2 தெச. 2:3. எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
இயேசு கிறிஸ்துவின் வருகையை தெளிவுப்படுத்தும் ஒரு தீர்க்கதரிசன வசனம். மோசக்காரர்கள் அநேகர் வந்து, அதில் சிலர் உயிர்த்தெழுதல் நடந்தேறிவிட்டது என்று சொல்லி வந்தார்கள், இதோ இப்பொழுது, இதோ அடுத்த வருடம், இதோ இத்துனையாவது வருஷத்தில் இயேசு வருகிறார் என்று சொல்லுவார்கள், ஆனால் அதை எல்லாம் நம்ப வேண்டாம், அதற்கு எச்சரிக்கையாக இருங்கள்!! முதலாவது விசுவாசதுரோகம் நடக்க வேண்டும், கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டு ஆக வேண்டும் அதன் பின் தான் கிறிஸ்துவின் வருகை இருக்கும் என்கிறது வசனம்!! அது என்ன விசுவாச துரோகம்!! அது நடந்தேறி விட்டதா, அல்லது இனிமேல் தானா!! யார் இந்த கேட்டின் மகன்? இவன் ஒரு தனிப்பட்ட மனிதனா, அல்லது வேறா? அப்படி என்ன விசுவாச துரோகம் நேரிட்டது!!
யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
இப்படி ஒன்றான மெய் தேவனை மறுதலித்து, அவர் அனுப்பின அவரின் ஒரே பேறான குமாரன் தான் அவர் என்கிற ஒரு விசுவாசத்தை ஒரு சபை துவக்கியது!! அதையே இன்று உலகில் உள்ள ஏறகுறைய அனைத்து சபைகளும் பின்பற்றி வருகிறது!! தேவன் ஒருவரே, அவரின் குமாரனும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் என்கிற அற்புதமான விசுவாசத்தை விட்டு விட்டு, இவர் அவர், அவர் இவர் என்கிற ஒரு புதிய விசுவாசத்தை கொண்டு வந்தது அந்த சபை!! இது தான் பிரியமானவர்களே பெரிதான விசுவாச துரோகம்!! எதை விசுவசிக்க சொல்லி வசனம் சொல்லுகிறது ஆனால் எது விசுவாசிக்கப்படுகிறது என்று வெளியறங்கமாக இருக்கிறது!! இந்த விசுவாச துரோகம் நேரிட்டது கான்ஸ்டன்டைன் தொடங்கிய கத்தோலிக்க சபையிலிருந்து, இன்று நடக்கும் குட்டி சபை வரை!! தேவனையே அறியாதவர்கள், அவரின் ஒரே பேறான குமாரனின் அறிவு இல்லாமல் இருப்பவர்கள் விசுவாசத்தில் இருக்கிறவர்கள் என்று எப்படி சொல்ல முடியும்!! மேலும் கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்படும் வரையின் கிறிஸ்துவின் நாள் அதாவது அவரின் வருகை இருக்காது என்று பவுல் எழுதுகிறார்!! இவர் போன பின்பே இந்த விசுவாச துரோகம் நடக்க துவங்கியது, ஆனால் அது சபையாக, கோட்பாடாக வந்தது சுமார் 325ம் வருடமே. இந்த கேட்டின் மகனாக்ய பாவ மனுஷன் ஒரே ஒரு மனிதனுடன் நிற்பதில்லை, அது ஒரு தொடராகவே இருக்கிறது!! ஒரு கான்ஸ்டண்டைன், அதன் பின் பாப்பரசர்கள், அதன் பின் பல சபைகளை நிறுவியவர்களே!! ஆக பாவ மனுஷன் என்பவன் ஒரு மனிதனாக இல்லாமல், இந்த விசுவாச துரோக கோட்பாடாகவே இருக்கிறது!! இருப்பதிலேயே பெரிய விசுவாச துரோகம் தேவனை அறியாமல் தேவனை சேவிக்கிறோம் என்று சொல்லுவது தான்!!
2 தெச. 2:4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
வேதத்தில் சொல்லப்பட்ட கோட்பாடுகளை எதிர்த்து, அப்போஸ்தலர்களின் போதனையை எதிர்த்து, கத்தோலிக்க சபை தனக்கென்று ஒரு விசுவாசம் கொண்டு வந்தது, அதையே "கத்தோலிக்க விசுவாசம்" என்று அவர்கள் சொல்லுவார்கள்!! இதில் முக்கியமாக எல்லாவற்றுக்கும் முதலாவது வந்தது தான் நிசியாவில் நடந்தேறிய விவாதத்தின் அடிப்படையில் தோன்றிய திரித்துவம் என்கிற கேடான கோட்பாடு!! தேவன் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டவுடன் மற்ற எல்லாமே குழப்பத்தின் உச்சமாக போய் விட்டது!! அந்த முதலாவது கோட்பாடே விசுவாச துரோகத்தின் ஆரம்பம்!! ஒன்றான மெய் தேவனை, திரித்துவமாக சித்தரித்த அந்த கோட்பாடே விசுவாச துரோகத்தின் முதல் படி!! இப்படி பட்ட ஒரு மாபெரும் பொய்யை சபைக்குள் புகுத்தினான் சாத்தான்!! இந்த பொய்யை சபையை நம்ப செய்தார்கள் (அவர்களிடத்தில் தான் வேத புத்தகம் இல்லையே)!! ஆகவே வேதம் சொல்லுகிறபடியே,
2 தெச 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
இப்படி ஒரு மாபெரும் விசுவாச துரோக கோட்பாட்டை விசுவாசத்தினால், தேவன் அந்த சபைக்குள் கொடிய வஞ்சகத்தை அனுப்பினார் என்று கிறிஸ்தவ வரலாற்றை அறிகவர்களுக்கு தெரியும். இந்த ஒரு கோட்பாட்டினால் அநேக தவரான கோட்பாடுகள், விக்கிரக ஆராதனைகள், தேவ தூதர் ஆராதனை போன்றவைகள் அந்த சபைக்குள் தோன்றியது, மார்ட்டீன் லூத்தர் என்கிற மனிதனை தேவன் பயன்படுத்தினார், அநேக கோட்பாடுகளை தூக்கி எறிய செய்தார்!! ஆனாலும் விசுவாச துரோகம் செய்த அந்த கோட்பாட்டை மார்ட்டீன் லூத்தரும் விடவில்லை, அதை அப்படியே பின்பற்றி வந்தார்!! அதன் பின் பெந்தெகோஸ்தே சபைகள் வந்தது, ஆனால் விசுவாச துரோகமான அந்த கோட்பாடு இன்று வரை இருக்கிறது, பரவிக்கொண்டு தான் இருக்கிறது!!
மிகவும் சிலருக்கு வேதத்தின் வெளிச்சம் தேவன் யார் என்றும், அவரின் குமாரன் யார் என்றும் வெலிப்படுத்துகிறது, அதை வெளிப்படுத்துகிற வசனங்களுக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறோம்!!
இந்த விசுவாச துரோக கோட்பாடு என்பது ஆரம்பம்!! இந்த கோட்படு சபைக்குள் வந்ததினால், தேவன் என்றால் என்ன என்கிறதை கூட தூக்கி எறிந்து விட்டு தன்னையே தேவன் என்கிற (போப் ஆண்டவர் என்று தான் தங்களை சொல்லிக்கொள்வார்கள்) ஸ்தானத்தில் உயர்த்திக்கொண்டார்கள், தேவனை விட ஒரு படி மேலாக தங்களை உயர்த்திக்கொண்டார்கள்!! தேவனின் ஆலயத்தில் அவர்களே தேவன் என்று தங்களை உயர்த்திக்கொண்டார்கள்!! பூமியில் தங்களை கிறிஸ்து என்று சொல்லிக்கொண்டார்கள்!! இவர்கள் கொண்டு வந்த கோட்பாடுகளே இன்று எதாவது ஒரு சபையின் போதனையாக இருக்கும்!! இவர்களின் வாழ்க்கை முறையே இன்று பேசப்படும் "செழிப்பின் உபதேசம்" ஆனது!! இப்படி என்னற்ற எடுத்துக்காட்டு சொல்லலாம்!! அவர்கள் தங்களை மேன்மையாக குருக்கள் கூட்டம் என்றும் மற்றவர்களை திருச்சபை ஜனங்கள் என்றும் பிரித்தார்கள், இன்று இருக்கும் பெந்தகோஸ்தே சபைகள், தங்களை பாஸ்டர்களாகவும் போதகராகவும், ஜனங்களை "சாதாரன விசுவாசிகளாகவும்" பிரித்து வைத்திருக்கிறார்கள்!! கொள்கைகளும் கோட்பாடுகளும் அதே தான், பெயர் மாத்திரமே மாறிக்கொண்டே இருக்கிறது!!
இந்த விசுவாச துரோகம் ஒரு மனிதனோடு நிற்கவில்லை, இது ஒரு தொடராக இருந்து இன்று வரையில் தொடர்ந்துக்கொண்டு வருகிறது, இன்னும் கிறிஸ்துவின் வருகையின் போது "விசுவாசத்தை கான்பாரோ" என்கிற அளவிற்கு போய் விடும்!!