அடக்குமுறையின் போது சிதறி போயிருந்த இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், "ராஜியத்தின் சுவிசேஷத்தை" பிரசங்கித்து வந்தார்கள். எகிப்த்தில் இந்த அநேகர் இந்த புதிய மார்கத்தை (கிறிஸ்துவத்தை) ஏற்றுக்கொள்வதை இந்த மிஷ்னரிகள் தெரிந்துக்கொண்டார். அலெக்சந்தரியாவை சேர்ந்த இருவர் மிகவும் பிரபலமானவர்கள், ஆரியஸ் (Arius) மற்றும் அத்நாசியஸ் (Athanasius).
ஆரியஸ் (250-336) சொன்னது என்னவென்றால், ஈயேசு கிறிஸ்து தேவனின் குமாரன், அவர் குமாரன் என்பதால், அவருக்கு ஒரு துவக்கம் இருக்கிறது, அவர் எழுதுகிறார், "தகப்பன் என்கிற ஒரு உறவு முறை இருக்கிறது என்றால், தகப்பன் அல்லது பிதா, குமாரனை விட பெரியவராக இருப்பது அவசியம், பிதாவும் குமாரனம் ஒரேமாதிரியான தன்மையுடையோர் (like substance), கிறிஸ்துவும் சாவாமையை பெற்றுக்கொண்டவராகிறார்"
அலெக்சந்தரியாவின் பிஷபான அத்நாசியஸ், ஆரியஸின் கருத்தை எதிர்ப்பவராக, பிதாவும் குமாரனும், ஒன்றான தன்மையுடையோர் (One substance), அதவது, ஒத்த தகுதியுடையவர் (co-equal), ஒரே மாதிரி அநாதியானவர்கள்(co-eternal). ஆரியஸ் சொல்லுவது தவறு என்றும், அதினால் குமாரன் பிதாவைவிட குறைவானவர் ஆகிறார் என்று தன் வாதத்தை வைத்தார். (குறிப்பிட்டு சொல்வோமென்றால், எகிப்தியர்கள் "திரியேக கடவுள்" வணக்கம் செலுத்துகிறவர்களாக இருந்தவர்கள், ஒஸிரிஸ் என்கிற பிதா, ஹோர்ஸஸ் என்கிற மகன், ஐஸஸ் என்கிற கன்னி, அமும், மவுத், க்ஹோன்ஸோ)
நன்றி சகோ ஆத்மா அவர்களே!! விஷயத்தில் ஆர்வம் ஆனால் என் தமிழில் சிறிது கோளாறு!! இனி திருத்திக்கொள்கிறேன்!! அப்பப்போ தளத்தில் அதிரடியாக வந்து ஏதாவது சுர்ர்ர்ர்ர் என்று பதிவுகளை தந்து விட்டு செல்லுங்கள்!!
இந்த இரு குழுக்களுக்களுக்குள் சூடான விவாதம் நடக்கும் என்று வரலாற்றில் இருக்கிறது!! அலெக்சந்தரியா (Alexandria) குடிமக்கள் இது போல் உள்ள விவாதங்களை வைத்து கேலி கூத்தான நாடகங்கள் போட்டு அதன் மூலம் மகிழ்ந்துக்கொண்டு இருந்தார்கள், கிறிஸ்துவின் உண்மையான தன்மையை விட்டு விட்டு, யூதர்களும் புறஜாதியாரும் இப்படிப்பட்ட கேளிகூத்துக்களினால் எரிச்சலடைந்தார்கள்!!
துவக்கத்தில் இது போன்ற விவ்வாதங்களினால் ரொம பேரரசன் கான்ஸ்டான்டைன் மகிழ்ந்துக்கொண்டு இருந்தார், ஏனென்றால் அது ஜனங்களுக்கு பொழுது போக்காக இருந்து வந்தது!! ஆனால் இந்த சர்ச்சை நீடித்து சென்றதால், அவன் சுமார் 300 பிஷப்மார்களை கூப்பிட்டு ஒரு குழு தொடங்கினார், ஆனால் வெகு சிலரே அதில் பங்கு பெற வந்தனர். இந்த குழு முதன் முறையாக, கிறிஸ்து உயிர்த்தெழுந்து சுமார் 284 வருடங்கள் சென்று, 325ம் ஆண்டு கூடிய நிசிய பட்டனம் தற்போதைய துர்கி நாட்டில் உள்ளது. பேரரசன் வந்திருந்ததால் விவாதங்கள் இன்னும் சூடு பிடித்தது. அவன் இரு தறப்பையும் நன்றாக கேட்டு கொள்வான், அவன் தீர்ப்பு சொல்ல வேண்டுமே, அந்த தீர்ப்பு தான் "சத்தியத்தை" தீர்மாணிக்க இருந்தது!!
குமாரனும் தந்தையும் ஒரே குணம் கொண்டவர்கள் மாத்திரமே, ஒருவரே அல்ல என்கிற ஆரியஸின் விவாதத்தினால் அவன் பதிதன் (Heritic) என்று முத்திரை குத்தப்பட்டு இலிரிக்கம் (Illyricum) பகுதியின் தனிமையான இடத்திற்கு நாடுகடத்தப்பட்டான்!! முடிவு குழப்பமானதும் ஒன்றுக்கும் உதவாததுமாக இருந்தது. ஆனால் பேரரசன் ஒரு உத்தரவை போட்டான். அதன் படி ஆரியஸ் எழுதியதை ஒன்று அழித்து விட வேண்டும், அல்லது வைத்திருப்பவர் மரணத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்று.