kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊழிய‌ம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஊழிய‌ம்!!


எந்த ஒரு ஊழியனை சந்தித்தாலும் கீழ் காணும் வசனங்களை சுட்டி காட்டி, ஆகவே தான் நாங்கள் ஊழியம் செய்கிறோம் (எங்களை தேவன் பெயர் சொல்லி அழைத்து ஊழியம் செய்ய வைக்கிறார்) என்பார்கள்:

மத். 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

எபே 4:13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

சரி அப்படி என்றால் ஏன் ஒரே கட்டிடத்தில் உட்கார்ந்துக்கொண்டு, அதே 15 பேரைக்கொண்டு வாரா வாராம் "பரிசுத்த ஆவியானவரே" வந்து இறறறறங்கும் என்று பாடுகிறார்கள்!! கிறிஸ்து அப்போஸ்தலர்களிடம் சொன்னது போல், சகல ஜாதிகளையும் பார்க்கும்படி கிளம்பி போக வேன்டியது தானே!! சுவிசேஷம் கேட்டுக்கொண்டு இருக்கும் சபையில் இருப்பவர்களும் அதையே செய்யலாமே!!

அப்படி என்றால் சுவிசேஷம் சொல்லக் கூடாதா என்று அடுத்த கேள்வியை கேட்பார்கள்!!

சுவிசேஷம் என்றால் என்ன என்று கேட்டால் வேதத்தில் இல்லாததை எல்லாம் சொல்லி தீர்ப்பார்கள்!! திரியேக தேவன், தசமபாகம், அந்நிய பாஷை, அற்புதம் செய்வது, "ஆவியில்" சிரிப்பது, அழுவது, துள்ளி குதிப்பது போன்றவற்றில் காலத்தை ஓட்டுவார்கள்!! சரி கிறிஸ்துவின் போதனைகள் கற்ற கொடுத்த பிறகு, அவர்களை சீஷர்களாக்கி ஞானஸ்நானம் ஒடுத்து அவர்களையும் ஊழியத்திற்கு அனுப்ப வேண்டியது தானே!! சபையில் ஒருவர் தேவன் எனக்கு இதை உணர்த்தினார் என்று சொன்னாலே, "பெரிய பாஸ்டர்" நான் ஜெபித்து விட்டு சொல்லுகிறேன் என்று அவரை அப்படியே அமுத்தி விடுவார்!!

அப்படி என்றால் சுவிசேஷம் சொல்லுவது தான் நோக்கமா அல்லது!!????

அப்ப‌டி என்றால் ஏன் ஊழிய‌ம்!! சுவிசேஷ‌ம் சொல்லுவ‌து தான் நோக்க‌ம் என்றால் அது அதே சில‌ குடும்ப‌ங்க‌ளுகு வாரா வார‌ம் சொல்லுவ‌தா? வெகு சிலர் நான் வ‌ருமான‌த்திற்காக‌வும் ஊழிய‌ம் செய்கிறேன் என்று சொல்லுகிற‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்!! ஆனால் அது தான் உண்மை!! இல‌வ‌ச‌மாக‌ பெற்ற‌தை இல‌வ‌ச‌மாக‌ கொடுங்க‌ள் என்று தானே வேத‌ம் சொல்லுகிற‌து!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மத்தேயு 19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

ஊழியம் செய்கிறோம் என்றும் இதற்காகவே தேவன் எங்கலை அழைத்தார் என்றும் தன்னை பவுல் என்று என்னுபவர்களும், தன்னிடம் தேவன் பேசினார் என்று சொல்லுபவர்களும், இந்த வசனத்தை பார்ப்பதே கிடையாது போல். அப்போஸ்தலர்களுக்கு கொடுத்த கட்டளையை வைத்து எங்களுக்கும் அது பொருந்தும் என்று சொல்லுபவர்கள், அதை மாத்திரம் நேரடியான வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்பவர்கள் இந்த வசனத்திற்கு பல ஆவிக்குறிய அர்த்தங்களை தருவார்கள்!!

காரணம் சிலுவை சுமக்க தையாராக இல்லை, உலக பிரகாரமான அனைத்தும், நல்ல மனைவி, அன்புள்ள பிள்ளைகள், நல்ல வீடு வசதி, வாகனம் இது அனைத்தும் வேண்டும் என்று மனதில் வாஞ்சிக்கும் ஒரு சராசரி மனிதனின் மனநிலையில் இருந்துக்கொண்டு, அதற்காக பாடு படுவோர் தான் இன்று தங்களை ஊழியர்கள் அல்லது தேவ மனிதர்கள் என்று சொல்லுவோர்!! ஆனால் நித்திய ஜீவனை பெற்று கொள்ள இவை எல்லாவற்றையும் விட்டு அல்லவா வர சொல்லியிருக்கிறது (கத்தோலிக்க சாமியார்கள் ஓர் அளவிற்கு நேரடியாக இந்த கட்டளையை பின் பற்றுகிறார்கள்!!)!! இப்படி இருக்க உலக ஆசிர்வாதங்கள் தான் கிறிஸ்தவ ஜீவியமா!?

ஒரே சபைக்குள் இருந்துக்கொண்டு, காலம் முழுவதும் நான் ஊழியன் என்று தங்கள் சபைக்கு வருவோர் மற்றும், அவரின் கிளை சபைகளுக்கு போய் பிரசங்கம் செய்வது தான் ஊழியமா!? தினகரனின் கூட்டம் என்றால், அதில் 98% அங்கு இருக்கும் கிறிஸ்தவ சபைகளின் கண்டிப்பின் பேரிலேயே செல்வார்கள், ஏறகனவே சுவிசேஷம் (!!) கேட்டவர்களே தான் திரும்ப திரும்ப கூடுகிறார்கள் அவர்களுக்கே திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது!! ஆனால் அப்போஸ்தலர்கள் அப்படி இல்லையே, இந்திய முதல் சைபேரியா என்றும் இன்னும் பல நாடுகளுக்கு கட்டளைக்கு கீழ் படிந்து சென்று மெய்யாகவே சுவிசேஷத்தை அறிவித்தார்கள், வேதமும் வரலாறும் நமக்கு சாட்சியாக இருக்கிறது!! அதன் பின் அவர்கள் மூலமாக கையெழுத்து பிரதிகள் வந்து, பிறகு அச்சு இயந்திரம் வந்து, தற்போது எல்லா நாடுகளிலும் வேத புத்தகம் இருக்கிறதே!! எல்லா நாடுகளுக்கும் சுவிசேஷம் போய் இருக்கிறதே!! அதை எல்லா ஜனங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, சுவிசேஷம் போய் சேரவில்லை என்று சொல்ல முடியாது!!

இத்துனை பேசும் ந‌ம் ஊழிய‌ர்க‌ள், தேவ‌ன் என்னை ஊழிய‌த்திற்கு அழைத்திருக்கிறார் என்று சொல்லுப‌வ‌ர்க‌ள், இஸ்லாமிய‌ நாடுக‌ளுக்கு சென்று, வேத‌மே பொய் சேராத‌ இட‌ங்க‌ளுக்கு அல்ல‌வா போய் சொல்ல‌ வேண்டும்!!

நித்திய ஜீவனுக்கு வாஞிசிக்கிற அனைவரும் இன்று இந்த கட்டளையை உண்மையாகவே பின் பற்றுகிறார்களா!? இப்படி பட்டவைகளுக்கு மாத்திரம் ஆவிக்குறிய அர்த்தம் வந்து விடும்!! ஏனென்றால் இதில் சொல்லப்பட்டவைகள் அனைத்தும் நமக்கு தேவையே, இவைகளை எப்படி விட்டு விட்டு வர முடியும்!! ஆகவே நித்திய ஜீவனுக்கு போக வேண்டும் என்றால் இவைகளையும் கைக்கொள்ள வேண்டும் அல்லவா!?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard