//இவர் இங்கு என்ன சொல்ல வருகிறார். இதுவரை உங்களை நண்பர் என அவர் அழைத்ததில்லையா? சிவபெருமானின் அவதாரமான மற்றொரு நண்பர் யார்?இருப்பினும் நேரமெடுத்து இவர்களுக்கு நீங்கள் பதில் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. கள்ள உபதேசங்களை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரரே//
திரித்துவத்தை துவங்கி வைத்தை கத்தோலிக்க சபையில் இருப்பவர் நண்பர் கோல்வின் அவர்கள், ஆவி நிறைந்த பெந்தகோஸ்தே சபையை சார்ந்தவர் சில்சாம்!! எல்லா சபைகளும் ஒன்று கூடும் என்பதற்கு இவர்களே சாட்சி!! நாங்கள் போதிப்பது அல்லது பின்பற்றுவது என்னவென்று தெரியாமல், ஒரு சிறிய பகுதியின் நீண்ட பதிவுகளை வைத்து கள்ள உபதேசங்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றிகள் தெரிவித்திருப்பது சரியான 'சகோரத்துவ' பாசம் தான்!! கத்தோலிக்க சபையின் தவறுகளை பின் பற்றாமல் அதே சபையில் இருப்பது பாராட்டிற்குறியதே!! கள்ள உபதேசங்கள் என்று கவிதை எழுதுவதால் உபதேசங்கள் கள்ளத்தனமாகி விடாது!! வசன ஆதாரம் தர முடியாமல் பாரம்பரியங்கள், துதிப்பாடல்களை ஆதாராமாக வைத்து எங்களது கள்ள உபதேசங்கள் என்று சொல்லுவதில் என்ன கொண்டாட்டமோ!!
கோல்வின் அவர்களே, மகா வேசியான அந்த பாபிலோனிய கத்தோலிக்க சபையில் தான் நானும் பிறந்து வளர்ந்தேன், ஆனால் அதன் போதனைகளை (திரித்துவம் உட்பட) ஏற்றுக்கொள்ளமுடியாமல் அதை விட்டு வெளியேறி, சத்தியத்தை ஆறாய்ந்து நடக்க முயற்சிக்கிறோம்!! நாணயத்தின் இருப்பக்கமும் பார்த்து எது கள்ள உபதேசம் என்று முடிவு செய்யுங்கள்!!
கண்ணதாசன் இயேசு காவியம் எழுதியதால் அவரை போதகராக ஏற்றுக்கொள்வீர்களா? எங்களின் தளத்தில் வருகை தாருங்கள் பிறகு எங்களை குற்றவாளி என்று சொல்லலாம்!!
பேதுரு இப்படி சொன்னதால் அவர் கூட கள்ள உபதேசம் செய்திருப்பாரோ!?
மத். 16:16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
கோல்வின் அவர்களே,
நாங்கள் இயேசுவை தேவனின் குமாரன் என்று தான் சொல்லுகிறோம், ஆனால் நீங்களோ அவரை பிதாவென்று சொல்லுகிறீர்கள்!! அப்படி என்றால் மத் 16:17ல் இயேசு கிறிஸ்து ஏன் பரலோகத்திருக்கிற பிதாவை குறித்து சொல்லியிருக்க வேண்டும், ஏனென்றால் அவரே பிதா என்று அவருக்கு தெரியாதா!?
முதலில் கள்ள உபதேசம் என்றால் என்னவென்று தெர்நிதுக்கொண்டு பிறகு விமர்சிக்கலாம்!!
திரித்துவத்தில் ஊறி போனவர்கள், இயேசுவை பிதா என்று சொல்லுவதை நல்ல உபதேசம் என்றும், இயேசு கிறிஸ்து தேவனின் குமாரன் என்று சொல்லுவோரை கள்ள உபதேசம் செய்வோர் என்று தான் புரிந்துக்கொள்வார்கள், ஏனென்றால் இவர்களின் விசுவாசம் வசனத்தினால் அல்ல, பாரம்பரியத்தினால்!!
என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்றும், நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்கிற வசனங்களுக்கு ஆயிரம் அர்த்தம் கொடுக்கலாம், ஆனால் வேதத்தில் பிதாவும் குமாரனும் வேறு என்றும் பிதாவை தேவன் என்றும் குமாரனை கர்த்தர் என்று சொல்லும் பல நூறு வசனங்கள் இருந்தும் அதற்கு அர்த்தம் ஒன்ற்ரே தான்!! பிதா வேறு குமாரன் வேறு!! பிதா குமாரானாக வரவில்லை, குமாரன் போய் பிதாவாக மாறவில்லை!! மாம்சத்தில் இயேசுவாக வந்தவர் கிறிஸ்துவே!! மாம்சத்தில் தேவன் (பிதா) தான் இயேசுவாக வந்தார் என்று சொல்லுபவர் அந்திகிறிஸ்துவின் ஆவிக்கொண்டவர்கள் என்று நான் அல்ல வேதம் தான் சொல்லுகிறது!!
1 யோவான் 4:2. தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
மாம்சத்தில் வந்தவர் கிறிஸ்துவே என்று அறிக்கை செய்பவர்களிடம் இருக்கும் ஆவி தேவனால் உண்டாயிருக்கிறதாம்!! மாம்சத்தில் கிறிஸ்து அல்ல, பிதா தான் வந்தார் என்று அறிக்கை பன்னுவோரின் ஆவி, தேவனால் உண்டானதல்ல என்று அப்போஸ்தலன் எழுதுகிறான்!! தேவனால உண்டாகதப்படியினால் அது அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி என்று அப்போஸ்தலர் எழுதுகிறார்!! அப்படி என்றால் எது கள்ள உபதேசம்!! இயேசுவை கர்த்தர் என்றும் தேவனின் குமாரன் என்று சொல்லுவதும் கள்ள உபதேசமா, அல்லது இயேசுவை பிதா என்றும் அவரும் இவரும் ஒருவரே என்று சொல்லுவது கள்ள உபதேசமா!!
நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம், என்று சொன்னவர், நானும் பிதாவும் ஒருவரே என்று சொல்லியிருந்தால் திரித்துவம் எங்களுக்கு புரிந்திருக்கும்!! ஆனால் என் தேவன் ஒருவரே என்று நம்பிக்கையில் நான் வேதத்தில் வாசித்தல், நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்றால் ஒரே ஆவி, ஒரே தன்மை, ஒரே சிந்தை இப்படி தான் இருவர் ஒன்றாக இருக்க முடியுமே தவிர, இருவர் ஒருவராகவோ ஒருவர் இருவராகவோ இருப்பது ஏதோ ஜீம்பூம்பா கதை போல் இருக்கிறது!!
எபேசியர் 5:31 இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
கணவன் , மனைவி இருவரும் ஒரே மாம்சமாக இருக்க வேண்டுமாம்!! அப்படி என்றால் என்ன இருவரும் ஒன்று தானா, அதாவது, கணவன் தான் மனைவி, மனைவி தான் கணவன் என்கிற அர்த்தமா, அல்லது இருவரும் ஒன்று தானா!!
I கொரிந்தியர் 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
ஒரே மாம்சமாக இருங்கள் என்று சொன்னால் கூட, புருஷன் மனைவிக்கு தலையாக இருக்கிறானாம், தேவன் கிறிஸ்துவிற்கு தலையாக இருக்கிறாராம், கிறிஸ்து புருஷனுக்கு தலையாக இருக்கிறாராம், இதை நீங்கள் (திரித்துவவாதிகளே நீங்களே தான்) அறியவேண்டும் என்று பவுல் விரும்புறார், ஆனால் அப்படி எல்லாம் அறியமுடியாது என்று திரித்துவம் பேசும் நண்பர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்!!
ஆக நானும் பிதாவும் ஒன்றாக இருகிறோம் என்றால் நாங்கள் இருவரும் ஒன்று தான் என்கிற அர்த்தம் இல்லை!!
என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்று சொல்லியதால் பிதாவும் கிறிஸ்துவும் ஒன்றே என்று அர்த்தம் அதைவிட அபத்தம்!!
உலக பழக்கத்தின்படி,
"உன் பைய்யன் அப்புடியே உன்னை உறிச்சி வெச்சு பிறாந்திருக்கிறான்" என்று சொல்லுவதால், அப்பாவின் தோலை உறிச்சி பைய்யனுக்கு உடுத்தியதாக அர்த்தம் அல்ல!! அப்படியே, "உன் பைய்யனை பார்த்தேன், அப்படியே உன்னை பார்த்தது போல் இருந்தது" என்றும் சொல்லுவார்கள், உடனே இருவரும் ஒன்று என்று சொல்ல முடியாது!! இருவரும் ஒரே சாயல், ஒரே சிந்தை, ஒரே தன்மையுடைவர்கள் என்று வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளலாமே தவிர, இருவரும் ஒன்று தான் என்று சொல்லுவது அபத்தமாக இருக்கும்!!
அப்படியே தான், கிறிஸ்துவும், பிதாவின் தற்சொருபம் தான் தவிர பிதா கிடையாது!! பிதாவின் எல்லா குனாதிசியங்களும் கிறிஸ்துவிடத்தில் இருந்ததால் அவர் அப்படி சொல்லியிருக்க கூடும்!! மேலும், பிதாவை தான் ஒருவரும் பார்க்க முடியாது என்று வசனம் இருப்பதால், ஃபிலிப்புக்கு அதை புரியவைக்க கூட சொல்லியிருக்கலாமே!! அட ஃபிலிப்பே, பிதாவை தான் ஒருவரும் பார்க்க முடியாதே, அதான் என்னை பார்த்திருக்கிறாயே, பிதா எப்படியோ, அப்படியே தான் நானும், என்னை பார்த்தாயானால் , பிதாவை பார்த்தது போல் என்று சொல்லியிருப்பதை, திரித்துவவாதிகள் தந்திரமாக, பிதா தான் இயேசு கிறிஸ்து என்று சொல்லி விட்டார்கள்!!
என் பிதா, என் பிதா என்று கிறிஸ்துவே வேதத்தில் அத்துனை முறைகள் சொல்லியும் ஃபிலிப்பிடம் போய் நான் தான் பிதா என்று இந்த வசனத்தின் மூலமாக சொல்லியிருக்கிறார் என்று சொல்லுவது அபத்தமாக தோன்றவில்லையா!!
யோவான் 3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
தேவன் தானாக வராமல் தன் குமாரானை தான் அனுப்பினார் என்று வசனம் தெளிவாக இருக்கிறது!! அது எப்படி நாங்கள் கள்ள போதனை செய்கிறோம் என்று நம்புகிறீர்கள் திரு கோல்வின் அவர்களே!! குமாரனை குமாரன் என்று சொல்லுபவன் கள்ல போதகனா, அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் கத்தோலிக்க சபை அல்லது தாங்கள் ரசிக்கும் சபையான பெந்தகோஸ்தே சபை போதிக்கிறபடி, பிதா தான் குமாரன், குமாரன் தான் பிதா என்பது கள்ள போதனையா!! இந்த தளத்தில் அல்ல, நல்ல போதனை செய்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கும் உங்கள் தளத்திலும் தங்கள் பதிலை தரலாம்!!