யொவன ஜனம் தள நிர்வாகி சில்சாமின் நாகரீகமான மிரட்டல்,
//உங்கள் மீது கொண்ட அக்கறையினால் இறுதி முயற்சியாக ஒரு போதனையை எழுதியிருக்கிறேன்;இதனை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, மேல் விவரம் கேட்டு கேள்விகள் எழுப்பினாலும் சரி பரவாயில்லை, பரியாசம் செய்தாலோ தூஷித்தாலோ என்னுடைய நடவடிக்கை வேறுவிதமாக இருக்கும்.//
இதுவே இவர் எந்த ஆவியின் ஆதிக்கத்தில் பேசுகிறார் என்று சுய விளம்பரம் செய்துக்கொள்கிறார்!! போகட்டும், தேவன் ஒருவருக்கே பயந்து பழக்கம் கொண்டிருக்கும் நான் இது போன்ற பூச்சி மிரட்டள்களுக்கு எல்லாம் அசைவதில்லை, அசருவதில்லை!!
எபிரெயர் 13:6 அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.!!
இவர்களை போல் திரியேக தேவன் (வேதத்தில் எங்கே இருக்கிறது என்று கூட கான்பிக்க முடியாதவர்கள் இவர்கள்) மேல் எனக்கு நம்பிக்கை இல்லை, மாறாக ஒன்றான மெய் தேவனையும், அவர் அனுப்பிய அவரின் முதற்பேறான குமாரனான இயேசு கிறிஸ்துவை மாத்திரமே நாங்கள் நம்புகிறோம்!!
இவர் ஜியஃப்ரியை குறை கூறி எழுதினால் அது மாத்திரம் இவரின் ஊழியமாம்!! இவர் சண்டை போடாத ஆளே கிடையாது, ஆனால் நாங்கள் ஒன்றும் சொல்லக்கூடாதாம்!! இவர் சாபம் கொடுப்பாராம்!!
//நீங்கள் எத்தனை தான் குட்டிக்கரணம் போட்டாலும் சத்தியத்தையடையவே முடியாது;ஏனெனில் உங்களிடம் கற்றுக்கொள்ளும் மனோபாவம் கடந்துபோய் கற்பிக்கும் மனோபாவம் வந்துவிட்டது.//
பாட்டு புத்தகங்களையும், பாரம்பரியங்களையும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை!! வேதத்தில் இருந்து தான் நாங்கள் கற்றுக்கொள்ளுகிறோம், திருத்துவவாதிகளிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்பவில்லை, எனக்கு அவசியமும் இல்லை!!
//இந்த நிலையில் நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட வண்ணமாக நீங்கள் உங்களை கிறித்தவர் என்று சொல்லிக்கொள்வதையும் தங்களது வாரிசுகளுக்கு கிறித்தவ பெயர் வைப்பதையும் அவர்களது பள்ளி சான்றிதழில் கிறித்தவர் என்று குறிப்பிடுவதையும் நிறுத்திவிட்டு எதைவேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்.//
நானும் இறுதியாக சொல்லிக்கொள்ளுகிறேன், உங்களின் ஆதிக்கத்தை உங்கள் இடத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள்!! நான் கிறிஸ்தவனாக இருக்க உங்களை கேட்க வேண்டியதில்லை!! என் வாரிசை நான் எப்படி வளர்க்கனும் என்றும் பள்ளி சான்றிதழில் என்ன குறிப்பிடுவது என்று வேதத்தில் இல்லாத திருத்துவத்தை போதிக்கும் உங்களை போன்றவர்களிடம் தெரிந்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு நான் இல்லை!!! குமாரனை பிதா என்று சொல்லி பிதாவின் மகிமையை குழைக்கும் நீங்கள் கிறிஸ்தவரா என்று சுய பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்!!
//நாங்கள் எங்கள் வீட்டுக்குள் இருக்கும் தவறுகளை அடையாளம் கண்டு திருத்தும் பணியிலிருக்கிறோம்;நீங்களோ அவதூறு செய்வதையே ஊழியம் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறீர்கள்;உங்களிடம் சத்தியம் என்று ஏதாவது இருந்தால் அதைக் குறித்து மாத்திரம் தாராளமாகப் பேசலாம்;அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் மற்றவரை கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.//
என்னை சொல்லுவதற்கு முன்பு முதலில் உங்கள் எழுத்து எப்படி பட்டது என்று சுய பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்!! நீங்கள் பீ.சீ ஜியாஃப்ரியை குறை கூறுவது கீழ்த்தரமாக எழுதுவது "ஊழியமோ"!? உங்களுக்கு "தவறு" என்று தெரிவது எனக்கு அபச்சாரம் என்று தெரிகிறது, ஆகவே நாங்கள் எழுதுகிறோம், உங்களுக்கு விருப்பம் இருந்தால் மறுப்பு தெரிவியுங்கள், அவ்வலவே தான், நான் எழுதக்கூடாது என்றுசொல்லுவதும், ரவுடித்தனம் செய்வது எல்லாம் உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு பனிந்தவர்களிடம் வைத்துக்கொள்ளுங்கள்!!
//கிறித்தவர்கள் இயேசுகிறித்துவையே தெய்வமாகத் தொழுகிறோம்;இயேசுகிறித்துவின் வழியே அதரிசனமான காணக்கூடாத சர்வவல்ல தேவனை அடைகிறோம்;இதற்கு ஆதாரமாக இங்கே பாடப்படும் துதிபாடல்கள் மற்றும் ஜெபங்கள் அனைத்தும் கிறித்துவையே மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.//
அதான் சொல்லுகிறேன், வேதத்திலிருந்து உங்களை போன்றவர்கள் ஒரு போதும் சத்தியத்தை அறிந்துக்கொள்ள முடியாது!! இப்படி பாடல்களும், துதிப்பாடல்களும், மனிதர்கள் எழுதிய ஜெபங்களையும், சொந்த அனுபவங்களை வைத்து தான் உங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிறீர்கள்!! ஆனால் நாங்களோ,
1 கொரி 2:5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;
என்பதை நம்புகிறோம், துதிப்பாடல்களையும், மற்ற பாடல்களையும் நம்பி எங்கள் விசுவாசத்தை வளர்க்கவில்லை!! வேதத்திலிருந்து நம்பிக்கை பெறாமல் பாடல்கள் துதிப்பாடல்கள், மனிதர்கள் சொல்லும் ஜெபத்தினால், சொந்த அனுபவங்களினால் தங்களை கிறிஸ்தவர் என்று சொல்லுவதை முதலாவது நீங்களும் உங்கள் வாரிசுகளும் நிறுத்திக்கொண்டால் நலம் என்று நான் நினைக்கிறேன்!!
1 கொரி 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
இப்படி எல்லாம் வேதம் சொல்லியும், பாட்டு சொல்லுகிறது அது தான் எங்கள் நம்பிக்கை என்று சொல்லும் உங்களை போன்றவர்களிடம் விவாதம் நடத்துவதே வெட்டி வேலையாக தான் நான் நினைக்கிறேன்!!
//இதனை கொள்கையளவில் ஏற்க மனமில்லாத உங்கள் குழுவினர் இங்கே அரசியல் அனாதைகளைப் போல சமுதாய அனாதைகளாகவும் பொறம்போக்குகளாகவும் இருப்பதைக் கருத்தில் கொள்ளவும்;உங்களுக்கு கிறித்தவர்களை புதைக்கும் மண்ணில் இடம் கேட்பதற்குக் கூட உரிமையில்லையாம்.//
நாங்கள் எங்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வேதத்திலிருந்து தான் எடுத்துக்கொள்கிறோம், உங்கள் போன்று பாடல்களும், பெரிய ஊழியரின் ஜெபத்திலும் பாரம்பரியத்திலிருந்தும் எடுத்துக்கொள்வதில்லை!! தொடர்ந்து அப்படியே இருங்கள்!! ஆவிக்கேறவைகளை சிந்திக்கும் எங்களுக்கு, எங்கள் உடல் எங்கே புதைக்கபட போகிறது என்கிற கவலை எல்லாம் கிடையாது, அதர்கு எல்லாம் நீங்கள் கவலைப்பட்டு உங்களுக்கு இடத்தை கேட்டுக்கொள்ளுங்கள், நாங்கள் கிறிஸ்துவின் நிமித்தம் அநாதைகலாகவே இருந்துக்கொள்கிரோம், பேதுரு எழுதியது போல், பரதேசிகளாகவே இருந்துக்கொள்கிறோம்!! எனென்றால் நாங்கள் எந்த காரியங்களை குறித்து எல்லாம் சிந்திப்பது கிடையாது!! அது எல்லாம் உங்களை போன்றவர்கள் சிந்தித்துக்கொண்டிருங்கள்!! கல்லறைக்கு இடம், ஆலயம் கட்ட இடம், பிறரை மிரட்டுவது, சபிப்பது, ரவுடித்தனம் பன்னுவது, கிறிஸ்தவத்தை தங்களின் தோள்மேல் தாங்கிக்கொள்ளும் எண்ணம் எல்லாம் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், பாடல்கள், ஜெபங்கள், துதிப்பாடல்கள், பாரம்பரியங்கள் மூலம் நீங்கள் "நல்ல" "தகுத்யான" "கிறிஸ்தவராக" இருந்துக்கொண்டிருங்கள், அப்படியே பிசாசினின் குணமான பிறரை சபிப்பது, ரவுடித்தனம் செய்வது, மிரட்டுவது போன்ற காரியங்களை செய்து "நல்ல கிறிஸ்தவராக" இருங்கள்!!
//ஏனெனில் நீங்கள் அவரை தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறுகிறீர்கள்;வேதம் அதுபோல எங்கும் கூறவில்லை;//
கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்!!
இது ஒரு வேளை உங்கள் பாடல்களிலும், ஜெபங்களிலும், உங்கள் ஊழியர்களின் போதனைகளிலும் இருக்காது ஆனால் வேதத்தில் இருக்கதான் செய்கிறது!! அது எல்லாம் சத்தியத்தை விரும்புகிறவர்களுக்கு தான் புரியும்!! மிரட்டலும், அடாவடித்தனமும், ரவுடித்தனமும் செய்துக்கொண்டு, பாடல்கள், துதிப்பாடல்கள், ஜெபங்களினால் கிறிஸ்தவர்கள் ஆனவர்களுக்கு புரியாது!! கற்றுக்கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு துளிக்கூட இல்லை என்று உங்கள் தளத்தில் வரும் விவாதங்கள் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறதை யாவரும் அறிவார்கள்!!
பாடல்களையும், துதிப்பாடல்களையும், ஜெபப்க்களையும் நம்பும் உங்களுக்கு சபிக்க மட்டும் வேதம் தேவைப்படுகிறது போல்!! முதற்பேறான கிறிஸ்து இயேசுவை சர்வவல்ல தேவனாகிய யெகோவா தேவன் என்று சொல்லி அவரை தூஷிக்கும் உங்கள் கூட்ட்டத்தார் ஒரு நாள் அவரை அவசியம் தெரிந்துக்கொள்வீர்கள் என்று ஆசீர்வதிக்கிறோம்!! நல்லா இருங்கள், நல்லதை பேசுங்கள், நல்லதை நினையுங்கள், அதுவே தேவனுக்கு அதிக பிரியம், ஏனென்றால் நீங்கள் மிரட்டிக்கொண்டே இருக்கலாம், ஆனால் அதற்கு எல்லாம் பயந்து என் பணியை விட்டு விடுவேன் என்கிற நப்பசை வேண்டாம் என்று சொல்லிக்கொள்கிறேன்!!
நீங்கள் ஆசீர்வதித்தபடியே பிதாவையும் அவரது குமாரனாகிய இயேசுவையும் சில்சாமும் சில்சாமைப் போன்றவர்களும் புரிந்துகொள்ள, குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக பிதாவாகிய தேவனை நோக்கி ஜெபிக்கிறேன்.
இந்த தாந்தோன்றி மூட அட்டூழியக்காரனுக்கு வேலை மெனக்கெட்டு பதிலளிப்பது நேரவிரயம். இவனைத்தான் கிறித்தவ தளத்திலிருந்தே துரத்தினார்களே. இங்கும் தன் மூடத்தனத்தைப் பறைசாற்றி செருப்படிவாங்காத குறையாக ஓடிப்போன ஓடுகாலிதானே இவன். தன் மூடத்தனத்தன பதிவுகளைத்தான் இவனே நீக்கிவிட்டானே. இவனுக்கு பதிலளிப்பதை விடுத்து உபயோகமான பதிவுகளைப்பதிக்கலாமே! அடுத்தவர் பணத்தில் உயிர்வாழும் இந்த ஒட்டுண்ணிகளுக்கெல்லாம் பதில் தரவேண்டிய அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
தன்னை 'மோசே'க்கு நிகராக நினைத்துக்கொண்டிருக்கிறான். மோசே கால்தூசுக்காவது இவனால் பதில் சொல்ல முடியுமா? மோசேயை எதிர்த்தவர்கள் மரித்துதான் போனார்கள். அதன்பின் மோசேயும் மரித்தாரே. மரணம் என்றால் என்னவென்று விளக்கத்தெரியாத மூடர்களுக்கு உயிர்த்தெழுதல் எங்கே புரியப்போகிறது.
மற்றவர்கள் உழைப்பில் உயிர்வாழும் ஈனப்பிறவிகளுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது. இவர்கள் தேவனாலேயே மஹாபாபிலோனின் வேசித்தனத்துக்காக நியமிக்கப்பட்டவர்கள். ஒன்றிரண்டு முறை புத்தி சொல்லியாகிவிட்டது; விலகவேண்டியதுதான்.
இந்த முட்டாள்களின் மூலம் நம்தளத்துக்கு வருகை அதிகரித்துள்ளது ஆரோக்கியமான விஷயம்.
-- Edited by soulsolution on Friday 10th of December 2010 08:38:31 AM