2 கொரி 12ல் சொல்லப்பட்ட பகுதியில் பவுல் மூன்றாம் வானத்திற்கு எடுத்து செல்லப்பட்டார் என்று இருக்கிறது!! உண்மையிலே மூன்றாம் வானம் என்பது வானம் தானா!? வானத்தில் முதலாம் வானம், இரண்டாம் வானம், மூன்றாம் வானம் என்கிற பிரிவு இருக்கிறதா! தேவன் இயற்கைக்கு விரோதமாக இல்லை!! வானம் என்பது நம் பூமியின் தரைமட்டத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது!! இதில் மூன்றாம் வானம், இரண்டாம் வானம் என்கிற எல்லைகள் கிடையாது!! அப்படி என்றால் பவுல் எங்கு சென்று வந்ததாக எழுதுகிறார்!!
3ம் வசனம் சொல்லுகிறது, அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டான் என்று!! வானத்தில் பரதீசா!? பரதீசு என்கிற பார்சீக வார்த்தைக்கு அர்த்தம் "தோட்டம்"!! இன்றைய நவீன போதகர்கள் இந்த அர்த்தம் தெரிந்துக்கொண்டு தான் பரலோகம் போன போது அங்கு கட்டிடம் பார்த்தோம், தோட்டம் பார்த்தோம் என்கிறார்களோ!!
ஆனால் இங்கும் இன்னும் ஒன்று நடக்கிறது, "மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டான்"!! அதாவது மனிதர்கள் இது வரை அது எந்த பரதீசு என்பதை அறியாத ஒன்றாக இருக்கிறது, மனிதர்கள் மத்தியில் இது வரையில் அப்படி ஒரு இடம் சொல்லப்படவில்லை, பேசப்படவில்லை என்று சொல்லுகிறார்!! ஆனால் வானத்திற்குள் எடுத்து கொள்ளப்பட்டார் எலியா என்பது அனைவரும் பேசியது தானே!! அப்படி என்றால் பவுல் இங்கு உண்மையாகவே வானத்திற்கு தான் எடுத்துக்கொள்ளப்பட்டாரா!?
இல்லை, இந்த பகுதி ஒரு தரிசனத்தை குறித்தான பகுதி! இந்த தரிசனத்தில் பவுல் காண்பது 'இனி வரப்போகும் பூமி"யை தான்!!
தொடரும்.........
இந்த பதிவு சகோ அன்பு பதில் தந்துக்கொண்டு இருக்கும், பதிவிற்கான பதிவு........
பவுலுக்கு கான்பிக்கப்பட்ட தரிசனம் இனி வரவிருக்கும் உலகத்தை குறித்தான ஒரு தரிசனம். வானம் என்பது உலகத்தை குறிக்கும். முதலாம் உலகம் நோவா காலத்து ஜலப்பிரலயம் வரையிலும், அதன் பின் நாம் தற்போது இருக்கும் "பொல்லாத பிரபஞ்சம்" இரண்டாம் உலகமும் (கலா. 1:4), "நீதி வாசமாக இருக்கும் மூன்றாம் உலகமும் (2 பேது 3:13)". இந்த மூன்றாம் உலகமாகிய கிறிஸ்துவின் ராஜியத்தை தான் பவுலுக்கு தரிசனமாக கான்பிக்கப்பட்டது! இந்த ராஜியத்தை குறித்து மனிதர்கள் அன்றும் சரி இன்ரும் சரி அறியாதவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் வானத்தை குறித்து மனிதர்கள் அறிந்து இருந்தார்கள்!! 2 கொரி 12:3. அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
இது (அது) வரையில் மனிதர்கள் இப்படி பட்ட ஒரு இராஜியத்தை குறித்து கேட்டதாகவோ, பேசியதாகவோ இல்லை என்பதே இந்த வசனம் சொல்லுகிறது. அப்படி பட்ட ஒரு உன்னதமான ராஜியத்தின் தரிசனத்தை பவுல் பெருகிறார்!
இதை விட்டு விட்டு பவுல் மூன்றாம் வானத்திற்கு போனார், நான் சியோனுக்கு போய் தேவனை சந்தித்து வந்தேன், என்னை நரகத்திற்கு கூட்டிகிட்டு போனார் என்று வித விதமாகவும் கலர் கலராகவும் தோன்றிய படி புருடா விடுவதை நம் "தேவ மனுஷர்"களிடத்தில் தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்!!
யோவான் 11:43. இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
இயேசு கிறிஸ்துவின் கட்டளையை அடுத்து லாசரு வந்த இடம் பரலோகமோ/ பரதீசோ/ நரகமோ/ உத்தரிக்கஸ்தலமோ இல்லை. மாறாக "ஹேடஸ்" என்கிறதான கல்லறையிலிருந்து தான் லாசரு வெளியே வருகிறான்!!
அவன் வெளியே வரும் போது எந்த நிலையில் அவன் உடல் துனியால் சுற்றி வைக்கப்பட்டிருந்ததோ அப்படியே தான் வெளியே வருகிறான்!!
இன்னும் ஒரு லாசரு "ஆபிரகாமின் மடி"க்கு எடுத்து செல்லப்பட்டதாக லூக் 16ல் உள்ளது! அது ஒரு தனி உவமை! தாங்கள் சொல்லியது போல் இரு லாசருக்களூம் இருந்தது "பரதீசில்" இல்லை!! பரதீசு என்கிற ஒரு இடம் பூமி முந்திய சீருக்கு திரும்பும் போது ஏற்ப்படப்போகும் ஒரு இடமாகும்!! (ஏசா 35) ஆதாம் ஏதேம் என்கிற "தோட்டத்தில்" வைக்கப்பட்டான்!! தோட்டத்தின் பார்சீக வார்த்தை தான் "பரதீசு"
மரித்த இயேசு கிறிஸ்து 3 நாட்கள் கல்லறையில் மரண நித்திரையில் இருந்தார், அவரே அன்று பரதீசிக்கு போகவில்லை, பிறகு எப்படி கள்ளனை கூட்டி போக முடியும், அதுவும் அவர் சொன்ன அன்றே!! முன்றாம் நாள் பிதாவினால் உயிர்ப்பிக்கப்பட்டு 40 நாள் மட்டும் தன் அப்போஸ்தலர்களை ராஜியத்தைக் குறித்தான காரியங்களையும், பயந்து இருந்த அவர்களை திடப்படுத்திக்கொண்டும் இருந்தார், அதன் பின்பு அவர் பிதாவிடத்திற்கு சென்று விட்டார்!!
கள்ளனை அன்றே கூட்டி போகிறேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் இந்த வாக்கியம் நிறைவேறியது என்று ஒரு அப்போஸ்தலனாவது அல்லது அவரே கூட தன் அப்போஸ்தலர்களிடத்தில் சொல்லியதாக இல்லையே!!
ஆனால் அந்த கள்ளன் பரதீசியில் வருவான், அது தான் தேவனின் ராஜியம்!!
என்னுடன் நீ பரதீசிலிருப்பாய் என்று இன்றே சொல்லுகிறேன் என்பதை தான் நம்மவர்கள் திரித்து எழுதியிருக்கிறார்கள்!! மூன்று நாட்கள் மரித்த நிலையில் இருந்த கிறிஸ்துவினால் அன்றே எப்படி பரதீசியில் இருந்திருக்க முடியும்!! அவர் அன்றே பரதீசியில் இருந்திருந்தால் அவர் மரித்தார் என்று சொல்லவே முடியாது, வேதம் சொல்லுவதை நம்புவதா, இல்லை மனித போதனைகளை நம்புவதா!!
அந்த கள்ளன் கிறிஸ்து இயேசு கொண்டு வருகிற தேவனின் ராஜியத்தில் இருப்பான், அவன் மாத்திரம் இல்லை, கிறிஸ்துவின் சாயலான அவரின் சபையை தவிர, மற்றவர்கள் அனைவருமே கிறிஸ்து அன்றே அந்த கள்ளனிடத்தில் சொன்ன அந்த பரதீசியில் இருப்பார்கள்!!
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். II கொரிந்தியர் 12:3 அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
இன்று பரலோகத்திற்கு திடீர் திடீர் என்று விஸிட் அடித்து வரும் மூத்த அப்போஸ்தலர்கள், ரெவெரெண்டுக்கள், ஊழியர்கள், இந்த வசனங்களில் இருக்கும் பரதீசை பரலோகம் என்று நினைத்துக்கொண்டு பேசி வருகிறார்கள்!!
பரதீசு என்கிறது ஒரு பழைய பாரசீக வார்த்தை!! அர்த்தம்:
3857 parádeisos – an ancient Persian word meaning "enclosure, garden, park."
மேலும் பரலோகத்தில் யாரும் இல்லாத போது பவுல் மாத்திரம் பரதீசுக்குள் (இந்த ஊழியர்கள் சொல்லுவது போல் பரலோகத்திற்குள்) எப்படி பட்ட வார்த்தைகளை கேட்டிருப்பார்!! இவர்களின் பரதீசு என்கிற பரலோகத்தில் தான் யாரும் இல்லையே!!
இந்த வசனத்தை இப்படி புரிந்துக்கொள்ளலாமே!! பவுல் என்கிற அந்த மனிதனுக்கு தேவன் காண்பித்த தரிசனம் வரயிருக்கும் ராஜியத்தின் தரிசனமே!! இன்று பிசாசின் ஆளுகையில் இருக்கும் இந்த பொல்லாத பிரபஞ்சம் இல்லாமல், தேவனின் ராஜியம் என்கிற அந்த பரதீசு அன்றைய மனிதர்களில் யாரும் பேசாத ஒரு விஷயமாக இருந்தது!! அந்த ராஜியத்தின் ஒரு சின்ன காட்சியையே பவுலுக்கு தரிசனம் கிடைத்திருக்கிறது, பவுல் என்கிற அந்த விசேஷித்த மனிதனுக்கு!! பரதீசு தேவனின் வரயிருக்கும் ராஜியமே, அது பரலோகம் கிடையாது!! பரலோகம் என்று மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் அந்த வார்த்தையும் அதன் அர்த்தமும்:
3772 ouranós – heaven (singular), and nearly as often used in the plural ("heavens"). "The singular and plural have distinct overtones and therefore should be distinguished in translation (though unfortunately they rarely are)" air, heaven, sky.
Perhaps from the same as oros (through the idea of elevation); the sky; by extension, heaven (as the abode of God); by implication, happiness, power, eternity; specially, the Gospel (Christianity) -- air, heaven(-ly), sky.
பரதீசை பரலோகம் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்!!
அப்படியே தான் லூக்காவில் உள்ள வசனமும்!! அந்த கள்ளன் அன்றே பரலோகத்திற்கு போகவில்லை, ஏனென்றால் கிறிஸ்து இயேசுவே 40 நாட்கள் சென்றே பரலோகத்திற்கு ஏறினார் என்கிறது வேதம், அப்படி இருக்க அந்த கள்ளன் எப்படி அன்றே கிறிஸ்து போகாத இடத்திற்கு போக வாய்ப்பு இருக்கிறது!! மேலும் அந்த கள்ளன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகவோ, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றதாகவோ, அல்லது கிரியையினால் நீதிமானாகவில்லை, விசுவாசத்தினால் நீதிமானாகவில்லை!! இப்படி இத்துனை விஷயங்கள் கள்ளனின் பரலோக பயனத்திற்கு விரோதமாக இருக்கும் போது, இந்த வசனத்தை இப்படி புரிந்துக்கொண்டால் மாத்திரமே சரியாக இருக்க வேண்டும்:
அந்த கள்ளன் வரவிருக்கும் ராஜியத்தை கேட்டிருக்கலாம் (அவன் கேட்டானா என்பதற்கு யாராவது வசனம் கேட்டால் எனக்கு தெரியாது), அந்த கள்ளன் கேட்பதே, நீர் உம்முடைய ராஜியத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும் என்றான்!!
லூக்கா 23:42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
கிறிஸ்துவு இன்னும் அந்த ராஜியத்திற்கு வரவில்லை, அவர் 40ம் நாள் பரலோகம் ஏறி சென்றிருக்கிறார், அவர் திரும்பி வரபோவது இந்த பூமியை ஆளுகை செய்யும் ராஜாவாக, அப்படி என்றால் அந்த கள்ள கேட்டுக்கொண்ட படி அவர் இந்த ராஜியத்தில் வரும் போது தான் தன்னை நினைத்துக்கொள்ள சொல்லியிருக்கிறான்!! கிறிஸ்துவும் அதையே தான் பதிலாக சொல்லியிருக்கிறார்,
நான் பரதீசுக்கு (தேவனின் ராஜியத்திற்கு) வரும் போது (போகும் போது அல்ல) நீயும் அங்கே இருப்பாய் என்று இன்றே உனக்கு சொல்லுகிறேன் என்பதை தான் இப்படி எழுதி குழப்பியிருக்கிறார்கள்!! அதற்கு ஒரே காரணம் பரதீசை பரலோகம் என்று நினைத்திருப்பதால் மாத்திரமே!! பரலோகத்திற்கு ஏறி சென்ற கிறிஸ்து இனி வர இருப்பது ராஜாவாக!!
அப்போஸ்தலர் 3:19. ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், 20. உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். 21. உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.