kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐசுவரியவான் லாசரு உவமை!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஐசுவரியவான் லாசரு உவமை!!


லூக் 16:19  முதல் சொல்லப்பட்ட இந்த ஐசுவரியவான் லாசரு உவமையின் மெய்யான அர்த்தத்தை விட்டு விட்டு இன்று ஆவிக்குரிய வியாபாரிகள் தந்திரமாக ஜனங்களை மிரட்டவும் பயப்படுத்தும் உவமையாக மாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்!! இந்த உவமையை தியானித்து தான் பலர் பரலோகம் நரகம் ஆகியவைகளை தரிசனமாகவோ, நேரிலோ போய் வந்திருக்கிறார்கள்!! சிலர் இரயில் பயனத்தின் போதும், சிலர் வீட்டில் ஜெபித்துக்கொண்டு இருக்கும் போதும், சிலர் தூங்கிக்கொண்டு இருக்கும் போதோ இப்படி பட்ட இடங்களுக்கு வானத்திலிருந்து வந்த தூதர்கள் மூலமாகவோ, ஏன் பல "பரிசுத்தவானகளை" இயேசு கிறிஸ்துவே வந்து கூட்டி கொண்டு இந்த இடங்களை காண்பித்து வருவதும் உண்டே!! இப்படி பட்ட மோசடிக்காரர்களிடமோ அல்லது அவர்களின் அனுதாபிகளாக இந்த இடங்களுக்கு போய் வர முயற்சிக்கும் பலர் இந்த தளத்தை பார்வையிட்டு செல்வது உண்டு, யாராவது எனது முக்கியமான ஒரு சில சந்தேகங்களை இத்தளத்திலோ அல்லது அவர்கள் பின் பற்றும் வேறு தளங்களிலோ பதில் தர முடியுமா!?

1. ஒருவன் பரலோகம் செல்ல வேண்டுமென்றால் சீல் வடியும் காயங்களுடன் ஒரு ஐசுவரியான் வீட்டு வாசலில் படுத்து கிடந்தால் போதுமா!! விசுவாசமோ கிரியைகளோ, அல்லது கிறிஸ்துவை ஏற்று ஞானஸ்னானம் போன்ற சம்பவங்களில் ஈடுப்படாமல் இருந்தால் கூட போதுமா!? இது போதுமென்றால் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும் என்கிற போதனைகள்!?

2.  ஒருவன் நரகத்திற்கு போக ஐசுவரியவானாக இருந்தாலே போதும் என்றால் "இரட்சிக்கப்பட்டவர்களில்" பெரும்பாலுமானோர் இந்த வரிசையில் வருகிறார்களே!! ஏன் இதை பிரசங்கிக்கும் "தேவ மனுஷர்களே" இப்படி தான் இருக்கிறார்கள்!! அப்படி என்றால் இவர்கள் கதி என்ன‌!?

இந்த உவமை உண்மையிலேயே பரலோகத்தையும் நரகத்தையும் தான் சித்தரிக்கிறது என்றால் மேலே உள்ள என் இரண்டு கேள்விகளும் நியாயமானவைகளே!! சபையில் வேண்டுமென்றால் கண்மூடிக்கொண்டு "என் பாஸ்டர்" போதிப்பது தான் சத்தியம் என்று சொல்லிக்கொண்டு அமர்ந்திருக்கலாம், ஆனால் சற்று நான் கேட்ட கேள்விகளை உங்கள் பாஸ்டர்மார்களிடம் கேட்டு பாருங்கள்!? ஒருவராவது இதற்கு பதில் தரட்டுமே, பார்கலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard