சந்தோஷ் அவர்களின் தளத்தில் பதிந்த ஒரு கருத்தை அபத்தம் என்று எழுதியதற்கு மற்றோரு தேவ தூஷன தளத்திலிருந்து வரும் பதில்:
//"நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் " என்று ஆண்டவரே சொன்னபிறகும் அவரையும் பிதாவையும் கூறுபோடும் குள்ளநரித்தனத்தை என்னவென்று சொல்ல..? இங்கே சந்தோஷ் ஏதோ எழுதியிருக்கிறார்,அது அத்தனை ஆபத்தான உபதேசக் கோளாறல்ல,ஆனால் கோவை பெரியன்ஸ் குறித்து நான் மீண்டும் எச்சரிக்கிறேன்;அவர்கள் தேவ பக்தியின் வேஷம் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாக்கும்.//
இந்த தள நிர்வாகி சொல்லுகிறார், இவரே வழிய போய் வம்பு இழுக்க மாட்டாராம், இவரை யாராவது சீண்டினால் தான் இவர் சண்டைக்கு வருவாராம்!!
சரி அவருக்கும் நமக்கும் ஒன்றும் இல்லை தான், ஆனால் அவர் கொடுத்திருக்கும் பதிலை பாருங்கள், நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம், என்னைக் கண்டவன் என் பிதாவை கண்டான்" என்று சொல்லுவதால், இயேசுவும் பிதாவும் ஒன்றாகிவிடுவார்களா!!
யோவான் 14:20. நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். 21. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
இந்த வசனத்தை வாசித்து விட்டு சில்சாமும் இயேசுவும் பிதாவும் ஒன்றே என்று கூட சொல்லுவார்!! இவர்களுக்கு எல்லாம் எத்தனை வசனங்கள் எழுதினாலும் இவர்கள் கண்கள் கட்டப்பட்டதால் குதிரைக்கு அந்த நேர் வழி தெரிவது போல், இவர்களுக்கு இந்த இரண்டு வசனத்தை வைத்து பிழைப்பு நடத்துவது தான் தொழில்!! ஏனென்றால், சாத்தான் மற்றும் மனித போதனைகளை பின் பற்றுகிறவர்கள் இவர்கள்!! ஆகவே தான் பிதாவையும் கிறிஸ்து இயேசுவையும் ஒன்று படுத்தி பேசுகிறார்கள்,
பிதா என்று ஒருவர் அழைக்கப்படுகிறார் குமாரன் என்று ஒருவர் அழைக்கப்படுகிறர்!! ஒருவர் அநாதியாக இருக்கிறார், ஒருவர் ஆதி முதல் இருக்கிறார்!! ஒருவர் சாவாமை உள்ளவர், ஒருவர் மரித்து மூன்றாம் நாளிலே அந்த சாவாமையுள்ளவரால் எழுப்பப்பட்டவர்! தேவன் ஏக சக்கராதிபதியாய் இருக்கிறவரும் கிறிஸ்து இயேசு அவருக்கு கீழ்ப்படிந்தவராகவும் இருக்கிறவரே!! தேவனின் நாமத்தை சொல்லியே பிழைப்பு நடத்தும் இவர்களின் கூட்டத்தர் தான் "தேவ பக்தியின் வேஷம் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள்"!!
நானாக சண்டைக்கு போவதில்லை, என்னை யாராவது வம்புக்கு இழுத்தால் தான் நான் அவர்களை குறை கூறி எழுதுவது என்று சொல்லிய சில்சாம், தன் பொழுதுப்போக்கை மீண்டும் தொடங்கி விட்டார்!! இவருக்கு பாரம்பரியமே முக்கியம், ஏனென்றால் இரண்டே இரண்டு வசனங்களை வைத்துக்கொண்டு தேவனும் பிதாவும் ஒன்று என்று ஒரு பெரிய கட்டுறையே எழுதுவார்!! பிதாவும் குமாரனும் வேறு என்று வேதத்தில் எத்துனை வசனங்கள் இருந்தாலும் சாத்தானினால் குறுடாக்கப்பட்டவர்களுக்கு குதிரையை போல் இந்த இரண்டு வசனங்கள் மாத்திரமே தெரியும், "என்னைக்க கண்டவன் பிதாவை கண்டான், நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்" இவர்களுக்கு வசனம் எழுதுவது வீண், இருந்தாலும் இவரின் பேதகத்தை அநேகர் வாசிக்கிறார்களே, அவர்களில் ஒருவராவது இவரை போல் இல்லாமல் சத்தியத்தை தேடுபவராக இருக்கலாம் என்று தான் இந்த பதிவு!!
வேதம் தான் தெரியவில்லை என்றால், ஆதி அநாதி என்கிற வார்த்தைக்கு கூட வித்தியாசம் தெரியவில்லை தமிழ் பண்டிதர்க்கு!! சந்தோஷ் எழுதும் மறு பிறப்பு கோட்பாடெல்லாம் இவரின் பார்வைக்கு சரி போல்!! போன ஜென்மத்தில் ஒருவன் பணக்காரனாக இருந்ததினால் இந்த ஜென்மத்தில் அவன் ஏழையாக இருக்கிறனம் போன்ற கருத்தெல்லாம், இவர் இருந்த பழைய மார்க்கத்தில் இவர் பின்பற்றியதால் இவருக்கு இது எல்லாம் தப்பாக தெரியாது, வசனத்தை சொன்னால் அப்படி ஒரு கோபம்!! யார் குள்ளநரித்தனம் செய்கிறார்கள் என்பதை தேவன் நியாயம்தீர்ப்பார்!!
வசனம் தெரியாத சில்சாமிற்கு இன்னோரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், கோவை பெரேயன்ஸ் தளத்தில் யாரும் கிறிஸ்து தேவன் இல்லை என்று சொல்லவில்லை, மாறாக அவர் பிதா அல்ல என்பதையே சொல்லி வருகிறோம்!! கண்களில் உள்ள களிம்பத்தை எடுத்த்ப்பார்த்தால் தான் சுத்தமாக தெரியும், இல்லாவிட்டால் எல்லாம் இருட்டாக தான் இருக்கும்!! அடுத்தவன் எழுத்வது குறையாக தான் தெரியும்!!
ஆதியும் அனாதியும் வேறு என்று நான் ஒன்றும் முதற் முறையாக சொல்லவில்லையே, இதில் என்ன பூனைக்குட்டி? என்னமோ இப்ப தான் வெளியே வந்ததை கண்டுபிடித்த மாதிரி ஒரு பதிவு!! இப்ப அல்ல என் பழைய பதிவை எடுத்து பார்த்தாலும், பிதா வேறு, குமாரன் வேறும் என்றே பதிந்திருக்கிறேன்!! இயேசு கிறிஸ்து தேவன் தான் ஆனால் பிதா அல்ல என்றும் பதிவு செய்திருக்கிறேன்!! என்னமோ முதல் முறையாக நான் எழுதியதாகவும், இவர் ஏதோ பெரிய கள்ள உபதேசம் என்று இதை கண்டுபிடித்ததாகவும் எழுதியிருக்கிறார்!!
என் கருத்தை அல்லது உபதேசத்தை மறுக்க அல்லது எதிர் கருத்தை வசனத்துடன் எழுதமுடியவில்லை, தன் தந்திரங்களை காண்பித்திருக்கிறார், தன் சுயத்தை நிறுபித்திருக்கிறார்!!
பவுல் சொல்லுகிற மாதிரி,
1 கொரி 4:10. நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர். 11. இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம். 12. எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம். 13. தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.
உங்களின் பயனத்தை உங்கள் பாணியில் தொடருங்கள், நாங்கள் எப்படியோ அப்படியே இருந்து விட்டு போகிறோம்!!
//ஏனெனில் மறைத்து, மாற்றி, மாயம் செய்து, மயக்கி பேசி வந்த இவர்கள் நேரடியாக பேசத் துவங்கிவிட்டதால் இவர்களை அடையாளம் காண்பது எளிதாகிறது//
நாங்கள் ஆரம்பம் முதல் இயேசு கிறிஸ்து பிதா கிடையாது, அவர் பிதாவாகிய தேவனின் ஒரே பேறான குமாரன் என்று தான் சொல்லி வருகிறோம்!! இதை எல்லாம் படித்தவர் தான் இந்த சில்சாம்!! நாங்கள் என்னமோ இப்போ தான் இதை புதிதாக சொல்லுகிறோம் என்கிற பாவனையை தினிக்கிறார், தங்களின் தளத்தில் புதிதாக எழுதி வரும் கோல்வினை மயக்க!! எங்களுக்கு சத்தியம் சொல்ல தெரியும், மாய் மாலம் பண்ண தெரியாது!! கவிதை எழுதி மயக்க தெரியாது!! தத்துவம் பேசி பேதகம் செய்ய தெரியாது!!
//ஆனாலும் இவர்களுக்கு நம்முடைய ஊழியர்களைக் குறைகூற எந்த தார்மீக தகுதியுமில்லை //
பாவம் சாம் பீ செல்லதுரை "நம்முடைய" ஊழியர் இல்லை போல்!! அவரை போட்டு கிண்டிய கிண்டு எங்களுக்கு தெரியாது!! இவர் என்னமோ கிறிஸ்தவத்தை தன் தலையில் தூக்கி வைத்திருப்பது போல், இவர் சொல்லுபவர்கள் நல்ல ஊழியர்களும் மற்றவர்கள் கள்ள உபதேசம் செய்பவர்கள் என்றும் பிதற்றி வருகிறார்!!
கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் தான் கிறிஸ்தவர்களே தவிர, அவரை தொழுபவர்கள் கிறிஸ்துவர்கள் என்பது வேதத்தில் இல்லாத ஒரு கூற்று!! அதான் தொடக்க முதல் எழுதி வருகிறேன், வசனம் தெரியாமல் பாரம்பரியத்தை பின்பற்றி வருபவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்றாலே என்னவென்று தெரியவில்லையே!!
அப்போஸ்தலர் 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
இனி சீஷர்கள் யார் என்று கேட்டால் இவர்கள் சொல்லுவார்கள், சில்சாம் சொல்லுபவர்கள் மாத்திரமே சீஷர்கள் (கிறிஸ்தவர்கள்) மற்றவர்கள் எல்லாம் கள்ள உபதேசம் செய்பவர்கள் என்று!! வேதத்தை வைத்து எதையும் எழுதுங்கள் சில்சாம் அவர்களே!!
//ஆனால் இவர்கள் உண்டு கொழுத்து சளுக்கு பண்ணுகிறவர்கள்;எனவே தங்களை கிறித்தவர்கள் என்று குறிப்பிடக்கூட இவர்களுக்கு தகுதி கிடையாது//
நீச்சயமாக, நாங்கள் சாப்பிடுகிறோம் எங்கள் சொந்த உழைப்பில், வேதம் அதையே சொல்லுகிறது, அதை கூட நாங்கள் வேதத்தின்படியே செய்கிறோம் என்பதில் எங்களுக்கு சந்தோஷம்!! அதற்காக நாங்கள் தேவனை துதிக்கிறோம்!! யார் எப்படி உண்டு கொழுத்து சளுக்கு பண்ணுகிறவர்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்!! கிறிஸ்தவர்க்லள் யார் என்பதே தெரியாதவர் தகுதியை குறித்து பெசுவதற்கே தகுதியில்லாதவர்!!
//பிதாவும் இயேசுவும் ஒன்றா வெவ்வேறா என்பதற்கு என்னிடம் நேரடியான பதில் உண்டு, ஆனால் சொல்லமாட்டேன்;ஏனெனில் இவர்கள் வெளிப்படையாகவே இயேசு தொழத்தக்கவரல்ல என்று ஏற்கனவே எழுதிவிட்டார்கள்;//
பதிலிருந்தால் இத்துனை தத்துவங்கள் வராது, சொல்லமாட்டேன் என்பது எல்லாம் பதில் தெரியாதவர்களின் வெட்டி பேச்சு!! பிதா வேறு என்றும் கிறிஸ்து வேறு என்றும், வேதம் தெளிவாக இருக்கும் போது, உங்களை பின்பற்றுபவர்களை தொடர்ந்து குழப்பி, குழம்பியே இருங்கள்!!
//அன்பு நண்பர் கொல்வின் அவர்களே, நான் வேறொரு திரியில் சுட்டிக்காட்டியது போல இவர்கள் தங்கள் உபதேச வித்தியாசங்களை நேரடியாக முதல் சந்திப்பிலேயே சொல்லுவதில்லை;நம்முடன் நட்புரீதியில் நீண்டகாலம் பழகிவிட்டு கொஞ்ச கொஞ்சமாகவே நம்மை சத்தியத்தை விட்டு பிரிப்பார்கள்;//
பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தல கால சத்தியம் எல்லாம் வித்தியாசமாக தான் தோன்றும்!! நாங்கள் எங்கள் நம்பிக்கையை, எங்கலை குறித்தான எல்லாவற்றையுமே தெளிவாக எழுதியிருக்கிறோம்!! கண்களில் களிம்பம் இருந்தால், தெளிவாக தெரியாது, என்ன செய்வது!! நாங்கள் யாரையும் இதை பின்பற்றுங்கள் என்று போதிப்பது கிடையாது!! இது தான் சத்தியம் என்று எழுதுகிறோம், வேதத்தை வைத்து ஒப்பீட்டு பாருங்கள், எது கள்ள உபதேசம் என்பதை வேதத்திலிருந்து பாருங்கள், பாரம்பரியத்திலிருந்தும், கவிதைகளிலிருந்தும், துதிப்பாடல்களிலிருந்தும் அல்லது தத்துவத்தில் தேடாதீர்கள்!! யாருக்கும் எதையும் போதிக்க வேன்டிய அவசியமே கிடையாது!! அவனவனுக்குள் இருக்கும் அபிஷேகமே போதும், புரிந்துக்கொள்ளுதலுக்கு!! ஆமாம் ஒரு கத்தோலிக்க சபையாரையும், ஒரு பெந்தகோஸ்தே சபையாரை நாங்கள் சத்தியத்தை விட்டு பிரிக்கப்போகிறோம், எங்களுக்கு அது தான் தொழில் பாருங்கள்!! இயேசு கிறிஸ்துவை தொழுபவர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்று எழுதியதே தாங்கள் வேத பண்டிதர் தான், ஆழமான சத்தியத்தில் இருப்பவர் தான், நாங்கள் சொல்லி பாவம் உங்களை பின் பற்ருபவர்களை நாங்கள் பிரித்துவிடுவோம்!! போங்க சார்!! வேறு வேலைகள் இருக்கிறது!! உங்களோடு ஒரே தமாசு தான்!!
முடிந்தால் வசனம் எழுதுங்கள், தேவை இல்லாத வார்த்தைகள் அல்ல!! நல்லா இருங்க!! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!!