சம்பந்தமே இல்லாமல் பெந்தகோஸ்தே பாணியில் தன் குழப்பங்களை அழகாக வெளிப்படுத்தி, வாசிப்பவர்களை குழப்பத்தின் உச்சிக்கே கொண்டு போய் இருக்கிறார் யெள்வன ஜனம் தள சர்வாதிகாரி!!
ஒவ்வொன்றாக பார்கலாம், இவரின் வசன புலமையை!! இவர் எழுத எழுத எனக்கு வசனத்தின் மேல் இன்னும் தாகம் ஏற்படுகிறது, நான் இன்னும் கற்றுக்கொள்கிறேன், இவர்களுக்கு பதில் கொடுக்க!!
//ஆனாலும் அவர் அநாதியானவர் அல்ல என்று கூறுவதால் பிதாவாகிய தேவனை அனாதையாகவும் ஊமையானவராகவும் சித்தரிக்கிறார்கள்;//
இது நான் சொல்லாத ஒரு கருத்து!! சர்வவல்லமை உள்ள தேவனை அனாதையாகவும் ஊமையானவராகவும் நான் சித்தரிக்க வேண்டிய அவசியம் அல்ல, ஏனென்றால் அவர் எப்படி பட்டவர் என்பது வேதம் எனக்கு தெளிவு படுத்தியிருக்கிறது!! ஆதி அந்தம் இல்லாதவர் தான் அநாதி, அதாவது அவரின் துவக்கம் எப்படி என்றும் எப்பொழுது என்றும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாகும்!! நான் பிதாவாகிய தேவனை குறித்து சொல்லுகிறேன்!! இப்படிபட்ட சர்வவல்லமை உள்ள தேவன், மனிதர்களிடம் தொடர்பு கொள்ள தன் குமாரானை தான் உபயோகித்தார்!! பழைய ஏற்பாட்டில் தூதனானவர் என்று பல முறை பல இடங்களில் வாசித்தும் இருப்பீர்கள்!! ஐய்யா கிறிஸ்தவ மார்கத்தில் இருப்பவர்களே (இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல), இயேசு என்பது அவர் பூமியில் இருந்த போது அவருக்கு உண்டான பெயர்!! பூமியில் வரும் முன் கிறிஸ்துவாக ஒரு ஆவிக்குரிய ஜீவியாக, பிதாவின் காரியதரிசியாக, அதற்கும் மேல் அவரின் குமாரனாக அவருடன் இருந்தார்!!
யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
ஆதியில் வார்த்தையாக இருந்த இயேசு கிறிஸ்து தேவனாக இருந்தார்!! தேவன் என்றவுடன் அவர் பிதா என்று பாரம்பரிய விசுவாசிகள் வேண்டுமென்றால் நம்பட்டும், எனக்கு கவலை இல்லை!! சாத்தானையும் தான் இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று வேதம் கூறுவதால், இவர்கள் அவனையும் பிதா என்று சொன்னாலும் சொல்லுவார்கள்!! தேவனோடு (பிதாவோடு) அவர் (கிறிஸ்து) தேவனாக இருந்தார்!! தேவன் என்று மாத்திரம் பார்த்தோமென்றால், அதற்கு ஏகப்பட்ட அர்த்தங்கள் இருக்கிறது, நீதிபதி, ராஜா, மகாராஜா, இவை எல்லாம் தேவன் என்று தான் இருக்கிறது!! இன்னும் நீதிபதிகளை "மை லார்ட்" என்று தான் சொல்லுவார்கள் என்பதை கவனிக்க வேண்டுகிறேன்!!
யோவான் 1:1 இப்படி சொல்ல, இனி சில்சாம் எழுதியதை வாசியுங்கள்:
//இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளுகிறோம்,ஆனாலும் அவருக்கு ஆதி அல்லது ஆரம்பம் என்ற ஒன்று இருந்தது,ஆனால் பிதாவுக்கு அது இல்லை,அவர் அநாதியானவர்என்பீர்களாகில் அது மாம்சத்தில் வெளிப்பட்ட காலங்களையே குறிக்கும் என்று கூறுவேன்;ஏனெனில் மாம்சத்தில் வெளிபட்ட தேவனுக்கு ஆதி என்பது இருந்ததை வேதம் வெளிப்படையாகவே கூறுகிறது;ஆதி என்றால் அந்தமும் இருக்கவேண்டுமே,ஆம் அவர் அந்தம் அதாவது முடிவில்லாதவர் என்று வேதம் கூறுகிறது; நீங்கள் வேத வசனங்களை எப்படியாவது மறுக்கப் பார்த்தாலும் அது மாறாதது.//
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது என்பதை தான் நான் பார்ப்பேன்!! ஐய்யா உண்மையிலே உமக்கு ஆதிக்கும் அனாதிக்கும், அந்தத்திற்கும் அர்த்தம் தெரியாது போல்!! நான் தான் தெரியாமல் உங்களுக்கு தமிழ் புலமை என்று எழுதி விட்டேன் போல்!! அந்தம் என்றால் முடிவில்லாதவர் என்று எந்த அகராதியில் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை!! அந்தம் என்றாலே முடிவு என்று தான் அர்த்தம்!! யார் வேதத்தை திரித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது இந்த ஒரு வார்த்தையே போதுமானது!!
பிதாவாகிய தேவன் அநாதியானவர்!! கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டது தான் ஆதி!! அதை தான் வேதம் சொல்லுகிறது, ஆதியில் வார்த்தை என்று!! தயவு செய்து தங்களின் பரிசுத்த வேதாகமத்தையே இதை வாசியுங்கள்!! மாம்சத்தில் வெளிப்பட்டவர் வார்த்தையான தேவன் (பிதாவாகிய தேவன் அல்ல) கிறிஸ்து தான்!!
"அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது."(லூக்கா.1:33)
"இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." (எபிரெயர்.13:8)
"நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. "(மல்கியா.3:6)
ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாத வசனத்தை போட்டு எனக்கும் வசனம் தெரியும் என்று இங்கேயும் தன் அறிவீனத்தை தான் வெளிப்படுத்தியிருக்கிறார்!!
//ஆனாலும் அவருக்கு மற்ற மனிதரைப் போல அந்தம் இராது//
இயேசு கிறிஸ்துவே சொல்லுகிறார்,
வெளி 22:13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
ஆனால் சில்சாமோ, இயேசு தான் பிதா என்று நிரூபிக்கும் வீண் முயற்சியினால் கிறிஸ்துவே இப்படி சொல்லியிருப்பது பொய் என்று கூட சொல்லிவிடுவார்!!
இந்த அல்பா, ஒமேகா, ஆதி, அந்தம் முந்தினவர், பிந்தினவர் என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!!
இயேசு கிறிஸ்து சொன்ன அந்தம், ஒமேகா எல்லாம், அவர் மாம்சத்தில் வந்து மற்ற மனிதர்கள் போலவே மரித்தார் என்பதை தான் சொல்லுகிறது, ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்றும் வேதமே சொல்லுகிறது,
வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
அடுத்தது,
எபி 2:9. என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
சரி இதில் எந்த தேவனுடைய கிருபையினால் என்கிற கேள்விக்கு பதில் உண்டா?
//இங்கே மரணம் என்றாலே என்னவென்றே தெரியாத சர்வ வல்ல தேவனும் ஜீவாதிபதியுமான இயேசுவானவர் மரணத்தை ருசிபார்த்தார் என மிக அழகாக, கவித்துவமாக வேதம் குறிப்பிடுகிறது;//
சர்வவல்லமையுள்ள தேவன் மரிக்க முடியாது, ஆனால் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பி அவரை ஜீவாதிபதியாக மாற்றியவர்!! எபி 2:9ல் அதை தான் சொல்லப்பட்டிருக்கிறது!!
"ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.."(எபிரெயர்.10:5)
யார் யாருக்கு சரீரத்தை ஆயத்தம் செய்தார்? சர்வவல்லமையுள்ள தேவன் தனக்கே ஒரு சரீரத்தை ஆயத்தம்செய்துக்கொண்டார் என்றால், இந்த வசனம் அர்த்தமற்றதாக போய்விடும்!! உலகத்தில் வந்தபோது தான் அவருக்கு சரீரம் தேவைப்பட்டது, ஆனால் அதற்கு முன்பு அவர் ஆவியாக தான் இருந்தார்!! நான் ஒரு போதும் இயேசுவை சிருஷ்டித்தார் என்று சொல்லவில்லை, மாறாக ஆவியாக இருந்த கிறிஸ்துவை தான் தேவன் சிருஷ்டித்த்டார்!!
கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
எல்லா சிருஷ்டிகளுக்கும் முந்தின பேறானவர் என்றால் புரியவில்லையா, தமிழ் பண்டிதரே!! வேதத்தில் இல்லை என்று ஒன்றும் இல்லை!!
திரித்துவத்தின் இருவரையே இன்னும் முடிவு பண்ணி வசனத்தை எடுக்க முடியவில்லை, மூன்றாம் தேவனை எப்படி தான்...........!!
அறிவு தான் மங்கி போய் வசனம் புரியவில்லை என்று பார்த்தால் கண்ணும் அப்படியே தான் இருக்கிறது வாசிக்க தெரியாமல், அல்லது இவர்களின் பெந்தகோஸ்தே போதகர்கள் சொல்லி கொடுப்பது போல் பேசுகிறார்களோ!!
யோவான் 1:1
உமக்கு புரியாவிட்டால் கிரேக்கம் படித்த பெந்தகோஸ்தே ஊழியர்கள் இருப்பார்கள், சந்தேகம் தான் இருந்தாலும் முயற்சித்து பாரும்!! அவர்களிடம் யோவான் 1:1ஐ கான்பித்து இது எப்படி என்று கேட்டு பாரும்!!
ஒரு தேவனுக்கு (Theos) முன் ஹோ (ho) என்று எழுதி ஹோ தியோஸ் என்றும் இன்னோரு தேவன் அந்த ஹோ இல்லாமல் வெறும் தியோஸ் என்று உள்ளதை உம் மங்கிய கண்களுக்கு தெரியவில்லையோ!!
தமிழில் வேன்டுமென்றால் இந்த ஹோவிற்கு முக்கியத்துவம் இருக்காது, ஆனால் ஆங்கிளத்தில் இதை தான் தீ (The) என்று definite article ஆக பயன் படுத்துவோம்!!
In the beginning was THE WORD and THE WORD was with THE GOD and GOD was THE WORD.
தமிழ் மாத்திரமே பழகி போன உம்மை போன்றோருக்கு இது புரிவது கடினமாக இருக்கலாம், ஆனால் நீர் தமிழில் அடித்து சொல்லுவதெல்லாம் சத்தியம் ஆகி விடாது என்று நினைவில் வைத்துக்கொள்ளும்!! ஏன் ஒரு தேவனுக்கு தீ உபயோகப்படுத்தியிருக்காங், ஏன் ஒரு தேவனுக்க்கு தீ உபயோகப்படுத்தவில்லை என்று மூலையை கசக்கி பாரும்!! ஒரு வேளை வெளிச்சம் கிடைக்கலாம்!!
கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்த்தவகளே தங்களின் தவற்றை அடுத்த அடுத்த மொழிப்பெயர்ப்புகளில் தந்துக்கொண்டு இருக்கிறார்கள்!! அந்த மொழிப்பெயர்ப்பை வைத்துக்கொண்டு ஒரு தேவனுக்கு (G) என்றும் 2 கொரி 4:4ல் சொல்லப்பட்ட தேவனுக்கு (g) என்றும் இருக்கிறது என்று பெரிய புத்திசாலித்தனமாக பதில் கொடுக்கிறோம் என்று என்னி விட வேண்டாம்!! அவர்கள் தேவனுக்கு (Lord) என்றும் இயேசு கிறிஸ்துவிற்கு (lord) என்றும் தான் எழுதியிருக்கிறார்கள், கிரேக்க மொழியில் இரண்டு இடங்களிலும் உபயோகப்படுத்திய வார்த்தை தியோஸ் தான், ஒரே அர்த்தம் தான்!!
THE GOD of this world என்றே அவனையும் குறித்து எழுயிருக்கிறது!! உம் நோக்கம் பாரம்பரிய விசுவாசத்தின்படி இயேசுவும் பிதாவும் ஒன்று தான் என்று நிரூபிக்க சம்பந்தமே இல்லாத வசனங்களை போட்டு, தன்னை கிறிஸ்தவ காவல் தேய்வமாக என்னிக்கொண்டு இருக்கிறீர்!! ஆனால் என் நோக்கமோ, சத்தியத்தை உண்மையாகவும் இருக்கிறபடி, எந்த பாரம்பரிய கலப்படமும் இல்லாமல் கொடுப்பது தான்!! நீர் லோக்கல் தான் ஆகவே லோக்கல் பாஷையை உபயோகிக்கீறீர் என்பதில் என்ன பெரிய ஆச்சரியம்!!
(KJV) In whom the god of this world hath blinded the minds of them which believe not, lest the light of the glorious gospel of Christ, who is the image of (The) God, should shine unto them. (2.Corinthians.4:4)
ஒழுங்காக ஸ்கூலுக்கு போகாதவரே, இந்த வசனத்திலும் கிறிஸ்துவை தேவனின் தற்சொருபம் என்று தான் போட்டிருக்கிறதே தவிர நீர் விரும்புவது போல் தேவன் என்று இல்லை!! நீர் எத்துனை வசனங்கள் கொண்டு வந்தாலும் எதிலும் கிறிஸ்து தான் பிதாவாகிய தேவன் என்று ஒரு வசனமும் கிடையாது!! உம் பாரம்பரிய விசுவாசத்திலும், துதி பாடல்களிலும் நிறைய இருக்கிறது!! ஆகவே தான் கிறிஸ்துவை பாடும் போது இயேசப்பா என்று பாடுவார்கள்!!
//மேலும் சிங்காசனத்தில் இராஜா போல ஒருவர் உட்கார்ந்திருப்பது போலவும் அவர் அருகே சேவகம் செய்ய அமர்ந்திருக்கும் யாரோ ஒரு தூதன் போலவும் இயேசுவானவரை கற்பனை செய்துவைத்திருக்கிறீரே,அப்படி காரியதரிசியாகவும் பிரதான தூதனாகவும் இருந்தவர் மிகாவேல் தூதன் தானே, அதை ஏன் வெளிப்படையாகக் கூறமாட்டேன் என்கிறீர்?அதை இப்போது சொல்லவேண்டாம் என்று இரஸல் சொல்லிவிட்டாரா..?//
நீர் தினகரனையோ, அல்லது அவர் போல் ஊழியக்கார்களின் வேஷம் தரித்தவர்களிடம் கற்றுக்கொண்டு பின்பற்றுவது போல் நான் ரஸ்ஸலை பின் பற்றுவது கிடையாது என்பதை பல முறை எழுதியும் உம் மண்டைக்குள் அது ஏறவே மாட்டாதா!!
கிறிஸ்து இந்த பூமிக்கு மாம்சத்தில் இயேசு என்று வருவதற்கு முன்பு தான் அவர் பிரதான தூதனாக இருந்தவர்!! இயேசு என்று மாம்சத்தில் வந்து இந்த உலகத்திற்காக தன்னை மீட்கும் பொருளாக (இது எல்லாம் உங்களை போன்றோரின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது) கொடுக்க வந்த போது தான், ஆவி ஜிவியாக இருந்த அந்த பிரதான தூதன் தனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தும்படியாக வின்ணப்பம் செய்கிறார்!! தன்னை பலியாக கொடுத்த பின்பு (மூன்று நாட்கள் மரித்தவராக இருந்தார்) பிதாவாகிய தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் (இதுவும் உங்கள் போன்ற நம்பிக்கை உள்ளோரின் விசுவாசத்திற்கு அப்பாற்பட்டது)!! எழுப்பிய பிறகு அவருக்கு மீண்டும் அதாவது கிறிஸ்து இயேசுவாக இந்த பூமிக்கு வரும் முன் இருந்த மகிமையை அவருக்கு கொடுத்தார்!!
உம்மை போன்ற நாசக்கார மோசக்கார "வித்வான்களுக்கு" பதில் எழுதுவது ஒன்றும் எனக்கு புதிது அல்ல!! திரித்துவம் என்கிற "இரகசியம்" (பவுலுக்கு கூட தெரியாத இரகசியம் இது) பாரம்பரிய விசுவாசத்திற்கு உட்பட்டவர்களுக்கு நிச்சய்மாகவே இரகசியம் தான், ஆனால் என்னை பொறுத்தவரை அது வேதத்தில் இல்லாத மற்றோரு தமிழ் வார்த்தை, அதில் இரகசியமே கிடையாது!!
புதிய ஏற்பாட்டின் சில இரகசியங்கள்:
எபேசியர் 3:6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.
எபேசியர் 5:32 இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
கொலோசெயர் 1:27 புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
II தெசலோனிக்கேயர் 2:7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
வெளி 17:5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
நீங்கள் பாபிலோன் சபைகளில் இருந்து திரித்துவம் என்கிற அருவருப்பான கோட்பாட்டிற்குள் இருக்கிறீர்கள் என்கிற இரகசியம் தான் உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது!! கத்தோலிக்க சபை ஆரம்பித்த இந்த திரித்துவ கோட்பாடு அருவருவருப்பான கோட்பாடு!! அருவருப்புகளுக்கு தாய் என்றும் தன்னை தாய் திருச்சபை என்று சொல்லிக்கொள்ளும் கத்தோலிக்க சபையை ஒப்பீட்டு பாரும்!! அதின் கோட்பாடுகளை பின்பற்றும் நீங்களும் அதே சபையை சேர்ந்தவர்களே!! அந்த சபை கொண்டு வந்த திரித்துவம் என்கிற கோட்பாட்டை மற்ற சபைகளுக்கு கொடுத்தது நெற்றியில் எழுதியிருப்பது போல் பளீச்சென்று தெரிகிறது!! வேதத்தில் இதை தவிர "திரித்துவம்" என்கிறதான பெரிய இரகசியம் ஒன்றும் கிடையவே கிடையாது!!
கிறிஸ்துவிற்குள் புதிதாக வருகிறவர்கள் உங்களை போல மாயா ஜால வித்தகர்களை வைத்து போதகம் பண்ணும் தந்திரவாதிகளிடம் சிக்கி சீர் அழிந்து போகாமல் இருப்பதற்காகவே இந்த தளத்தை நான் தொடங்கினேன்!! தேவன் யாரை நியமித்திருக்கிறாரோ அவர்கள் நிச்சயம் இதற்கு வருவார்கள்!! உம்மை போல் கூட்டம் சேர்த்து பாராட்டு பெறுவது என் நோக்கமோ நீர் சம்பந்தமே இல்லாமல் குறிப்பிடும் "ரஸ்ஸல்"க்கோ இல்லை!!
ஆமா உம் குருநாதகர்களுக்கு பண ஆசை அடங்கவே அடங்காதா!! இப்ப்ரபஞ்சத்தின் தேவனிடத்தில் சிக்கியிருக்கும் அவர்கள் நிலையும் கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்றும் உம் நிலையும் ஒன்று தான்!! காசுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்தை ஏமாற்றி ட்ரஸ்ட் என்கிற பெயரில் வரி சலுகை பெற்று வாரிசு அரசியல் சாரி வாரிசு ஊழியம் செய்துக்கொண்டு கூட்டம் சேர்த்து மகிழ்கிறார்கள்!!
//ஆம்,எனில் யோவான்.3:16 - ஐ ஒப்பிட்டுப் பார்க்கலாமா? ஒப்புக்கொள்ளமாட்டாயா..?//
நீர் யோவான் 3:16ஐ மாத்திரம் இல்லை இன்னும் பிதாவை தேவன் என்று எழுதிய வசனங்களும், கிறிஸ்துவை தேவன் என்று எழுதிய வசனங்களையும் கண் திறந்து பாரும், பிதாவை குறிப்பிடும் போது ஹோ தியோஸ் என்றும், குமாரனை சொல்லும் போது வெறுமனே தியோஸ் என்றும் தான் இருக்கிறது!! நீர் அடிக்கடி சுட்டி காண்பிக்கும் 1 தீமோ 3:16 உட்பட!! அங்கேயும் ஹோ தியோஸ் கிடையாது, வெறுமனே தியோஸ்!!
1 கொரி 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை
மற்றவர்களிடத்தில் இருக்கிறதோ இல்லையோ, உம்மிடத்தில் நிச்சயமாகவே இல்லை என்பது மாத்திரம் நிச்சயம்!! இத்துனை தெளிவான ஒரு வசனம் கிறிஸ்துவையும் பிதாவையும் வேறு என்று சொல்லும் போது, நீர் மாத்திரம் எப்படி தான் இப்படியோ.......!!!
தேவன் என்று அநேகர் வானத்திலும் பூமியிலும் இருக்கிறார்கள், ஆனால் பிதா ஒருவரே நமக்கு தேவன் என்று எத்துனை தெளிவா படிக்காதவன் கூட புரிந்துக்கொள்ளும்படியாக எழுதியிருக்கிறதே!! கர்த்தர், எஜ்மான்கள் என்று அநேகர் இருக்கலாம், ஆனால் கிறிஸ்து ஒருவரே நமக்கு கர்த்தர் என்றும் எத்துனை தெளிவாக பவுல் சொல்லியிருக்கிறார்!! ஆனால் பாரம்பரியம் சொல்லவில்லையே என்கிற கவலை உமக்கு இருப்பது எனக்கு புரியுது, கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்றால் உம் பழைய மார்க்கத்தில் பின்பற்றிய பாரம்பரியத்தை அல்ல, வேதத்தை தான் பற்றிக்கொள்ள வேண்டும்!! பாரம்பரியம் அல்ல வேதமே வெளிச்சம்!!
நீர் அழுது புலம்பினாலும், பிதாவும் கிறிஸ்துவும் வேறு தான் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது!!
விஷயம் தெரியாமல் வெறுமனே பாரம்பரியத்தினால் கொண்டிருக்கும் விசுவாசம் பெரும்பாலும் பதில் இல்லாமல் போய் விடும், கத்தோலிக்க சபை போல்!! அவர்களிடத்தில் கேள்வி கேட்டால், கத்தோலிக்க விசுவாசம் என்று பொதுவாக பதில் சொல்லிவிடுவார்கள்!! அப்படியே தான் யெளவன தளம் நிர்வாகி கொண்டிருக்கும் பாரம்பரிய விசுவாசம், துதிப்பாடல் விசுவாசம், பிதாவை கிறிஸ்து என்றும் கிறிஸ்துவை பிதா என்றும் சொல்ல வைக்கிறது!! மற்றபடி வேதம் இந்த திரித்துவவாதிகள் சொல்லுவது போல் எதையுமே சொல்லுவதில்லை!!
வசனத்தை விளக்கினால் இவர்களின் உறைந்து போயிருக்கும் யோசிப்புகளுக்குள் ஒன்றுமே நுழைய மாட்டேன் என்கிறாது!!
அதான் முழு கிறிஸ்தவத்தையே (சீஷர்களை அல்ல) திரித்துவத்திற்குள் வஞ்சித்து வைத்திருக்கிறீர்களே, இன்னும் ஆசை தீரவில்லையா!! சாத்தானுக்கு இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது என்று இன்னும் கூடும்மட்டும் உங்களை போல் போதிப்பவர்களின் வலையில் விழ வைத்துக்கொண்டு இருக்கிறான், ஆகவே தான் வசனம் இல்லாதவர்களுக்கு பாராட்டு!!
இப்பவும் சொல்லுகிறேன், இவர் ஒதுங்குவது வசனம் இல்லை என்று தான், அதற்கு சாக்கு இவர்களின் தள அன்பர்களாம்!! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும்!!
எங்கள் போதனையை கேட்பவர்கள் மிகவும் சிறிய அளவில் தான் இருக்கிறார்கள் (சிறு மந்தையை போல்)!! யார் அநேகர், யார் விசாலமான வாசல் வழியே நடக்கிறார்கள் என்பது இன்றைக்கு இவர்களுக்கு தெரியாவிட்டால் கூட பரவாயில்லை, அதற்கு தானே ராஜியம் இருக்கிறது, எல்லாம் கற்றுக்கொள்ள தானே!!
வசனத்தை யார் சத்தியத்திற்கு புறம்பாக பேசுகிறார்கள் என்பதும் தெரியவரும்!! இவர் சாபமிடுவதும், எச்சரிப்பதும், மிரட்டுவதும் "லோக்கலாக" எழுதுவதும் தான் இவர் தன்னை "தாழ்த்தி" எழுதுகிறார்!!
அந்தம் என்கிற வார்த்தையை முடிவில்லாதவர் என்று அர்த்தம் கொடுக்கும் முதல் அகராதி யெளவன தளம் தான்!! இது போல் அவர் இன்னும் எழுதக்கூடும் என்று தான் அவரே ஒதுங்கி போகிறார், அது எனக்கும் நல்லதே!! பாரம்பரிய விசுவாசம் வைத்திருப்போருடன் வாதாடுவது எனக்கும் சரியாக படவில்லை!! முயலுக்கு 7 கால்கள் என்று சொல்லுவார் அவர், அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம், இல்லாவிட்டால் சபிப்பார்!! கலெக்ஷன் பன்னுவது எல்லாம் "ஊழியர்களிடம்" தான் கற்றுக்கொள்ள வேண்டும்!! அப்படியே அரசியல்வாதிகள் போலவே தான்!!
தொடர்ந்து சத்தியம் எதுவோ, விசுவாசம் எதுவோ, வேதம் சொல்லுவது எதுவோ, அதை நிச்சயமாக எழுதிக்கொண்டு தான் இருப்பேன், தேவன் அப்படி என்னை நடத்தும் மட்டும்!!
பிதா குமாரான் வேறு வேறு என்கிற என் பதிவுகள் தொடரும், ஏற்கனவே வஞ்சிக்கப்பட்டவர்களிடம் சத்தியம் சொல்லவே!!
பதில் எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் சில்சாம் எல்லை மீறிக்கோண்டு போவதால் இதை அவசியம் எழுதியே ஆக வேண்டும்!!
ஆதியும் அந்தமுமானவர், அல்லது அல்ஃபா ஒமேகா ஆனவர் என்பது கிறிஸ்து இரட்சிப்பின் திட்டத்திற்காக ஆதியில் (ஒரு துவக்கம்) நியமிக்கப்பட்டிருக்கிறார், அதுவே ஆதி, அல்ஃபா, துவக்கம்!!
வெளி 13:8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய...........
அவர் என்று சிருஷ்டிக்கப்பட்டாரோ, அன்று முதல் இந்த நோக்கத்திற்காக தான் இருந்தார்!! இது தான் ஆதி அல்லது அல்ஃபா அல்லது முந்தினவர்!!
சிருஷ்டிக்கப்பட்டார் என்று நீதி.8ம் அதிகாரத்தில் இருக்கிறது 22வது வசனம் முதல் வாசித்துப்பார்கலாம்!!
அவர் பூமியில் மாம்சத்தில் இயேசு என்கிற நாமத்தில் வந்து தேவன் தந்த அந்த இரட்சிப்பின் திட்டத்தை கல்வாரியில் நிறைவேற்றினார், நிறைவு செய்தார், முடித்து வைத்தார், அவரை தவிர இரட்சிப்பிக்கு வேறு ஒரு நாமமும் இல்லை, வேறு ஒரு வழியும் அல்ல என்பது தான் முடிவு!! அதை தான் "எல்லாம் முடிந்தது" என்று முடித்து வைத்தார்!! இதுவே அந்தம், ஒமேகா, பிந்தினவர்!!
யோவான் 19:28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து,..........
தேவனின் திட்டத்தையும் சித்தத்தையும் நிறைவேற்றிய கிறிஸ்து மீண்டும் அதே மகிமையுடன், சாவாமையை பெற்றுக்கொண்டவராக, பிதாவின் வலது பக்கத்தில் இருக்கிறார், இதே சாவாமையை பெற்றுக்கொள்வதற்காக தான் சபை அழைக்கப்பட்டிருக்கிறது!! சபை என்றால் கிறிஸ்து தலையாகவும், மற்ற உறுப்புகளாக அவரின் சபை!!
ரோமர் 8:34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
இந்த வசனத்தின்படி திரித்துவவாதிகளிடம் கேட்க்கப்படும் கேள்வி, நமக்காக அவர் (கிறிஸ்து) யாரிடம் வேண்டுதல் செய்கிறார்!! அட போஙப்பா, திரித்துவம் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கி எத்துனை கோடி ஜனங்களை இது வரை வஞ்சித்து இருக்கிறீர்கள்!!
அந்தம் என்பது யாரும் அவர் முடிந்துபோகிறார் என்று சொல்லவில்லை, மாறாக தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் நிறைவு என்பதற்கு தான் "அந்தம்" என்று எழுதப்பட்டிருக்கிறது!! நிறைவு செய்து வைத்ததால் தான் அந்தமானவர் (முடிவானவர்)!! அவர் முடிந்து போகவில்லை, மேலே வசனம் சொல்லுகிறபடி அவர் (கிறிஸ்து) மரித்தார், பின்பு உயிர்த்தெழுந்து பிதாவாக மாறிவிடவில்லை, அவர் கிறிஸ்துவாக தேவனின் (பிதாவின்) வலது பாரிசிசத்தில் இருக்கிறார், அதுவும் நமக்காக (சபைக்காக) பிதாவிடம் பரிந்து பேசுபவராக!!
தான் சொல்லுவது தவிர மற்றவர்கள் சொல்லுவது எல்லாம் துருபதேசம் என்கிற மேட்டிமையில் இருப்பவர் சில்சாம், அப்படி நினைத்து தீர்ப்பிடுகிறார் போல்!! லூசிஃபரும் மேட்டிமையினால் தான் விழுந்தான் என்பது சில்சாமிற்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன், அதற்கு மேல் தேவன் இருக்கிறார், நியாயத்தீர்ப்பின் நாட்களில் அனைத்தும் வெளியரங்கமாகும், அப்பொழுது அனைவரும் தெரிந்துத்தான் கொள்ள போகிறார்கள்!! இயேசு கிறிஸ்து ஆரம்பித்து வைத்தார் என்று சொல்லுகிறார் என்றால் தன்னை இயேசு கிறிஸ்துவிற்கு சமம் என்கிற நினைப்பிலும் இருக்கிறார் போல்!! சில்சாம் வசனம் தெரியாமல் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பதே நிஜம்!!
இப்பவும் சொல்லுகிறேன், சில்சாமிற்கு யெகோவா சாட்சிகள் யார் என்றும், வேத மாணவர்கள் யார் என்றும் இன்னும் தெரியாது!! ஏனென்றால் இவர் எழுதுவது யெகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்களை குறை கூறி எழுதும் சில பெந்தகோஸ்தே மூடர்களின் தளத்திலிருந்து மட்டுமே!! பொதுவான ஒரு தளத்திற்கு சென்று, அல்லது விக்கிப்பீடியா போன்ற பொது தளத்திலிருந்து இவர்கள் யார், யார் எப்போழுது தோன்றினார்கள் என்பது அறிவீனர்களுக்கு புரிய வரும்!!
நாங்கள் யெகோவா சாட்சிகளை ஆதரித்து எழுதியாதாக ஏதாவது உம் கண்களுக்கு தெரிந்ததா!! இல்லாத ஒரு விஷயத்தை ஆர்கெஸ்ட்ரா போட்டு சொன்னால் உண்மையாகி விடுமா!? நான் யெகோவா சாட்சியோ, அவர்களின் ஆளோ கிடையாது, என்பதை பல முறை சொல்லிவிட்டேன்!! நீர் என்னமோ கத்தோலிக்க மக்களை எதிர்த்தா எழுதி வருகிறீர்!! அவர்களை சகோதரர் என்று தானே சொல்லுகிறீர்!! அப்படி என்றால் உம்மையும் கத்தோலிக்க சபையை சேர்ந்த ஆள் என்று சொல்லலாமா!!
யெகோவா சாட்சிகளின் கோட்பாடுகளில் நிச்சயம் சில தவறுகள் இருக்கிறது, மற்ற எல்லா சபைகள் போல் தான்!! நீங்கள் எல்லாம் என்னமோ ஒரே விசுவாசத்தில் இருப்பதாக நினைப்பா!! பொதுவாக ஒரு திரித்துவம், ஒரு ஞானஸ்நானம், ஒரு வேதம் என்று சொன்னாலும், 2000 சபைகளாக தானே ஆளாளுக்கு ஒவ்வொரு போதனையை வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! உங்களுக்கு உள்ளேயே இத்துனை குப்பைகள் இருக்கிறதே, பிறகு ஏன் யெகோவா சாட்சிகள் மாத்திரம் உங்கள் பார்வைக்கு அழுக்காக தெரிகிறது!!
அடுத்து ரஸ்ஸல் மரித்த பிறகே ரூதர்ஃபோர்ட் வாட்ச்டவர் சொசைடிடியை அபகரித்தாரே அன்றி, சில்சாமின் அறிவிற்கு எட்டியபடி ரஸ்ஸல் மற்றும் ரூதர்ஃபோர்டின் மோதலினால் பிரிவு ஏற்படவில்லை!!
வெளிநாட்டார் என்று சொல்லுகிற சில்சாமிற்கு தோமையார் தொடங்கி, இன்று இவர்களின் கூட்டங்களில் சொல்லப்படும் பால் யாங்கி சோ என்கிற மாயாவி வரை என்னமோ சென்னையில் உள்ள குப்பத்தில் பிறந்து வளர்ந்த மாதிரி எழுதுகிறாரே!! வாட்ச்மான் நீ, விட்னஸ் நீ, மாயாவி பென்னி ஹின், இன்னும் என்னற்ற பெந்தகோஸ்தே வெளிநாட்டர்கள் எல்லாம் இவர்களுக்கு உள்ளுர்வாசிகள் போல்!! இவரின் பார்வையில் ரஸ்ஸல் ஒருவரே வெளிநாட்டார்!!
எப்படி உமக்கு நீர் பின்பற்றும் தினகரனையோ, மற்ற ஊழிய ஒநாய்களின் கூட்டத்தையோ நான் சொல்லும் போது, அடடா, எங்கள் பொய் எல்லாம் வெளியே கொண்டு வருகிற தளமாக இருக்கிறதே கோவைபெரேயன்ஸ் என்கிற அச்சத்தில் இப்படி தொடர்ந்து வெளிநாட்டர், என்கிற பாணியில் எழுதுக்கொண்டு என்ன தலைப்போ அதை திசைத்திருப்பி அவரின் கூட்டத்தாரை மகிழச்செய்கிறார் அவ்வளவே!!
ரஸ்ஸல் மாத்திரமல்ல, யாரை குறித்து உண்மை எழுதினால் எனக்கு கோபம் வராது!! அறிவீனர்களின் கூட்டத்தருக்கு யெகோவா சாட்சிகள், வேத மாணவர்கள், கெட்ட வார்த்தை தான்!! இருளில் இருப்பவர்களுக்கு சில சமயம் கொஞ்சம் வெளிச்சம் கிடைத்தாலே கண்கூசுமே, அப்படி தான்!! இரண்டு கூட்டத்தாருக்கும் உள்ள வித்தியாசம் இரண்டு வருடமாக என் தளத்தில் எழுதி வரும் சில்சாம் இது வரையில் படித்ததே இல்லையா!! யெகோவா சாட்சிகள் பிரசுரிக்கும் வாட்ச் டவர் புத்தகத்தை நான் என் வீட்டில் வைத்துக்கொள்வதும் இல்லை, இது தான் நேர்மையான பதில்!! நீர் வாசித்தாலும் சில காரியங்கள் உமக்கு விளங்காது!! விட்டுவிடும்!! வாசிக்காத போது அதில் உள்ள வேதாகம உண்மைகளை மாத்திரம் நான் என்ன வாசிக்கவா போகிறேன்!! நாங்கள் எங்கள் போதகராக இருக்கும் கிறிஸ்துவை தவிர வேறு யாரையும் பின் பற்றுவது கிடயாது என்பதை மீண்டும் தெரியப்படுத்துகிறேன்!! அறிவு என்று ஒன்று இருந்தால் இது சம்பந்தமாக இனிமேல் கேட்காதீர்!!
//அதையெல்லாம் விட்டுவிட்டு ஊழியர்களையும் எங்களது மூல உபதேசங்களையும் தூஷிப்பதும் எங்கள் நம்பிக்கைகளைத் திரித்து விமர்சிப்பதும் சரிதானா? //
ஊழியர்கள் என்றும் நீர் சொல்லுவது தானே!!நீர் கொண்டுஇருக்கும் மூல உபதேசங்கள் என்பது வேதத்தின் உபதேசங்கள் கிடையாதே!! சில மனித ஒநாய்கள் (பவுல் சொன்னது தான்) கொண்டு வந்த உபதேசங்கள் உங்களது மூல உபதேசம் என்பதற்கு நான் வேதத்தின் படி தொடர்ந்து விமர்சிப்பேன்!!
நான் இயேசுகிறிஸ்துவை என் மூத்த சகோதரனாகவும், அவருக்கு உடன்சுதந்தரவாளியாக நினைக்கிறேன்!! வேதத்தில் இயேசு கிறிஸ்துவை தெய்வமா (இப்படி எழுதினால் தான் உங்கள் பழைய மார்கத்திற்கு ஒத்து போகும்) தொழும்படியாக ஒரு வசனமும் கிடையாது!! வேதத்தில் நேரடியாக இல்லாத்ததை ஏற்கவும் மாட்டேன் என்று ஒரு பதிவில் பதிந்தவர் தானே நீர்!! அதற்குள் மனமாற்றமா!! உங்களுக்கு இது தான் விசுவாசம் என்று யாரோ சொல்லிக்கொடுத்தாரே, அதை தான் நான் பாரம்பரிய விசுவாசம் என்றும் மனித விசுவாசம் என்றுய்ம் சொல்லுகிறேன்! வேதத்தில் இல்லாதத்தை அப்படி தான் சொல்லுவேன்!!
//காலத்திற்கு காலம் இவர்களைப் போன்றவர்கள் எழும்பிக்கொண்டுதான் இருப்பார்கள். வேத விற்பனர்கள் போன்றுதோன்றுவார்கள். சத்தியத்தை அறிய மாட்டார்கள். வேதத்தை கருத்தாய் வாசித்தால் திரி்த்துவத்திற்கு பதில் கிடைத்துவிடும்.
இவர்கள் போன்ற கூட்டங்களுக்கு இது தெரியமாமலிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. எத்தனை ஆத்துமாக்களை வஞ்சித்துப் போடுகிறோம் என்ற கவலை இல்லை இவர்களுக்கு. கேட்டால் வேதாகமத்தின்படிதான் போதிக்கிறோம் என்ற நையாண்டி வேறு.//
கொவினும் சில்சாம் பாணியில் இறங்கியிருப்பதால் அவருக்கும் பதில் எழுதுவது என் கடமையே!! திரித்துவத்தை போதிக்கும் துருபதேசக்காரர்கள் காலம் காலமாக அல்ல, கொல்வின் அவர்களே, பவுலும் யோவானும் வாழ்ந்த காலத்தில் இருந்ததாக வேதம் கூறுகிறது!! வேதத்தை எடுத்து சொல்லுவதற்கு நையாண்டி செய்வது என்று தான் தங்களின் அகராதி சொல்லுகிறது என்றால் என்ன செய்ய முடியும்!!
நான் என்னை போதகனாகவோ, வேதவிற்பனர் என்றோ சொன்னதே கிடையாது, வேலை வெட்டி இல்லாமல் சோம்பேறிகளாக வீடு வீடாக் சுற்றி திரிந்து முழு நேர ஊழியம் என்று சொல்லி வருகிறார்களே, இந்த ஓநாய்கள் தான் காலம் காலமாக வேதத்தை திரித்து, திரித்துவம் என்கிற போதனையை புகுத்தியது!! வேத வசனங்களில் ஒன்றும் திரித்துவம் போதிப்பதில்லை, இயேசு கிறிஸ்துவை சர்வ வல்லமை உள்ள தேவன் என்றோ, பிதாவாகிய தேவன் என்றோ சொல்லுவதில்லை!! வெறுமனே பாரம்பரியங்களில் மயங்கி அவர்களின் புத்தகங்களின் அடிப்படையில் சத்தியத்தை விற்காதீர்கள்!! தேவனை அறிகிற அறிவில் வளருங்கள், அது தான் வளர்சி!! எந்த வசனமும் உங்கள் திரித்துவத்தைற்கு சம்மட்டி அடி தான் கொடுக்குமே தவிர, அதற்கு ஆதரவாக ஒரு வசனமும் கிடையாது!! உங்கள் பாரம்பரியத்துடன் வேதத்தை பிரசங்கிக்காதீர்கள்!!
இன்னொன்று, திரு கொல்வின் அவர்களே, யார் கூட்டமாக இருக்கிறார்கள் என்பதை நிதானித்து எழுதுங்கள்!! இன்று உலகத்தில் திரித்துவத்தை போதிக்கும் சபைகள் தான் பெருகியிருப்பதால், நீங்கள் எழுதியது உங்களையே சர்ந்ததாகும்!! கோடா கோடி ஜனங்கள் உங்கள் சபைகளை சார்ந்திருப்பதால் யார் வஞ்சிக்கிறார்கள் என்றும் யார் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யார் நையாண்டி செய்கிறார்கள் என்பது கிறிஸ்துவின் ராஜியத்தில் தெரியவரும், அது வரை தாங்கள் வஞிக்கும் கூட்டத்தாருடன் தாராளமாக இருக்கலாமே!!