Dr. Wayne C. Gwilliam என்கிறவர் ஞானஸ்நானத்தை அத்துனை தெளிவாக விளக்கி இருக்கிறார் என்று யொவன ஜனம் தளத்தில் ஒரு தொடுப்பு கொடுக்கப்பட்டிருந்தது, அதை படித்து பார்த்தீர்களென்றால், "அதே மது வேறு ஒரு கோப்பையில்' என்கிற பாணியில் தான் இருக்கிறது!!
Water baptism is a powerful weapon against the carnal mind.
தண்ணீர் ஞானஸ்நானம் என்பது மாம்ச சிந்தையை தகற்க்கும் ஒரு பலமான ஆயுதம்!!
இப்படி ஒரு சிந்தனை "திரியேக" தேவனை வனங்குபவர்களுக்கு வருவதில் எந்த சந்தேகமும் இல்லை!! வேதத்தில் இல்லாத ஒன்றை, அது வானத்திலிருந்து வந்த தூதனோ, ஏன் வேத எழுத்துக்களை தந்த அந்த அப்போஸ்தலர்களே வந்து சொன்னால் கூட நம்பாதீர்கள், மாறாக அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது, கலாத்தியர் 1ம் அதிகாரத்தில்!! ஆனால் இந்த கட்டுரையை தந்திருக்கும் வில்லியம் எந்த ஒரு வசனத்தையும் ஆதாரமாக சொல்லாமல் இப்படி பட்ட ஒரு மாபெரும் விளக்கத்தை கண்டு பிடித்து எழுதுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்!!
கலா. 5:16. பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். 17. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
வசனம் இப்படி தானிருக்கிறது!! பரிசுத்த ஆவியின் சிந்தையுடையவர்கள் அந்த ஆவியைக்கொண்டு தான் மாம்ச சிந்தையை ஜெயிக்க முடியுமே தவிர, தண்ணீரில் மூழகி எழும்புவதினால் அல்ல என்று டாக்டர் வில்லியம் அவர்களுக்கு அவரின் எழுத்து மிகவும் நல்லது என்று செர்டிஃபிக்கெட் கொடுத்த தளமும் அறிந்துக்கொள்ளவில்லை போல்!!
டாக்டர் வில்லியம்ஸ் எழுதுகிறார், After hearing this truth concerning water baptism, their level of faith is boosted, and they are baptized a second time. When they come up out of the waters, many are so “drunk” with the power of the Holy Spirit, that they cannot even walk. Others literally cry for hours, as the hurts of the past are dealt with by the power of the Holy Spirit.
பரிசுத்த ஆவி இப்படி ஞானஸ்நானம் எடுக்கும் மக்களை "குடிக்காரர்களாக" தள்ளாடசெய்கிறது என்றோ, மக்களை "உண்மையாக" அழவைக்கிறது என்றோ, பலரை நடக்கவிடாமல் செய்கிறது என்றோ வேதத்தின் எந்த வசனம் தான் சொல்லுகிறதோ இவருக்கு!!
மாறாக பரிசுத்த ஆவி வரும் போது நீங்கள் பெலம் கொண்டவர்களாக இருப்பீர்கள் என்று தான் வேதம் சொல்ல்லுகிறது!! பவுல் ஏன் அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்க சொல்லுகிறார் என்று கூட புரியாதவர்கள் எப்படி தான் ஞானஸ்நான கோட்பாடுகலை தருகிறார்களோ!!