kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தப்பிதமான திரித்துவக் கோட்பாடு!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தப்பிதமான திரித்துவக் கோட்பாடு!!


பெரும் கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்கிற கோட்ப்பாட்டை பின் பற்றும் போது, திரித்துவம் எப்படி தவறாக இருக்க முடியும்?

இதற்கு முன்பும் பல தடவை பெரும்பாளுமான கிறிஸ்தவர்கள் தவறாக இருக்கலாம் என்பது நிருபிக்கப்பட்டிருக்கிறது!! எடுத்துக்கட்டாக, 16ம் நூற்றாண்டில் மார்ட்டீன் லூத்தர் கொண்டு வந்த சீர்த்திருத்தம்!! அன்று பெரும்பான்மையான‌ கிறிஸ்தவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அல்லது விசுவாசத்தை தவறு என்றும், மனிதன் கிரியைகளினால் அல்ல, கிருபையினால் இரட்சிக்கப்படுகிறான் என்கிற சத்தியத்தை வெளிப்படுத்தினார்!! சுமார் 95 கேள்விகளை கேட்டு அன்று உலகம் முழுவதும் பரவி இருந்த கத்தோலிக்க சபையை அசைக்க செய்தாரே!! ஞானஸ்நானம், மீட்பு, விசுவாசம் போன்று கோட்பாடுகள் காத்தோலிக்க சபையில் தவறாக இருக்கிறது என்பதை பகிரங்கமாக சுட்டி காண்பித்தாரே!! கத்தோலிக்க சபையால் மார்ட்டீன் லூத்தர் பேதகம் பன்னுகிறவர் என்று முத்திரை குத்தப்பட்டாரே!!

என்னவென்றால், பெரும்பான்மையானோர் பின் பற்றுவதால் ஒரு கோட்பாடு சரியாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்பதற்கு மார்ட்டீன் லூதரின் சீர்த்திருத்தம் ஒரு சரியான எடுத்துக்காட்டு!!

இப்படி மார்ட்டீன் லூத்தர் கத்தோலிக்க சபையின் பல கோட்பாடுகளை பொய் என்று சொல்லியிருந்தாலும், திரித்துவம் என்கிற கோட்பாட்டை அவரும் பற்றுக்கொண்டு தான் இருந்தார்!! இப்படி தேவன் ஒரே மனிதனை கொண்டு எல்லாவற்றையும் வெளிப்படுத்தாமல், வேதத்தின் வெளிச்சம் அதிகமாக பரவ பரவ அவர் காரியங்ளை (சத்தியத்தை) வெளிப்படுத்தி வருகிறார் (வசனத்தை வைத்து தான்)!!

ஒரு காலத்தில் பிராயசித்தம் , தவம் , நோன்பு மூலமாக தான் மீட்பு உண்டு என்கிற மாபெரும் பொய்யான கோட்பாட்டை உடைத்து எறிந்து, வேதத்தின்படி (சொந்த அனுபவத்தின்படி அல்ல) கிருபையினால் மீட்கப்படுகிறோம் என்பதை நிறுபித்தார், அதிலே இன்று ஒரு பகுதியினர் தெளிவாக இருக்கிறார்கள்!! ஆனால் மார்ட்டீன் லுத்தருக்கு பிறகு எல்லா சரியானது தான் என்பதை மாத்திரம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாதே!! அதில் ஒன்று தான் இந்த திரித்துவம்!!

தொடரும்..........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இன்று சுமார் 2000 சபை பிரிவுகள் தங்கள் போதகர்களின் தரிசனத்திலும், காட்சிகளினாலும் நிறுவப்பட்டிருக்கிறது! ஒவ்வொரு சபைக்கும் வித்தியாசமான கோட்பாடுகள் உண்டு, எல்லா சபைகளும் தங்களின் கோட்பாடுகள் சரி என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது, அப்படி என்றால் ஏன் இத்துனை பிரிவினைகள், ஏனென்றால் வசனத்தின் படி இல்லாமல், தங்களுக்கு கிடைக்கும் தரிசனங்கள் மற்றும் காட்சிகலினால் சபை துவங்கப்படுகிறது (கான்ஸ்டன்டைன் கத்தோலிக்க சபையை நிறுவியது கூட காட்சியின் அடிபடையில் தான் என்பது கிறிஸ்தவ வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்)!! அப்படி என்றால் எல்லா சபைகளும் சரியா, எல்லா சபைகளும் சரி என்றால் ஏன் இத்துனை பேதகங்கள், ஏன் இத்துனை முறனான போதனைகள், திரித்துவம் (இதற்கே பல விதமான விளக்கங்கள் உண்டு), திரியேகத்துவம், ஞானஸ்நான போதனைகள், கர்த்தர் பந்தி ஆசரிப்பில் மாறுபாடுகள், செழிப்பின் உபதேசங்கள், ராஜியத்தை குறித்தான தெளிவு, இப்படி எல்லாவற்றிலும் எல்லா சபைகளும் மாறுபாடோடு தான் இருக்கிறது!! ஒன்றிலும், பிழை இல்லாமல் இல்லை, ஆனால் கிறிஸ்து நிறுவும் சபை,

எபே 5:25 .....அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 26. தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27. கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

நம் மணவாளன் வருகிறார், ஒரு கறைதிறையற்ற மனவாட்டி சபையை கூட்டி செல்ல!! ஆக நாம் பரிசுத்தத்திற்கு நேராக நடக்க முயற்சிப்போம், நம்மில் இருக்கும் பாரம்பரியங்கள் என்னும் பெரிய கறையை முதலில் துடைத்து எறிவோம், எல்லாரும் பின்பற்றி வருகிறார்கள் என்பதால் தவறை பின் பற்றுவதை விட்டு விடுவோம், பிழைகளை வசனத்தைக் கொண்டு சுத்திகரிப்போம், சபையில் நிலைத்து நிற்க!! ஏனென்றால் வரலாறு நமக்கு சாட்சியாக இருக்கிறது, நாம் கிறிஸ்தவத்தில் எத்துனை பிழைகளை தூக்கி எறிந்து வந்திருக்கிறோம் என்று!! நம்மை வேத புத்தகமும் இப்படியாக எச்சரிக்கிறது,

அப். 20:29. நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30. உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

இது பலர் இன்று நினைப்பது போல், நாங்கள் திரித்துவம் இல்லை என்று சொல்லுவது என்று நினைத்து வருகிறார்கள், வசனத்தை பார்த்தோமென்றால், திரித்துவத்தை போதிக்காத பவுல் போனபின்பு (பவுல் மரித்தவுடன்) இப்படி மாறுபாடான திரித்துவம் என்கிற போதனை துவங்கியது, இது சீஷர்களை (கிறிஸ்தவர்களை) வஞ்சித்து திரித்துவம் என்கிற பேதகத்தில் மறைத்துக்கொண்டது!! பிழை பவுல் சென்றவுடனே ஆரம்பித்து விட்டது!! ஓநாய்கள் பவுல் சென்றவுடனே சபைய கறையால் நிறப்பினார்கள்!!

தொடரும்............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

உத்தரிக்கிரஸ்தலம் (Purgatory) என்கிற ஒரு வார்த்தையோ அதை விளக்கும் ஒரு வசனமும் வேதத்தில் இல்லாததினால் அப்படி ஒரு இடம் இல்லை என்று கத்தோலிக்கத்திலிரிந்து வெளியேறியவர்களும், மற்ற சபையினரும் சொல்லுகிறார்களே!! மிகவும் சரி தான்!! ஆனால் கத்தோலிக்கர்கள் அதற்கு ஆதாரமாக காட்டும் வசனம் மக்கபே ஆகமம் (தள்ளுபடியாகமம்) என்கிற புத்தகத்தில் இருக்கிறதாம், மரித்தோரை உத்தரிக்கிரஸ்தலத்திலிருந்து பரலோகம் கூட்டி செல்வதற்கு திருப்பலி வைப்பது போன்ற சம்பவங்கள் அதில் இருக்கிறது!! கத்தோலிக்கர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள், அதுவும் சரி, இது போல் வேதத்தில் இல்லாத திரித்துவம் என்கிற வார்த்தையோ, அதன் கருத்தோ இல்லாத ஒரு வார்த்தையை கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், தவறு இல்லை, ஏனென்றால் கத்தோலிக்கம் என்பதற்கும் கிறிஸ்தவம் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது, இரண்டுமே வேறு மதங்கள்!!

பிரிந்துவந்த அனைத்து சபைகளும் உத்தரிக்கிறஸ்தலத்தை விட்டு விட்டார்கள், அட, அந்த வார்த்தை வேதத்தில் இல்லையாம், ஆனால் கத்தோலிக்கர்கள் அறிமுகப்படுத்திய திரித்துவத்தை மாத்திரம் கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள், ஆனால் இந்த வார்த்தையும் தான் வேதத்தில் இல்லையே!!

கத்தோலிக்கம் என்கிற ஒரு மதத்திலிருந்து வந்த திரித்துவத்தை இன்றைய கிறிஸ்தவ சபைகள் ஏற்றுக்கொண்டு நடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!! இது சம்பவிக்காமல் போயிருந்தால் தான் வேத வசனங்கள் பொய் என்று ஆகியிருக்கும்!! இப்படி நடப்பது, வேதத்தை நேசிக்கும் நமக்கு, வேதத்தின் மேல் இன்னும் அதிகமான பற்றுதல் ஏற்படுகிறதே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard