லூக் 12:41. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். 42. அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? 43. எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். 44. தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். 45. அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், 46. அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். 47. தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் 48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்
வேத மாணாக்களும் இன்னும் சிலரும் இரண்டாம் மரணம் என்பது மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டது என்று போதித்தி வருகிறார்கள்!! வெளி. புத்தகத்தில் இருப்பதை எழுத்தின்படி எடுக்க கூடாது என்று போதித்து விட்டு, இரண்டாம் மரணம் மாத்திரம் மனிதர்களுக்கு தான் என்று அவர்கள் போதிக்கிறார்கள்!!
மேலே குறிப்பிட்ட இந்த வசனத்தை வாசியுங்கள்!! தன் எஜ்மானுடைய சித்தத்தை அறிந்தும் அவர் சித்தத்தின்படி செய்யாதவரை கூடுதலான அடிகளோடு எங்கே வைக்கிறார், உண்மையில்லாதவர்களுடன் தானே!! உண்மையில்லாதவர்கள் இந்த பூமியில் கிறிஸ்துவின் பலியின் பெலனாய் உயிர்த்தெழுந்து வருவார்கள்!! அவர்கள் ஒன்றும் தெரியாததினால் தேவனின் சித்தம் செய்யாதவர்கலாய் இருந்தவர்கள், அவர்கள் கொஞ்சம் அடிகளில்(சிட்ச்சை) கற்றுக்கொள்வார்கள், ஆனால் இங்கே இப்பொழுது தேவனின் சித்தம் தெரிந்திருந்தும், அவர் சித்தம் செய்யாமல் இருப்பவர்கள், கூடுதலான அடிகள் (சிட்ச்சை) பெற்று உண்மையில்லாதவர்களுடன் தான் வைக்கப்படுவார்கள்!! இறுதியில் இந்த பூமி முழுவதும் தெவனை அறிகிற அறிவில் நிறம்பும் என்கிற வேத வசனம் நிறைவேறும்!!
//வேத மாணாக்கரும் இன்னும் சிலரும் இரண்டாம் மரணம் என்பது மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டது என்று போதித்து வருகிறார்கள்!! வெளி. புத்தகத்தில் இருப்பதை எழுத்தின்படி எடுக்கக் கூடாது என்று போதித்து விட்டு, இரண்டாம் மரணம் மாத்திரம் மனிதர்களுக்குத் தான் என்று அவர்கள் போதிக்கிறார்கள்!!//
வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை.
இவ்வசனம் கூறுகிற பாக்கியவான்களைத் தவிர மற்றவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு என்பதற்கு இவ்வசனமே ஆதாரமாக உள்ளது. எனவே 2-ம் மரணம் என்பது மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டதே என போதிப்பதில் என்ன தவறு சகோதரரே?
வேத வசனத்திலிருந்து தான் நம் விசுவாசம் என்றால், வேதத்தின் தேவனை குறித்தும் நாம் அறிய வேண்டுமே!! அவரின் அன்பு அவர் தன் ஒரே பேரான குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை இவ்வுலகத்தில் மீட்கும் பொருளாக அனுப்பியதிலிருந்தே தெரிய வரும்!! (யோவான் 3:16)!
முதல் மரணம் என்பது நிச்சயமாக மனிதர்களுக்கு நியமிக்கப்பட்ட ஒன்று தான், அதில் சந்தேகமே கிடையாது, அது வெளி. புத்தகத்தில் மாத்திரம் அல்ல, வேதத்தின் பிற புத்தகங்களிலும் நேரடியாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது!! பாவத்தின் தண்டனையான மரணம் மனிதர்களை ஆட்க்கொண்டபோது அதை நித்திரையாக மாற்றி, அதிலிருந்து உயிர்த்தெழுதலின் நிச்சயத்தை தேவன் அவரின் கிருபையினால் தந்தார்!!
முதலாம் மரணத்திற்கு முன்பு மனிதனை சாத்தான் ஆண்டுக்கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் வைத்து, அவரின் குமாரனின் சாயலில் சிலரை அவர் தேஎர்ந்தெடுக்கிறார் (பாவிகளாக இருந்தாலும்)! இப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தான் முதலாம் உயிர்த்தெழுதல் (Special class of resurrection) அடைக்கிறார்கள்!! மற்றவர்களை இந்த பூமியில் உயிர்த்தெழச்செய்து அவர்களை கிறிஸ்துவின் ஆளுகைக்கு உட்படுத்தி அவர் மூலமாக சிட்சை பெற்று அதில் பலரை மீண்டும் "இரண்டாம் மரணத்தில்" போடுகிறார் என்றால் அவர் அன்பில் தொய்வு ஏற்பட்டு விட்டதா? மாறாத அன்பு கொண்ட தேவன் தன் அன்பில் மாறி விடுகிறாரோ!?
"இரண்டாம் மரணம்" என்கிற ஒரு வார்த்தை வெளி. புத்தகத்தில் மாத்திரமே இருக்கிறது!! இதை வைத்துக்கொண்டு, அது முதல் மரணம் போல் மனிதர்களுக்கு நேர்வது தான் என்பது எப்படி சரியாக இருக்கும்!! தேவன் உயிர்த்தெழுந்த மனிதர்கள் மேல் அன்பற்றவராக போய்விடுவார் என்கிறவிதமான போதனை தான் "இரண்டாம் மரணம்" என்கிற போதனை!! பரிகரிக்கப்பட வேண்டிய கடைசி சத்துரு மரணம் என்று சொல்லி விட்டு (1 கொரி 15:26), மரணத்தை பாதாளத்தில் தள்ளி விட்ட பிறகு (அழித்த பிறகு) மீண்டும் ஒரு மரணத்தை கொடுக்கிறார் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது!!
ஆக, இரண்டாம் மரணம் என்பது, முறைமைகளுக்கு (Systems and that too all false systems) தான் அன்றி மனிதர்களுக்கு அல்ல என்பதை விசுவசிக்கிறேன்!! கிறிஸ்துவால் நேரடியாக சிட்சிக்கப்படும் ஒரு மனிதன் "இரண்டாம் மரணம்" என்கிற தண்டனை பெருகிறான் என்றால் அந்த சிட்சை எப்படிப்பட்டதாக இருக்க முடியும்!! எல்லோரையும் இரட்சிக்கவே தேவன் சித்தமாக இருக்கிறார் என்பதும் "இரண்டாம் மரணம்" என்கிற போதனையால் தப்பாகிவிடுகிறது!!
சாத்தானின் ஆதிக்கத்தில் எப்படி "எல்லாரும்" பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்கள் ஆனார்களோ அதே வண்ணமாக கிறிஸ்துவின் ஆதிக்கத்தில் "எல்லாரும்" பாவமின்றி வாழ்ந்து தேவமகிமையை அடைவார்கள். ஒருவராவது கெட்டுப்போவது தேவனுடைய சித்தமாக இருக்கமுடியாது.
தேவனால் எல்லாம் கூடும் என்பவர்கள், "பாவிகளை" தேவனால் இரட்ச்சிக்கவே முடியாது(அவனது முயற்சி இருந்தாலொழிய) என்று வாதிடுபவர்கள் தேவ தூஷணம் செய்பவர்கள். ஒரு ஆத்துமா இழக்கப்பட்டாலும் அது தேவனுக்குத் மாபெரும் தோல்வியே!