kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யௌவன தளம் நடத்தும் அறிவீனன்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
யௌவன தளம் நடத்தும் அறிவீனன்!!


சில்சாமை கோமாளி என்று தான் நினைத்தேன்,ஆனால் தன் ஆதரவாளர்களிடமிருந்து பாராட்டு பெறுவதற்காக தான் எழுதுகிறது அந்த பிசாசின் நேரடியான காரியதரிசி என்று புரிந்து விட்டது!!

ஒன்றுமே தெரியாதவனிடத்தில் கற்றுக்கொண்டு ஒன்றுமே தெரியாதவனாகவே இருக்கிறது இந்த பிசாசின் காரியதரிசி!! அறிவுறை கூறி எல்லா ஆத்துமாக்களையும் காத்துக்கொள்ளும் இது தன்னை தேவன் என்று நினைக்கிறது!! அந்தி கிறிஸ்துவின் ஆவி இதனிடத்தில் உண்டு என்பது இதனால் உறுதியாகிறது!! என் நாமத்தில் அநேகர் வருவார்கள் என்பதற்கு யெளவன தளமும் அதை நடத்தும் சில்சாமும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!!

பிதா வேரு குமாரன் வேறு என்று வேதம் தெளிவாக இருக்கிறது, ஆனால் வேற்று மார்கத்திலிருந்து வந்த சில்சாமிற்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!அதற்கு வசனம் கொடுக்காமல் இருப்பது ஏனென்றல் அதற்கு வசனமே இல்லை என்பதால்!! தன் ரசிகர் கூட்டத்தின் கைத்தட்டல் வாங்கவும் பாராட்டு பெறவுமே இந்த பிசாசு எழுதி வருகிறது என்பது இதன் ஒவ்வொரு பதிவும் சொல்லுகிறது!!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40179640

செய்ய‌ வேறு உறுப‌டியான‌ வேளை வெட்டி இல்லாத‌தால் நேர‌ம் போக்க‌ இப்ப‌டி எல்லாம் எழுதிக்கொண்டு இருக்கிற‌து!! லேகியோன் தான் கூட்ட‌மாக‌ இருக்கிற‌து, ச‌த்திய‌ம் பேசும் நாங்க‌ள் இங்கே ஒன்றும் அங்கே ஒன்றுமாக‌ இப்ப‌டி தான் இருப்போம் என்ப‌து இந்த‌ பிசாசிற்கு தெரிவித்துக்கொள்கிறேன்!! உன் வீட்டின் குப்பையை முத‌லில் சுத்த‌ம் செய், பிற‌கு அடுத்த‌வ‌ன் வீட்டிற்குள் நுழைய‌லாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

எனக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் என்பதை நான் சொல்ல ஒரு தயக்கமும் கிடையாது!!

நான் முன்பே எழுதியது போல் நான் ஒன்றும் வேத மாணவர்களின் சபையை சார்ந்தவன் அல்ல, ஆனால் அவர்களிடமிருந்து அநேக விஷயங்களை கற்று, குறிப்பாக வேதத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்கிறதை முக்கியமானதை கற்றுக்கொண்டேன்!! என் தேடல் இன்னும் நிறைவடையவில்லை, நான் முழுமையானவன் என்றோ, பரிசுத்தம் நிறைந்தவன் என்றோ ஒரு போதும் ஒரு சில ஊழியர்கள் சொல்லுவது போல் சொல்லம்மட்டேன்!!

பவுல் சொல்லுவது போல், நான் பாவி தான் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு வேதம் தான் தந்தது!! ஒரு வேளை இந்த ஆவிக்குரிய சபைகளில் இருந்திருந்தால், நாங்கள் பரிசுத்தவான்கள் என்கிற மமதை வந்திருக்குமோ!! தேவன் ஏற்ற வேளையில் உழையான சேற்றிலிருந்து கரம் பிடித்து நடத்தினார், தப்பித்தேன்!! நாங்கள் சத்தியம் சொல்லுவதும் பேசுவதும் கற்றுதருவதும் "தொழிலாக" பணத்திற்கு செய்வதில்லை, ஆவிக்குரிய ஊழியர்கள் செய்வது போல்!! துதி ஆராதனை நடத்த இத்துனை, ஒரு மணி நேர பிரசங்கத்திற்கு அத்துனை என்று ரேட் பேசுபவன் நான் அல்ல!! ஆகவே யார் சொந்த விருப்பத்தில் மயங்கி சத்தியத்தை பேரம் பேசி விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்!!

யெகோவா சாட்சிகளுக்கும், வேத மாணவர்களுக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் இன்னும் முட்டாள்த்தனமாக சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லுவதால் என்ன பிரயோஜனம்!! ரஸல் ஆரம்பித்தது வேத மாணவர்கள் சபையை, யெகோவா சாட்சிகள் என்கிற இயக்கத்தை ஆரம்பித்தது ரூதர்ஃபோர்ட் என்கிற வக்கீல்!! அடிபடையே தெரியாமல் கட்டிடம் கட்டாதீர்கள்!!

நான் நூதனமாக எதையுமே போதிக்கவில்லை, அப்போஸ்தலர்கள் சொல்லிய சத்தியத்தை ஒரு சீஷனாக இருக்க முயற்சித்து சொல்லி வருகிறேன்!! இன்று இருக்கும் கள்ள அப்பொஸ்தலர்கள், தங்களை பவுல்கள் என்றும் பேதருக்கள் என்றும் சொல்லி செய்யும் நூதனமான போதனைகளை என்னத்த சொல்ல‌!!

ஒருவர் கர்சிப்பில் அபிஷேகத்தை தூக்கிக்கொண்டு சுற்றிவருகிறார், ஒருவர் மாயாவி போல் கையை அசைத்தால் "பரிசுத்த ஆவியில் பலப்பட்ட விசுவாசிகள்" பாவம் விழுந்து போகிறார்கள்!! ஒருவர் அரசாங்கத்தை ஏமாற்றி வரி கட்டாமல் என்னிடத்தில் தான் இயேசு இருக்கிறார் என்று கட்டிடத்தின் மேல் கட்டிடங்கள் கட்டி வருகிறார் என்றால் இன்னோருத்தர் "தலை சாய்க்க இடம் இல்லாதவரை" தங்கத்தினாலும் வைடூரியங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட அறையிலிருந்து போதிக்கிறார்!! ஒருவரின் பத்திரிக்கையில் அபிஷேகம் என்றால், ஒருவரின் ஜெபத்தில் அபிஷேகமாம், இன்னும் சிலரோ இதை ஒரு குடும்ப தொழிலாகவே செய்து வருகிறார்கள்!! அரசியல்வாதிகளை மிஞ்சி நிற்கிறார்கள் நம் "ஆஆஆஆவிக்குரிய" ஊழியர்கள்!! ஒருவர் செழிப்பாக இருப்பது தான் கிறிஸ்தவம் என்று போதிக்கிறார், இன்னொருவர் ஹோண்டா அக்கார்ட் காரில் இயேசு கிறிஸ்துவை தன் அருகில் அமர்த்திக்கொண்டு செல்கிறார், மக்களிடம் பணம் வசூலித்து தன் குடும்ப தொலைக்காட்சியாக மாற்றியிருக்கிறவர்களும் உண்டு!! காரில் சுற்றுவதற்கு எளிமையான உத்தியோகங்களையெல்லாம் உதறி தள்ளியவர்கள் உண்டு!! இவர்களை விடவா "பாவியான" ரஸ்ஸல் நூதனமாக போதித்து விட்டார்!!

நிச்சயமாக அப்போஸ்தலர்களின் போதனை இன்றைய நவீன நூதன போதகர்களுக்கு, கள்ள அப்போஸ்தலர்களுக்கு, மாயா ஜால போதகர்களுக்கு வித்தியாசமாக தான் இருக்கும்!! இவர்களின் வாழ்க்கை முறையே இவர்களின் "சீஷத்துவத்தை" வெளிப்படுத்தும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆவிகுரிய பெந்தகோஸ்தே சபைகள் போதிப்பது, என் சபைக்கு வந்தால் இரட்சிப்பு, என் சபையை விட்டு வேறு சபைக்கு போனால், அடுத்த சபையின் பாஸ்டர் ஆட்டு திருடன் என்றெல்லாம் பேசிவிட்டு, மாதம் தோறும் பொய் சிரிப்புடன் பாஸ்டர்கள் ஐக்கியத்தில் எப்படி தான் பங்கு கொள்கிறர்களோ!! ஒரே இயேசு கிறிஸ்துவை போதிக்கிறேன் என்று சொல்லி, ஒரே வேதத்தை தூக்கிக்கொள்வார்கள், ஆனால் அடுத்த சபைக்கு போகக்கூடாது என்று போதிப்பார்கள், வருமானம் போய் விடுமே!! இவர்களை விடவா ரஸல் பாவியாகி போனார்!!

நான் ஒன்றும் ரஸ்ஸலின் சிஷ்யன் கிடையாது, ஆனால் மற்றவர்களின் பணத்தில் "ஊழியம்" செய்கிறவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு தளம் இருக்கிறது, என்றால் ரஸ்ஸலின் பாடங்களை என் தளத்தில் வெளிட நான் ஏன் தயங்கவேண்டும்!!

இவர்களுக்கு மாயாவி கூட்டத்தார், அற்புத சுகம் தரும் மந்திரவாதிகள், மற்றவர்கள் மாத்திரம் விசுவாசத்தினால் சுகம் பெற வேண்டுமாம், இவர்கள் மாத்திரம் குடும்பத்துடன் சிங்கப்பூர்க்கு போய் மருத்துவம் பார்த்து விட்டுவருவார்களாம், பாடுகள் என்றால் கிலோ என்ன விலை என்று ஹோண்டா அக்கார்ட், பென்ஸ் கார், ஏன் ஜம்போ ஜெட் வைத்திருக்கும் ஊழியர்களும் இவர்களுக்கு உண்டு, இவர்களை குறித்து தான்,

I தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

II தெசலோனிக்கேயர் 3:11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

இப்படிப்பட்டவர்கள் அதிகமாக குதித்து ஆற்பாட்டம் செய்யாமல்,

I தெசலோனிக்கேயர் 3:12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.

நாங்களும் இந்த தளத்திலிருந்து இதையே சொல்லுகிறோம்!!

இப்படி அடுத்தவர்க்ஜளின் பணத்தில் பணக்காரர்கள் ஆன இந்த ஆவிக்குறிய "பரிசுத்தவான்கள்" எங்கே, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் வேத ஆராய்ச்சிக்கு செலவு செய்த "பாவியான" ரஸ்ஸல் எங்கே!!

எங்கள் சபையினால் தான் இரட்சிப்பு என்று போதிக்கும் ஆவிகுரிய சபைகள் எங்கே, கிறிஸ்துவினால் எல்லோருக்கும் இரட்சிப்பு உண்டு என்று போதிக்கும் வேதம் எங்கே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பவுல் 2000 வருடங்கள்க்கு பிறகு வருபவர்கள் வித்தியாசமாக போதிப்பார்கள் என்று எழுதவில்லை, மாறாக, அவர் மரித்தவுடன், ஏன் அவர் இருக்கும் போதே மாறுபாடான போதனைகள் துவங்கி விட்டது, அப்படி பிறந்தது தான் திரித்துவத்தை போதிக்க துவங்கிய கத்தோலிக்க சபை, அவர்களை பின் பற்றிய மார்ட்டீன் லூத்தர், அதன் பிறகு வந்த ஆவிக்குரிய பெந்தகோஸ்தே சபையார் (இவர்கள் தான் பரிசுத்த ஆவியின் மொத்த ஏஜண்டுகள்)!! இதற்கு ஆதாரமாக சில வசனங்கலை தருகிறேன்!!

அப் 20:29. நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30. உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

பவுல் சென்றவுடனே இவர்களின் கூட்டம் (திரித்துவம், உயிர்த்தெழுதல் நடந்தேறி விட்டது போன்றவை) எழும்பி சீஷர்கள் (கிறிஸ்தவர்களை) இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளை போதித்து வந்தார்கல்!! 2000 வருடங்களுக்கு பிறகு நாங்கள் சொல்லுவது ஒன்றும் மாறுபாடான போதனையே கிடையாது, இது அப்போஸ்தலர்கள் போதித்தத்து தான்!!

I யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

யோவான் கால‌த்திலேயே க‌டைசி கால‌ம் துவ‌ங்கி விட்ட‌து, ஆக‌வே ர‌ஸ்ஸ‌ல் கால‌த்தில் தான் அது துவ‌ங்கிய‌து என்று சொல்லுவ‌து அப‌த்த‌ம்!!

I யோவான் 2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

அதாவ‌து இயேசு கிறிஸ்துவை பிதா என்று சொல்லுப‌வ‌ன் அந்தி கிறிஸ்து என்று சொல்லுகிறார் யோவான்!! யேசுவை கிறிஸ்து என்று தான் அறிக்கை செய்ய‌ வேண்டுமே த‌விர‌, இவ‌ர் தான் அவ‌ர், அவ‌ர் தான் இவ‌ர் என்று சொல்லுப‌வ‌ன் அந்திகிறிச்து என்று எழுதுகிறார் யோவான்!! பிதாவையும் குமார‌னையும் தான், பிதாவாகிய‌ குமார‌ன் அல்ல‌து குமமார‌னாகிய‌ பிதா அல்ல‌!! யார் அந்தி கிறிஸ்து, திரித்துவ‌ போத‌க‌ம் செய்கிற‌வ‌ர்க‌ளா, அல்ல‌து பிதா வேறு குமார‌ன் வேறு என்று  போதித்த‌ ர‌ஸ்ஸ‌லா!!

I யோவான் 4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

அந்திகிறிஸ்துவின் ஆவி, அன்றே, கிறிஸ்துவை பிதா என்றும், பிதா தான் கிறிஸ்துவாக‌ வ‌ந்தார் என்று போதித்த‌வ‌ர்க‌ளிட‌மிருந்தே துவ‌ங்கிய‌து!! யார் அந்திகிறிஸ்து?

II யோவான் 1:7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

இந்த‌ திரித்துவ‌ போத‌க‌ர்களை தான் அநேக‌ வ‌ஞ்ச‌க‌ர்க‌ள் என்று யோவான் எழுதுகிறார், அவரின் கால‌த்திலிருந்து இருக்கிறார்க‌ள், இன்று செழித்து கொழுத்து க‌த்தோலிக்க‌ர்க‌ள், பெந்த‌கோஸ்தே ச‌பையார் என்று உல‌க‌ம் முழுவ‌தும் த‌ன் மாயைக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்க‌ள்!! யார் அந்தி கிறிஸ்து? யார் வ‌ஞ்ச‌க‌ன்? யார‌ய்யா பாவி?

2 தெச‌ 2:7. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது;

அது என்ன‌ அக்கிர‌ம‌த்தின் இர‌க‌சிய‌ம்!! எப்ப‌டி ச‌பையை ஒரு இர‌க‌சிய‌ம், அது ப‌ல‌ உறுப்புக‌ளை சேர்ந்த‌ ஒரு ச‌ரீர‌மாக‌ ப‌வுல் சொல்லுகிறாரோ, அப்ப‌டியே அக்கிர‌ம‌த்தின் இர‌க‌சிய‌மும், ஒருவ‌ன் அல்ல‌, மாறாக‌ ப‌ல‌ரை (அநேக‌ரை) கொண்ட‌ கூட்ட‌ம் தான்!! அது ர‌ஸ்ஸ‌ல் கால‌த்திலிருந்து அல்ல‌, ப‌வுல் கால‌த்திலிருந்தே இருக்கிற‌து!! இந்த‌ கூட்ட‌த்தார், த‌ங்க‌ளையே கிறிஸ்துக்கு ச‌ம‌ப்ப‌டுத்திக்கொண்டு, பேசுவார்க‌ள், அற்புத‌ங்க‌ள் செய்வார்க‌ள், அதிச‌ய‌ங்க‌ளை காண்பிப்பார்க‌ள், தேவ‌ன் யார் என்ப‌தையே தெரியாம‌ல் தெய்வீக‌த்தை குறித்து பேசுவார்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சில்சாமின் தொடரும் தாமாசுகள்;

வசனம் தெரியாதவன் தமிழ் தெரியவில்லை என்று சொல்லும் நய்யாண்டி சாக்கு!!

உம்மை போன்ற‌ ஆட்க‌ள் தான் அன்று ப‌வுலிடமும் யோவானிடமும் த‌ர்க‌ம் செய்த‌வ‌ர்க‌ளாயிற்றே!!  இயேசு கிறிஸ்துவையே பிசாசின் ஆவி கொண்டிருப்ப‌வ‌ர் என்று சொல்லும் யூத‌னுக்கு யூத‌னாக‌ தானே இருக்கிறீர்!! நீர் யூத‌னுக்கு யூத‌னாக‌வும் கிரேக்க‌னுக்கு கிரேக்க‌னாக‌வும் இருந்து ஆட்க‌ளை த‌ந்திர‌மாக‌ ம‌ய‌க்கிக்கொண்டே இரும், அதான் இயேசு கிறிஸ்துவின் வ‌ருகையின் போது விசுவாச‌த்தை காண்பேனோ என்று சொன்ன‌தே நீர் ம‌ய‌க்கும் ம‌க்க‌ள் கூட்ட‌த்தை பார்த்து தானே!!

எங்க‌ள் கூட்ட‌த்தில் ஒருவ‌ரும் சேராத‌ப‌டிக்கு நீர் பார்த்துக்கொண்டு, இயேசு கிறிஸ்து சொன்ன‌ அந்த‌ "விசுவாச‌த்தை காண்பேனோ" கூட்ட‌த்திற்கு த‌லைவ‌னாக‌ இருந்துக்கொள், யார் வேண்டாம் என்கிறார்க‌ள்!!

1 யோவான் 1:8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

க‌ண்டிப்பாக‌ உம்மிட‌த்தில் குற்ற‌ம் இல்லையென்றால், உம்மிட‌த்தில் ச‌த்திய‌ம் இல்லை, அவ‌ரின் வார்த்தைக‌ளும் இல்லை, அதான் வ‌ச‌ன‌ம் தெரிய‌வில்லை. உம‌க்கு எத்துனை முறை எழுதினாலும் தெரிவ‌தில்லையா, நான் யெகோவா சாட்சிகார‌ன் அல்ல‌ என்ப‌து!! உம‌க்கு வேத‌மும் தெரியாது, வ‌ர‌லாறும் தெரியாது என்றே நினைக்கிறேன்!! உம‌க்கு தெரிந்த‌து த‌மிழ் ஒன்றே!! சிறுத்த‌ ம‌ந்தை ( சிறு ம‌ந்தை) என்று உம்மிட‌த்திலிருந்து சான்று பெற‌ வேண்டிய அவ‌சிய‌ம் என‌க்கு இல்லை, இருந்தாலும் சொல்லியிருக்கிறீர், ந‌ன்றி,

லூக்கா 12:32 பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.

உம‌க்கு வ‌ச‌ன‌ம் தெரியாட்டியும் என்னை ச‌ரியாக‌ இன‌ம் க‌ண்டு கொண்ட‌திற்கு ந‌ன்றி!! மேலும் என் விசுவாச‌ம் அப்போஸ்த‌லிக்க‌ விசுவாச‌ம் தான், அதை குறித்த‌ அறிவு உம‌க்கு இல்லை என்றால் என்ன‌ தான் செய்ய‌ முடியும்!!

உம்மை போல் சலுகை பெறவோ, பள்ளியில் பிள்ளைகளுக்கு இடம் கேட்கவோ, கல்லறையில் புதைக்க இடம் தேடியோ, நான் கிறிஸ்தவனாக இல்லை என்பதை தெரிந்துக்கொள்ளவும்!! ஒரு வேளை நீர் அதற்காக தான் கிறிஸ்தவனாக பாதை மாறிவந்தீரோ, அதான், சலுகை கிடைக்கும் என்று!! ராஜியத்தில் உமக்கு முன்பாக நீர் குறை கூறும் இஸ்லாமியர்கள் தேவனை அறிந்துக்கொள்வார்கள், ஓ, சாரி, உமக்கு ராஜியம் என்னவென்று தெரியாது என்பதை நான் தான் மறந்து போனேன்!! உமக்கு இஸ்லாமியர்கள் எவ்வலவோ மேல், ஏனென்றால் இஸ்லாமிய நண்பர்கள் ஒரே தேவன் என்கிற கொள்கை வைத்திருக்கிறவர்கள்!! உம்மை போல் இவரே அவர் என்றும் அவரே இவர் என்றும் அவர்களிடம் இல்லை!! ஆகவே நான் எங்கே இருக்க வேண்டும் என்று நீர் சொல்லி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை!!

"Taking care for every Soul through Counseling" என்கிற வார்த்தைகளினாலேயே நீர் கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கும் விசுவாசம் வெளிப்படுகிறது.இதை வாசிக்கும் போதெல்லாம் என‌க்கு தோன்றுகிற‌ ஒரு வ‌ச‌ன‌ம் இருக்கிற‌து, அது நிச்ச‌ய‌மாக‌ உம‌க்கு பொருந்தும்,

2 தெச 2:4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

கிறிஸ்துவின் சீஷ‌னாக‌ இருப்ப‌வ‌ன் தான் கிரிஸ்த‌வ‌ன் என்று வேத‌ம் சொல்லியிருக்கும் போது நீர் கிறிஸ்துவை தெய்வ‌மாக‌ தொழுவோர் தான் கிரிஸ்த‌வ‌ர்க‌ள் என்று த‌னியாக‌ ஒரு இய‌க்க‌த்தை ஆர‌ம்பித்திருக்கிறீர் போல்!! வாழ்த்துக்க‌ள், உம‌க்கும் கூட்ட‌ம் சேர‌ட்டும், சேர்ந்து விடும், ஏனென்றால் உம‌க்கு அந்த‌ த‌ந்திர‌ங்க‌ள் இருக்கிற‌து!! நீர் எப்ப‌டி என் த‌மிழில் பிழை க‌ண்டு பிடிக்கிறீரோ, அப்ப‌டியே, த‌மிழ் வேதாக‌ம‌த்தில் உள்ள‌ பிழையை நான் எழுதுகிறேன், இதில் உம‌க்கு என்ன‌!! என‌க்கு என்ன‌ ப‌ங்கு, என்ன‌ பாத்திர‌ம் என்று நான் பார்த்துக்கொள்கிறேன், உம் "தொழுதுக்கொள்ளுதல்" விசுவாச‌த்தில் நீர் கூட்ட‌ம் சேரும்!!

உம‌க்கு தெரிந்த‌து த‌மிழ், க‌விதைக‌ள், வேண்டிய‌து அனைவ‌ரின் பாராட்டும் கைத்த‌ட்ட‌லும்!! நிச்ச‌ய‌மாக‌வே நீர் வேற்று மார்க்க‌த்தான் தான், த‌ய‌வு செய்து இந்த‌ த‌ள‌ம் ப‌க்க‌ம் கூட‌ வ‌ர‌ வேண்டாம், உம‌க்கு ப‌தில் த‌ருவ‌தில் என் நேர‌ம் தான் வீனாகிற‌து!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோதரரே!

சில்சாமின் தமாசுகளையும் அறிவீனங்களையும் வசன ஆதாரங்களோடு எடுத்துரைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்.

ஆனால் ஒரேயொரு மனக்குறை. சில்சாமை ஏதோ பெரிய தமிழ் வித்தகன், கவிஞன் என்பதுபோல இறுதியில் ஒரு வரி எழுதிவிட்டீர்களே, அதன் காரணமாகத்தான்.

//உம‌க்குத் தெரிந்த‌து த‌மிழ், க‌விதைக‌ள், வேண்டிய‌து அனைவ‌ரின் பாராட்டும் கைத்த‌ட்ட‌லும்!!//

இவ்வாக்கியத்தின் பின்பகுதி 100-க்கு 100 உண்மைதான்; ஆனால் முன்பகுதி ... ?

உங்கள் தமிழை குறைசொல்வதால் சில்சாம் ஏதோ பெரிய தமிழ் வித்தகர் ஆகிவிட மாட்டார். சில்சாம் மட்டுமல்ல, இணைய தளங்களில் எழுதுகிற அத்தனை பேரும் பிழையான தமிழில்தான் எழுதுகின்றனர் (நானுங்கூட). உங்கள் தமிழில் 30% பிழை இருந்தால் மற்றவர்கள் தமிழில் 25%, 20%, 15%, 10%, 5% அல்லது 1% பிழை இருக்கும், இதுதான் நம்மிடையேயான வித்தியாசம். இந்த லட்சணத்தில் உங்கள் தமிழைக் குறைசொல்கிற சில்சாமைப் போன்றவர்களுக்காகத்தான் பின்வரும் பழமொழி.

“ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!”

சில்சாம் உட்பட இங்கு இணைய தளங்களில் எழுதுகிற அத்தனை பேரின் தமிழிலும் பிழை கண்டுபிடித்துச் சொல்ல என்னால் முடியும். ஆனால் அது என் வேலையல்ல. வசனங்களுக்கு முக்கியத்துவம் தராமல் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிற இச்செயல் ஒன்றே போதும், சில்சாமின் அறிவீனத்துக்கு சாட்சியாக.

சில்சாமை ஒரு கவிஞராகவும் ஆக்கிவிட்டீர்கள். ஆனால் இக்காலத்தில் பலரது உளறல்களும் கவிதை எனப்படுவதை நீங்கள் அறியமாட்டீர்கள் போலும்.

கவிதை எழுத முன்வருபவர்களை நான் குறைசொல்லவில்லை; ஆனால் இக்காலத்தில் பலரது உளறல்களும் கவிதைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன எனும் உண்மையைச் சொன்னேன், அவ்வளவே.

சில்சாமை பிசாசு எனச் சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் பிசாசானவன் வசனங்களை நன்கு அறிவான். குறிப்பாக இயேசு யார், பிதா யார் என்பதை நன்கு அறிவான்.

மத்தேயு 8:29 அவர்கள் அவரை நோக்கி (பிசாசு பிடித்தவர்கள் இயேசுவை நோக்கி): இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.

பிதாவாகிய தேவன் சொன்னதையும் சற்று படிப்போம்.

மத்தேயு 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

பிதாவாகிய தேவன் என்ன சொன்னாரோ அதையேதான் பிசாசும் சொன்னான். இத்தனை தெளிவாக அவர்கள் கூறியிருந்தும், “இவரே அவர், அவரே இவர்” எனக் கூறுகிற சில்சாம் உட்பட அனைத்து திரித்துவவாதிகளும் பிசாசின் வேதஞானம்கூட இல்லாதவர்களே.

எனவே “யௌவன தளம் நடத்தும் பிசாசு!!” எனச் சொல்வதைவிட “யௌவன தளம் நடத்தும் அறிவீனன்!!” எனச் சொல்வதே பொருத்தமாயிருக்கும்.


-- Edited by anbu57 on Wednesday 5th of January 2011 05:09:14 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நன்றி சகோ அன்பு அவர்களே,

கண்டிப்பாக பிசாசுகளுக்கு தெரிந்த வசனம் கூட சில்சாமிற்கும் அவர் தளத்தில் அவரை பாராட்டி எழுதும் விசிறிகளுக்கும் தெரியவில்லை!! சபித்து எழுதியே பழக்கப்பட்ட சிலசாமிடம் வசனம் கேட்டது என் தப்பு தான், அவர் இன்னும் வேற்று மார்க்கத்தில் இருக்கிறார் என்று அவரே சொன்ன பிறகு அவரிடம் இனியும் வசனம் கேட்பது பொருத்தம் இல்லாதது தான்!!

வசனம் தெரியவில்லை, ஆனால் பாராட்டிற்கு பழகி போன சில்சாம் அட் லீஸ்ட் அவர் தமிழ்க்காக பாராட்டு கிடைக்கிறது என்று மனம் குளிரட்டுமே!! அதற்காக தானே தளம் நடத்துகிறார் என்பது அவர் பாராட்டுகளுக்கு நன்றி சொல்லி எழுதும் பதிவுகளே சாட்சி!!

இந்த தளத்தில் பதிந்தவைகளும் அவர் தளத்தில் பதிவதிலும் முறன் இருப்பத்தாலே தான் இந்த தளத்திலிருந்து தன் பதிவுகளையே நீக்கி விட்டார், இதுவே அவரின் தந்திரங்களை வெளிப்படுத்துகிறது!!

இந்த தளத்தில் உள்ள பதிவுகளையும் அறை குறையாக வாசித்து விட்டு அர்த்தம் புரியாமல் விமர்சனம் செய்கிற சில்சாம் தன் அறிவீனத்தை தான் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டு பாராட்டுகள் பெருகிறார்!!

மேலும், இவர் இருந்த முந்தய மார்க்கத்தில் பல தேவர்களை வழிப்பட்டவர், இப்பொழுது அதை விட முடியாமல், இருக்கும் ஒரே தேவனை மூன்றாக கூறு போட்டு கூவி வியாபாரம் செய்துக்கொண்டு இருக்கிறார், அந்த திரித்துவத்திற்குள் இருப்பதால் என்னமோ நமக்கு பெயர் வைத்தத்து கூட "மும்மூர்த்திகள்" என்பது தான்!!

நான் ஒன்றும் ரஸ்ஸலின் விசிறி அல்ல, ஆனால் நல்லது நமக்கு கிடைக்கும் போது ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு!! இவர்கள் தாறுமாறானதையே சத்தியம் என்று நம்பி அதை இவர்களுக்கு போதிக்கும் மனிதர்களை ஆராதித்து வருகிறார்கள்!! கூட்டம் சேர்ப்பவர்கள் தான் இவருக்கு பிரபலமான ஊழியர்களும், தேவ மனிதர்களுமாக தோன்றுவர்!! இயேசு கிறிஸ்துவினால் கூட கூட்டம் கூட்ட முடியவில்லை, அத்துனை பெரிய இஸ்ராயேல் நாட்டிலிருந்து சுமார் 120 பேரை மாத்திரம் தான் சேர்க்க முடிந்தது, அவரை இவர்கள் எப்படி பார்க்கிறார்களோ!!

நானும் அப்படி தான், கூட்டம் சேர்ப்பதற்கும் பாராட்டு பெறுவதற்கும் நான் எழுதுவதில்லை என்பதை சில்சாம் தெரிந்துக்கொள்ளட்டும்!! ஏனென்றால் லேகியோன் தான் கூட்டமாக இருந்தது என்று வசனம் சொல்லுகிறது!! அப்படி பட்ட கூட்டம் சேர்க்க பிரியப்படுகிறவரிடத்தில் வசனம் கேட்டது என் தவறு தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard