//ஏக தேவன், உலகை படைக்கும் முன் தன்னிலிருந்து குமாரனை வெளிப்படுத்தினார். அதனால் அவர் பிதா என்ற நாமம் பெற்றார். அதாவது குமாரனும், பிதாவும் ஒரே நேரத்திலேயே உண்டானவர்கள். ஒருவருக்கு குழந்தை பிறந்த பிறகே அவர் அப்பாவாகிறார். அதாவது அப்பா என்ற ஸ்தானம் உருவாவது குழந்தை வெளிப்பட்ட பிறகே. இதை வேறு கோணத்தில் பார்த்தால் குழந்தையால் தந்தை பிறக்கிறார் என்றும் சொல்லலாம். குமாரனே பிதாவை வெளிப்படுத்த முடியும். //
உலகத்தை படைக்கும் முன் தேவன் தன்னிலிருந்து குமாரனை வெளிப்படுத்தினார் என்பது வேதத்திற்கு புறம்பான ஒரு கருத்து!! கிறிஸ்து தேவனின் முதல் பேறானவர், ஜெனிப்பிக்கப்பட்டவர் என்று தான் வேதம் சொல்லுகிறது!! கிறிஸ்து தேவனிடத்தில் தோன்றினார் என்பது அபத்தம்!! முதற்பேறானவருக்கும் தோன்றுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது!!
அடுத்த வாக்கியம் அதைவிட அபத்தம்!! குமாரனும் பிதாவும் ஒரே நேரத்திலேயே உண்டானவர்கள் என்பது!! பிதாவாகிய தேவனை குறித்து வேதம், அவர் அநாதியாய் இருக்கிறவர் என்றும், கிறிஸ்துவை குறித்து அவருக்கு ஒரு ஆதி இருந்தது, அதாவது துவக்கம் இருந்தது என்று தான் சொல்லுகிறது!! பிதா திடீரென்று பிதாவாகிவிடவில்லை!! அவர் அனைத்தையும் அறிந்தவராக இருப்பதால், இந்த படைப்புகள் ஒன்றும் நினைத்து நினைத்து திடீர் திடீர் என்று தோன்றியது அல்ல, எல்லாம் தேவனின் ஆதீன திட்டத்தில் இருந்தது தான்!! தேவனை ஒரு போதும் ஒருவனும் கண்டதில்லை, குமாரன் அவரை அவரின் தன்மையை அவரின் அன்பை, அவரின் படைப்பின் தன்மையை அனைத்தையும் வெளிப்படுத்தினார், மாம்சத்தில் வந்த போது!!
பிதாவிலிருந்து குமாரன் தோன்றுவது என்பது அபத்தமான கருத்து என்று இத்தளம் பதிவு செய்கிறது!!
வசனங்களை மொத்தமாக எழுதும் நண்பர் சந்தோஷ் கீழே குறிப்பிட்டிருக்கும் அவர் எழுத்துகளுக்கு வசனம் கொடுக்காதது நெருடலாக இருக்கிறது!! அவரின் தோன்றுதலை அல்லது அவர் சபையின் அல்லது அவரின் போதகரின் அல்லது அவரின் சபை ஸ்நாபகரின் நினைவுகளை எழுதியிருப்பது போல் தான் இருக்கிறது!!
//ஏக தேவன் என்பவர் குமாரனை தனக்குள் கொண்டிருப்பவர்// //பிதாவால் குமாரன் இல்லாமல் எதையும் செய்ய இயலாது (குமாரனை படைப்பதை தவிர).. // //இவ்வாறாக வரையறுக்க முடியாத தேவன் தன்னை ஒரு வரையறைக்குட்படுத்தி (finite) கொண்டார்.//
இவைகள் எடுத்துக்காட்டு மாத்திரமே!!
முதலில் இப்படி எழுதியிருக்கிறார்;
//இது போலவே ஏக தேவன் அனாதியாய் இருக்கிறார். அவர் ஆதியில் குமாரனை ஜெனிப்பித்ததால், அந்த நேரத்திலிருந்தே அவர் பிதாவாக ஆனார். எவ்வாறு குமாரன் ஆதியில் ஜெனிக்கப்பட்டாரோ அதே ஆதியில் இருந்தே ஏக தேவன் பிதா என்ற ஸ்தானம் உடையவராய் இருக்கிறார். //
பிறகு இப்படியும் கேட்டிருக்கிறார்:
//தேவன் பிதாவாக இருக்கிறார் என்ற கருத்து முதன் முதலாக வருவது குமாரனின் வருகையை மிக துல்லியமாக சொல்லும் ஏசாயா அதிகாரத்தில்தான். அதன் பிறகே மனிதர்கள் தேவனை பிதா என்றழைக்க முற்படுகிறார்கள்.//
ஏக தேவன் என்று வரிக்கு வரி எழுதிவிட்டு அவருக்குள் இன்னோருவர் இருந்தார் என்று எழுதுவதும் அபத்தமே!! ஒன்றுமில்லாமையிலிருந்து அனைத்தையும் படைத்த தேவனுக்கு மாத்திரம் தனக்குளிருந்து தான் ஒருவரை படைக்க வேண்டும் என்கிறதும் அபத்தமே!! ஜெனிப்பித்தார் என்று கொடுத்திருப்பது அவர் பெற்றெடுத்ததினால் அல்ல, மாறாக பிதா குமாரன் என்கிற உறவு முறை இருப்பதால் மாத்திரமே!!
பூமியில் ஒரு மனிதன் ஸ்திரியின் கர்ப்பத்திலிருந்து பிறக்கிறான், ஆனால் கிறிஸ்து ஏதோ பிதாவாகிய தேவனின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததை போன்று அல்லவா எழுதியிருக்கிறீர்கள்!!
நண்பர் சந்தோஷ் அவர்களே, எங்களுக்காக எதையும் ஏற்க வேண்டியதில்லை, வசனத்திற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளலாம், அது ஒன்றே சரியானது, பாரம்பரியமோ, சபை விசுவாசமோ, போதகரின் போதகமோ, ஊழியக்காரனின் ஊழியமோ, எல்லாம் மனிதர்களின் வார்த்தைகளே!!