வேதத்தில் பல விஷயங்கள் உள்ளது!! கிறிஸ்தவர்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்றால் நமக்கு ஆதாயமாக அல்லது சுலபமாக தோன்றுவதை அது யாருக்கு சொல்லியிருந்தாலும், அதை "சுதந்தரித்து" கொள்கிறோம், அதாவது, இந்த வசனம் எனக்கு சொல்லப்பட்டது என்று சொல்லுகிறோம்!! எடுத்துக்காட்டாக,
1 கொரி 9:16. சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.17. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
பவுலுக்கு சொல்லப்பட்ட இந்த வசனத்தை வைத்துக்கொண்டு நாங்களும் ஊழியர்கள் தான் எங்களுக்கும் சுவிசேஷம் சொல்லுவது 'எங்கள்' மேல் விழுந்த கடமையாக இருக்கிறது என்றும், சுவிசேஷம் சொல்லாவிட்டால் எனக்கு ஐயோ என்று புலம்பும் ஊழியர்கள் இருக்கிறார்கள்! பவுல் இந்த இடத்தில் இதை சொல்லுவதை தன்னை குறித்து மேன்மை பாராட்ட அல்ல, ஆனால் இன்றைய ஊழியர்கள் தாங்கள் "வானத்திலிருந்து அழைப்பு பெற்றவர்கள்" என்று மேன்மைப்பாராட்டவே இந்த வசனம் எங்களுக்கும் தான் என்று புலம்பி வருகிறார்கள்!!
இதை சொல்லுகிறவர்கள், இதை சொல்லமாட்டார்களே,
I தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
I தீமோத்தேயு 1:16 அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.
இந்த வசனம் மாத்திரம் "வானத்து அழைப்பு பெற்ற" நம் ஊழியர்கள் சொல்ல மாட்டார்கள், இது பவுலுக்குறியது என்று மழுப்புவார்கள், ஏனென்றால் நாங்கள் தான் பரிசுத்தவான்களாச்சே என்கிற மேட்டிமை அவர்களுக்கு. தன்னை பாவி என்று ஒப்புகொள்வதில் சங்கட்டம்!! ஏனென்றால் மற்றவர்களை பாவிகள் என்று சொல்லி பழகியிருக்கும் நாக்கு தன்னை பாவி அதுவும் பிரதான பாவி என்று சொல்ல எத்தனிக்காதே!! இது மட்டும் பவுலுக்கு உரியது, ஆனால் இதற்கு முன்பு சொல்லப்பட்ட அதாவது சுவிசேஷம் சொல்லுவது என் கடமையாக இருக்கிறது என்பது மாத்திரம் இவர்களிடத்தில் வானத்திலிருந்து இறங்கி வந்து சொல்லிவிட்டு போனார்களாம்!!
அப்படியே, மத்தேயு 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
இது இயேசு கிறிஸ்து தன் அப்போஸ்தலர்களிடத்தில் செய்ய சொன்னதாகும்!! போய் சகல ஜனங்களுக்கும் "ஊழியர்கள்" ஆக்குங்கள் என்று சொல்லவில்லை, சகல ஜாதிகளையும் "சீஷர்கள்" ஆக்குங்கள் என்று தான் கட்டளையிட்டார்!! சீஷர் என்றாலே பின்பற்றுபவன் என்று தான் அர்த்தம், நடத்தி செல்பவன் கிடையாது என்பதை நம் "ஊழிய பேருமக்கள்" புரிந்துக்கொள்ளட்டும்!!
யோவான் 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
'இவர்கள்' அப்போஸ்தலர்கள் ஆவார்கள், இன்றைய ஊழியக்காரர்கள் அல்ல!! இந்த அப்போஸ்தலர்களின் வார்த்தைகளால் தான் கிறிஸ்து இயேசுவை விசுவாசிப்பதற்காக அவரே பிதாவினடத்தில் ஜெபிக்கிறார் (திருத்துவ குழப்பம், அவரே பிதா, அவரே கிறிஸ்து, அவரே அவரிடத்தில் ஜெபிக்கிறார்!!)!! அந்த அப்போஸ்தலர்களின் வார்த்தைகளை தான் நாம் வேதத்திலிருந்து அறிந்துக்கொள்கிறோம், அதினால் பலன் பெற்று கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறோம்!! ஊழியர்கள் கிறிஸ்துவை போதிப்பதை தவறாக சொல்லவில்லை, ஆனால் பவுல் சொல்லுவது மாதிரி, இப்படி சொல்லாமல் போனால் எங்களுக்கு ஐயோ என்று புலம்பவுது அர்த்தமற்றது!! தானாக விரும்பி இந்த 'தொழிலிலுக்கு' வந்து விட்டு, ஏதோ வானத்திலிருந்து தேவத்தூதன் வந்து இவர்களிடம் இதை கெஞ்சி கேட்டு கொண்டதால் இவர்கள் ஊழியம் செய்கிறார்கள் என்பது போன்ற பேச்சுக்கள் அர்த்தமற்றது!!
சீஷர்கலான அனைவருமே, அப்போஸ்தலர்கள் மூலமாக நம் கைகளுக்கு வந்திருக்கும் வேத புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!! இதில் யாருக்கும் முழு நேரம் பகுதி நேரம் ஊழியம் என்று தனியாக 'அபிஷேகம்" செய்து அனுப்பவில்லை!! வேதத்தில் இல்லாததை எப்படி தான் துனிச்சலாக சொல்லுகிறார்களோ!!
//1 கொரி 9:16. சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.17. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
பவுலுக்கு சொல்லப்பட்ட இந்த வசனத்தை வைத்துக்கொண்டு நாங்களும் ஊழியர்கள் தான் எங்களுக்கும் சுவிசேஷம் சொல்லுவது 'எங்கள்' மேல் விழுந்த கடமையாக இருக்கிறது என்றும், சுவிசேஷம் சொல்லாவிட்டால் எனக்கு ஐயோ என்று புலம்பும் ஊழியர்கள் இருக்கிறார்கள்! பவுல் இந்த இடத்தில் இதை சொல்லுவதை தன்னை குறித்து மேன்மை பாராட்ட அல்ல, ஆனால் இன்றைய ஊழியர்கள் தாங்கள் "வானத்திலிருந்து அழைப்பு பெற்றவர்கள்" என்று மேன்மைப்பாராட்டவே இந்த வசனம் எங்களுக்கும் தான் என்று புலம்பி வருகிறார்கள்!!
இதை சொல்லுகிறவர்கள், இதை சொல்லமாட்டார்களே,
1 தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
1 தீமோத்தேயு 1:16 அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.
இந்த வசனம் மாத்திரம் "வானத்து அழைப்பு பெற்ற" நம் ஊழியர்கள் சொல்ல மாட்டார்கள், இது பவுலுக்குரியது என்று மழுப்புவார்கள். ஏனென்றால் நாங்கள் தான் பரிசுத்தவான்களாச்சே என்கிற மேட்டிமை அவர்களுக்கு. தன்னைப் பாவி என்று ஒப்புகொள்வதில் சங்கடம்!! ஏனென்றால் மற்றவர்களைப் பாவிகள் என்று சொல்லிப் பழகியிருக்கும் நாக்கு, தன்னைப் பாவி அதுவும் பிரதான பாவி என்று சொல்ல எத்தனிக்காதே!! இது மட்டும் பவுலுக்கு உரியது, ஆனால் இதற்கு முன்பு சொல்லப்பட்ட, அதாவது சுவிசேஷம் சொல்லுவது என் கடமையாக இருக்கிறது என்பது மாத்திரம் இவர்களிடத்தில் வானத்திலிருந்து இறங்கி வந்து சொல்லிவிட்டு போனார்களாம்!!//
தகுந்த வசனங்களைக் கொண்டு, இன்றைய ஊழியர்களின் முரண்பட்ட நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள், சகோ.பெரியன்ஸ் அவர்களே!
அப்போஸ்தலன் பவுல், தன்னை விஷப்பூச்சிக் கடித்தபோது, வெறுமனே கையை உதறிவிட்டு தன் வேலயைத் தொடர்ந்து செய்தார். ஆனால் இன்றைய (அற்புத சுகம் தரும்) ஊழியர்கள் யாராவது அப்படிச் செய்வார்களா? விஷப்பூச்சிக் கடித்துவிட்டால் பட்டணத்திலேயே நிபுணரான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்கல்லவா ஓடுவார்?
சற்று தலைவலி காய்ச்சல் வந்தால்கூட மருத்துவர்களிடம் ஓடுகிற இவர்கள் எங்கே? மழையிலும் வெயிலிலும் கடலிலும் பட்டினியாக/நிர்வாணமாகக் கிடந்த பவுல் எங்கே?
சகோ அன்பு அவர்களே, கோவையில் டிவைன் ஹீலிங் சென்டெர் (Divine Healing Centre) நடத்தும் ஒருவர் வெளிநாட்டு மருத்துவமனையில் தான் தன் குடும்பத்தில் இருந்தவருக்கு (இப்பொழுது அவர் மரித்து விட்டார்) மருத்துவம் பார்த்தார், இப்பொழுது தனக்கு ஹோமியோபதி மருந்துகளையும் எடுத்துக்கொண்டு இருக்கிறாரே!! எங்கே போச்சோ அற்புத சுகம்!! இதை தான் தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்களோ!!
நான் ஆஸ்பத்ரிக்கு செல்வதே கிடையாது என்று சொல்லும் பெந்தகோஸ்தே பாஸ்டர்மார்கள் உண்டு!! சமீபத்தில் நாகர்கோவில் சென்ற போது இப்படி பட்ட ஒரு பாஸ்டரை சந்திக்க நேர்ந்தது!! வேத சத்தியங்களை பகிர்ந்துக்கொண்டு இருந்தேன்!! அவர், நான் ஆஸ்பத்ரிக்கு செல்வதே கிடையாது என்றார்!! நோய் உள்ளவனுக்கு மருத்துவர் தேவை என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறாரே!! சரி ஆஸ்பத்ரிக்கு போவதில்லை, ஆனால் கண்களுக்கு ஏன் கண்ணாடி மாட்டி கொள்கிறீர்கள்!! அதுவும் ஆஸ்பத்ரி சார்ந்தது தானே என்றால் பதில் இல்லை!!
இப்படி ஆஸ்பத்ரி போவாததை எல்லாம் ஒரு பெருமையான விஷயம் என்று பெருமை பாராட்டுகிறார்களே!! ஆனாலும் அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு மருத்துவமனை அனுக வேண்டியதாக தானே இருக்கிறது!! பெரிய பெரிய அற்புதம் செய்தோம் என்று மார்த்தட்டும் ஊழியர்கள் (பெந்தகோஸ்தே பாஸ்டர்கள் உட்பட தான்) எப்படி எல்லாம் ஆஸ்பத்ரிக்கு போய் வந்தார்கள் என்று எனக்கு தெரியும்!! ஏன் இப்படி ஒரு கள்ள போதனை என்று தெரியவில்லை!!