kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சில்சாம் தளத்தின் எச்சரிப்பு!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
சில்சாம் தளத்தின் எச்சரிப்பு!!


கிறிஸ்தவத்தை தன் தலையில் தூக்கி திரிபவரும், கிறிஸ்தவத்திற்கு இருக்கும் ஒரே வழக்கறிஞர் என்று தன்னை பாவித்துக்கொண்டிருக்கும் சில்சாம், நம் தளத்தில் கிறிஸ்துவை தொழுதுக்கொள்ள கூடாது என்று நாம் போதிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார், அவரின் தளத்தில் மாத்திரம் இல்லை, சுந்தர் அவர்களின் இறைவன் தளத்திலும் இதே கதி தான்!! மழைக்கு வரும் ஈசல் போன்று வந்து மற்றவர்களை எரிச்சல் மூட்டி விட்டு அடுத்த மழைக்கு வரும் இவர் வேத பண்டிதரா அல்லது தமிழ் பண்டிதரா!?

நாங்கள் கிறிஸ்துவை தொழுதுக்கொள்கிறோம், ஆனால் பிதாவின் மகிமைக்கு அடுத்தது தான்!! பிதா மகிமைப்படும்படியாக தான் கிறிஸ்துவை கர்த்தர் என்று சொல்ல சொல்லி வசனமே இருக்கிறது (பிலி. 2:10,11)!! தமிழ் பண்டிதருக்கு இது தெரீயாது போல், ஏனென்றால் 1 கொரி 8:6,7ல் உள்ளது போல், பிதா வேறு, கிறிஸ்து வேறு என்கிறதான அறிவு நிச்சயமாக சில்சாமுக்கு இல்லை!!

பிறரை சபிப்பதும், எச்சரிப்பதும் தன் பிரதான தொழிலாக வைத்துக்கொண்டு அதை ஊழியம் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்!! இந்த தளத்தில் நாங்கள் தப்பிதமான ஊழியர்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம், ஆனால் சபிக்கும் அளவிற்கு நாங்கள் இல்லை, தேவனுக்கு பயந்திருக்கிறோம், தேவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்பதை நம்புகிறோம்!! வேறு மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தில் வந்ததால், சபிக்கும், எச்சரிக்கும் குணம் இவரை விட்டு இன்னும் நீங்கவில்லை போல், கிறிஸ்தவர்களிடத்தில் இப்படி பட்ட குனங்கள் இருப்பதில்லை என்பது இவருக்கு தெரியவில்லை!! ஃபிலிம் காட்டும் ஊழியர்கள் தான் இவருக்கு வழிக்காட்டிகள் போல், ஆகவே தான் அவர்களை குறை சொல்லி எழுதினால் இவருக்கு கோபம்!!

இந்த ஊழியர்கள் மேடையில் ஒருவரை தொட்டு விட்டு வீடு சென்று டெட்டால் சோப் போட்டு கைகளை அழம்புவார்கள்!! திரை நட்ச்சத்திரங்கள் போல் மினுக்கி கொண்டு குடும்பத்துடன் ஜனங்களை சந்திக்க விருப்பபடாமல், மேடையைன் பின்புறம் தப்பித்து விடுபவர்கள் தான் இவருக்கு வழிக்காட்டிகல், ஊழியர்கள்!! இவரை நம்பி தான் கிறிஸ்தவமும், ஊழியர்களும் இருக்கிறார்கள்!! இவருக்கு பயந்து யாரும் எந்த கருத்தையும் வெளியிடாதீர்கள், ஏனென்றால் இவர் சபிப்பதிலும், எச்சரிப்பதிலும் நிபுணர்!!

http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=39465051

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39477272



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சத்தியத்திற்கு விரோதிகள் நிச்சயமாக அதிக அளவில் வசனங்களை உபயோகிக்க மாட்டார்கள் என்பது தெரியும் என்றே நினைக்கிறேன்!!

Chillsam wrote:

//நீங்கள் மண்ணை கவ்வுவது நிச்சயம்;//

யார் மண்ணை கவ்வுவார்கள் என்பது காலம் தான் சொல்லும், உங்களுக்கு இப்பொழுது புரியாத விளங்கிக்கொள்ள முடியாத தேவனுடைய ராஜியத்தில் கண்டிப்பாக அது உங்களுக்கு விளங்கும் என்பது நான் வேதத்திலிருந்து அறிந்துக்கொண்டேன்!! உங்களை போன்றவர்களை தான் வேதம் "அறிவு இல்லாதாவர்கள்" என்று 1 கொரி 8:6,7ல் சொல்லியிருக்கிறதே!! இது வசனம் பிக் பன்னுது கிடையாது, இருக்கும் யதார்த்தத்திற்கு வசனத்தை எடுத்து சொல்லுவதாகும்!! சாரி உங்களுக்கு ஒருவேளை வசனம் சொல்லுவது அல்லது கேட்பது பிடிக்காமல் இருக்கலாம்!!

முதலில் நாகரீகமாக எழுத கற்றுக்கொள்ளுங்கள் பிறகு இயேசுவின் தியாகத்தை அறிவிக்கலாம்!! முதலில் உங்களின் குடும்பத்தை பார்த்துக்கொள்ளுங்கள், பிறகு பிறர் குடும்பத்தை பற்றி கவலைப்படலாம்!! சாத்தானின் தூஷிக்கும் நாவைக்கொண்டிருக்கும் உங்கள் நாவை அடக்கி வாசியுங்கள், உங்கள் பாணியில் சொல்லவேண்டும் என்றால் . . . . .  உங்களை போன்ற கொச்சைத்தனமாகவும், தற்பெருமையும் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை புறிந்துக்கொண்ட எங்களுக்கு எழுத வராது!!

இயேசுவின் சிலுவையை வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருப்போரிடம் எங்களுக்கு சம்பந்தமே கிடையாது!! இயேசுவின் சிலுவையை நாங்கள் அறிந்திருக்கிறோம், அது ஊழியர்களுக்கு தெரியாது!! அந்த சிலுவை உலகத்தில் வந்த எந்த ஒரு மனிதனையும் இரட்சிக்க வல்லமை உள்ளது என்று நாங்கள் சொல்லுகிறோம், இல்லை இல்லை, அதை ஏற்றுக்கொண்டோர் மாத்திரமே அதின் பலனை அடைவார்கள் என்று கிறிஸ்துவின் தியாகத்தை கொச்சை படுத்தி அவரின் சிலுவையை அவர் சிந்திய இரத்தத்தை தங்கள் கால்களின் கீழ் போட்டு மிதித்து, அதில் வரும் வருமானத்தில் பிழைக்கும் ஊழியர் கூட்டத்திற்கும் எங்களுக்கு கண்டிப்பாக சம்பந்தமே கிடையாது, அது உங்களை போல் சாத்தானின் வார்த்தையை வாயில் வைத்திருபோருக்கு புரியாது!!

யார் கிட்ட தான் உங்கள் மோதல் இருப்பதில்லை!! முதலில் வார்த்தைகளை ஒழுங்காக பேசி பழகுங்கள்!! நீங்கள் ஒன்றும் சாவாமல் இருக்கும் வரத்துடனில்லை  நீங்கள் அடுத்தவர்களை சொல்லுவது உங்களுக்கு திரும்பலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!!


Chillsam wrote:

//நீங்கள் இயேசுவானவரை சிருஷ்டிகளை சிருஷ்டிப்பதற்காக பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்ற நிலையிலேயே வைத்திருக்கிறீர்கள்;மேலும் அவர் பிதாவின் சமூகத்திலிருந்து பணிபுரிந்த மிகாவேல் போன்ற தூதன் என்கிறீர்கள்;மனிதனுக்குள் ஆவி ஆத்துமா சரீரம் என்பது இல்லை என்கிறீர்கள்;சுவிசேஷம் தேவையில்லை என்கீறீர்கள்;நரகம் இல்லை என்கிறீர்கள்;உயிர்த்தெழுதல் இல்லை என்கிறீர்கள்...இப்படி நீங்கள் முரண்பட்டு நிற்கும் காரியங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்;//

நீங்கள் பிடிக்கும் பிடிவாதம் பாரம்பரிய முறையாக இருக்கிறது!! இயேசு கிறிஸ்து மாமசத்தில் வரும் முன் சிருஷ்ட்டிக்கப்பட்டவர் என்பது வேதம் சொலுகிறது!! அடுத்தவர்களை சபிக்காமல் ஒழுங்காக வேதத்தை வாசித்தாலே சில விஷயங்கள் புரியும் (ஊழியர்களை உயர்த்தி பேசுவதால் மாத்திரம் இது முடியாது)!! மனிதன் தான் ஆத்துமா என்பதை வேதம் தெளிவாக சொல்லுகிறது, ஏன் உங்கள் சபையில் ஜெபவேளைக்கூட எங்கள் சபைக்கு ஆத்துமாக்களை தாரும் என்று ஜெபித்தால், உங்கள் சபைக்கு வருபவர்கள் மனிதர்களே தவிர, உங்களை போன்றோர் நம்பும் மனிதனுக்குள் இருக்கும் ஆத்துமா என்கிற ஒரு விஷயம் இல்லை!! வேதத்தை தெளிவாக படிக்கவும், ஆதாமிற்குல் ஜீவ சுவாசம் சென்றவுடன் அவன் "ஜீவாத்மா" ஆனான் என்றே இருக்கிறது தவிர, அவனுக்குள் ஆத்துமா வந்தது என்று ஒரு வசனமும் இல்லை!! மூன்று விஷயங்கலை ஒரு இடத்தில் போட்டிருப்பதால் மனிதனுக்குள் மூன்றும் இருக்கிறது என்று புரிந்துக்கொள்வது உங்களில் பரிதாப நிலையே அன்றி வேறு ஒன்றும் இல்லை!!

சுவிசேஎஷம் என்னவென்றே தெரியாதவர்கள் தயவு செய்து சுவிசேஷத்தை குறித்து பேசாதீர்கள்!! நீங்கள் எல்லாம், சுவிசேஷம் என்கிற ஒரே வார்த்தையை திரித்து அதினால் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் கூட்டம், அப்படி பட்ட கூட்டத்தை குறித்து தான் நாங்கள் எழுதுகிறோம், நீங்கள் அப்படி பட்டவர் தான் என்றால் சாரி, அது உங்களுக்கும் பொருந்தும்!!
உங்கள் போதனைகள் எல்லாம் பாரம்பரிய போதனைகள், சிலை வழிப்பாடு செய்யும் கத்தோலிக்க சபையிலிருந்து அப்படியே வந்த போதனைகளை பின் பற்றுவோர், தயவு செய்து வார்த்தைகளின் மேல் பிரியமாக இருக்கும் எங்களை குறை சொல்லும் தகுதி இழந்த பரிதாப நிலையில் இருக்கிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இயேசு கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டார் என்பதற்கு இந்த வசனம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது,

கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

இவர் அந்த பிதாவாகிய தேவன் அல்ல, மாறாக அவரின் தற்சுரூபமாக இருக்கிறவர், மேலும் இவர் சிருஷ்டிப்புகளுக்கு துவக்கமாக பெற்றெடுக்கப்பட்டவர்!! இவர் ஒருவரே தேவனின் நேரடியான சிருஷ்டிப்பு, மற்ற எல்லா படைப்புகளும், கிறிஸ்துவினால சிருஷ்டிக்கப்பட்டது!!

முந்தின பேறுமானவர் என்றால் ஆங்கிளத்தில் FIRSTBORN என்று உள்ளது!! அப்படி என்றால், முதலாவது பெற்று எடுக்கப்பட்டவர் என்று தான் அர்த்தம்!! தன் மூடத்தனமான தர்க்கங்களினால், தேவனை மகிமை படுத்துகிறோம் என்று முட்டாள்களின் கூட்டம் உண்மையில் தேவனை மூன்றாக காண்பித்து அவரை அவமதிக்கிறார்கள்!! வேதம் அவரை முந்தின பேறுமானவர் என்று தெளிவாக சொல்லும் போது இவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாததினால் வசனம் பொய்யாகி விடுமா!! இவர்கள் கத்தோலிக்க சபையின் பாரம்பரியமான கோட்பாடுகளினால் திருத்துவத்தை ஏற்றுக்கொண்டு இப்பொழுது அந்த உளையான சேற்றிலிருந்து வெளிவரமுடியாமல், அது தான் உண்மை (மனசாட்சிக்கு விரோதமாக தான்) என்று பொய் சொல்லி வருகிறார்கள்!! "தேவன் ஒருவரே" என்று பல வசனம் சொல்லியும், இந்த மூடர்களின் கூட்டம் எப்படி தான் தேவன் மூவர் என்று சொல்ல துனிகிறார்களோ!! இதில் மற்றவர்களை சபிக்கும் நாவு வேறு, தங்களை கிறிஸ்தவத்தை தாங்கும் சுமைதாங்கிகள் என்று நினைப்பு, தங்களை பரிசுத்தவான்கள் என்று நினைக்கும் இவர்கள் இவர்கள் விடும் எச்சரிப்பு சாபங்களினாலேயே இவர்களின் புத்தியும் இவர்களின் வாழ்க்கை முறை, இவர்களின் பண்புகள், இவர்கள் எந்த அளவிற்கு தேவனையும், கிறிஸ்துவையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெளிவாக வெளிப்படுகிறது!!

அரைவேக்காடான திருத்துவ கொள்கை இருப்பதால் தான் அதை "ஒரு ரகசியம்" என்று பிதற்றிக்கொண்டும் வருகிறார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

உயிர்தெழுதல் இல்லை என்று நம் தளத்தில் ஒரு வார்த்தையும் இல்லாதபோது நாம் அவ்வாறு 'போதிப்பதாக' எழுதியதில் இருந்தே இந்த அரைகுறைகளின் அவல நிலை புரிகிறது. 'மரணம்' குறித்து விவாதிக்க அழைத்தபோது ஓடி ஒளிந்துகொண்டவர்கள்தானே இந்த வேத விற்பன்னர்கள். இந்த அறிவிலிகளுக்குப் பிடிக்காத 'ஊழியர்களை' இவர்கள் விமர்சிக்கலாமாம் ஆனால் மற்றவர்கள் அதை செய்யக்கூடாதாம். உழைத்துச் சாப்பிட வக்கில்லாத பிச்சைக்காரர்களுக்கு எகத்தாளம் வேறு! ஒரு விஷயம் மட்டும் இவர்களால் உபயோகமாக நடக்கிறது, தங்களுடைய முட்டாள்தனங்களை இவர்களே நிரூபித்துக்கொண்டு பல வாசகர்களை நம் தளத்தைப் பார்க்க வைத்துக்கொண்டிருப்பதுதான் அது. இவர்களைப்போன்ற 'உளையான சேற்றிலிருந்து' பல வாசகர்கள் வெளியேறியிருக்கக்கூடும்....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நான் நினைத்ததும் "இறைவன்" தளத்தில் சில்சாமிற்கு கொடுத்த பதில் உள்ள பதிவு நீக்கப்பட்டு விட்டது!! அவர்கள் கோட்பாடுகள் மாறியவர்களாக இருந்தாலும் "சகோதரர்கள்" தான்!!

சகோதரன் என்றாலே, ஒரே கோட்ப்பாடு, ஒரே விசுவாசம் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அப்படி இல்லை! ஒருவர் தன்னை போல் கிறிஸ்தவத்திற்கு சுமைத்தாங்கி யாரும் இல்லை என்கிற மமதையிலும், இன்னோருவருக்கு தன்னிடம் வெளிப்படுத்தாமல் தேவன் ஒரு காரியமும் செய்ய மாட்டார் என்கிற நினைப்பு உள்ளது!! அவர்கள் அவர்களின் போக்கில் செல்லட்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஞானஸ்நானத்தில் ஒரு ஒற்றுமை இல்லாதவர்கள் தான் இன்றைய சபையார்!! ஒரே ஆவியில் இருக்கிறோம் என்று பிதற்றிக்கொண்டு ஞானஸ்நானத்தை குறித்து பலவிதமான் கோட்பாடுகளை அவர் அவர் சபைகளில் மாத்திரம் இல்லை, எங்கள் சபையில் ஞானஸ்நானம் எடுத்தால் "பரலோகம்" நிச்சயம் என்று விளம்பர சபைகளும் உண்டு!! இப்படி ஞானஸ்நானம் என்ன என்றே புரியாதவர்களுக்கு வழக்காட ஒரு வக்கீல் உண்டு அவருக்கென்று ஒரு தளம் உண்டு, அவர் பெரும்பாளும் அவருக்கு எதிர் கருத்து எழுதுவோரை சாபத்தை தந்து தான் தன்னை வெளிப்படுத்த பிரியப்படுவார்!! அவருக்கு ஒத்து போகிற கருத்துக்கள் மாத்திரமே "சரியான கோட்பாடு" என்கிற மமதையில் இருக்கிறார்!!

த‌ற்போது  நித்திய‌ ஜீவ‌ன் த‌ள‌த்தில் விவாதிக்க‌ப்ப‌டும் ஞான‌ஸ்நான‌ கோட்பாடு, ம‌றுப‌டியும் பிற‌ப்ப‌து போன்ற‌வைக‌ள் அவ‌ருக்கு என்ன‌வென்றே தெரிய‌ வாய்ப்பில்லை ஏனென்றால் அவ‌ர் பார‌ம்ப‌ரிய‌த்தை விரும்பும் "கிறிஸ்த‌வ‌ர்"!! ஆனால் ஏதோ ஒரு த‌ள‌ம் அவ‌ர் நினைக்கும் க‌ருத்து த‌ந்த‌தினால் அதுவே ச‌த்திய‌ம் என்று க‌ங்க‌ன‌ம் க‌ட்டிக்கொண்டு இருக்கிறார் போல்!! முத‌லில் த‌ங்க‌ளை ஆவிக்குரிய‌ ச‌பைக‌ள் ஒரே வித‌மான‌ ஞான‌ஸ்நான‌த்தை கொடுத்து ப‌ழ‌க‌ட்டும், பிற‌கு எங்க‌ள் க‌ருத்துக்க‌ளை விம‌ர்சிக்க‌லாம்!!‌



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard