kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவின் சமாதானம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிறிஸ்துவின் சமாதானம்!!


யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

கிறிஸ்து சொன்ன இந்த சமாதானம் என்ன? அவரே சொல்லுகிறார், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை என்று, உலகம் என்ன கொடுக்கிறது? உலகம் இன்று எல்லாவற்றையும் நமக்கு கொடுக்க சாத்தியம் உலதாக இருக்கிறது!! உலகத்தில் நம் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகிவிடுகிறது!! எல்லா சந்தோஷங்கள், எல்லா விதமான மகிழ்வுகள், தேவைகளின் பூர்த்தி இப்படி எல்லாமே, உலகத்திலிருந்தும், உலகத்தை சார்ந்த மனிதர்களிடமிருந்து நமக்கு கிடைத்து விடுகிறது!! கடும் வியாதிகளுக்கு கூட மருந்துகள் கண்டுபிடித்துவிட்டார்கள்!! ஆக உலகத்தின் சமாதானம் நம்மை எல்லா விதத்திலும் திருப்த்தி படுத்தும்!!

ஆனால் அப்போஸ்தலர்கள் அப்படியா இருந்தார்கள்? அவர்களிடமே நேரடியாக இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டது, ஆனால் ஒரு அப்போஸ்தலனும் உலக பிரகராமாக நிம்மதியாக இல்லை, இன்றைய கள்ள அப்போஸ்தலர்கள் போல்!! உலகத்தில் உள்ளவைகளை குப்பை என்று என்னியது தான் அவர்களுக்கு உண்டான சமாதானம்!! நோயோடு இருந்தது தான் அவர்களுக்கு கிடைத்த சமாதானம்! துன்புறப்படுத்தப்பட்டது தான் அவர்களுக்கு கிடைத்த சமாதானம்!! துஷிக்கப்பட்டது, நிந்திக்கப்பட்டது, வார்களினால அடிக்கப்பட்டது, இன்னும் பல நாச மோசத்தின் மத்தியில் கடந்து சென்றது தான் அவர்களுக்கு கிடைத்த சமாதானம்!! அவர்கள் உலகத்தாரோடு இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த இந்த சமாதானம் அல்ல, உலகம் தரும் சமாதானம் கிடைத்திருக்கும்!!

ஆகவே தான் அவர் சொல்லுகிறார், உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக, ஏனென்றால் உபத்திரவம் தான் அவர்களுக்கும் கிறிஸ்துவை உண்மையா பின்பற்றும் அவரின் சீஷர்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) நியமிக்கப்பட்டிருக்கிறது!! இப்படி உபத்திரவங்கள் மத்தியிலிருந்து செல்வது தான் என் சமாதானம் என்று சொல்லியிருக்கிறார்!! நிந்தைகள், தூஷனங்கள், அவமதிப்புகளின் மத்தியில் தான் கிறிஸ்தவர்களுக்கு சமாதானம் என்பதை தான் இந்த வசனம் சொல்லியிருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

நீங்கள் (சீஷர்களான கிறிஸ்ச்தவர்கள்) என்னை பின்பற்றினால், உங்களுக்கு உலகத்திலிருந்து உபத்திரவம் தான்கிடைக்கும், இதில் தான் உங்களுக்கு உண்டான சமாதானம்!! இதிலிருந்து நீங்கள் கடந்து தான் போக  வேண்டும்!!

இன்று அநேகர் செழிப்பின் உபதேசம் என்கிற ஒரு புதிய போதனையினால் உலகத்தின் சமாதானத்தை முக்கியப்படுத்துகிறார்கள்!! நம்மிடத்தில் எல்லாம் உண்டு என்றால் தான் அது நமக்கு ஆசீர்வாதம் என்று சொல்லுவோர் இருக்கிறார்கள்!! இவர்கள் தங்களை அப்போஸ்தர்கள் என்று கூட சொல்ல துனிந்தவர்கள்!! இவர்கள் சபைகளின் பெயர்களும் அப்படியே இருக்கும்!!

பிலிப்பியர் 1:29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

பாடுகளின் மத்தியில் தான் கிறிஸ்தவர்களுக்கு சமாதானம் இருக்கிறது என்கிறார் பவுல், அப்படி பட்ட ஒரு பாடு அனுபவிக்கவே நாம் கிறிஸ்தவர்களாக அழைக்கப்பட்டிரிக்கிறோமா!! யார் வேண்டுமென்றாலும் விசுவாசிக்கலாம் ஆனால் விசுவாசத்தோடு அப்படிபட்ட பாடுகளின் மத்தியிலிருந்து செல்லவே அழைக்கப்பட்டிருக்கிறோம்!!

இதுவே கிறிஸ்துவின் சமாதானம்!! இதற்காகவே நாம் அழைக்கபப்ட்டிருக்கிறோம்!! வெறும் அர்புத சுகம், அதியசம் பெறுவதற்கோ அல்லது இன்றைய ஊழியர்கள் போல் ஒன்றும் இல்லாமல் வந்து பல கோடிகளுக்கு அதிபதிகளாகி வாரிசு ஊழியம் தொடங்கி, அவர்களின் கால் விரலில், அவர்களின் வைத்திருகும் கர்சீப்பில் பரிசுத்த ஆவியையும் அபிஷேகத்தையும்  வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் போல் இருக்க அழைக்கப்படவில்லை!! பவுல் எல்லாவற்றையும் விட்டு எல்லாவற்றையும் குப்பை என்று என்னி கிறிஸ்துவ ஜீவியத்திற்குள் வந்தான், ஆனால் பெரும் "தேவமனிதர்கல்" உலகத்தின் பாடுகளில் இருந்து தப்பிக்க, கிறிஸ்தவ போர்வையை போர்த்திக்கொண்டு, இன்று பாடுகள் என்றால் கிலோ என்ன விலை என்று கேள்வி கேட்கும் அளவிற்கு இருக்கிறார்கள்!! குப்பையிலிருந்து வந்து கோடீச்வரர்களாக மாறிய "ஊழியர்களும்" தேவ மனிதர்களும்" தான் இங்கு அதிகம்!! "சாதாரன" அரசு ஊழியனாக இருந்துக்கொண்டிருந்தால் ஒரு ஸ்கூட்டரில் தான் போக முடியும், ஹோண்டா அக்கார்டில் போக முடியுமா!! சாதாரன வங்கி ஊழியனாக இருந்தால் ஒரு பைக்கில் தான் போக முடியும், பென்ஸ் கார் வாங்க முடியுமா!!

இன்று இதை தான் சமாதானம் என்று என்னி பலர் கிரிஸ்தவம் என்கிற மார்கத்தில் பிரவேசிக்கிறார்கள், கிறிஸ்தவம் என்கிற சீஷத்துவம் என்னவென்று தெரியாமல்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 20:21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

கிறிஸ்துவின் ச‌மாதான‌ம் இருத‌ய‌த்தில் ச‌ந்தோஷ‌த்தை கொண்டு வ‌ரும், போறாமை, அல்ல‌து பெருமை அல்ல‌!! கிறிஸ்துவின் ச‌மாதான‌ம் பாடுக‌ளின் ம‌த்தியிலும் நிறைவை கொண்டு வ‌ரும்!!

இந்த வசனத்தில் திரித்துவ‌வாதிக‌ளுக்கும் ஒரு விள‌க்க‌ம் உண்டு!! பிதாவினால் அனுப்ப‌ட்ட‌ இயேசு கிறிஸ்து த‌ன் அப்போஸ்த‌ர்க‌ளிட‌ம் அப்ப‌டியே நீங்க‌ளும் செல்லுங்க‌ல் என்று அனுப்புகிறார்!! கிறிஸ்து அப்போஸ்த‌ர்க‌ளிட‌ம் இப்ப‌டியாக‌ சொல்ல‌வில்லை, பிதாவாகிய‌ நானே உங்க‌ளை அனுப்புகிறேன் என்று, மாறாக‌ பிதா என்னை அனுப்பிய‌து போல், நானும் உங்க‌ளை அனுப்புகிறேன்!! எப்ப‌டி அப்போஸ்த‌ர்க‌ள் வேறு, கிறிஸ்து வேறோ, அப்ப‌டியே கிறிஸ்து வேறு, பிதா வேறு!!

மேலும் கிறிஸ்துவை பிதா எத‌ற்கு அனுப்பினார் என்ப‌து ந‌ம‌க்கு தெரிந்த‌தே!! அவ‌ர் எப்ப‌டி வாழ்ந்தார், எப்ப‌டி ஊழிய‌ம் செய்தார், எப்ப‌டி ம‌ரித்தார் என்ப‌தையும் அறிவோம்!!

அப்போஸ்தலர் 3:18 கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.

அப்போஸ்தலர் 17:3 கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.

பிதாவினால் அனுப்ப‌ட்ட‌ கிறிஸ்து இப்ப‌டி பாடுக‌ள் ப‌ட்டார், கிறிஸ்துவினால் அனுப்ப‌ட்ட‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ள்,

அப்போஸ்தலர் 9:16 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.

ரோமர் 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

I கொரிந்தியர் 4:12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

இன்னும் நிறைய‌ இருக்கிற‌து. இந்த‌ வ‌சன‌த்தில், கிறிஸ்துவின் ஊழிய‌த்தின் நிமித்த‌ம் வேலை செய்து ச‌ப்பிட்டார்க‌ளாம் அப்போஸ்த‌ர்க‌ள், இன்றைய‌ ந‌வீன‌ க‌ள்ள‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ள் போல் பிற‌ரிட‌மிருந்து வாங்கி சாப்பிட்டார்களாம்!! கிறிஸ்துவின் நிமித்த‌ம் வேலை செய்து சாப்பிடுவ‌துக்கூட‌ பாடு என்று தான் எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌துய்!! இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு பாடு அனுப‌விக்க‌ கூட‌ ந‌ம் ஊழிய‌ர்க‌ளும் தேவ‌ ம‌னித‌ர்க‌ளும் தைய‌ராக‌ இல்லையே!!

இதுவே கிறிஸ்துவின் ச‌மாதான‌ம்!! வ‌ச‌ன‌த்தின்ப‌டி பார்த்தாமென்றால் இன்று கிரிஸ்துவின் ச‌மாதான‌த்தோடு ஊழிய‌ர்க‌ளோ, தேவ‌ம‌னித‌ர்கள்  இருக்கிறார்க‌ள் என்ப‌து ச‌ந்தேக‌மே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard