நாலுமாவடி ஊழியக்காரர் மொஹன் சி லாசரஸ் அவர்களின் ஊழியத்தால் தொடப்பட்டு ஒரு நடிகையைன் சாட்சியை அவர்களின் பத்திரிக்கை மற்றும் குறூம்த்தட்டுகளாக (CD) போட்டு விற்றார்களே, ஞாபகம் இருக்கலாம்!! ஒரு நடிகையின் மனமாற்றத்தினால் தன் ஊழிய வியாபாரத்த பெறுக நினைத்தவர்களும், இதை எல்லாம் ஊழியம் என்றும் இவர்களை எல்லாம் ஊழியர்கள் என்றும் சொல்லுபவர்கள் கவனத்திற்கு:
காலைக்கதிர் ஜூனியர் விகடன் பத்திரிக்கை செய்திகள்:
கேள்வி: நீங்கள் கிறிஸ்தவ மதத்துக்குமாறி பிரசங்கங்கள் செய்து வருவதாகவும், அதனால் தான் உங்களுக்கு எலக்ஷனில் சீட் கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்களே?
பதில் (நடிகை நக்மா): நாஅன் கிறிஸ்டியனாக கன்வர்ட் ஆகிவிட்டேன் என்பது சுத்த புருடா. என் அப்பா ஹிந்து, அம்மா முஸ்லிம், பெத்லகேம் நகரில் டிசம்பர் மாதம் 25ம் தேதி ஜீஸஸ் பிறாந்த அதே நேரத்தில் நான் பிறந்தேன், அதனால் ஏசுவைப்பற்றிய வைப்ரேஷன் (பாதிப்புகள்) என்னிடம் இருக்கலாம். தவிர சின்ன வயசிலிருந்து கிறிஸ்தவ ஸ்கூலில் நான் படித்து வந்தேன், அதனால் அந்த மதத்தின் மீது எனக்கு ஈர்ப்பு இருக்கலாம். அதற்காக கன்வர்ட் (கிறிஸ்தவளாக) ஆகிவிட்டேன் என்பது பச்சை பொய். வெல்ளிக்கிழமைதோறும் குரான் படிக்கிறேன். அதற்காகமட்டும் நான் முஸ்லிமாகிவிட்டேன் என்று அர்த்த்மா? உண்மையில் ஒருவன் மத்ம்மாறினால் முதலில் செய்யவேண்டியது பெயர் மாற்றம். நான் ஒன்றும் என் பெயரை மாற்றிக்கொள்ளவில்லையே? இதனால்தான் தேர்தலில் நிற்க எனக்கு எம். பி. சீட் கிடைக்கவில்லை என்பது மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் போடப்படும் முடிச்சு!!
ஆளாலுக்கு ஒரு நடிகையை அல்லது நடிகனை கூட்டி கொண்டு அவர்களின் மனமாற்றத்தை சி.டிக்களாகவும் சாட்சிகளாவும் போட்டு பணம் பார்க்கிறார்களே, எப்படி பட்ட ஊழிய அழைப்போ!! இதில் அநேகர் இன்னும் "இரகசிய கிறிஸ்தவர்கள்" என்கிற ஒரு பதத்தை உபயோகித்து குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்!! அது என்ன இரட்கசிய கிறிஸ்தவர்கள்?? ஒருவன் கிறிஸ்துவிற்குள் வந்து விட்டால் சகலமும் புதிதாக ஆகிறதே!! அப்புறம் என்ன இரகசிய கிறிஸ்தவன்!! கிறிஸ்தவம் என்பது என்னிக்கையில் (கூட்டத்தில்) இல்லை, புதிய சிருஷ்ட்டியாவதே எல்லாம்!!
தேவ குமாரானான இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து எத்தனையோ அற்புதங்களையும், அடையாலங்களையும் தன் மக்களான இஸ்ராயேல் தேசத்தில் செய்தார்!! ஆனால் எத்துனை கூட்டம் கூடியிருந்தாலும், அவருக்கென்று சுமார் 120 பேர் தான் இருந்தார்கள்!! ஆனால் இன்றைக்கோ தன் ஊழியத்தினால் இந்தியாவையோ இல்லை வேறு ஒரு நாட்டையோ இயேசுவிற்காக ஆதாயப்படுத்துவோம் என்கிற முழக்கமிட்டு கொண்டிருக்கிறார்கள் தன் ஏ.சி. அறைகளிலிருந்து!! கேட்டால் நாங்கள் அநேக இரகசிய கிறிஸ்தவர்களை உருவாக்கியிருக்கிறோம் என்பார்கள்!! கொடுமை!!
II கொரிந்தியர் 5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின