மத் 16:16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18. மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
பேதுரு சொன்ன இந்த ஒரு வாக்கியம் தான் கிறிஸ்துவ விசுவாசத்தின் அல்லது சபையின் பாறைகல்லாக இருக்கிறது, அஸ்திபாரமாக விளங்குகிறது!!
பேதுருவிற்கு பரலோகத்தில் இருக்கும் இயேசுவின் பிதா நம் தேவன் வெளிப்படுத்திய ஒரு மாபெரும் உண்மை, இன்று திரித்துவம் என்று அடம்பிடித்துக்கொண்டிருப்போரின் கோட்பாட்டை தவிடுப்பொடியாக்கும் ஒரு வெளிப்பாடு தான்,
"நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து"
பேதுருவிற்கு இதை பரலோகத்தில் இருக்கும் தேவனே வெளிப்படுத்தியதாக, அதாவது என் பிதா (இயேசு அல்ல) வெளிப்படுத்தியது என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்!! பிதா இயேசுவை தன் குமாரன் என்றே வெளிப்படுத்தியிருக்கிறார், நான் தான் இயேசு என்று சொல்லவில்லை!! மேலும் இந்த நம்பிக்கை, இந்த விசுவாசம், அதாவது இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்கிற இந்த மாபேரும் உண்மையின் மேல் தான் தன் சபையை கட்டுவேன் என்றும், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்று சபைக்கு தலையாக இருக்கும் கிறிஸ்து இயேசு பேதுருவை பாராட்டுகிறார்!!
என் பிதா என்று இயேசு தன்னையும் பிதாவையும் வேறு படுத்தியிருக்கிறாரே!! தான் தேவனின் குமாரன் தான் அந்த பிதாவாகிய தேவன் அல்ல என்பதை அவரே சொல்லியிருக்கிறாரே!! மனித ஆவியில் முயற்சித்து தப்பிதமான ஒரு கோட்பட்டை நிறுவிய மாம்ச சபைகள் எந்த நிலையிலிருக்கிறார்கள் என்று சுய பரிசோதனை செய்துக்கொள்ளட்டும்!!
இப்படி வேதம் முழுவதும் ஏகபட்ட வசனங்கள், பிதா வேறு கிறிஸ்து இயேசு வேறு என்பதை சொல்லியிருக்கிறது, ஆனாலும் சிலர் பாரம்பரியத்தின் வெளிச்சத்தில் விசுவாசம் கொள்வதால் இப்படி பட்ட வசனங்கள் தெரியாது, புரியாது!! இன்னும் வசனத்துடன் எழுதுகிறேன்!!
இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தேவனின் ஒரே பேறான குமாரன். சபையில் இருப்போர் பேதுரு சொன்னது போல் இதை தான் நம்ப வேண்டும். இதற்கு மாறாக இயேசு கிறிஸ்து தான் அந்த உன்னதமான தேவன் என்றும், அவரே தான் பிதா என்று சொல்லுவது அபத்தம், இன்று கிறிஸ்தவம் இதை தான் சொல்லி வருகிறது. கிறிஸ்து நம் தேவனுக்கும், அவர் தேவனுக்கும், நம் பிதாவிற்கு அவர் பிதாவிற்கும் மத்தியில் பரிந்துறையாளராக இருக்கிறார்!!
யோவான் 20:31. இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
நீதி. 30:4. வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
இயேசு கிறிஸ்து தேவனின் குமாரனாக இருந்தவர், இருக்கிறார், என்றென்றும் அவரே முதற்பேறான குமாரனாக இருப்பவர்!!
யோவான் 3:18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
இயேசு கிறிஸ்துவை தேவனின் குமாரன் என்றே விசுவசிக்க சொல்லப்பட்டிருக்கிறது, தேவன் என்று இல்லையே,
ஏனென்றால் சபைக்குள் இதுதான் விசுவாச பாறையான வார்த்தைகள், "நீர் ஜீவனுள்ள தேவனின் குமாரனான கிறிஸ்து" மத் 16:16.
இயேசு தேவனுடைய குமாரன் என்பதற்கு ஆதாரமான நேரடி வசனங்கள் எத்தனையோ இருந்தாலும், அத்தனை வசனங்களையும் பொய்யாக்கிவிட்டு, இயேசுதான் கடவுள்/தேவன்/பிதா எனக் கூறுகிற அத்தனைபேரும் கண்ணிருந்தும் குருடர்களே.
வேதத்தின் வசனங்கள் கிறிஸ்து இயேசுவை தேவ குமாரன் என்று தான் சொல்லுகிறதே தவிர, தேவன் என்று இல்லை!! எல்லாவற்றுக்கும் மேல், அவர் தன்னை தேவனின் குமாரன் என்று சொன்னதை தான் யூதர்கள் தேவ தூஷனம் என்றும் கிறிஸ்துவிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்!! எந்த இடத்திலும் அவர் தன்னை பிதாவாகவோ, பிதாவை விட மேலானவராகவோ காண்பித்துக்கொள்ளவில்லையே!! தன்னை தேவனின் குமாரன் என்றும், அவரிடத்திலிருந்து தான் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்கிறார் என்றும் தானே சொல்லியிருக்கிறார்!!