kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துமஸ் காலம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிறிஸ்துமஸ் காலம்!!


கிறிஸ்துமஸ் காலம் தொடங்கி விட்டது!! வீடுகளை கிறிஸ்துமஸ் மரங்களால் அலங்கரிக்கவும், வீட்டிற்கு வெளியே நட்சத்திரம் கட்டி தொங்கவிடுவதிலும் கிறிஸ்தவர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும் காலம் இது!! போதகர்கள், சுவிசேஷர்கள், பாஸ்டர்மார்கள் காரல்ஸ் பாடி கலெக்ஷனில் மும்முரமாக இருப்பார்கள்!!

தேவ தூதர்கள் சொன்னது,

லூக் 2:10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

ஆனால் இன்றோ, வருடா வருடம் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு மாத்திரம் சென்று இந்த "நற்செய்தியை" சொல்லி காணிக்கை கவர் வாங்கி வருகிறார்கள் நவீன போதகர்கள் அல்லது பாஸ்டர்கள்!!

வேதத்தில் சொல்லப்படாத அல்லது செய்ய சொல்லாத ஒரு காரியத்திற்கு இத்துனை விறுவிறுப்பும் இருப்பதை பார்க்க முடிகிறது!! ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டதை செய்ய சொன்னால் மாத்திரம் அது தப்பாக தெரிகிறாது!!

தன் தெருவில் அடுத்த வீட்டிற்கு சுவிசேஷம் சொல்லாதவர்கள் இன்று இந்தியாவின் இரட்சிப்பிற்காக ஜெபிக்கிறார்களாம்!! என்ன வேடிக்கை இது!! கத்தோலிக்கர்களின் பாரம்பரிய விழாவை தற்போது பெந்தகோஸ்தே சபையினர் அவர்களை விட படு விமர்சியாக கொண்டாடுகிறார்கள்!! கிறிஸ்து பிறந்த நோக்கம் தேரியாது ஆனால் "கிறிஸ்துமஸ் செய்திகள்" வழங்கி வரப்படுகிறாது!! விந்தையாக தான் இருக்கிறது!!

வேத வசனங்களை பின்பற்றாமல் இது போன்ற விழாக்கள் அவசியம் தானா!?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

//ஆனால் இன்றோ, வருடா வருடம் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு மாத்திரம் சென்று இந்த "நற்செய்தியை" சொல்லி காணிக்கை கவர் வாங்கி வருகிறார்கள் நவீன போதகர்கள் அல்லது பாஸ்டர்கள்!!//

இவர்களின் தொல்லை தாங்காமல் சில கிறிஸ்தவர்கள் இவர்கள் வருகிற நாள்/நேரத்தை முன்னமேயே அறிந்து, அந்த நாளில்/நேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிடுவதுண்டு; சிலர் வீட்டை உள்ளே இழுத்துப் பூட்டிவிட்டு, அயர்ந்த(?) நித்திரைக்குச் சென்றுவிடுவதுமுண்டு. இப்படியெல்லாம் செய்தால்கூட “நம் பாஸ்டர்கள்/போதகர்கள்” அசருவதில்லை. “கிடைத்த மட்டுக்கும் லாபம்” என்ற ஒரே கொள்கையில் வீடு விடாகச் செல்லும் பயணத்தைத் தொடர்கின்றனர்.

இப்பொழுது சில வருடங்களாக சபைகளில்/ஊழியங்களில்/பத்திரிகைகளில் “இந்தச் சிறியருக்கு எதைச் செய்கிறீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்” என்ற வசன அறிமுகத்துடனும், “கிறிஸ்மஸ் காலங்களில் ஏழைகளையும் நினைத்துக் கொள்ளுங்கள்” என்ற தத்துவத்துடனும் பணம் வசூலிக்கும் வேலையும் நடந்துவருகிறது.

இதற்கும் ஒரு காரணம் உண்டு. சிலகாலமாக “இவர்களுக்கு” காணிக்கை கொடுக்கவேண்டிய அவசியமில்லை எனும் எண்ணம் விசுவாசிகளிடம் கொஞ்சங்கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. எனவே “ஊழியத்துக்குத் தாருங்கள்” என்ற சுலோகத்தையே மீண்டும் மீண்டும் சொல்லாமல் “ஏழைகளுக்காக தாருங்கள்” என்று சொன்னால் “வசூல் தேறும்” என நினைத்து ஜனங்களுக்கு “ஏழைகளின் மீதுள்ள கரிசனையைப் பயன்படுத்தி” தங்களுக்கு ஆதாயம் சேர்க்கின்றனர்.

சுமார் 5, 10 வருடங்களுக்கு முன்னாலெல்லாம் “இந்தச் சிறியருக்கு எதைச் செய்கிறீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்” என்ற வசனம் “இவர்களின்” கண்ணில் படவில்லை போலும்.

ஏழைகளுக்காக “பணம் வசூலிக்கும் இவர்கள்” வசூலித்த பணத்துக்கு ஒழுங்கான கணக்கு சொல்லமாட்டார்கள்; வெறுமனே ஆங்காங்கே சிலருக்கு வெகுமதிகளைக் கொடுத்ததையும் சாப்பாடு போட்டதையும் படமாக எடுத்து விளம்பரப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்வார்கள்.

இவர்களுக்கு ஒரு கேள்வி. “
கிறிஸ்மஸ் காலங்களில் மட்டும் ஏழைகளை நினைத்தால் போதுமா? மற்ற காலங்களில் ஏழைகளை மறந்துவிடலாமா?


-- Edited by anbu57 on Friday 17th of December 2010 05:41:46 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கிறிஸ்துமஸ் செய்தி, புத்தாண்டு செய்தி, வசன காலண்டர் வியாபாரம் என்று வசூல் களைகட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இத்தளத்துக்கு வருகைதரும் அன்பர்களுக்கு நாம் சொல்வதெல்லாம். ஊழியர்களுக்கு பணத்தைக்கொடுத்து 'கர்த்தருக்கு' காணிக்கை செலுத்துவதாக எண்ணும் அறிவீனத்தைக் கைவிட்டு அப்படி மற்றவர்களுக்கு உதவ மனமிருப்பின் நேரடியாக மனநல காப்பகங்கள், முதியோர், அநாதை இல்லங்களுக்குச் சென்று உதவலாமே.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கிறிஸ்துமஸ் காலம் என்று ஒரு தனி பாரம்பரியத்தை பின்பற்றும் இந்த நவீன போதகர்கள் மற்றும் பாஸ்டர்களை என்ன சொல்லுவது!! அன்பர் அன்பு அவர்கள் எழுதியது போல், முன்பு ஊழியத்திற்கு என்று கேட்பார்கள் இப்பொழுது, "ஏழைகளுக்கு" என்று கேஎட்டு வருகிறார்கள்!! ஏழைகளை பார்த்துக்கொள்ள தான் எத்துனையோ நிறுவனங்கள் இருக்கிறதே!! கத்தோலிக்கத்தில் எத்துனை சபைகள் இதற்கென்றே இருக்கிறது!! எங்களை தேவன் சுவிசேஷம் சொல்லவும், அற்புதங்கள் செய்யவும், அந்நிய பாஷைகள் பேசவும் அழைத்திருக்கிறார் என்று சொல்லி விட்டு, கிறிஸ்துமஸ் காலத்தில் மாத்திரம் எப்படி தான் "ஏழைகள்" நினைவுக்கு வருகிறார்களோ!!

இன்று (17/12/2010) கோவையில் இப்படி பட்ட பல போஸ்டர்கள்கள் பார்க்க நேரிட்டது!! சகோ அன்பு சொன்ன விஷயம் அப்ப தான் எனக்கு பளிச்சென்று உறைத்தது!!

மத். 6:3. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது; இது எத்துனையோ இடங்களில் கிறிஸ்துவை அறியாதவர்கள் கூட செய்து வருகிறார்கள்!!

ஆனால் நம்மவர்கள், அதான் ஊழியத்திற்கு அழைத்தார் என்று போதகர் பாஸ்டர் என்று முத்திரை குத்திக்கொண்டு இருப்பவர்களோ, போஸ்ட‌ர் அடித்து செய்யும் த‌ர்ம‌ங்க‌ள், அல்ல‌து பால் தின‌க‌ர‌ன் குழ‌ந்தைக‌ளை ப‌டிக்க‌ வைக்கிறேன் என்று விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துவ‌து எல்லாம்,

ம‌த் 6:1. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. 2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கிறிஸ்துமஸ் காலத்தில் இன்னும் ஒன்று நடக்கிறது!! எல்லா சபைகளும் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவது!! சேர்ந்து காரல்ஸ் பாடி வருவது!! இதில் விசேஷம் என்னவென்றால், நவம்பர் மாதம் வரை விக்கிரக ஆராதனைக்கார என்று சொல்லப்படுகிற கத்தோலிக்க சபையுடன் 'ஆவி" நிறைந்த பெந்தகோஸ்தே சபையும் "சகோதர பாசத்துடன்" டிசம்பர் மாதத்தில் மாத்திரம் சேர்ந்திருப்பார்கள்!!

வேதத்தில் சொல்லுவது நடக்கிறது என்பது மாத்திரம் நிச்சயம்!! மிருகத்திற்கு மீண்டும் அதிகாரத்தை கொடுக்கப்படும் என்று வெளிப்படுத்தின விசேஷம் சொல்லுகிறது போல், விக்கிரக ஆராதனை சபையுடன் சேர்ந்து அவர்களுடன் அவர்கள் தலைமையில் சேருகிறார்கள்!! அதற்காக கிறிஸ்துமஸ் என்கிற வேதத்தில் இல்லாத ஒரு பண்டிகையை கொண்டாடுவது இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

இது கிருஸ்துமஸ் நேரம் ,


நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு சபைகளில் இருக்கிறோம்,

ஆனால்  caral rounds
என்ற பெயரில் நாம் நமது சபையை சார்ந்தவர்களின் 
வீடுகளுக்கு போய் கிறிஸ்து பிறந்தார் என்று அறிவிக்கிறோம்,

கிறிஸ்து பிறந்தார் என்று தெரிந்தவர்களிடதிலேயே திரும்ப திரும்ப

சொல்வதில் யாருக்கு என்ன பலன் ?

நியாயப்படி  நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி அறிவிக்க வேண்டும் 
அப்போஸ்தலர்கள் காலத்திலோ அல்லது பெந்தெகொஸ்தோ நாட்களிலோ 
இப்படி நடந்ததாக ய்தேனும்
வசனம்  இருக்கிறதா?  

நாம் இப்படி செய்வதிற்கும், முன்பு கிருஷ்ண ஜெயந்தி , விநாயகர் சதுர்த்தி கொண்டடியதிற்கும் என்ன வித்தியாசம் ?  




__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதை தான் பாபிலோனிய தாக்கம் என்று சொல்லலாம்!! வேஷதாரிகளான இந்த சபை கூட்டம், பழையதை விடவும் முடியாமல், சரியானதை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்!! அனைத்து சபைகளும் சேர்ந்து நடத்தும் கிறிஸ்துமஸ் விழா என்கிற பானர் வைத்து கொண்டாடும் கூட்டங்கள் எதற்கு இந்த விழா என்று கூட தெரியாது பங்கு கொள்ளும் விசுவாச மந்தை, அவர்கள் மூலமாக வசூல் வேட்டையில் இறங்கும் ஊழியர்கள், இதற்காக தான் இத்துனை ஆர்ப்பாட்டங்கள்!!

வேதத்தில் சொல்லாததை செய்வோம், வேதம் சொல்லாததை போதிப்போம், வேதத்தில் உள்ள விசுவாசத்தின் படி அல்ல, மார்க்க விசுவாசங்கள் மற்றும் பாரம்பரிய விசுவாசங்களோடு தான் நடப்போம், என்று அடம் பிடிப்பவர்கள் இதை மட்டும் விட்டு விட போகிறார்களா!! வசூல் செய்வதற்கு புதிய யுக்திகளை ரூம் போட்டு யோசிப்பார்களோ என்னவோ!!

திரித்துவத்தை போலவே இந்த விழாக்கள் எல்லாம் புற மார்க்கங்களில் இருந்து வந்தது என்பதற்கு வரலாறு (Secular History) சாட்சியாக இருக்கிறது!! வேதத்தில் இவைகளை கொண்டாட எந்த ஒரு போதனையோ கட்டளையோ இல்லை!!

சர்வவல்லமை உள்ள தேவனின் வலது கரமாக அவரது வலது பக்கத்தில் சாவாமை பெற்ற இயேசு கிறிஸ்துவை வருடா வருடம் தொட்டிலில் ஆரிராரோ பாடி தூங்க வைத்து மகிழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த கிறிஸ்தவர்களை என்னவென்று சொல்ல‌!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard