூத‌த‌ர்க‌ளை இதில் இழுக்க‌ வேண்டும்!! நீ என்னுடைய‌ குமார‌ன் என்று இது வ‌ரையில் யாரிட‌மும் சொன்ன‌தில்லை என்றே இருந்திருக்க‌லாமே!! ஏன் தூத‌ர் என்ன‌ ஒரு வித்தியாச‌ம் என்றால் கிறிஸ்து தேவ‌னால் நேர‌டியாக‌ ப‌டைக்க‌ப்பாட்ட‌வ‌ர், ஆனால் தேவ‌தூத‌ர்க‌ளையோ கிறிஸ்துவே ப‌டைத்தார்!!

ச‌ரி ஏன் இவ‌ர் பிர‌தான‌ தூத‌னாக‌ இருப்பார் என்ப‌த‌ற்கு இன்னும் ஒரு முக்கிய‌மான‌ வ‌ச‌ன‌ம் இருக்கிற‌து,

மிக்கேல் தூத‌ர் என்ப‌வ‌ர் தேவ‌னின் பிர‌தான‌ தூத‌ன்!! அந்த‌ மிக்கேலின் அர்த்த‌ம் என்ன‌ தெரியும்,

மிக் என்றால் சாயலானவர், ஏல் என்றால் தேவன்.

ஆக‌ தேவ‌னின் சாய‌ல் கொண்டிருப்ப‌வ‌ர்!! ஆங்கிள‌த்தில், Who is the express image of God!!

தொட‌ரும்.............................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//உங்களுக்கு என்ன வேத வசனத்தின்படியான ஆதாரம் தானே வேண்டும்...? இதோ ஆதாரத்துடன் இயேசு தேவன் அல்ல சாதாரணத் தூதனைவிட‌ சற்றே மேன்மையான நிலையிலிருந்த தூதனே என்று நிரூபிக்கிறோம் பாருங்கள்...!//

இப்ப‌டி கொச்சைப்ப‌டுத்தி எழுதுவ‌து சில்சாமுக்கு நிக‌ர் சில்சாம் தான்!! இல்லாத திரித்துவ‌த்தை நிரூபிக்க‌ வேத‌த்தை திரிக்கும் உங்க‌ளுக்கு நிச்ச‌ய‌மாக‌ வேத‌ வ‌ச‌ன‌ங்க‌ள் பார்த்த‌வுட‌ன் அதிர்ச்சியாக‌ தான் இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை!!

மிக்கேல் தூத‌னாக‌ இருந்த‌வ‌ர் என்று தான் சொல்லியிருக்கேனே த‌விர‌, இப்பொழுது அப்ப‌டி இருக்கிறார் என்ப‌து சொல்ல‌வில்லை!! லூசிஃப‌ர் என்கிற‌ விழுந்து போன‌ தூத‌ன் எப்ப‌டி இந்த‌ பூமியை கெடுத்து , "நீ சாக‌வே சாவ‌தில்லை" என்கிற அடிப்ப‌டை கோட்பாடு தொட‌ங்கி திரித்துவ‌ம் வ‌ரையிலான‌ கோட்பாட்டை ந‌ம்ப‌ வைத்து ம‌ர‌ண‌த்தை நோக்கி ம‌னித‌ர்க‌ளை ந‌ட‌த்துகிறானோ, அந்த‌ ம‌ர‌ண‌த்திலிருந்து விடுவிக்க‌வே தேச‌ சாய‌லான‌ கிறிஸ்து மாச‌த்தில் இயேசுவாக‌ வ‌ந்து தேவ‌னின் திட்ட‌த்தை நிறைவேற்றி இப்பொழுதோ ம‌ர‌ண‌த்தை ஜெயித்து, பிதாவின் வ‌ல‌து ப‌க்க‌த்தில் சாகாமை பெற்றுக்கொண்டு வீற்றிருக்கிறார்!!

இதை ஒன்றும் த‌ந்திர‌மாக‌ சொல்லி நான் ஆள் சேர்த்த‌து கிடையாது அது என் தொழிலும் கிடையாது என்று ப‌ல‌ முறை சொன்னாலும் சில்சாம் த‌ன் தொழிலை விட‌ம‌ட்டார் போல்!! த‌ந்திர‌மாக‌ இந்த‌ கிறிஸ்த‌வ‌ கூட்ட‌த்தின‌ரையே வ‌ஞ்சித்து "அநேக‌ராக‌" இருக்கிறீர்க‌ள் என்ப‌து இன்னும் புரிய‌வில்லையா!?

இவ‌ர்க‌ள் வ‌ச‌ன‌மே இல்லாம‌ல் சொல்லும் பார‌ம்ப‌ரிய‌ங்க‌ளை அப்ப‌டியே எல்லோரும் கேட்க‌ வேண்டுமாம், வ‌ச‌ன‌ன்த்துட‌ன் சொல்லுவோர் இவ‌ர்க‌ளுக்கு எதிரி, இதில் இவ‌ர்க‌ள் வ‌ச‌ன‌ம் இல்லாம‌ல் த‌ங்க‌ளை கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்று வேறு சொல்லுவ‌து இன்னும் அசிங்க‌மாக‌ இருக்கிற‌து!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

நண்பர் bereans அவர்களே,
மிகவும் அருமையான பதிவுகள். வாசித்து அதிகம் பயன் அடைந்தேன். எனக்குள் இருந்த சந்தேகத்தில் இதுவும் ஒன்று. அண்மையில் யோவான் அதிகாரத்தை வாசித்து முடித்தேன். அதில் பிதா , இயேசு இருவருமே வேறானவர்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். அப்படி இருக்கும்போது இவர்கள் எதை வைத்து இயேசு கடவுள் என்ற முடிவுக்கு வருகிறார்கள் என்பது புரியவில்லை. நண்பரே இது குறித்து எனக்கு இன்னும் சந்தேகங்கள் உண்டு. தொடர்ந்து எழுதுங்கள் .... ஆவலுடன் உங்கள் பதிவுகளுக்கு காத்துக்கொண்டு இருக்கும் ''தேநீர் பூக்கள் ''


-- Edited by anbu57 on Thursday 27th of January 2011 05:02:32 AM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=40469001

நண்பர் சுந்தர் அவர்களே,

நீங்கள் எழுதுவதை நான் குற்றம் சாட்டவில்லை, ஆனால் நான் எழுதுவது என்னவென்று நோக்காமல் பதில் எழுதியிருக்கிறீர்கள்!! இயேசு என்று மாம்சத்தில் பிறந்த பிறகு அவர் பரமேரி பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்!!

நான் அவரை தூதன் என்கிற நிலைக்கு தாழ்த்தவுமில்லை!! மேலும் தூதன் தாழ்த்தப்பட்டவர்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்!!

எபி 1:7. தேவதூதரைக்குறித்தோ தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.

இயேசு என்று மாம்சத்தில் வரும் முன் கிறிஸ்து இருந்த நிலையை நீங்கள் எப்படி சொல்லுவீர்கள் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் வேதத்திலிருந்து நான் ஆதாரமாக வசனம் எழுதியிருக்கிறேன்!! பரிசுத்த ஆவியின் போதனை என்று தான் எல்லா கிறிஸ்தவர்களும் சொல்லுகிறார்கள், எல்லாரும் சொல்லுவது சரி தானா!!

1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

பேசுபவர்கள் எல்லாம் தேவனின் ஆவியில் தான் பேசுகிறார்கள் என்பதை வேதத்திலிருந்து தான் சோதித்தறிய முடியும்!! என்னை ஆறாய்ந்து பார்க்க செய்வதும் பரிசுத்த ஆவி தான் என்று சொன்னால் நீங்களும் நம்பி தான் ஆக வேண்டும்!! அப்படி ஆறாய்ந்து பார்க்க வேண்டும் என்றால் தமிழ் வேதாகமத்தை மாத்திரம் அல்ல, மூல பாஷையிலிருப்பதை தான் ஆறாய முடியும், ஏனென்றால் தேவன் அந்த மொழிகளில் தான் நேரடியாக எழுதும்படி செய்தார், மற்றவை அனைத்தும் மனித முயற்சியின் மொழிப்பெயர்ப்பே!! மூல பாஷை எழுதப்பட்டதற்கு மனிதனின் அறிவு தேவைப்படவில்லை, ஆனால் மொழிப்பெயர்க்க பரிசுத்த ஆவி அல்ல மனித அறிவே தேவைப் பட்டது!! அப்படியே மூல பாஷையை காபி எடுக்கவும் பரிசுத்த ஆவி தேவைப்படவில்லை, மாறாக மனித அறிவே தேவைப்பட்டது, பார்த்து பார்த்ததை அப்படியே எழுத!! இது தான் மூல பாஷையை ஆறாய தேவை என்கிறேன்!!

மற்றபடி எந்த சபை தான் இன்று பரிசுத்த் ஆவி இல்லாமல் நாங்கள் போதிக்கிறோம் என்பார்கள்!! அப்படி என்றால் எல்லா சபைகளும் சொல்லும் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா!! அப்படி ஏற்றுக்கொண்டவர் என்றால், நீங்கள் நிச்சயமாக விவாத மேடை நடத்த மாட்டீர்கள்!!

நிச்சயமாகவே அவர் இருந்த நிலை தூதர்களைவிட உயிர்வான நிலை தான், ஆகவே தான் அவரை பழை ஏற்பாட்டில் என் தூதனானவர் என்றும், பிரதான தூதன் என்றும் தேவனே சொல்லியிருக்கிறார்!! நீங்கள் ஏன் தூதன் என்றால் அவ்வுளவு கேவலமாக பார்க்கிறீர்கள்!!


நீங்கள் கிறிஸ்துவை இயேசுவாக மாத்திரம் பார்ப்பதினால் தான் இத்துனை குழப்பங்களும்!! இயேசுவாக மாம்சத்தில் வரும் முன் கிறிஸ்து இருந்தார், அவரை குறித்து தான் அவரை பிரதான தூதனாக இருந்தவர் என்றேன், தேவனின் செய்தியை, தேவனின் சார்பாக, தேவனுக்காக அனைத்தையும் செய்துக்கொண்டுரிந்தவராக, அவனின் குமாரன் என்கிற ஸ்தானத்தில், உங்களுக்கு தூதன் என்று சொல்லுவது பிடிக்கவில்லை என்றால், குமாரன் என்று சொல்லிக்கொள்ளுங்கள், அதற்காக சத்தியம் என்னா மாறியா போய் விடும்!! மற்ற தூதர்களுக்கு கிடைக்காத ஒரு உன்னதமான ஸ்தானம் தான் தேவனின் குமாரன் என்கிற் ஆந்தஸ்து!! கிறிஸ்துவை தேவன் சிருஷ்டித்தார், தூதர்களை கிறிஸ்து சிருஷ்டித்தார்!! அதன் பின் தேவனின் சித்தத்தை நிறைவேற்ற ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்த சொல்லி இந்த பூமிக்கு மாம்சத்தில் இயேசுவாக வந்தார்!! மரித்து, மரித்தோரிலிருந்து உயிர்பிக்கப்பட்டு பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து மீண்டும் நியாயம் தீர்க்க வரயிருக்கிறார்!! இது தான் வேதம் அவரை குறித்து சொல்லுகிறது சொல்லுவது!!

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு என்னம் வைத்திருக்கலாம், அதுவும் சொல்லுவோர் எல்லாம் நாங்கள் பரிசுத்த ஆவியின் படி தான் சொல்லுகிறோம் என்றும் சொல்லலாம், இப்படி பரிசுத்த ஆவியில் தான் சொல்லுகிறோம் என்றவுடன் அது எல்லாம் உண்மை என்று எடுத்துக்கொண்டு போனதால் தான் இன்று இத்துனை சபைகள் இருக்கிறது, இன்னும் வரும்!! வேத வசனத்தில் யாருக்கும் கவலையில்லை ஆனால் எனக்கு பரிசுத்த் ஆவி தான் கற்று தருகிறார் என்று சொல்லுவதினால் மாத்திரம் எல்லாம் உண்மையாகி விடாதே!!

நான் தூதன் என்று சொன்னது அவர் மாம்சத்தில் இயேசு என்று வருவதற்கு முன் உள்ள நிலை, அதற்கு பிறகு இப்பொழுது அவர் வல்லமையுள்ள தேவனாக பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறார்!! இப்படி கிறிஸ்து இரண்டு நிலையை கடந்து இப்பொழுது மூன்றாவது நிலையில் இருக்கிறார்!! நீங்கள் எதை மனதில் வைத்து எழுதுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை!!

லூக்கா 19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
 
மனிதன் எதை இழந்து நின்றான் என்றால் நித்திய ஜீவனை தான்!!

ரோம் 6:23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கிறிஸ்துவானவர், தூதனானவராக இருந்தவர், இப்பொழுதும் அதே நிலையில் தான் இருக்கிறார் என்று பாவித்து சுந்தர் அவர்கள் தன் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்!! இருந்தார் என்பதற்கும் இருக்கிறார் என்பதற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை என்றே நான் நினைக்கிறேன்!! இப்பொழுதும் அவர் தூதனானவர் என்கிற நிலையில் இருக்கிறார் என்று நானும் ஒரு போதும் எங்கும் குறிப்பிடவில்லையே!! ஏன் இடறலடையவேண்டும்!!??

ஏன் தூதனானவர், என் தூதனானவர், கர்த்தரின் தூததானவர் என்று ஒருமையில் வேதம் சொல்லியிருக்கிறது என்று சிந்திப்பதில் என்ன தவறு!! கப்ரியேல் எனும் தூதனை குறித்தும் வேதம் சொல்லுகிறது, பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சகரியாவிடமும், மரியாளிடமும் செய்திக்கொண்டு வந்த தூதன்!! ஆனால் மிகாவேலோ, தேவனின் தற்சொரூபமானவர் என்கிற அர்த்தம் கொண்டும், தேவனுக்கு சமமானவர் யார்? என்கிற அர்த்தமும் கொண்டவராக இருந்தவர் ஏன் கிறிஸ்துவாக இருக்க கூடாது என்பது தான் கேள்வியே!! புதிய ஏற்பாட்டில் இயேசுவாக வந்த பிறகு மிகாவேல் என்கிற தூதனை குறித்து எந்த ஒரு வசனமும் பதிவாகவில்லையே, ஆனால் வெளிப்படுத்தின விசேஷத்தில் மீண்டும் சாத்தானுடன் போரிடுபவராக மிகாவேல் சித்தரிக்க பட்டிருக்கிறார்!!

சாத்தானின் தலைய நசுக்குவார் என்று தேவன் ஆதியாகமத்தில் சொன்னதற்கும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மிகாவேல் சாத்தானுடன் போரிடுவதற்கும் ஒரு தொடர்பும் கிடையாதா!!

தயவு செய்து உணர்சிகளை கொண்டு உங்கள் விசுவாசத்தை வளர்க்காதீர்கள், அது பரிதாபமான விசுவாசமாக இருக்கும், அது கத்தோலிக்கர்களின் விசுவாசமாக இருக்கும்!! ஆறாய்ந்து அறிவதே சிறாந்த முறையாகும்!!

http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40858366



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard