kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உம்முடைய ராஜ்யம் வருவதாக‌!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
உம்முடைய ராஜ்யம் வருவதாக‌!!


மரித்தவுடன் மனிதர்கள் பரலோகத்திற்கும் நரகத்திற்கும் தான் போவார்கள் என்று பிரசங்கிக்கும் போதகர்கள், "தேவ மனுஷர்கள்" போன்றோர் என் கேள்விக்கு பதில் தருவார்களா?

மத். 6:10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

இது எந்த ராஜியத்தை குறித்து இயேசு கிறிஸ்து ஜெபிக்க சொல்லி தருகிறார்! இந்த ராஜ்யம் வந்து விட்டதா (கிறிஸ்துவின் சபையார் சொல்கிறார்கள், வந்து விட்டது என்று)? வந்து விட்டது என்றால் இந்த பூமியில் பரமண்டலத்திலே செய்யப்படுகிற தேவனின் சித்தம் நிறைவேறுகிறதா? "நீதி வாசமாயிருக்கும்" பூமி வந்து விட்டதா (2 பேது 3:13)?
இல்லை இந்த ராஜியம் வரவில்லை என்போர், பரலோகத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பிய பிறகு, யார் தான் கிறிஸ்து கேட்க சொன்ன இந்த ராஜ்யத்திற்கு வர இருக்கிறார்கள்!?

பதில் உண்டா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இப்பவும் அவருடைய சித்தம்மட்டுமே நடக்கிறது. நாம் கவனிக்க வேண்டிய வார்த்தை "பரலோகத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக" என்பதுதான். ஏனென்றால் பரலோகத்தில் தீமை இல்லை, மரணம் இல்லை, நன்மையும், சந்தோஷமும் மாத்திரமே உண்டு. எல்லா பரலோக ஜீவிகளும் தேவாதிதேவனுடைய அன்பின் ஐக்கியத்தில் இசைந்திருப்பார்கள்.

அதுபோல,

அவருடைய இராஜ்ஜியம் வரும்போது....

பூமியிலேயும்...

மரணமில்லாமல்,

துக்கம் என்பது அறவே இல்லாமல்(ஏனென்றால் யாரும் எவரையும் எதையும் இழக்கப்போவதில்லை)

தேவன் யாரென்பதையும்,
அவருடைய இரட்சிப்பின் திட்டத்தையும் பூரணமாக அறிந்துகொண்டு தேவனையும், தேவகுமாரனையும் போற்றுவார்கள்.(போற்றுவோம்)

எதிர்நோக்குவோம்,

அந்த சந்தோஷத்துக்காக‌...
உயிர்த்தெழுதலின் மேன்மைக்காக....

தேவனுக்கு நன்றி கூறுவோம்....

வாழ்நாள்முழுவதும்.



-- Edited by soulsolution on Friday 12th of November 2010 08:20:51 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard