kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தலர்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
அப்போஸ்தலர்கள்!!


அப்போஸ்தலர்கள் என்பவர்கள், இயேசு கிறிஸ்து தன் பிதாவின் சித்தத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்!!

லூக் 6:12. அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 13. பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். 14. அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு, 15. மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், 16. யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

ஒரு சீஷன் எனப்படுபவன் எப்படி இருக்க வேண்டும் என்று வேதம் தெளிவாக சொல்லியிருக்கிறது, அந்த சீஷர்களில் இருந்து தான் இயேசு கிறிஸ்து இந்த 12 பேர்களை "இராத்திரி முழுவதும் ஜெபித்து விட்டு" தேர்ந்தெடுத்தார் என்று வேதம் சொல்லுகிறது!! இந்த 12 பேரும் இயேசு கிறிஸ்துவினால் அனுப்பட்டவர்கள் ஆவர்!! இவர்களுக்கு இயேசு கிறிஸ்து சில அதிகாரங்களை கொடுத்து தான் அனுப்பி வைத்தார்,

மத். 10:1. அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

இந்த 12 பேரும் தன் சுயத்தினாலோ அல்லது மற்ற சீஷர்கள் அல்லது மற்ற மனிதர்களின் தேர்வால் வந்தவர்கள் அல்ல!! தன் ஊழியத்திற்கும் கிறிஸ்து ஏற்படுத்தும் சபைக்கு அஸ்திபார கற்களாக இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்

எபேசியர் 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

வெளி 21:14 நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

தொட‌ரும்.........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இந்த 12 அப்போஸ்தலர்களில் ஒருவன் இயேசு கிறிஸ்துவை கான்பித்துக்கொடுக்கவே முன்குறிக்கப்பட்டிருந்தான்!! யூதாஸ்!! இவனி தேர்ந்தெடுப்பது கூட தேவனின் திட்டம் தானே!! இவனை குறித்டு பழைய ஏற்பாட்டிலேயே தீர்க்கதரிசனம் உண்டாயிருந்தது!!

அந்த‌ யூதாஸ் ம‌ரித்து போன‌ பிற‌கு 12ம் அப்போஸ்த‌ல‌ரை மாம்ச‌த்தில் தேர்ந்தெடுக்கும்ப‌டியாக‌ சீட்டு போட்டு பார்த்தார்க‌ள், ஒருவ‌னை தேர்ந்தெடுத்தாலும் அவ‌ன் அத‌ன் பிற‌கு வேத‌த்தில் இட‌ம் பெற‌வில்லை, அதாவ‌து கிறிஸ்துவினால் அழைக்க‌ப்ப‌ட்ட‌வ‌னாக‌ இல்லை,

அப்.1:23. அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: 24. எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக, 25. இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 26. பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

இப்ப‌டி மாம்ச‌த்தில் சேர்ந்த‌வ‌ன் ஒரு இட‌த்தில் இல்லாம‌ல் போனான், அவ‌னை குறித்து வேத‌ம் வேறு ஒன்றையும் சொல்லுவ‌துமில்லை!! ஆனால் த‌ன‌து 12ம் அப்போஸ்த‌ல‌னாக‌ கிறிஸ்து நேர‌டியாக‌ தேர்ந்து அனுப்பும் ம‌னித‌ன் தான் ப‌வுல்!!

அப். 9:15. அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். 16. அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.

இப்ப‌டி கிறிஸ்துவான் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டு அனுப்ப‌ட்ட‌ ப‌வுல் புதிய‌ ஏற்பாட்டின் பெரும் ப‌குதியை த‌ந்தார்!! இவ‌ர் அப்போஸ்த‌ல‌ர்!! 12ம் அப்போஸ்த‌ல‌ரின் இட‌த்தில் வ‌ந்தார், ஏனென்றால் 12 அப்போஸ்த‌லர்க‌ளே என்ப‌து தான் தேவ‌னின் திட்ட‌ம்!!

ம‌த் 28:19,20ல் சொல்ல‌ப்ப‌ட்ட‌, "ச‌ர்வ‌ ஜாதிக‌ளுக்கும் சுவிசேஷ‌ம் சொல்லுங்க‌ள்" என்ப‌தும் இந்த‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ளுக்கே!! சுவிசேஷ‌ம் சொல்லாவிட்ட‌ல் என‌க்கு ஐய்யோ என்று ப‌வுல் சொல்வ‌தும் அத‌ற்காக்வே! அது என் த‌லையின் மேல் விழுந்த‌ க‌ட‌மையாயிற்று என்ப‌தும் இந்த‌ அப்போஸ்த‌ர்க‌ளுக்கே, ஏனென்றால் அத‌ற்காக‌வே அவ‌ர்க‌ள் தேர்ந்தெடுத்து அனுப்ப‌ட்டார்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கத்தோலிக் குருவானவர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ரெவெரெண்ட் என்று போட்டு கொண்டதை பெந்தெகோஸ்தே பாஸ்டர்கள் அப்படி கிண்டல் அடித்து வந்தார்கள், ஆனால் இன்று பெந்தெகோஸ்தே சபைகளில் அநேக ரெவெரெண்டுகள் நிறைந்திருக்கிறார்கள்!! தேவன் ஒருவரே ரெவெரெண்ட் என்பது கூட அறியாதவர்களாக‌ இருக்கிறார்கள் இவர்கள், இப்ப‌டி ப‌ட்ட‌ ப‌ட்ட‌ங்க‌ளின் மேல் வாஞ்சையுள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள்!!

அப்ப‌டியே மூத்த‌ ச‌கோத‌ர‌ர் என்றும், மூத்த‌ அப்போஸ்த‌ர் என்றும் அழைப்ப‌தே!! வேத‌த்தில் தெளிவாக‌ அப்போஸ்த‌ல‌ன் யார் என்றும் அவனை யார் தேர்ந்து எடுத்து அனுப்புகிறார் என்று இருந்தாலும் கூட‌ இன்றைய‌ பெந்தெகோஸ்தே ச‌பைக‌ள் த‌ங்க‌ள் ச‌பைக‌ளில் அநேக‌ அப்போஸ்த‌ர்க‌ளையும், மூத்த‌ அப்போஸ்த‌ர்க‌ளையும் வைத்திருக்கிறார்க‌ள்!! துதியும் க‌ன‌மும் ம‌கிமையும் அவ‌ர்க‌ளுக்கு தான் செலுத்துகிறார்க‌ள், ஏனென்றால் அவ‌ர்க‌ள் தான் ச‌பையை நிறுவின‌வ‌ர்க‌ள் ஆயிற்றே!1

I கொரிந்தியர் 3:11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

கிறிஸ்து ஒருவ‌ரே ச‌பையை நிறுவின‌வ‌ர் த‌விர‌, இன்றைய‌ பாவ‌ம் நிறைந்த‌ ம‌னுஷ‌ர்க‌ள் த‌ங்க‌ளை அப்போஸ்த‌ர்க‌ள் என்று சொல்லிக்கொண்டு, இருந்த‌ ச‌பையில் பாஸ்ட‌ருட‌ன் கோட்பாடுக‌ள் கொள்கைக‌ள் (ப‌ங்கீட்டு!!) த‌க‌றாரின் வெளியேறி ஒரு க‌ட்டிட‌ம் க‌ட்டி விட்டு சில‌ சாதார‌ன‌ விசுவாசிக‌ளை (!!) வைத்துக்கொண்டு ந‌ட‌த்துவ‌தை ச‌பை நிறுவ‌ன‌ம் என்று சொல்ல‌ கூடாது!!

அநேக‌ க‌ள்ள‌ அப்போஸ்த‌ர்க‌ள் தோன்றுவார்க‌ள் என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌து இவ‌ர்க‌ள் மூல‌மாக‌வே நிறைவுபெறுகிற‌து!! அப்ப‌டியே மூத்த‌ ச‌கோத‌ர‌ர் என்று கிறிஸ்து இயேசுவை தான் வேத‌ம் சொல்லுகிற‌து!! ஆனால் இன்று இந்த‌ பூமியில் த‌ங்க‌ளை மூத்த‌ ச‌கோத‌ர‌ர் என்று சொல்லிக்கொள்ள‌வும் சொல்ல‌வைப்ப‌திலும் அநேக‌ர் ம‌கிழ்கிறார்க‌ள்!! இவ‌ர்க‌ளே அந்த‌ ம‌த் 24ல் சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌ள்ள‌ கிறிஸ்துக்க‌ள்!!

அன்று அப்போஸ்த‌ர்க‌ள் கிறிஸ்துவிற்காக‌ த‌ங்க‌ளை முற்றிலும் பாடுக‌ளுக்கு ஒப்பு கொடுத்தார்க‌ள்!! இன்றைய நாட்க‌ள் போல் பென்ஸ், ஹோண்டா அக்கார்ட், இன்னும் ப‌ல‌ வ‌ச‌திக‌ளை கொண்ட‌ விமான‌ங்க‌ள் வைத்திருந்த‌ அப்போஸ்தல‌ர்க‌ள் பாவம் இயேசு கிறிஸ்துவிற்கு இல்லாமல் போய்விட்டார்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோதரரே!

யார் மெய்யான அப்போஸ்தலர் என்பதை நாம் கண்டிப்பாகத் தெரியத்தான் வேண்டும். இந்நாட்களில் எந்த வரைமுறையுமில்லாமல் பலர் தங்களை அப்போஸ்தலர் எனச் சொல்கிறார்கள்; பலரை அப்போஸ்தலர் என அழைக்கவும் செய்கிறார்கள். இச்சூழ்நிலையில் தங்களது இப்பதிவு பல கேள்விகளுக்கு விடையளிக்கும் என நம்புகிறேன்.

அப்போஸ்தலர் 12 பேர் மட்டுமே என்கிறீர்கள். தங்கள் கூற்றுக்கு இசைவாக வெளி. 21:14 இருக்கிறது. ஆனால் வேறுசில வசனங்கள் தங்கள் கூற்றுக்கு எதிராகவும் உள்ளன. அவற்றிற்கு விளக்கம் தரும்படி வேண்டுகிறேன்.

அப்போஸ்தலர் 14:14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, ...

ரோமர் 16:7 அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.


இவ்வசனங்களின்படி பார்த்தால், பர்னபா, அன்றோனீக்கு மற்றும் யூனியாவும் அப்போஸ்தலராக இருந்ததாகத் தெரிகிறது. இது பற்றி உங்கள் விளக்கத்தைத் தாருங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Romans 16: Greet Andronicus and Junia,my kinsmen and my fellow prisoners. They are well known to the apostles,and they were in Christ before me. 

ரோமர் 16:7 அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.

தமிழில் இப்படி இருந்திருக்க வேண்டும்:

என்னுட‌னே காவ‌லில் இருந்த‌ அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்க‌ள், அவ‌ர்க‌ள் அப்போஸ்த‌ல‌ர்க‌ளால் ந‌ன்கு அறிய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌வ‌ர், என‌க்கு முன்பாக‌ கிறிஸ்துவின் இருக்கிறார்க‌ள்!!

அப்போஸ்த‌ல‌ருக்குள் பெய‌ர்பெற்றாவ‌ர்க‌ள் என்று இருந்தால் அவ‌ர்க‌ளும் அப்போஸ்த‌ல‌ர்க‌ள் என்று தான் இருக்க‌ வேண்டுமா!! ந‌ம்ம‌வ‌ர்க‌ளின் மொழிப்பெய‌ர்ப்பு குழ‌ப்ப‌ம்!! சொன்னால் சில‌ருக்கு பிடிக்காது, உண்மை அப்ப‌டி தான்!!

அப்போஸ்த‌ல‌ர்க‌ளால் அறிய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை அப்போஸ்த‌ல‌ர் என்று சொல்லுவ‌து எப்ப‌டி ச‌ரியாகும்!?

அப். 14:14ஐ குறித்து எழுதுகிறேன்...,.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அப்போஸ்தலனாகிய பவுலுடன் சுவிசேஷ பணிக்கென்று சென்று இருந்த பர்னபாவை அப்போஸ்தலர் என்று இந்த இடத்தில் மாத்திரம் ஏன் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை!! ஆனாலும் சுவிசேஷத்தின் நிமித்தம் அப்போஸ்தலருடன் சென்ற காரணத்தினால் அப்படி அழைக்கப்பட்டிருக்கலாம்!! ஆனால் வேதத்தில் உண்மையான அப்போஸ்தலர்களின் அழைப்பதை தான் நான் முதல் பதிவில் வசனத்துடன் பதிந்திருக்கிறேனே!! கிறிஸ்துவினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் நிமித்திமாக அனுப்பட்டவர்கள் தான் அப்போஸ்தலர்கள் ஆவர்கள்!! பர்னபாவோ இந்த அப்போஸ்தலர்கள் மூலமாக தானே கிறிஸ்துவிற்குள் வந்தவன்!! கிறிஸ்துவினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பட்டவனாக அவன் இல்லையே!! மேலும் இந்த ஒரு இடத்தில் மாத்திரமே அப்படி எழுதப்பட்டிருப்பதால் நிச்சயமாக இது ஆறாயப்படவேண்டியது தான்!!

அப்போஸ்தலராகிய பவுல், பர்னபா என்று ஒரு வேளை இருந்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்காது!? வேதத்தில் இந்த ஒரு இடத்தில் மாத்திரம் இப்படி கொடுக்கப்பட்டிருப்பதால் "ஆட்டுக்குட்டியானவருடைய 12 அப்போஸ்தலர்கள்" என்கிறது தப்பாகி போகும், அவரே தேர்ந்தெடுத்த 12 அப்போஸ்தலர்களும், அதில் யூதாஸ் மரித்து போன பின்பு, மாம்சத்தில் சீட்டு போட்டு எடுக்கப்பட்ட மத்தியாஸை அங்கிகரியாமல், இயேசு கிறிஸ்துவினால் பவுல் என்பவனை அப்போஸ்தலனாக யூதாஸின் இடத்தை நிறப்பும் படி தேர்ந்தெடுத்து 12 பேரின் என்னிக்கையை நிறைவு செய்திருக்கிறார்!! இதை வைத்து பார்த்தோமென்றால், பர்னபா நிச்சயமாக அப்போஸ்தலனாக இருந்திருக்க முடியாது!!

இன்னும் ஆறாயலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மேலும் அப்போஸ்தலர்கள் தங்கள் சொந்த கருத்துக்களுக்காகவோ, தங்களின் சொந்த ஆதாயத்திற்காகவோ, சொந்த பிழைப்பிற்காகவோ சபைகளை நிறுவியதாக இல்லை!! ஆனால் இன்று ஒருவர் சபை (கட்டிடம்) துவங்கிறார் என்றாலே அவர் அப்போஸ்தனாகி விடுகிறார்!! கேட்டால் இதற்கு பெயர் தான் சபை ஊழியமாம்!! கருத்து வேறுபாட்டினால் பிரிந்து சென்று சபை துவங்குகிறவர்கள் தான் வேதத்தின்ப்படி அப்போஸ்தலர்களா, அதிலும் மூத்த அப்போஸ்தலர் (Senior Apostle) அப்படி என்றால் அந்த 12 அப்போஸ்தலர்கள் யார்!?

கலா 1:6. உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; 7. வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. 8. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

இப்படி தன் சொந்த கருத்துக்களை தன் தரிசனங்களை பிரதானமாக வைத்து சபை துவங்கும் இன்றைய நவீன காலத்து மூத்த அப்போஸ்தலர்கள் மெய்யாலுமே அப்போஸ்தலர்கள் தானா!!  ஒவ்வொரு சபையை துவங்கும் அப்போஸ்தர்(!!) தங்கள் சபைகளை தவிர தங்கள் ஆடுகள் (!!) வேறு சபைக்கு போகக்கூடாது என்பார்கள், ஏனென்றால் அடுத்த சபையை துவங்கிய அப்போஸ்தலர் (!!) இவரின் ஆடுகளை (!!) குழப்பி விடுவார்!!

அப்போஸ்தலர்கள் காலத்தில் அவர்கள் யார் மீதும் கைகளை வைத்து "அப்போஸ்தலர்கள்" என்று ஏற்படுத்தவில்லை!! பவுல் அப்போஸ்தலர் கலாத்தியருக்கு சொன்னது போல்  இன்று இருக்கும் "அப்போஸ்தலர்கள்" சொல்ல முடியுமா!! முடியாது, ஏனென்றால் அவர்கள் மேல் அவர்களே சாபம் வரவழைக்க அவர்களுக்கு தைரியம் இருக்காது!!

ஆதி சபையிலும் (கத்தோலிக்க சபை ஆரம்பிக்கும் முன்பு) அப்போஸ்தலர்கல் என்று இல்லாமல் ஆதி பிதாக்கள் (Early Church Fathers) என்று தான் இருந்தார்கள்!! கத்தோலிக்க சபை தான் முதல் முதலில் தன் குருவானவட்ர்களை தங்களை அப்போஸ்தலர்களின் வரிசையில் கொண்டு வந்தது, அதை ப்ரொடஸ்டண்ட் சபைகள் பின் பற்றி, இறுதியில் பெந்தேகோஸ்தே சபைகளில் தீவிரமாக வந்து விட்டது!! சாத்தான் தன் வேளையை நன்றாக செய்து வருகிறான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோதரரே!

ரோமர் 16:7-ஐப் பொறுத்தவரை உங்கள் விளக்கம் ஏற்கக்கூடியதாக உள்ளது. அப்போஸ்தர் 14:14-ஐப் பொறுத்தவரை இன்னும் ஆராயவேண்டியதுள்ளது என்கிறீர்கள். இது சம்பந்தமாக நானும் சில வழிகளில் ஆராய்ந்தேன். நான் அறிந்ததை தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அப்போஸ்தலர் எனும் வார்த்தைக்கு இணையான கிரேக்க வார்த்தை apostolos என்பதாகும். இதற்கான அர்த்தம்:

a delegate; specially, an ambassador of the Gospel; officially a commissioner of Christ ["apostle"] (with miraculous powers):

அதாவது நியமிக்கப்பட்டவர், சுவிசேஷத்தின் அதிகாரபூர்வமான தூதுவர், மற்றும் கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான அலுவலர் எனும் அர்த்தங்களைச் சொல்லலாம். (இதைவிட பொறுத்தமான அர்த்தங்களைச் சொல்லக்கூடியவர்கள் சொல்லலாம்)

இயேசு தமது பணிக்காக எவர்களை நேரடியாக தெரிந்தெடுத்து அனுப்பினாரோ அவர்களே கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான அலுவலர்கள். இயேசு அவ்வாறு தெரிந்தெடுத்து அனுப்பியது 12 பேரை மட்டுமே.

லூக்கா 6:12,13 அந்நாட்களிலே,  ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.

லூக்கா 9:1,2 அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்.


இராமுழுவதும் ஜெபித்த இயேசு, பொழுதுவிடிந்தவுடன் 12 அப்போஸ்தலரைத் தெரிவுசெய்ததால், அவர்களைத் தெரிவுசெய்வதற்காகத்தான் இராமுழுவதும் அவர் ஜெபித்தார் எனச் சொல்லலாம். இந்த 12 பேருக்காக தேவன் நியமித்த ஒரு வெகுமானத்தை பின்வரும் வசனங்களில் இயேசு கூறுகிறார்.

மத்தேயு 19:27,28 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மறுமையின் காலத்தில் இஸ்ரவேலரின் 12 கோத்திரத்தாரை நியாயந்தீர்க்கும் அதிகாரம்தான் அவர்களுக்கான வெகுமானம். (இங்கு இயேசு குறிப்பிடுகிற இஸ்ரவேலர், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலராகத்தான் இருக்கவேண்டும் என நான் கருதுகிறேன்.)

அவர்கள் எல்லாவற்றையும் விட்டு இயேசுவைப் பின்பற்றியதால்தான் அவர்களுக்கு இந்த வெகுமானம். ஆகிலும் எல்லாவற்றையும் விட்டு வந்த யூதாஸ், பின்னாளில் பணத்தை விடமுடியாமற் போனான். எனவே வெகுமானம் பெறுவதற்கான தகுதியை இழந்தான். அத்தோடு அப்போஸ்தலப் பட்டத்தையும் இழந்தான்.

இயேசுவே நேரடியாக ஒருவனைத் தெரிவுசெய்தால்கூட, அவனது கிரியை சரியில்லையெனில், அவன் தனது வெகுமானத்தை இழந்துபோவான் என்பதற்கு யூதாஸ் ஓர் உதாரணம்.

யூதாஸ் அப்போஸ்தலப் பட்டத்தை இழந்துபோனான் என்பதை அறிந்த பிற அப்போஸ்தலர்கள், அந்த அப்போஸ்தலப் பட்டம் வேறொருவருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர். ஆனால் அதை இயேசுவே செய்யவேண்டும் என்பதையறியாமல், தாங்களாகவே சீட்டுபோட்டு ஒரு “அப்போஸ்தலனை” தெரிவு செய்தனர். அவர்களின் தெரிவு தேவனால் அங்கீகரிக்கப்படவில்லை; பின்னர் இயேசுவே நேரடியாகப் பவுலை தமது அதிகாரபூர்வமான அலுவலராகத் தெரிவுசெய்தார். பின்வரும் வசனம் இதைத் தெளிவாகக் கூறுகிறது.

அப்போஸ்தலர் 9:15,16 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.

இயேசுவின் தெரிந்துகொள்தலுக்கேற்ற பிரகாரமாய், பவுலுங்கூட “எல்லாவற்றையும்” விட்டுவிட்டு தேவப்பணியைச் செய்தார். எனவே வெளி. 24:14 கூறுகிறதான 12 அப்போஸ்தலர்கள், யூதாஸைத் தவிர்த்த 11 அப்போஸ்தலர் மற்றும் பவுல் ஆகியோரே என நான் கருதுகிறேன்.

ஆகிலும் பர்னபாவை அப்போஸ்தலன் என வேதாகமம் ஏன் கூறுகிறது எனும் கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கு பதிலாக நான் கண்டறிந்தது:

பர்னபாவை அப்போஸ்தலன் எனக் கூறுவதற்கும், 12 பேரை அப்போஸ்தலர் எனக் கூறுவதற்கும் வித்தியாசமுள்ளது. அப்போஸ்தலன் எனும் வார்த்தைக்கு: நியமிக்கப்பட்டவர், சுவிசேஷத்தின் அதிகாரபூர்வமான தூதுவர், மற்றும் கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான அலுவலர் எனும் அர்த்தங்கள் இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம். இவற்றில்: “சுவிசேஷத்தின் அதிகாரபூர்வமான தூதுவர், அல்லது கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான அலுவலர்” எனும் அர்த்தத்தில் 12 அப்போஸ்தலர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.; பர்னபாவோ, நியமிக்கப்பட்டவர் எனும் அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறார் என நான் கருதுகிறேன்.

பரிசுத்தஆவியின் உத்தரவுப்படி, பர்னபாவை பவுலுடன் ஊழியஞ்செய்யும்படி அப்போஸ்தலர்கள் நியமித்ததாக அப்போஸ்தலர் 13:2,3 வசனங்கள் கூறுவதை நினைவுகூர்வோமாக. இவ்வசனங்களின்படி நியமிக்கப்பட்ட ஓர் அப்போஸ்தலராக பர்னபா இருந்தார் என நான் கருதுகிறேன். இக்கருத்துக்கு மாறான கருத்தையுடையவர்கள் அதைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.


-- Edited by anbu57 on Monday 13th of December 2010 06:04:55 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

ஒருவன் கிறிஸ்துவின் மெய்யான சீஷனாக இருந்தால், அவன் நிச்சயமாக வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான். அப்படிப்பட்ட ஒரு சீஷன், தன்னைக் கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்பவனாகக் கருதினால், நிச்சயமாக தன்னை அப்போஸ்தலன் எனக் கூறவும் மாட்டான், மற்றவர்கள் தன்னை அப்படி அழைப்பதை ஏற்கவும் மாட்டான். வசனத்தை அறிந்தால் மட்டும் போதாது. வசனத்திற்கு நடுங்கவும் வேண்டும் (ஏசாயா 66:2). இந்த நடுக்கம் இல்லாததால்தான் சற்றும் உறுத்தலின்றி தங்களை அப்போஸ்தலர் எனக் கூறிக்கொள்கின்றனர்.

இன்றைய ஆடம்பர “ஊழியர்களை” அப்போஸ்தலர் எனச் சொல்பவர்களுக்கும் விவஸ்தையில்லை, அதை ஏற்பவர்களுக்கும் விவஸ்தையில்லை. அன்றைய அப்போஸ்தலர்கள் இவ்வுலகுக்குப் பாத்திரமாயிராமல், இவ்வுலக வசதிகளை அனுபவியாமல் பசியிலும் பட்டினியிலும் நிர்வாணத்திலும் காவலிலும் உபத்திரவத்திலும் கிடந்தாலும் அவற்றை சந்தோஷத்துடன் அவற்றை ஏற்றுக் கொண்டு தேவப்பணியைச் செய்தனர். அப்படிப்பட்ட அவர்களுக்கு நிகராக இன்றைய “ஆடம்பர” ஊழியர்களை “அப்போஸ்தலர்” எனச் சொல்வது, அந்த மெய்யான அப்போஸ்தலர்களை அவமானப்படுத்துவதாகும்.

எந்த ஊழியர்கள் வேதம் சொல்லாத திரித்துவத்தை ஏற்றுள்ளார்களோ, எந்த ஊழியர்கள் வேதத்துக்கு எதிராக “அப்போஸ்தலர், போதகர், பாஸ்டர், மேய்ப்பர், குரு, தந்தை” எனக் கூறிக் கொள்கிறார்களோ, அவர்கள்தான் இழிவான ஆதாயத்துக்காக “இவ்வுலக செழிப்பைச்” சொல்லி விசுவாசிகளை வஞ்சித்து வருகின்றனர்.

முதல் கோணல் முற்றும் கோணலாகத்தான் இருக்கும். சும்மா கிடந்த அவர்களை “அப்போஸ்தலர், போதகர், பாஸ்டர், மேய்ப்பர், குரு, தந்தை” எனச் சொல்லி தலைக்குமேல் வைத்து ஆடினால், அவர்கள் மனம்போனபடி தங்கள் சுயபோதனைகளைக் கூறத்தான் செய்வார்கள். அப்படி அவர்கள் செய்தபின் “அவர்கள் உபதேசம் கள்ள உபதேசமா” என்று சொல்லி வாதிடுவதில் என்ன பயன்? (போதகர்(?) சாம் செல்லத்துரையின் உபதேசம் கள்ள உபதேசமா எனும் விவாதத்தைத்தான் சொல்கிறேன்).

தனது தகப்பானாரின் மரணச் சடங்கிற்கு, ஆடம்பர வாகனம் மற்றும் சவப்பெட்டியை அவர் வரவழைத்தார் எனும் தகவல் மெய்யானால், அதன்பின் அவரது உபதேசம் “கள்ள உபதேசமா” என்ற விவாதம் எதற்கு? அந்த “ஆடம்பரம்” ஒன்றே போதுமே, அவர் கள்ள உபதேசர் என்பதற்கு.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஆகிலும் பர்னபாவை அப்போஸ்தலன் என வேதாகமம் ஏன் கூறுகிறது எனும் கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கு பதிலாக நான் கண்டறிந்தது:

பர்னபாவை அப்போஸ்தலன் எனக் கூறுவதற்கும், 12 பேரை அப்போஸ்தலர் எனக் கூறுவதற்கும் வித்தியாசமுள்ளது. அப்போஸ்தலன் எனும் வார்த்தைக்கு: நியமிக்கப்பட்டவர், சுவிசேஷத்தின் அதிகாரபூர்வமான தூதுவர், மற்றும் கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான அலுவலர் எனும் அர்த்தங்கள் இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம். இவற்றில்: “சுவிசேஷத்தின் அதிகாரபூர்வமான தூதுவர், அல்லது கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான அலுவலர்” எனும் அர்த்தத்தில் 12 அப்போஸ்தலர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.; பர்னபாவோ, நியமிக்கப்பட்டவர் எனும் அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறார் என நான் கருதுகிறேன்.

பரிசுத்தஆவியின் உத்தரவுப்படி, பர்னபாவை பவுலுடன் ஊழியஞ்செய்யும்படி அப்போஸ்தலர்கள் நியமித்ததாக அப்போஸ்தலர் 13:2,3 வசனங்கள் கூறுவதை நினைவுகூர்வோமாக. இவ்வசனங்களின்படி நியமிக்கப்பட்ட ஓர் அப்போஸ்தலராக பர்னபா இருந்தார் என நான் கருதுகிறேன். இக்கருத்துக்கு மாறான கருத்தையுடையவர்கள் அதைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன். //

த‌ங்க‌ளின் இந்த‌ க‌ருத்து மிக‌வும் ச‌ரியான‌தாக‌ தான் இருக்கிற‌து! அப்போஸ்தலர்கள் யார் மீது கைகளை வைத்து அனுப்பினார்களோ அவர்களும் தூதர்கள் (Ambassador) ஆனார்கள், அந்த வகையில் பர்னபாவை அப்போஸ்தலன் எனக் எழுதியிருக்கலாம்!! மற்றப்படி இதற்கு தொடர்புடைய வேறு வசனம் இல்லையே!!

இன்று தங்களை அப்போஸ்தலர்கள் என்று கூறப்படுவதை விரும்புகிறார்களே, அவர்கள் நிச்சயமாக மெய்யான அந்த 12 அப்போஸ்தலர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வாழ முடியாது, நாமே அதற்கு சாட்சி!! பென்ஸ் கார் இந்த நிறத்தில் தான் வாங்க வேண்டும் என்றெல்லாம் தேவன் அவர்களுக்கு சொல்லுகிறாரே, இவர்கள் அப்போஸ்தலர்கள் என்றால், இவர் யார்?

அப். 9:15. அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

இன்னும் ப‌வுல் சொல்லுகிறார்:

ரோம் 8:38. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், 39. உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

வேத‌ வ‌ச‌ன‌ங்க‌ளின் மேல் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ர்க‌ள் இன்று அப்போஸ்த‌ல‌ர்க‌ள், மூத்த‌ அப்போஸ்த‌ல‌ர், போன்ற‌ அல‌ங்கார‌ வார்த்தைக‌ளுக்கு பிர‌யாசிக்கிறார்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard