வியாபாரிகளின் வியாபாரம் ஆரம்பித்து விட்டது. இதோ இந்த நூற்றாண்டின் சிறந்த தீர்க்கதரிசி என்று ஒரு குறிப்பிட்ட தளத்தில் பெயர் பெற்ற பால் தினகரனின் பத்திரிக்கையான "இயேசு அழைக்கிறார்" (நவம்பர் 2010) வியாபார செய்தி!!
ஒருவருக்காவது ஒரு வெகுமதி:
"....வங்குகிறவதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகீய இயேசு சொன்னார்....." (அப். 20:35) நாம் நவம்பர் மாதத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் தான்! அதைத்தொடர்ந்து புத்தாண்டு!
அப். 20:35 "இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்"
அதாவது பலவீனரைத் தாங்கவதற்கு தான் வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறது பாக்கியம் என்றும், அதர்கு எடுத்துக்காட்டாக பவுல் இருந்து கான்பிக்கிறார்!! ஆனால் இங்கு பெற்றுக்கொள்பவர்கள் (தினகரன் குடும்பத்தார்) அப்படிப்பட்ட பலவீனர்களோ!! என்னய்யா கூத்து நடத்துகிறார்கள் ஊழியம் என்கிற பெயரில்!!
இன்னும் பாருங்கள்,
இந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகயை முன்னிட்டு, 20,000 ஏழை குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி மகிழ்விக்க திட்டமிட்டிருக்கிறோம். ஆகவே, உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு உறவினர்களுக்கு புத்தாடை எடுக்கும் போது குறைந்தப்பட்சம் ஒரு ஏழைக் குழந்தைக்காவது கிரிஸ்துமஸ் புத்தாடைக்கு நன்கொடை வழங்கவும் (ஒரு ஏழைக்கு குழந்தையின் புத்தாடைக்கு ஒரு 400/ மட்டுமே)!!
இவர்கள் நிறுவனம் பெயர் சம்பாரிக்க ஏன் மக்கள் 400 ருபாய் கொடுக்க வேண்டும்!! இந்த உதவியை தங்கள் பக்கத்து வீட்டில் தங்கள் அருகாமையில் இருக்கும் ஏழைக்குழந்தைக்களுக்கு செய்யலாமே!! தன்னிடத்தில் இருப்பதை கொடுப்பது தான் முறை, வாங்கி கொடுப்பது யாருக்கு தெரியாது!! நோகாமல் நொங்கு தின்பது இதை தான் சொல்லுவார்களோ!! இது ஊழியமா வியாபாரமா!!
இன்றைய தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனத்தை பார்த்து சிரிப்பதா என்பது தெரியவில்லை!! ஒன்று மட்டும் நிச்சயம் வேதத்தில் உள்ளபடி கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பி தைரியமாக துனிச்சலாக தேவனின் நாமத்தை சொல்லிக் கொண்டு தீர்க்கதரிசினம் என்கிற பெயரில் தோன்றியதை எல்லாம் சொல்லி வருகிறார்கள்.
சமீபத்தில் இயேசு அழைக்கிறார் புத்தகத்தில் 2 தீர்க்கதரிசனங்கல் நிறைவேறிய செய்தி வாசித்தேன்
1. டெல்லியில் உள்ள ஜெப கோபுரத்தில் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தின் நிமித்தமாக, அயோத்தீ தீர்ப்பு வருவதற்கு முந்தைய நாள் "பரிசுத்த ஆவி" இவர்களுக்கு வெளிப்படுத்தியது என்னவென்றால், சமாதானமான தீர்ப்பு கிடைக்கும் என்று!!
2. காமன்வெல்த் போட்டிகள் நல்லபடியாக நிறைவேறும் என்றும்!!
இவைகள் தான் இன்றைய தீர்க்கதரிசிகள் கொடுக்கும் தீர்க்கதரிசனங்கள்!! தீர்க்கதரிசனம் என்றால் என்னவென்று இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும், அதற்கென்று வகுப்புகள் இருக்கிறதாம்!!
இயேசு விடுவிக்கிறார் தளத்தின் ஒரு தொடுப்பில், ஆசீர்வாதமான தமிழ்நாடு 2010 என்ற தலைப்பில் சில தீர்க்கதரிசனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:
//தேசத்துக்கு சேமத்தைக் கொடுப்பேன். 2.நாளா. 7:14
தேசத்தை சுதந்தரியுங்கள்
2004ம் ஆண்டு ஒரு நாள் சகோதரர் (அதாவது மோகன் சி. லாசரஸ்) தேவ சமுகத்தில் ஜெபித்த பொழுது, “இந்திய தேசத்தின் எழுப்புதலுக்காக, ஆசீர்வாதத்திற்காக என் பிள்ளைகள் வடித்த கண்ணீர் என் சமுகத்தை எட்டியிருக்கிறது. நான் இந்த தேசத்தை ஆசீர்வதிக்கப்போகிறேன். இந்த ஆசீர்வாதம் முதலாவது தமிழ் நாட்டிலிருந்து ஆரம்பமாகும். எனவே தமிழ் நாட்டைக் குறித்து அதிக கவனம் செலுத்து” என்று தேவன் திருவுளம்பற்றினார்.
தேவகட்டைளக்கு கீழ்படிந்ததின் விளைவுதான் ஆசீர்வாதமான தமிழ் நாடு 2010 தரிசனம். இந்த தரிசனம் நிறைவேறும் பொழுது தமிழ்நாட்டில்
1. ஆவிக்குரிய ரீதியில் ஆச்சரியமான மாற்றங்களை காணப்போகிறோம். எங்கும் கர்த்தருடைய பிள்ளைகள் பெருகியிருப்பார்கள். சபைகள் வளர்ந்து பெருகும். ஆயிரம் ஆத்துமாக்கள் உள்ள சபைதான் சிறிய சபை என்றழைக்கப்படும். 2. ஆளுகிறவர்கள், அதிகாரிகளின் சுபாவங்களில் வியத்தகு மாற்றங்களை காணப்போகிறோம். லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதி நேர்மையுள்ள, தூய்மையான நிர்வாகத்தை காணப்போகிறோம். 3. பொருளாதார நிலையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில், ஆசீர்வாதமான முன்னேற்றம் ஏற்படும். எல்லா நிலையிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்கும்.//
2010-ம் வருடம் முடிவதற்கு 1 மாதமே உள்ள நிலையில், இத்தீர்க்கதரிசனங்களில் ஏதேனும் நிறைவேறியுள்ளனவா என்பதை தள அன்பர்கள் ஆராய்ந்தறிந்து கூறும்படி வேண்டுகிறேன்.
இவை நிறைவேறாமற் போனாலும், இவை பொய்த் தீர்க்கதரிசனம் என யாரும் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் இவை நிறைவேறுவதற்கான சில நிபந்தனைகளையும் மோகன் சி.லாசரஸ் அறிவித்துள்ளார். அவை:
//இப்படிப்பட்ட மாற்றங்கள் வரவேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய காரியங்களையும் ஆவியானவர் கட்டைளயிட்டார்.
இப்படிச் சொல்லி, ஜெபயாத்திரை, வசன போஸ்டர்கள் அடிப்பது, ஜெபநடை மூலம் சுவிசேஷம் அறிவித்தல் போன்ற சில காரியங்களை கடந்த சில வருடங்களாக அவர் செய்து வருகிறார். அவற்றைக் குறித்து அவரே தந்துள்ள தகவல்கள்:
//தேவ கட்டைளையை நிறைவேற்றும்வண்ணம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 2005 பெப்ருவரி 16ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை 40 நாட்கள் ஆசீர்வாத ஜெபயாத்திரை (Blessing Prayer Journey) ஒழுங்கு செய்யப்பட்டது. இரண்டு பேருந்துகளில் 70 ஜெபவீரர்கள் தமிழ்நாடு முழுவதும் பட்டணங்கள், கிராமங்கள் தோறும் சென்று ஜெபித்தோம். இரவில் மாவட்டத் தலை நகரங்களில் எல்லாத் திருச்சபைகளைச் சேர்ந்த தேவப்பிள்ளைகளை கூட்டிச் சேர்த்து தமிழ்நாடு மற்றும் அந்த மாவட்டத்தின் ஆசீர்வாதத்திற்காக கண்ணீரோடு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. இதன் விளைவை உடனடியாக கண்கூடாக கண்டோம்.
அசுத்த ஆவிகளின் அரண்கள் ஆங்காங்கே அழிக்கப்பட்டது
எத்தனையோ முறை கடல் சீற்றம் வந்தும் சுனாமி வராமல் நம் தேசம் பாதுகாக்கப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகள் கண்டிராத அளவு தமிழ்நாடு முழுவதும் ஆசீர்வாதமான மழை பெய்தது, அணைகள் நிரம்பி வழிந்தது.
தமிழகத்தில் தொழில் வளம் பெருகியது
ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆசீர்வாதமான திட்டங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டன.
இப்படி எத்தனையோ காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தொடர்ந்து 2006ம் ஆண்டு 31 நாட்களும் 2007ம் ஆண்டு 28 நாட்களும் ஆசீர்வாத ஜெப யாத்திரையை நிறைவேற்றினோம். இதன் விளைவாக தமிழ் நாடு, மற்ற மாநிலங்கள் ஆச்சரியப்படகூடிய அளவில் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது.
தேசத்தை வசனத்தால் நிரப்புங்கள் என்ற இரண்டாவது கட்டளையை நிறைவேற்ற இலட்சக்கணக்கான கைப்பிரதிகள் அச்சடித்து ஊழியம் செய்கிற தேவப்பிள்ளைகளுக்கு வழங்கியிருக்கிறோம். மேலும் ஈஸ்டர் பண்டிகையை திருவசன பண்டிகையாக அனுசரித்து தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் வசன போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டியிருக்கிறோம். ஆயிரக்கணக்கான வசன டிஜிட்டல் போர்டுகள் தமிழகமெங்கும் வைக்கப்பட்டது.
தேசத்தை சுதந்தரியுங்கள் என்ற பிரதான கட்டளையை நிறைவேற்ற தமிழகமெங்கும் மாவட்டந்தோறும் இயேசுவின் சேனை உருவாக்கப்பட்டு ஜெபநடை செய்து சுவிசேஷம் அறிவிக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இயேசுவின் சேனையாக பயிற்சி பெற்ற ஜெப வீரர்கள் தங்களுடைய மாவட்டங்களில் ஒவ்வொரு ஞாயிறும் கூட வர கெத்சமனே ஜெபமையம் உருவாக்கப்பட்டு ஜெபிக்கவும், ஊழியம் செய்யவும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆத்துமாக்கள் திரள் திரளாக மனந்திரும்பி வரும்பொழுது, அவர்களை பராமரிக்கிற, சத்தியத்திற்குள் வழிநடத்துகிற பொறுப்பு திருச்சபையினுடையது. எனவே மாவட்டங்கள் தோறும் போதகர்களுக்கென்று சபை வளர்ச்சி போதகர்கள் கருத்தரங்கு நடத்தி அவர்களின் தரிசனத்தின் எல்லையை விரிவடையச் செய்து வருகிறோம். இவ்வூழியத்தில் மூத்த போதகர் பாஸ்டர் ரத்தினம்பால் அவர்கள் மிகவும் உறுதுணையாக உள்ளார்கள்.//
மேலே கூறப்பட்ட காரியங்களைச் செயல்படுத்துவதற்கு கணிசமான பணத்தை விசுவாசிகளிடம் வசூலிக்க அவர் தவறவில்லை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மோகன் சி.லாசரஸ் கூறியுள்ள தகவல்களின்படி தமிழகம் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதா? அல்லது அவரது தகவல்கள் பொய்யா?
தள அன்பர்கள் தாங்கள் அறிந்ததைக் கூறும்படி வேண்டுகிறேன்.
-- Edited by anbu57 on Monday 29th of November 2010 07:25:32 PM
லூக் 18:8 ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
இந்தியவை கிறிஸ்துவுக்காக சுதந்தரிப்போம், தமிழ்நாட்டை சபைகளால் நிறப்புவோம், போன்ற வார்த்தைகள் காசு பறிக்கும் வேட்டையே தவிர, தேவனின் சித்தமே கிடையாது. இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வரும் போது, விசுவாசத்தை காண்பாரோ என்கிறார் என்றால் என்ன அர்த்தம்!!
இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று மாற்றிக்கொண்டு இருப்பது கிறிஸ்தவமே அல்ல என்பது தான் அர்த்தம்!! இது உண்மையான விசுவாசம் அல்ல என்பது தான் அர்த்தம்!! ஒன்றான மெய் தேவனை திரியேக தேவன் என்று வழிப்படுவது விசுவாசம் இல்லை என்பதே அர்த்தம்!! அவர் சொன்ன பிதாவை மறந்து அவரையே பிதா என்று சொல்லுவது விசுவாசம் இல்லை என்பது தான் அர்த்தம்!!
இந்த தேசத்தை சுதந்தரிப்போம், தமிழ்நாட்டை மாற்றுவோம் என்றும், தமிழக்கத்தில் மேல் மாத்திரம் அக்கறையாக இருங்கள் என்று கிறிஸ்து இவர்களிடத்தில் சொன்னது எல்லாம் இவர்கள் விடும் புறுடா, கட்டு கதை, வியாபர தந்திரமே!! இவர்கள் ஜெப கோபுரங்கள், ஆலயங்கள், இன்னும் என்மெல்லாம் கட்டி தங்கள் பெயர்களை நிலை நாட்டும் உலகத்தார் போல் இருக்கும் முயற்சியாகும்!!
சங்கீதம் 33:5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
சங்கீதம் 33:14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.
தேவன் இப்படி எல்லோர் மேலும் தான் கண்ணோக்கமாய் இருக்கிறார், அவரின் காருணியத்தினால் பூமி நிறைந்திருக்கிறது, உலகத்தில் உள்ள குடிகள் எல்லாம் கர்த்தருடையது என்று சொன்ன அவர்,
மோஹன் சீ லாசரஸிடம்,
"2004ம் ஆண்டு ஒரு நாள் சகோதரர் (அதாவது மோகன் சி. லாசரஸ்) தேவ சமுகத்தில் ஜெபித்த பொழுது, “இந்திய தேசத்தின் எழுப்புதலுக்காக, ஆசீர்வாதத்திற்காக என் பிள்ளைகள் வடித்த கண்ணீர் என் சமுகத்தை எட்டியிருக்கிறது. நான் இந்த தேசத்தை ஆசீர்வதிக்கப்போகிறேன். இந்த ஆசீர்வாதம் முதலாவது தமிழ் நாட்டிலிருந்து ஆரம்பமாகும். எனவே தமிழ் நாட்டைக் குறித்து அதிக கவனம் செலுத்து” என்று தேவன் திருவுளம்பற்றினார்."
இப்படி சொன்னது ஆச்சரியமான ஒன்று தான்!! என்னமோ தேவன் இவர்களுக்கு ஒரு பொம்மை மாத்ரியும், அவரின் வல்லமை தெரியாமல் விளையாடும் இவர்கள் அவரின் வல்லமையை அறிந்துக்கொள்ளும் நாட்கள் வருகிறது!!