1 தீமோ 2:5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;
மாம்சமான யாவருக்கும் தேவன் ஒருவரே!! மற்ற மார்க்கத்தை விட்டுவிடுவோம், கிறிஸ்துவத்தை மதம் என்று கொண்டிருப்பவர்களுக்கு இதில் உடன்பாடே கிடையாது!! ஆனால் வேதம் சொல்லுவது, தேவன் ஒருவரே!!
பழைய ஏற்பாட்டில், யெகோவா என்றும், ஆழமான எழுத்தில் "கர்த்தர்" என்றும் புதிய ஏற்பாட்டில் "தேவன்" என்றும் அவரையே குறித்து எழுப்பட்டிருக்கிறது. ஆங்கிளத்தில் பார்த்தோமென்றால், யெகோவா தேவனுக்கு என்றும், இயேசுகிறிஸ்துவிற்கு என்றும் போட்டு இருக்கும். ஒரே வார்த்தையை போட்டிருப்பதால், தமிழில் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் "கர்த்தர்" என்று ஆழமான எழுத்தை போட்டிருப்பதால் தமிழ் வேதாகமத்தை மாத்திரம் வைத்து போதித்து, கேட்டு, வாசித்து வருபவர்கள் தெளிவு பெற மனதில்லாதவர்களாக இருக்கிறார்கள்!!
தேவன் அல்லது தேவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அநேகர் இருந்தாலும், நமக்கு (சபைக்கு) தேவன் ஒருவரே!! அவர் கானக்கூடாதவராக இருப்பவர், ஒளியின் மத்தியில் வாசமாயிருப்பவர், முக்கியமாக அவர் "மரிக்கவே" முடியாது ஏனென்றால் அவர் ஒருவரே சாவாமை உள்ளவராக இருப்பவர்!! அவர் ஒருவரே என்றால் அவர் ஒருவர் மாத்திரமே!! அவர் தன் நிலையை மாற்றிக்கொள்வதில்லை, அதாவது, இன்று நான் ஆவியாக இருந்து, நாளை மாரியாளின் வயிற்றிலிருந்து இயேசு கிறீஸ்துவாக மாம்சத்தில் பிறப்பவர் இல்லை!! அவரின் மகிமையை ஒப்பீட்டு பேசவே முடியாது, அந்த மகிமையை மனித கண்கள் கணடது கிடையாது!!
அதே போல், கிறிஸ்து இயேசு என்பவர், தேவனின் தற்சொருபமானவரே, தேவனின் வார்த்தையானவரே, தேவனின் முதற்பேரானவரே, நமக்கு (சபைக்கு) கர்த்தர் ஆனவரே, ஆனால் அவர் ஒரு போதும் அந்த மகிமையான தேவனாக, நாம் (சபை) அன்பாக பிதா என்று கூப்பிடும் தேவனாக இருந்ததில்லை!! அப்படி இயேசு கிறிஸ்து தான் பிதாவாக இருந்தவர் என்று சொல்லுபவர்கள் தேவ தூஷனம் செய்கிறவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு அந்த அறிவு இல்லை என்றே வேதம் சொல்லுகிறது!! பிதா நமக்கு தேவனாக, கிறிஸ்து இயேசு நமக்கு கர்த்தராக இருகிறார்!!
1 கொரி. 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
இவர்கள் இருவரும் வேறு நபர்கள், ஒரே ஒருவர் உயர்ந்தவர், மற்றொருவர் அவருக்கு கீழ்ப்படிந்தவர் என்று வசனம் தெளிவாக சொல்லுகிறது
யோவான் புத்தகம் முழுவதும் இயேசு கிறிஸ்து யார் என்றும் பிதா யார் என்றும் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது, தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற கண்களோடு வாசித்தால் மாத்திரமே புரியும்!! அப்படியே இயேசு கிறிஸ்து பிதாவின் ஒரு பாகம், ஒரு பகுதி என்று சொல்லுவதும் அபத்தமாகும்!!